அரக்கனோ என் அரணோ அத்தியாயம் -16

BalaSneha Velmurugan | 28 Apr 2026 | Share

      அரக்கனோ? என் அரணோ?

அத்தியாயம் -16

அனைவரும் சாப்பிட்டபின் காரில் ஏறி வீட்டிற்கு கிளம்ப…..

வழி எங்கும் ரதி சொன்ன விஷயமே விஷ்வாவிற்கு ஓடிக்கொண்டே இருந்தது. கண்ணாடி வழியாக , “ரதியை பார்த்த விஷ்வாவிற்கு அவளின் ஆழ்ந்த தூக்கமும், இடையிடையே வெளியே தெரியும் வெளிச்சத்திற்கு ஏற்ப அவள் முகத்தில் படும் ஒளியும்சேர்ந்து அவனுக்கு குழந்தையவே ஞாபகப்படுத்தியது”.

 வளர்ந்தும் குழந்தையாகவே இருக்கிறாளே!!! “ ஆனால், மற்ற அனைத்தும் குழந்தைக்கு இருப்பது போல் இல்லை என்ன செய்வது இவளை என அவளை ரசித்துகொண்டே நினைத்தான்.

“முடிந்த அளவு இவளை பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும்”.

 ஒரு நிமிடம் விஷ்வாவிற்கு தூக்கிவாரிப் போட்டுவிட்டது ,

“நான் என்ன நினைக்கிறேன் இவளை பழி வாங்க வேண்டும் தண்டனை கொடுக்க வேண்டும் என்று தானே கல்யாணம் செய்து கொண்டேன்”..

“ இப்பொழுது என்னவென்றால் இவளை பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும் அன்பை பொழிய வேண்டுமென்று அல்லவா தோன்றுகிறது …”

“கள்ளம் கபடம் இல்லாத முகம் யாருக்குத்தான் தோன்றாது” ஆனால் இவளோ சரியான திருட்டுப் பூனை..

 பார்க்க சின்ன பிள்ளையாட்டம் இருந்துகிட்டு பண்றது எல்லாம் வேலைத்தனம் எவ்ளோ தைரியம் என்கிட்டேயே எதிர்த்து பேசுறா….

 ம்ம்ம்ம்ம்..” ராட்சசி என்னென்ன பேசி கடைசில என்னையவே கல்யாணமும் பண்ணிக்கிட்டா இல்ல உனக்கு இருக்கு”

 சற்று முன்பு தான் இவளை பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்த விஷ்வா ,

அடுத்த நொடியே இவளை பழி வாங்க வேண்டும் என்று தன்னை ஏமாற்றிக்கொண்டு திட்டமிட்டான் “

 அவனுக்கு தெரியாத ஒரு விடயம் உள்ளது அவளை பழி வாங்குவது அவ்வளவு ஒன்றும் சுலபம் கிடையாது அதில் இவனே சிக்கிக் கொள்வான் என்று அவனுக்கு தெரியாது.

அவள் இல்லையென்றால் தூக்கம் கூட எட்டாக்கனி என்னும் நிலைமைக்கு வரப்போகிறான் விஷ்வா…

(Me :இத நம்ம இப்போ சொன்ன நம்மள நட்டு கலண்ட கேசு ஓரமா போனு சொல்லுவான் — தேவையா நமக்கு )

(ஹாஸ்பேண்ட் மெட்டிரியல் ஆக ஆல்தபெஸ்ட்)

விச்சு: நீ இன்னும் போகலயா—-

Me: ஆத்தி இந்தா கிளம்பிட்ட—ஜுட்…..)

இங்க ராகவ் !!!

டேய் விஷ்வா பார்த்து வண்டி ஓட்டுடா…என்ன நம்பி ஒரே ஒரு ஜீவன் இருக்கு மீ பாவம்!!!!!

“எனக்கு தெரியாம அது யாருட ஒரு ஜீவன் யாரு அதுதுது லவ்வர்ரா!!!!”

ஆஆஆஆ, அப்படியே லவ்வர் கூட டூயட் பாட‌வச்சுட்டு தா நீ மறுவேல பார்க்குற பாரு—-

வயித்தெரிச்சல கொட்டிக்காத பிடிக்கல பிடிக்கலன கல்யாணம் பண்ணிட்டு நிக்கிறயேடே பாவி,,,

இப்போ சொல்ல வந்தத சொல்றியா இல்ல கார்ல இருந்து தள்ளிவிடவா!!!

