அத்தியாயம்:1
பதிம காதல்:
விடியற்காலையில் செய்தித்தாள் போடும் அவன் சிறிய பையன் தான் ஆனால் அவனுக்கு பதினாறு வயது நிரம்பி இருக்கும்.
அவன் ஐந்து வருடமாக இந்த வேலையை செய்து வருகிறான் குடும்ப சூழ்நிலை குறித்து உழைக்கும் சிறிய வயது மாணவர்களில் அவனும் ஒருவன் இருந்தாலும் படிப்பிலும் கெட்டிக்காரன்.காலை நான்கு மணி முதல் எட்டு மணி வரை அவன் அந்த பணியை செய்வான் ,சுமார் எண்பதைந்து வீடுகளுக்கு செய்தித்தாளை வீடுகளில் சேர்ப்பான்.முந்நூறு ஐம்பது ருபாய் சம்பளத்திற்கு சேர்ந்தவன் தற்போது ஏழுநூற்றுஐம்பதுருபாய் சம்பளம் பெறுகிறான்.அவனது பள்ளி கட்டணம் நொட்டு அட்டைகள் போன்றவற்றை அவனே வாங்கிக்கொள்வான்.
பதிம வயது என்பதால் அவனுக்குள்ளும் பல மாற்றங்கள் நிகழும் அல்லவா அரும்பு மீசை எதிர் பாலின ஈர்ப்பு முகத்தில் பருக்கள் என அனைத்தும் வந்தது .என்னமோ அந்த வயதில் சரியான வழியில் நடத்துதல் இல்லாததால் அந்த மாற்றத்தை பற்றி அவனுக்கு புரிதல் இல்லை .
தினமும் காலை நான்கு மணி முதல் எட்டு மணி வரை செய்தி தாள் போடும் அவன் சரியாக ஏழு மணி அளவில் ஒரு முட்டுச்சந்து வீட்டில் செய்திதாள் போடும்போது இரண்டு கண்களுடைய ஒரு பெண்ணை கண்டான் ,ஏன் இரண்டு கண்கள் என்று தனித்தன்மையாக கூறினேன் என்றால் கோழி உருண்டை கண்கள் என்றே கூறலாம் .
அவள் ஒரு பள்ளி மாணவி தான் சரியாக அவன் அந்த மாணவி வீட்டை அடைவதற்கு ஏழு முப்பது முதல் ஏழு நாற்பத்தைந்து மணி வரை ஆகும் சில நாட்கள் அந்த பெண்ணை பார்ப்பதற்காகவே அவன் தாமதமாக செல்வான்.
சில வாரங்கள் கழித்து அந்த மாணவியும் அவனை பார்க்க ஆரம்பித்தாள். அவளும் பள்ளிக்கு கிளம்புவதற்கு தனது வீட்டின் வெளிக்கெட்டின் ஒட்டி உள்ள மாடி படிக்கட்டில் அமர்ந்து தலையை வாரி ரிப்பனில் கட்டிக் கொண்டிருப்பாள்.அவன் எப்போது அந்த பக்கம் வருவான் என்று அவளும் காத்திருக்க ஆரம்பித்தாள்.
அவள் பள்ளி மாணவி தான் ஆனால் அவளது பார்வையை காதலாக ரசிக்க ஆரம்பித்தான்,சிறு கருப்பு மாநிற தோற்றமும் வாய்மூடிய பொன் சிரிப்பும் சிரிப்பினால் விழும் கண்ணக் குழியும் என ரசிக்க ஆரம்பித்தான் .சில நாட்களில் அந்த மாணவியின் தந்தையும் தாயும் பார்த்து தலை குனிந்து கண்டும் காணாமல் போன நாட்களும் உண்டு.சில மாலை மய வேளையில் அந்த பக்கம் நோட்டமிட்டு போவான் தரிசனம் கிடைக்குமா என்று.ஆனால் கிடைத்ததெல்லாம் ஏமாற்றம் தான் ,குப்பை போட கூட வெளியே அனுப்ப மாட்டார்கள்,கடைக்கு கூட எட்டிப் பார்க்க மாட்டாள்.ஏனென்றால் அவளோ அந்த வீட்டின் இளவரசி,ஒரே பெண் என்பதால் ஏகபோக செல்லம் பெண் என்றாலே அப்பாக்கள் செல்லம் தானே அதில் எந்தத விதி மாற்றமும் இல்லை .
