காதல் -1

Sweety Novel's | 14 Apr 2026 | Share

கோயம்புத்தூர்… 

நந்தவனம் ஜமீன் இல்லம்… 

ஜமீன் பங்களா அரண்மனை போல் கம்பீரமாய் பறந்து விரிந்திருந்தது… 

பங்களாவுக்கு வெளியே தோட்டத்தை பராமரிக்கவே வேலையாட்கள் அத்தனை பேர் வேலை பார்த்து கொண்டிருந்தனர்… 

சிலர் ஜமீன்தாரை பார்த்து உதவி கேட்க வந்திருந்தனர்… 

அவர்களை எல்லாம் காவலாளி “ஜமீன்தாரம்மா ரத்தினதேவியே வருவாங்க அப்போ பார்த்து பேசிக்கோங்க உள்ள போறதுக்கு எல்லாருக்கும் அனுமதி கிடையாது…. ஆளவந்தான் ஐயா உள்ளவிடக்கூடாதுன்னு சொல்லிருக்காரு தப்பி தவறிகூட உள்ள போயிடாதீங்க…”என எச்சரித்தான்… 

அவர்களும் அவன் பேச்சை கேட்டு வரிசையில் நின்றனர்… 

அப்பொழுது வீட்டிற்குள் இருந்து மூன்று வயது அழகான ஆண்குழந்தையை தோளில் சாய்த்துகொண்டு கம்பீரமாய் உள்ளே இருந்து வெளியில் வந்தார் ரத்தினதேவி… 

வயது ஐம்பது இருக்கும்… கம்பீரமாய் இருந்தார்…ஜமீன் குடும்பத்திற்கே உண்டான கம்பீரம் அவர் முகத்தில் தெரிந்தது… 

அவரை பார்த்ததும் உதவி கேட்டு வந்தவர்கள் எல்லாம் கையெடுத்து வணங்கினர்.. 

அவர்களை பார்த்ததும் இதழில் மென்னகை தோன்ற ரத்தினதேவி “எல்லாரும் எதுக்காக வந்திருக்கீங்க?…”என கேட்க அவர் கையில் இருந்த குழந்தை திரும்பி பார்த்தான்.. 

ஜீவ மித்ரன் அந்த ஜமீனின் முதல் வாரிசு… அவ்வளவு அழகு… அவன் சிரிப்பதை பார்த்துகொண்டே இருக்கலாம்…. 

உதவி கேட்டு வந்தவர்கள் தங்களில் குறையை சொல்ல ரத்தினதேவி அவர்களின் ஏழ்மையை புரிந்துகொண்டவர் “கணக்குபிள்ளை….”என்று கூப்பிட முப்பது வயதில் ஒருவன் வந்தான்.. 

வேலு…அவர்கள் குடும்பம்தான் தொடர்ந்து ஜமீனுக்கு கணக்குபிள்ளையாக வேலை செய்கின்றனர்.. இப்பொழுது இவனுடைய முறை சில வருடங்களாக அங்கு கணக்குபிள்ளையாக வேலை செய்கிறான்… 

ரத்தினதேவி அருகில் சென்றவன் “அம்மா…”என்றதும் அவர் “இவங்களுக்கு பணம் தேவைப்படுது.. அவங்க கேட்கிற பணத்தை கொடுத்திடு….”என சொல்ல 

“அம்மா.. ஐயா…” 

“அவர்கிட்ட நான் சொல்லிக்கறேன்… நீ இவங்க கேட்கிற பணத்தை கொடு…”என சொல்ல வேலுவும் “சரிங்கம்மா…”என்று தலையசைத்தவன் தன்னிடமிருந்த பையில் இருந்து பணத்தை எடுத்து அவர்கள் கேட்பதற்கு ஏற்ப பணத்தை பிரித்து கொடுக்க தொடங்கினான்.. 