டேய் அந்த ஒரு ஜீவன் நான்தாண்டா , ஐ லவ் மை செல்ஃப்டா மச்சா …

உன்னை நம்பி தான் நான் ஃபுல் கட்டு கட்டிட்டு உண்ட மயக்கத்திலே தூங்கிட்டு இருக்கேன…

“ எங்கயாவது லாரியிலையோ!! பஸ்லயே!! விட்டு ஏத்திடாதடா!! நான் இன்னும் எதையுமே அனுபவிக்கல என்று,

இவ்வளவு நேரம் ரதியை பார்த்தை தூக்கத்திலும் கண்டுகொண்டு ராகவ் கூற,

 எட்டி வாயில  மிதுச்சேன் வை அங்கிட்டு போய் விழுந்துருவே! மூடிட்டு இரு !!!!
 எனக்கு தெரியும் எப்படி வண்டி ஓட்டணும்னு.

ய்யா !! சாமி பிள்ளகுட்டி யோட வாழனும் நினைக்கிற பாத்து ஓட்டுப்பா!!!

அப்பா கருப்புசாமி எப்படியாவது என்ன கரெக்ட்டா வீட்டுக்கு கூட்டிட்டு போய் சேர்ந்திருப்பா!!! அப்படி மட்டும் சேர்த்துட்ட அப்படின்னா உனக்கு அலகு குத்துறேன்…

ஒருநிமிடம் சாமிக்கே நெஞ்சுவலி வந்துவிட்டது….

 யார்ரா இவ கருப்பசாமிக்கு அலகு குத்துறான்!!! டேய்!!!தூக்கத்தில உலராம இருடா, இல்லனா போற வழியில இறக்கிவிட்டுட்டு போயிருவ.

நீ அடுச்சு ஓட்டு மச்சா புயலே வந்தாலும் இனி எந்திரிக்கமாட்டேன்….என்று தூக்கிவிட..

வீட்டை நோக்கி சென்றுகொண்டிருந்தது…

இனி விஷ்வா விற்கும் ரதிக்கும் இடையே என்னென்ன நடக்குமோ அது கடவுளே அறிவார்…

சில மணிநேர பயணத்திற்கு பிறகு கார் வீட்டின் முன்பு நிற்க ,

சரியாக வண்டி நின்றதும் பாட்டிக்கு முழிப்பு வர , “ விஷ்வாகண்ணா இருடா ! ஆலம்கரச்சு எடுத்துட்டு வரேன் “,

அப்பறம் உள்ள வாங்க முதல்ல ரதிய எழுப்பு நான் வந்துடுற” என்று விரைவாக சென்று விட

எங்கு தான் நின்றுவிட்டால் கண்களாலே பஸ்பமாகிவிடுவானோ என்று ஓடியே விட்டார்…

இங்கு விஷ்வாவோ வந்த கோபத்திற்கு என்ன செய்ய என்று திரும்பி பார்க்க ,

 நிம்மதியாக தூங்கும் ராகவ் கண்ணில் பட, “ குரூரமாக சிரித்து கொண்டே தண்ணீர் பாட்டிலை திறந்து ராகவ் தலையில் இருந்து தண்ணீர் ஊற்ற திடீர் என்று நடந்த நிகழ்வில் பதறி எழுந்து ,

அய்யோ!!! அம்மா!!! விஷ்வா கொலகார தண்ணிலாரில விட்டுட்டியேடா பாவி என கத்த,

வந்த கோபத்திற்கு தண்ணீர் பாட்டிலை அவன் மேலே தூக்கி எறிந்து விட்டு நிற்க,

அய்யோ அம்மா!!! வண்டி டயர் எம்மேல வந்து விழுகுதே !! என்று கத்த,

டேய் இப்போ மட்டும் நீ முழிக்கல உன்ன நிஜமாவே லாரி டயர்ல ஏத்தி சாவடிச்சுடுவேன்டா!!

இவன் பண்ணாலும் பண்ணுவான் என்று வீட்டிற்குள் ஓடிவிட,”

இத்தனை ரணகளத்திலும்,சத்தத்திலும் ஒரு சிணுங்கல் கூட இல்லாமல், “நிம்மதியாக தூங்கும் ரதியை பார்த்து கோவம் வராது ரசனை பார்வைதான் அவனுக்கு”

“சரியான கும்பகர்ணி இவ”!!!

சேலை இவளுக்கு புதிது போல, “ பின் எல்லாம் கலண்டு முந்தானை சேலை ஒரு புறமாக சரிய பாதி வெளிச்சத்தில் தெரிந்த அவளின் முன்னழகை பார்த்து கண்களை அகற்ற அவ்வளவு சிரமப்பட்டான்….

பிறகு கண்களை கடினப்பட்டு திருப்பிக்கொண்டு தலைமுடியை அழுந்த கோதி நீண்ட பெருமூச்சு விடுத்து மனதை சமநிலை படுத்தி யோசிக்க,

“பல பெண்களை தொழில் முறையிலும் சரி , அதையும் தாண்டி இவன் மேல் ஆசை கொண்டு ஒருநாள் ஆவது அவனோடு இருந்துவிட வேண்டும் என வந்தவர்களும் சரி”

“ உடையில் தாராளம் காட்டி விஷ்வாவிடம்குழைந்து பேசும்போதும் வராத உணர்வும்,தாபமும் இவள் மேல் வருவதுதான் ஆச்சரியமாக இருக்கிறது அவனுக்கு”“…..

