காதல் -12

Sweety Novel's | 14 Apr 2026 | Share

.அர்ச்சனா மித்ரன் அறைக்குள் சென்றவர் அங்கு தரையில் மதி விழுந்து கிடக்க அவள் மேல் மித்ரன் விழுந்து கிடக்க இருவரும் விழியோடு விழிகலந்தபடி இருப்பதை பார்த்து அதிர்ந்து நெஞ்சில் கைவைத்து கொண்டார் 

என்ன நடந்து இருக்கும்?… 

மதி மித்ரன் அழைத்ததும் வேகமாய் அவனுடைய அறைக்குள் சென்றவள் மித்ரன் முன்னாடி மூச்சு வாங்க நின்றாள்.. 

பெட்டில் அமர்ந்து இருந்தவன் அவளை பார்த்ததும் எழுந்தான்.. 

அவன் பார்வை அவள் மேல் கோபமாய் பதிய மதிக்கு நேற்று இரவு நடந்தது எல்லாம் நியாபகத்தில் வந்து போனது… 

அவள் அவன் குடித்தது தன்னை டேன்ஸ் ஆட சொன்னது அவனோடு டேன்ஸ் ஆடியது தன்னை தள்ளிவிட்டு எல்லார் முன்னாடியும் அவமானப்படுத்தியது என்று அதையெல்லாம் நினைத்து பார்க்க மித்ரன் நினைவிலோ செழியன் வந்தது உரிமையாய் அவள் கரம் பற்றி தூக்கிவிட்டது மதியும் அவன் தோளில் சாய்ந்தது பின் அவனுடன் அங்கிருந்து சென்றதை நினைத்து பார்த்தவன் முகம் இறுகியது… 

அவன் தன்னை நோக்கி வருவதை பார்த்து மதி கால்கள் தன்னால் பின்னாடி ஒரு அடி எடுத்து வைக்க “அப்படியே நிக்கனும்…”என்றான் மிரட்டளாய்.. 

அவன் சொன்னதற்கு பின் அவள் பின்னாடி நகரவில்லை.. மித்ரன் அவள் அருகில் நெருங்கி சென்றவன் இருவருக்கும் இடையில் ஒரு இன்ச் கேப் இடைவெளி விட்டு நின்றான்.. 

அவன் கரம் அவள் கரத்தை அழுத்திபிடிக்க மதி வலியில் முகம் சுழித்தாள்.. 

“விடு மித்து… வலிக்குது…” 

அவனோ கண்கள் சுருக்கி அவள் முகத்தில் தெரிந்த வலியை பார்த்தவன் “நல்லா வலிக்கட்டும்… நீ எனக்கு கொடுத்த வலியை விட நான் உனக்கு கொடுத்த இந்த வழியெல்லாம் ஒன்னுமே இல்ல…”என்றான். 

அவன் கடந்த காலத்தை பற்றி பேசவும் மதி கண்களில் அவளையும் அறியாமல் கண்ணீர் கோர்த்தது… மித்ரனின் மொத்த வெறுப்பும் அதனால்தானே… இப்பொழுது வரைக்கும் அந்தநாள் தன் வாழ்வில் எதற்கு வந்தது அன்று மித்ரன் அம்மா நந்தினியை பார்க்காமலே இருந்திருக்கலாம் என்று இப்பொழுது வரைக்கும் ஒவ்வொரு நாளும் நினைத்து

வருத்தப்பட்டிருக்கிறாள்.. 

அவள் கலங்கிய கண்களுடன் அவளை பார்க்க பிடித்திருந்த கைகளை அப்படியே அவளுக்கு பின்னால் வளைத்து அவளை இன்னும் தனக்கு அருகில் இழுத்தவன் “நான்தான நேத்து உன்னை கிளப்க்கு கூட்டிட்டு போனேன்.. அப்பறம் எதுக்கு நீ செழியன் கூப்பிட்டதும் அவன்கூட போன?…”என கேட்டான். 

“செழியன்கூடதான வந்தேன்..அவன்தான் என்னை அங்கிருந்து கூட்டிட்டு வந்துட்டான்…”சொன்னவள் முகம் அவன் இன்னும் இறுக்கம்மாய் கைகளை அழுத்தி பிடிக்கும் பொழுது வலியை பிரதிபலித்தது.. 

“அவன் கூப்பிட்டா போயிடுவியா…”என்றவன் நிறுத்தி ஏளனமாய் இதழ் சுழித்து “அவன் எங்க கூப்பிட்டாலும் போய்டுவியாடி?…”என்று கேட்க மதி முகம் கோபத்தில் சிவந்தது. 