அதை தன்னுடைய பேரனுக்கு சுட்டி காட்டிய ரத்தினதேவி “மித்து கண்ணா அங்க பாரு… இவங்க எல்லாம் நம்ம மக்கள் இந்த ஜமீனையே நம்பி வாழறவங்க இவங்களுக்கு உதவி பன்றதுதான் நம்ம கடமை… இந்த ஜமீனோட அடுத்த வாரிசு நீதான்… நீ வளர்ந்து பெரியவனானதும் நீயும் இந்த மாதிரி எல்லாருக்கும் உதவி பண்ணனும்…”என சொன்னவர் “பண்ணுவியா?…”என கேட்க மித்ரன் அழகாய் தலையசைத்தான்.. 

“என் தங்கம்…அப்படியே உனக்கு உங்க அப்பா குணம்தான்…”என சொல்ல இதை தள்ளிநின்று பார்த்து கொண்டிருந்தாள் அர்ச்சனா.. 

அவள் கையில் இரண்டு வயது குழந்தை செழியன் இருந்தான்… 

ரத்தினதேவி சொன்னதை எல்லாம் கேட்டிருந்தவள் முகம் கோபத்தில் சிவந்தது… 

“அந்த மித்ரன் ஜமீனோட அடுத்த வாரிசுன்னா அப்போ என் பையன் செழியன் யாரு… விடமாட்டேன்… எனக்கு கிடைக்காத மரியாதை, இந்த ஜமீன் சொத்து எல்லாம் என் பையனுக்கு கிடைக்கணும்… அதுக்கு குறுக்கவர்ற யாரையும் நான் விடமாட்டேன்… அதுக்கு இந்த மித்ரன் தடையா இருந்தா இவனையும் நான் அழிப்பேன்…. ஏற்கனவே அப்பாவை இழந்துட்டான் இன்னும் கொஞ்சநாள்ல இவன் அம்மாவும் விட்டு பிரிஞ்சு போய்டுவா இனி என்கிட்ட இருந்து இவனை யாரு காப்பாத்த போறா….”என சொல்லிக்கொண்டவள் முகத்தில் அந்த ஜமீனின் முதல் வாரிசான ஜீவ மித்ரன் மீது அவ்வளவு கோபம் வன்மம் தெரிந்தது.. 

அப்பொழுது வெளியில் இருந்து ஒரு பணியாள் வேகமாய் உள்ளே ஓடிவந்தான். 

அவன் ஓடிவருவதை பார்த்து ரத்தினதேவி “என்ன முத்து எதுக்கு இப்படி ஓடிவர்ற?…”என கேட்க 

அவன் தன்னுடைய வீட்டில் வேலை செய்யும் பணியாள் என்பதால் வேலு பதட்டத்துடன் “என்ன முத்து எதாவது பிரச்சனையா?…”என கேட்டான். 

அவன் மனைவி வசுந்திரா நிறைமாத கர்ப்பிணியாக இருக்கிறாள்… அவனை பார்த்ததும் அவளுக்கு எதாவது பிரச்சனையோ என்று பதட்டம் தோன்றியது.. 

“ஐயா அம்மாவுக்கு திடீர்னு வலி வந்திடுச்சு… பக்கத்தில இருக்க மருத்துவச்சி அம்மாவே பிரசவம் பார்த்துட்டாங்க…”என அவன் சொன்னதும் வேலுவுக்கு முன்னாடி ரத்தினதேவி ஆர்வம்மாய் “என்ன குழந்தை?…”என்று கேட்டார்.. 

“பெண் குழந்தைம்மா…சரியா 4.10க்கு பிறந்து இருக்கு….”என சொல்ல ரத்தினதேவி தன் கைகளால் கணக்கு போட்டு பார்த்தார்.. 

அவருக்கு ஜோசியம் இந்த நல்லநேரம் அது எல்லாம் நம்பிக்கை அதிகம் அவருக்கும் அது சம்மந்தம்மாக சில விசியங்கள் எல்லாம் தெரியும்.. 