அந்த பெண்ணுக்கும் அவன் மீது ஈர்ப்பு உள்ளது என்பதை அறிவான் அவன்,ஆனால் அதுவரை அவன் எந்த பெண்ணிடமும் தனியாக பேசியதில்லை காதல் என்றால் என்ன என்பது தெரியாமலே,தனது வாழ்க்கையின் முதல் காதலை பரிக ஆரம்பித்தானர் அவனும்- அவளும்.
எந்த மனிதனும் தான் செய்யும் வேலைகளில் சில மகிழ்ச்சியான தருணங்களை பார்க்க காத்திருப்பான்.சம்பள நாட்கள் போல .அதே போல் தினமும் அந்த பெண்ணை காணும் போவதெல்லாம் மகிழ்ச்சியை உணர்ந்தான் .அந்த பெண்ணும் ஒரு ஆண் பார்க்கிறான் என்று தனது கண்களிலே அதற்கான விடையை கொடுத்து விடுவாள்.தினமும் தன்னை பார்க்க வருவதை அறிந்ததால் அவனை தனது குனிந்த தலையில் ஓரக்கண்ணாலே பார்வை கொள்வாள்.
அவனும் அந்த தெரு முட்டுச்சந்து என்பதால் சென்ற வலியை திரும்பி வரவேண்டும்,ஆதலால் செல்லும்போது தன் கண்களால் அவனது காதலை காண்பான், அவள் இல்லையெனில் செல்லும் வேலையில் சைக்கிள் பெல்லினை அடித்து விட்டு செல்வான் .அவளும் மாடியில் இருந்து வேடிக்கை பார்ப்பாள். சில சமயங்களில் இருவரின் பார்வையும் மோதிக்கள்ளும் ,அப்போது மின்சாரம் தனக்குள் பாய்வதாக உணர்வார்களாம் அதிம காதல் அனுபவம் அப்படித்தான் என்று நண்பன் ஒருவன் கூறினான் .அவனுக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் சில நாட்கள் அவனால் செய்தித்தாள் விநியோககிக்க வர முடியவில்லை,அந்த நாட்களில் அவள் காத்திருந்து காத்திருந்து ஏமாற்றங்களை பரிசாக பெற்றாள்.
சில நாட்கள் பொருத்து மீண்டும் அவன் செய்தித்தாள் விநியோகம் செய்ய வந்தான்.அவள் வெளியில் இல்லாததால் தனது பெல்லினை அடித்தான், அவளோ உள்ளே தனது வேலைகளை போட்டுவிட்டு சட்டென்று வெளியே வந்து அவனை பார்த்தது முகத்தில் பல வகையான பூக்கள் பூத்தது போல சிரிப்போடு ,அந்த சிரிப்பில் அவளது கண்ணங்குழி தனது அதிக ஆழத்தை அடைந்தது மட்டுமின்றி கண்களும் சிரித்து அவனைப் பார்த்தது .அவன் அந்த வீட்டிற்கு செய்தித்தாள் போட்டுவிட்டு திரும்பகையில் ,அவன் அவளை பார்த்துக் கொண்டே மிதிவண்டியை இயக்க எதிரிலே இருக்கும் குப்பைத்தொட்டியை மறந்து அதன் மேல் இடித்து கீழே விழுந்தேன். உடனே அவரது தந்தையும் அவளும் அவனை தூக்கிவிட்டு சிதறிய செய்தித்தாள்களை அடுக்கி உதவி செய்தனர் . அவள் உடனே உள்ளே சென்று சொம்பில் தண்ணீர் எடுத்து வந்து கொடுக்க வாங்கி பருகி விட்டு அவளின் தந்தையும் பார்த்து நன்றி கூறி விடை பெற்றான் .