“அசிங்கமா பேசாத மித்து…” 

“நான் அசிங்கமா எல்லாம் பேசல நீ நடந்துக்கறதைதான் சொல்றேன்… நான் கூப்பிட்டா வர்ற அவன் கூப்பிட்டா போற என்ன மாதிரியான பொண்ணுடி நீ….”என அவன் அவளை பற்றி பேச மதிக்கு எங்கிருந்து அவ்வளவு பலம் வந்ததோ… தன் கரத்தை பிடித்திருந்த அவன் கரத்தை உதறியவள் ஓங்கி அவன் கன்னத்தில் அடித்துவிட்டாள். 

அடிவாங்கிய மித்ரன் முகம் இறுக அந்த கோபத்தில் என்ன செய்கின்றோம் என்பதை உணராமல் அவளை பிடித்து தள்ளிவிட்டான்.. 

தடுமாறி கீழே விழப்போனவள் கைகள் உயர்த்தி பிடிமானத்திற்காக அவனை பிடித்தவள் அவனையும் சேர்த்து இழுத்தாள்… இருவரும் கீழே விழுந்தனர்.. 

மதி மேலேயே மித்ரன் விழ அவளால் அவனின் பாரத்தை தாங்க முடியவில்லை… 

“அம்மா…”கத்திவிட்டாள்… தலையில் வேறு விழுந்த வேகத்தில் அடிப்பட்டிருந்தது.. 

மித்ரன் சுதாரித்து அவள் மேல் எழ பார்த்தவன் அவள் வலியில் கத்தவும் “என்னடி…”என்றான். 

“முடி வலிக்குது….” 

அதன்பின் தான் அவளுடைய முடி தன்னுடைய ஷர்ட் மேல் மாட்டியிருப்பதையே மித்ரன் கவனித்தான்.. 

அதை எடுத்து விடலாம் என்றால் திரும்பவும் அவள் மேல்தான் விழ வேண்டும் அவளால் தன்னுடைய பாரம் தாங்க முடியாது என்று உணர்ந்தவன் தற்பொழுது கோபத்தை தள்ளி வைத்துவிட்டு கைகள் இரண்டையும் தரைமேல் ஊன்றி தன்னுடைய பாரம் அவள் மேல் பாடாதபோல் சாய்ந்து இருந்தவன் “சீக்கிரம் எடு…”என்றான். 

மதி அவன் இவ்வளவு பொறுமையாக பேசுவதே பெரிய விஷயம் என்பதால் அவன் ஷர்ட் பட்டனில் சிக்கியிருந்த முடியை எடுக்க தொடங்கினாள்.. 

“எப்படி இப்படி சிக்குச்சு…”என்று முனுமுனுத்தவள் ஏதோ தோன்றவும் நிமிர்ந்து பார்க்க அவளையே பார்த்து கொண்டிருந்த மித்ரன் விழியோடு அவள் விழி கலந்தது… 

அப்பொழுதுதான் அர்ச்சனா உள்ளே வந்திருந்தார்…வந்தவர் அவர்களை இந்த நிலைமையில் பார்க்க அவருக்கு ஹார்ட் அட்டாக் வராத குறை… 

“மித்ரனா இது… என்ன பன்னிட்டு இருக்கான்…”என அதிர்ச்சியுடன் தனக்குள் சொல்லிக்கொண்டவர் “மித்ரன்…”கூப்பிட அதில் அவன் தன்னிலை உணர்ந்து அவர் பக்கம் திரும்பி பார்த்தான் 

“சித்தி…” 

வேகமாய் மதி அவன் பட்டனில் இருந்து முடியை எடுத்துவிட மித்ரன் அவள் மேலிருந்து எழுந்தான்.. 

அர்ச்சனா மதி எழவும் அவளை முறைத்து பார்த்தவர் “இங்கிருந்து போ…”என்று சொல்ல மித்ரனை ஒரு பார்வை பார்த்தவள் வேகமாய் அங்கிருந்து ஓடினாள்.. 

அவள் சென்றதும் அர்ச்சனா “என்ன மித்து… நான் பார்த்தது எல்லாம்…போயும் போயும் அந்த வேளைக்காரிகூட…”என்றவர் வார்த்தைகள் அவனுடைய கோபத்தில் சிவந்த முகத்தை பார்த்ததும் பாதியிலேயே நின்றது. 

“சித்தி அந்த வேலைக்காரியை என்கூட சேர்த்து வச்சு பேசாதீங்க…”என வார்னிங்காக சொல்ல 

அர்ச்சனா நொடி நேரத்தில் தன்னை சமாளித்து கொண்டவர் “சாரி மித்து சித்தி உன்னை தப்பா எல்லாம் நினைக்கல… நான் உள்ள வரும்போது நீங்க ரெண்டு பேரும்… சரி அதை விடு…”என்றவர் அருகில் சென்று அவன் கரம் பிடிக்க அவனோ இன்னும் கோபம் குறையாமல் அவர் கரத்தை எடுத்து வைத்தான்.. 