வேலுவுக்கு பெண் குழந்தை என்றதும் முகம் தொங்கி போக அவன் முகத்தில் ஆண் குழந்தை இல்லையா என்ற வருத்தம் தெரிந்தது.. 

ஆனால் விரல்களால் கனக்கு போட்டு பார்த்து கொண்டிருந்த ரத்தினதேவி முகம் மலர “வேலு உன் பொண்ணு ரொம்ப நல்ல நேரத்தில பொறந்து இருக்கா… அவளால எப்பவும் அதிர்ஷ்டம்தான்….”என்றார். 

அதை கேட்டதும் வேலு முகம் மலர்ந்தது..பின்ன ரத்தினதேவி சொன்னால் அது சரியாகதான் இருக்கும் என்று நம்புபவன் அவன்.. 

“சரி நீ போய் குழந்தையை பாரு..”என்று அவனை உடனே போக சொன்னவர் வேலு சென்றதும் “ம்ம் நல்லநேரத்தில பிறந்து இருக்கா அவ போற இடம்  நல்ல விருத்தியாகும்..”என சொல்லிக்கொண்டவர் தன் பேரன் தாடை பற்றி முகத்தை திருப்பவும் அவனை பார்த்து சிரித்தவர் “ஒரு குட்டி பாப்பா வந்திருக்கா கண்ணா…”என சொல்ல அவனுக்கு என்ன புரிந்ததோ அவரை பார்த்து சிரித்தான்.. 

நந்தவணம் ஜமீன் தற்பொழுது ஆளவந்தான் ஜமீன் பொறுப்பில் இருக்கிறது..அவருடைய மனைவிதான் ரத்தின தேவி… 

இவர்களுக்கு இரண்டு மகன்கள் ஒரு மகள்… 

மூத்த மகன் பூபதி இரண்டாவது மகன் அசோகன்..மகள் சந்திரலேகா.. 

நந்தினி என்ற ஏழைபெண்ணை திருமணம் செய்து கொண்ட பூபதி ஆளவந்தான் கோபத்திற்கு உள்ளானான்.. ஆளவந்தானுக்கு தன்னுடைய ஜமீன் மதிப்பும் மரியாதைதான் முக்கியம் அதற்கு அடுத்துதான் குடும்பம் பிள்ளைகள் எல்லாம்… 

தனக்கு பின் இந்த ஜமீனையும் ஜமீன் சொத்துக்களையும் பூபதி பார்த்துகொள்வார் என்று நினைத்தார் ஆனால் பூபதி ஜமீன் குடும்பத்தில் திருமணம் செய்யாமல் சாதாரண ஒரு பெண்ணை திருமணம் செய்துகொண்டது அவருக்கு சுத்தமாக பிடிக்கவில்லை.. 

அவனை ஒதுக்கி வைத்துவிட்டார்… திரும்பவும் தன் மகனையும் மருமகளையும் ஜமீன் பங்களாவுக்குள் மறுபடியும் அனுமதித்தது ஜீவ மித்ரன் பிறந்ததுக்கு பின்தான்.. 

பூபதி ஒரு வருடத்திற்கு முன் நடந்த விபத்தில் இறந்துவிட்டார்… பாவம் அவர் இழப்பு மித்ரனின் அம்மா நந்தினியை ரொம்பவே பாதித்துவிட்டது… அறையை விட்டு வெளியில் வருவது கிடையாது…மித்ரனை பார்த்துகொள்வதுகூட பாட்டி ரத்தினதேவிதான்… 

இரண்டாவது மகன் அசோகன் மனைவிதான் அர்ச்சனா… ஆளவந்தானின் தங்கை பெண்… 

முதலில் இவளுக்கும் பூபதிக்கும் திருமணம் என்றுதான் முடிவு செய்து வைத்திருந்தார்கள்… ஆனால் பூபதி நந்தினியை திருமணம் செய்யவும் அவன் தம்பி அசோகனுக்கும் அர்ச்சனாவுக்கும் திருமணம் நடந்தது…அவர்களின் ஒரே மகன் செழியன்… 