என்னதான் காதலாக இருந்தாலும் அவனுக்கும் தனது கடமை இருக்கிறது அல்லவா!மீதம் பத்தொன்பது வீடுகளுக்கும் அவன் செய்தித்தாள் வினியோகம் செய்ய வேண்டுமே,காதலுக்கு கண் கிடையாதாம், ஆனால் காதலிப்பவர்களுகான கண்களின் பார்வையே,காதல் நெஞ்சுக்குள் பட்டாம்பூச்சி மண்டைக்குள்ள அவளை பார்த்த ஞாபகம் ,என அவன் தனது வேலையை முடித்து பள்ளிக்கு சென்றான்.
தினமும் இவர்களின் காதல் கண் பார்வையிலேயே வளர்ந்தது. அவனுக்கோ அவளின் பெயர் கூட தெரியாது.அவளும் அதேபோல் தான், எதையும் எதிர்பாராமல் வந்தது தான் காதல். சில சமயங்களில் எதேர்ச்சையாக கடைத்தெருவிலோ, கோயில் தெருகளிலோ அவளை அவன் பார்ப்பது உண்டு.
அவளின் தந்தை ஓட்டும் இருசக்கர வாகனமான மோட்டார் சைக்கிளில் இளவரசியாக ஊர்வலம் செல்வாள். இவனோ அவளை பின்தொடர நினைத்து நெருங்க முடியாமல் ஏங்கி போவான். இருப்பினும் அவளை பார்த்த சந்தோஷத்தில் மகிழ்ச்சியாக இருப்பான். 
ஊர் திருவிழா நேரம் அது ,தேர் திருவிழா அந்த நேரத்தில் அவளை பார்பதற்காக அவன் தன்னிடம் உள்ள நல்ல ஆடையை அணிந்து கொண்டு கடைத்தெருவிலோயே காத்து கிடப்பான் அவள் வெளியே வரும் வரை. காலையில் இருந்து காத்து கிடந்தான், ஆனால் அவளோ, மாலையில் நீல நிற சுடிதார் அணிந்து அவள் தந்தையுடன் வெளியே வந்தாள். நீண்ட நேரம் காத்து கிடந்து வரிசையில் நின்று பல கால்களால் மிதிபட்டு சாமி தரிசனம் செய்தால் எப்படி ஒரு மனநிறைவு இருக்குமோ அவ்வாறாகவே உணர்ந்தான்.
தேரில் உள்ள சாமியை தரிசனம் செய்ய கூட்டம் அலைமோதியது,அந்த கூட்டத்திலும் அவள் உணர்ந்திருந்தாள் ஒருவரின் கண் நம்மை நோட்டமிடுகிறது என்று. 
“கடற்கரையில் கிடைக்கும் அரிதான சிப்பி வகையைப் போல், பல சிப்பிகளுக்கு நடுவில் ஒரு சிப்பியாக அவளது கண்ணுக்கு அவன் தெரிந்தான்”.
அந்த கூட்டத்தில் அவள் அவனை பார்த்து ஒரு புண் சிரிப்பொன்றை கொடுக்க ,அவன் அதை பார்த்து அந்த கூட்டத்திலே எகிறி குதித்து மகிழ்ச்சி அடைந்தான். அவளுக்கோ அவனுக்கோ சாமி தரிசனத்தை விட அவர்கள் இருவரின் தரிசனங்களே மிகுந்த சந்தோஷத்தை கொடுத்தது.
காதல் தரிசனம் தொடரும்…….
No comments yet.