“மித்து… கோபப்படாத….” 

“நல்லா கேட்டுக்கோங்க சித்தி எந்த சிட்டுவேஷன்லயும் சரி என்னையும் அந்த வேலைக்காரியையும் சேர்த்து வச்சு பேசாதீங்க…. எனக்கு அருவெறுப்பா இருக்கு…” 

அர்ச்சனா தலையாட்டியவர் “மன்னிச்சிரு மித்து…”என்றவர் அவனை சமாதானம் செய்து “சரி நீ வா தாத்தா உன்னை வர சொன்னாரு…”என்றார். 

கண்கள் சுருக்கியவன் பின் அலட்சியம்மா “ஹிட்லரா.. அவர் இன்னும் கம்பனிக்கு போகலயா?… “என கேட்டவன் அவர் மறுத்து தலையசைக்கவும் “அவர் எதுக்கு என்னை பார்க்கணுமாம்?…”என்றான் 

“அது…”என்றவர் தான்தான் காரணம் என்பதை மறைத்து “லேகா இருக்கால்ல அவதான் உன்னையும் நந்தாவையும் மாட்டிவிட்டுட்டா…நீங்க நேத்து ட்ரிங்ஸ் பண்ணுனீங்கல்ல அது தாத்தாவுக்கு தெரிஞ்சிருச்சு…நந்தாவை கெடுக்கிறதே நீதான்னு உன் தாத்தாகிட்ட சொல்றா…”என்றவர் முகத்தை அப்பாவியாய் வைத்துகொண்டு 

“மித்து கண்ணா அவங்க என்ன சொன்னாலும் நீ அமைதியா இரு… கோபப்படாத…. குடும்பத்திலஎந்த பிரச்சனையும் வேண்டாம்…”என்று பேச்சு அவனை சாந்தப்படுத்துவது போல் இருந்தாலும் உண்மையில் அவர் அவன் கோபத்தைதான் தூண்டிவிட்டார் 

அவர் நினைத்தது போலவே மித்ரன் கோபம்மாக அர்ச்சனா “ம்ம் மித்ரன் கோபமாகிட்டான்… இப்படியே அவன் தாத்தா முன்னாடி போனா இவன் அவர் பேச வர்றதைகூட கேட்க மாட்டான் ரெண்டு பேருக்கும் சண்டை வரும் அதுக்கு அப்பறம் என்ன தாத்தாவுக்கும் பேரனுக்கும் இருக்க இடைவெளி இன்னும் அதிகம்மாகிடும்…”என தனக்குள் சொல்லிக்கொண்டவர்  “சரி மித்து சீக்கிரம் வா… தாத்தா அதுக்கும் திட்டுவாரு…”என சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றார்.. 

சில நிமிடங்களுக்கு பின்… 

கைத்தடியை பிடித்தபடி ஆளவந்தான் கோபத்தில் அமர்ந்து இருக்க அவர் முன் தவறு செய்தவனாய் நந்தா நின்றிருந்தான்… அவனுக்கு பின்னே மித்ரனை தவிர குடும்பத்தில் மொத்த பேரும் நின்றிருந்தனர்.. 

அசோகன் அர்ச்சனா அருகில் சென்றவர் அவருக்கு மட்டும் கேட்கும் குரலில் “அர்ச்சனா என்ன இன்னும் மித்துவை காணோம்….”என்று கேட்க 

“அவனே ஒரு திமிர் பிடிச்சவன் கெஞ்சி கேட்டாவே வர மாட்டான் இதில நான் தாத்தா கூப்பிடறாரு சீக்கிரம் வா இல்லன்னா திட்டுவாறுன்னு சொல்லிருக்கேன் அவ்வளவு சீக்கிரம் அவன் வரமாட்டான்…”என்றார் மித்ரனை பற்றி நன்கு தெரிந்தவராய்.. 

நந்தா “இந்த தாத்தா வேற என்ன பனிஷ்மென்ட் கொடுக்க போறாருன்னு தெரியல இதுல இவன் வேற இன்னும் ஆளை காணோம்…அவன் மேல இருக்க கோபத்தையும் சேர்த்து என்கிட்ட கான்பிச்சுடுவாரோ…”என தனக்குள் சொல்லிக்கொண்டவனுக்கு தன்னுடைய தாத்தாவின் கோபத்தை நினைக்கும்போது பயமாக இருந்தது… நிமிர்ந்து மாடியை பார்த்தவன் “மித்து சீக்கிரம் வாடா… நீ லேட் பண்ண பண்ண இங்க தாத்தா பிபி ரைஸாகிட்டே போகுதுடா…”என புலம்பலாக தனக்குள் சொல்லிக்கொண்டான்.. 