“ஒருவேளை இதுதான் மஞ்சள் கயிறு மேஜிக்கா…”

“ஓ!!! காட் விஷ்வா!

இவ ஏதோ பண்ற!

 கேர் ஃபுல் டோண்ட் லாஸ் யுவர் செல்ஃப் டா என்று திரும்ப,

மீண்டும் அவளின் கன்னத்தின் மச்சம் மேலும் அவனை பித்துகொள்ள செய்தது…

“ராட்சசி” வேணும்னே! என்ன மயக்க இப்படி பண்ற என்று அவள் மீதே கோபத்தை திருப்ப,,,

டேய்!!! “உனக்கே இது அடுக்குமா அந்த புள்ள பச்சமண்ணுடா”

 எப்படி தூங்குது பாரு! மனசாட்சி இல்லாம பேசாதடா!என்று மனசாட்சி சண்டைக்கு வர

கொஞ்சம் அமைதியா போறியா! உன்ன இப்போ யார் கூப்புட்டா! எனக்கு தெரியும் நீ அடங்கு! என அதையும் அடக்க

“மனுசாலாடா!! நீ உன்கிட்ட போய் பேசினேன் பார் என்ன உன் பூட்ஸ்லயே அடிக்கனும் “….சே!!

விஷ்வாகண்ணா!! ரதிய கூப்பிட்டு வீட்டுக்கு முன்னாடி வாப்பா! என்று பாட்டி அழைக்க,

ம்!! இதோ வரேன் என்று கர்ஜிக்க

“நல்லாதானே இருந்தான் அதுக்குள்ள என்ன ஆச்சு இவனுக்கு “,சரிக்கண்ணா வா!

இவள!!! பின்சீட்டின் வழியே உள்ளே நுழைந்து முகத்தின் அருகே சென்று,

“ உதடுகளால் கன்னத்தை உரச மீசையின் குறுகுறுப்பில் கன்னத்தை தடவிமீண்டும் தூங்க”,

“இதழோர சிரிப்போடு கன்னத்தில் அழுந்த முத்தமிட்டு,” விலக மனமில்லாமல்

 நறுக்கென்று கன்னத்தை கடித்துவிட்டு காரின் வெளியே ஏதும் தெரியாத மாதிரி நின்றுவிட்டான்….

ஆஆஆஆ!! அம்மாமாமா!!! என கத்தி கொண்டே கன்னத்தை தேய்த்து கொண்டேவெளியே எட்டிப்பார்க்க,

ஏங்க!!? ஏங்க?! என இரு முறை அழைத்தும் பதில் வராத கடுப்பில்

யோவ் !!! எருமமாடு என கத்த

ஏய் !! பல்லகழட்டி கைய்ல குடுத்துடுவேன்..இப்போ என்னடி உனக்கு பிரச்சனை எதுக்கு கத்துற???

நீங்க தானே ,”என்ன கடிச்சிங்க பாருங்க!! பல் தடமே விழுந்துடுச்சு வலிக்குது! என உதட்டை பிதுக்க…”

இவளள!!! ராட்சசி வேணும்னே பண்றா அவள் உதட்டினை தொட்டு பார்க்க மனம் ஏங்கியது விஷ்வாவிற்கு

ம்ப்ச்ச்!! ஆமா கடிக்கிறாங்க உன்ன தொட கூட மாட்டேன் நான்..இங்க எல்லாம் கொசு கடிச்சா அப்படிதான் வலிக்கும்..முன்னப்பின்ன வந்து இருந்தா தானே தெரியும் உனக்கு,

திருட்டுபய!! வேணும்னே பொய் சொல்றா என்று முணங்க!!!

இப்போ என்ன என்னடி சொன்ன?? ரதியை நோக்கி முன்னேற…

பயத்தில் காரின் மேலே சாய்ந்து கண்களை மூடி சிலையாக நின்றுவிட்டால்……….

   இனி என்ன நடக்கும்…..

காத்திருங்கள்…

அரக்கன் வருவானா??? அரணாக ♥️♥️♥️♥️

..

இந்த episode பிடிச்சிருந்தா எழுத்தாளரை உற்சாகப்படுத்துங்க!!
இப்போதே உற்சாகப்படுத்துங்கள்

இந்த படைப்பை மதிப்பிட விரும்புகிறீர்களா?

Click on a star to rate it!

No votes so far! Be the first to rate this post.

    No comments yet.