அர்ச்சனாவிற்கு அந்த ஜமீன் மீது ஆசை… முதல் மகனுக்கு ஜமீன்வாரிசு என்ற அதிகாரம் கிடைக்கும் அவர் மனைவிக்குதான் மரியாதை எல்லாம்… அதனாலேயே பூபதியை அவள் திருமணம் செய்ய நினைத்தாள் ஆனால் அவளின் அந்த கனவு நிறைவில்லை என்றதும் எப்படியாவது செழியனை ஜமீனின் வாரிசா மாற்ற வேண்டும் என்று துடித்து கொண்டிருக்கிறாள்… 

ஆளவந்தான் மகள் சந்திரலேகாவுக்கும் பக்கத்து ஊர் ஜமீன் தயாளனுடன் திருமணம் நடந்து அவளுக்கு மித்ரன் வயதில் நந்தன் என்ற ஒரு மகனும் மூன்று மாதம் கைக்குழந்தை இசைநிலா என்ற மகளும் இருக்கிறாள்.. இப்பொழுது அவர்களும் அந்த ஜமீன் வீட்டில்தான் இருக்கிறார்கள்… 

சில நாட்களுக்கு பின்… 

ஆளவந்தான் கம்பீரமாய் அமர்ந்து தன்னுடைய பிஸ்னஸ்  பார்ட்னர்ஸ் எல்லாம் வந்திருக்கவும் அவரும் அசோகனும் ஹாலில் அமர்ந்து பேசிகொண்டிருந்தனர்… 

இன்னும் சில மாதங்களில் அறுபது வயதாக போகிறது ஆனாலும் இன்னும் கம்பீரம் குறையவில்லை… தன் மகனுக்கு என்று சில வேலைகளை கொடுத்தாலும் இன்னும் ஜமீன் பொறுப்பையும் பிஸ்னஸ் எல்லாம் தன்னுடைய கட்டுபாட்டில்தான் வைத்திருக்கிறார்.. 

சற்று தள்ளி நின்று அர்ச்சனா அவர்களை ஒரு பார்வை பார்த்தவள் “இதுதான் சரியான சமயம் மித்ரனை எதாவது பண்ணனும்… அதைபார்த்து மாமா டென்ஷனாகி அவனையும் அவன் அம்மாவையும் வீட்டை விட்டு அனுப்பனும்…”என தனக்குள் சொல்லிக்கொண்டவள் “என்ன பண்ணலாம்…”என்று யோசிக்க டீபாய் மீது வைத்திருந்த பைல் அவள் கண்ணில் பட்டது. 

அதை பார்த்ததும் புன்னகை தோன்ற மித்ரன் எங்கு இருக்கிறான் என்று தேடினாள்.. 

மித்ரன் முதல் தளத்தின் வராண்டாவில் விளையாடி கொண்டிருக்க அவன் அருகில் சென்றாள்.. 

அவன் மட்டும் தனியா பந்தை தூக்கிபோட்டு விளையாடி கொண்டிருந்தான்… 

“மித்து கண்ணா…”கொஞ்சும் குரலில் அர்ச்சனா அழைக்க மித்ரன் திரும்பி பார்த்தான்.. 

கர்லிங் முடியுடன் விழிகள் இரண்டும் அப்படியே ஆளவந்தானுக்கு இருப்பது போல் பூனை கண்கள்… பார்க்க அவ்வளவு அழகாக இருந்தான்..அவனை யார் பார்த்தாலும் தூக்கி கொஞ்ச தோன்றும்… 

ஆனால் அர்ச்சனாவுகோ தோற்றத்தில் இளவரசனை போல் இருப்பவனை பார்க்கும் பொழுது எல்லாம் கோபம்தான் தோன்றும்… இப்பொழுதும் அவனை பார்த்ததும் அவளுள் கோபம் தோன்றியது ஆனால் அதை மறைத்து இதழில் புன்னகையை படற விட்டவள் அவன் அருகில் சென்றாள்.. 