இங்கு எல்லாரும் மித்ரன் எப்பொழுது வருவான் என்று எதிர்பார்த்து கொண்டிருக்க கிட்சனில் மதி அவள்பாட்டு தன்னுடைய வளர்த்த பாட்டிம்மாக்கு உதவி செய்து கொண்டிருந்தாள்.. 

அவரோ கிட்சன் வாசலிலேயே நின்று வெளியில் என்ன நடக்கிறது என்று பார்த்து கொண்டிருந்தவர் வெகுநேரமாகியும் மித்ரன் வராமல் எந்த சண்டையும் நடக்காமல் அமைதியாய் இருப்பதை பார்த்து சலித்துபோகவும் உள்ளே வந்தார் 

“யாருமே எதுவும் பேசிக்கல… மித்ரன் தம்பி வர்ற வரைக்கும் இப்படிதான் இருப்பாங்க போல….” 

மதி காய் கட் பண்ணிக்கொண்டே “மித்ரன் இன்னும் ஒரு மணி நேரத்துக்கு வரமாட்டான்…”என்றாள். 

பட்டம்மாள் ஆச்சிரியம்மாய் அவளை பார்த்தவர் “எப்படி சொல்ற?…”என்று கேட்க 

“ம்ம் ஏதோ எனக்கு தோணுது…”என்றவள் தன்னுடைய வேலையை தொடர்ந்தார். 

ஆனால் அவரோ அவளையே பார்த்தார்..அவரும் இத்தனை வருடங்களாக பார்த்துகொண்டுதான இருக்கிறார்… மித்ரன் மனதில் நினைப்பதைகூட இவள் சரியாய் கண்டுபிடிப்பாள்… அவனுக்கு என்ன வேண்டும் என்பதை அவன் வாய்விட்டு கேட்கும் முன் இவளே செய்துவிடுவாள்… 

அவர் தன்னையே பார்ப்பதை பார்த்து “என்ன பாட்டிம்மா?…”என கேட்க 

“நீ மித்ரன் தம்பியை பத்தி நல்லா புரிஞ்சு வச்சிருக்க….”என்று அவர் சொல்லவும் மென்னகை சிந்தியவள் “அவங்க பஞ்சாயத்து முடிச்சுட்டாங்கன்னா சாப்பிட வருவாங்க அப்போ எல்லாம் ரெடியா இருக்கனும்ல நீங்க வேலையை பாருங்க….”என சொல்ல பட்டம்மாள் பரபரப்பானவர் சமையல் வேலையை ஆரமித்தார். 

வெளியில் மித்ரனை இன்னும் காணாமல் எல்லாரும் என்ன செய்வது என்று மாடியையும் பின் கோபத்தில் அமர்ந்து இருக்கும் ஆளவந்தானையும் மாறி மாறி பார்த்தனர் 

இசைக்கு வேறு பசித்தது… வயிற்றை தடவியவள் “இன்னிக்கு பஞ்சாயத்து முடியாம நமக்கு சாப்பாடு போட மாட்டாங்க போலயே… பசிக்க வேற செய்யுது….”முனுமுனுப்பாக சொல்லிக்கொண்டவள் அப்படியே நைஸாக அங்கிருந்து நழுவ பார்க்க அவள் பக்கத்தில்தான் செழியன் நின்றிருந்தவன் அவன் கரம் பற்றி தடுத்தான்.. 

இசை திரும்பியவள் விழிகளை உருட்டி “விடுடா…”என சொல்ல 

“எல்லாரும் இங்கதான இருக்கோம்நீ மட்டும் எங்க போற?…” 

“பசிக்குதுடா தடியா… இப்படியே எவ்வளவு நேரம் ஒருத்தரை முகத்தை ஒருத்தர் பார்த்துட்டு நிக்கறது…” 

“அப்போ நீயே போய் மித்ரனை கூட்டிட்டு வா…”என சொல்ல இசை அதிர்ச்சியில் வாயை பிளந்தவள் “என்னது நானா…”என்றாள்..

இந்த episode பிடிச்சிருந்தா எழுத்தாளரை உற்சாகப்படுத்துங்க!!
இப்போதே உற்சாகப்படுத்துங்கள்

இந்த படைப்பை மதிப்பிட விரும்புகிறீர்களா?

Click on a star to rate it!

No votes so far! Be the first to rate this post.

    No comments yet.