“மித்ரன் கண்ணா தனியா என்ன விளையாடிட்டு இருக்க?…”என கேட்க 

“சித்தி மித்துகூட விளையாட யாரும் இல்ல….”என அவன் மழலை குரலில் சொன்னது அவளுக்கு பாதிதான் புரிந்தது.. 

“நான் உன்கூட விளையாடட்டுமா?…” 

மித்ரன் முகம் மலர்ந்தவன் “ம்ம்…”தலையாட்ட 

“நாம கப்பல் செஞ்சு தண்ணியில விட்டு விளையாடலாமா?… 

கப்பல் என்றதும் மித்ரன் குஷியானவன் துள்ளி குதித்து கைத்தட்டியபடி தலையாட்ட அவனிடம் “அங்க தாத்தா நிறைய பேப்பர் வச்சிருக்காரு அதை போய் எடுத்துட்டு  வர்றியா… அதை நாம கப்பல் செஞ்சு விளையாடலாம்….”என்று பைலை காட்டி சொல்ல மித்ரனும் பார்த்தவன் வேகமாய் ஓடினான்.. 

ஓடும் அவனை பார்த்து “ஓடு மித்து ஓடு இதுதான் இந்த ஜமீன் வீட்டுல இருக்க உனக்கு கடைசி நாள்… கொஞ்சம்கூட உன்னை பிடிக்காத உன் தாத்தா இன்னிக்கே உன்னை இந்த வீட்டை விட்டு அனுப்ப போறாரு…”என சொல்லிக்கொண்டவள் இதழில் வெற்றி சிரிப்பு தோன்ற எங்கு அவன் தன்னை மாட்டிவிட்டால் என்ன செய்வது என்று வேகமாய் அங்கிருந்து நகர்ந்தாள்… 

மித்ரன் கப்பல் விடும் ஆசையில் ஆளவந்தானின் பல கோடி மதிப்புடைய பிராஜக்ட் பைலை எடுக்க ஓடினான்.. 

அவன் அவர்கள் அருகில் நெருங்கும் பொழுது ஒரு அழுகை குரல்… 

அந்த சத்தம் கேட்டதும் மித்ரன் அப்படியே நின்றுவிட்டவன் திரும்பி பார்த்தான்.. 

ஜமீன் வீட்டிற்குள் காலடி எடுத்து உள்ளே வந்து கொண்டிருந்தாள்  வசுந்திரா..அவள் கையில் பிறந்து சில தினங்களே ஆன அவளுடைய மகள்.. 

அவளின் அழுகை சத்தம்தான் பைலை எடுக்க போன மித்ரனின் கவனத்தை கலைத்து அவள் பக்கம் திரும்பி பார்க்க வைத்தது.. 

தள்ளிநின்று பார்த்து கொண்டிருந்த அர்ச்சனா மித்ரன் பைலை எடுக்காமல் இருப்பதை பார்த்து அதிர்ச்சியாக மித்ரனோ சிரித்துகொண்டே வசுந்திரா நோக்கி சென்றான். 

மித்ரனை காப்பாற்ற யாரும் இல்லை என்று அர்ச்சனா நினைத்து இருக்க இதோ வந்துவிட்டாளே அவனுடைய தேவதை… 

கைஸ் பர்ஸ்ட் எபி எப்படி இருக்குன்னு கமன்ட் பண்ணுங்க 😇

இந்த episode பிடிச்சிருந்தா எழுத்தாளரை உற்சாகப்படுத்துங்க!!
இப்போதே உற்சாகப்படுத்துங்கள்

இந்த படைப்பை மதிப்பிட விரும்புகிறீர்களா?

Click on a star to rate it!

No votes so far! Be the first to rate this post.

    No comments yet.