அத்தியாயம் – 9

Udhaya Novel's | 14 Apr 2026 | Share

K 9 

அன்னைத்தெரசா குழந்தைகள் நல காப்பகம்..

ஆதிராவை பார்த்ததும் எல்லா குழந்தைகளும் சந்தோசமாய் கத்த ஆதிராவும் அவர்களை பார்த்து ரொம்பவே சந்தோசம் ஆனாள். பிரியாவும் அவளுடன் வந்து இருக்க இருவரும் குழந்தைகளுக்காக வாங்கி வந்த ஸ்வீட்ஸை அனைவருக்கும் கொடுத்தனர்.

அந்த காப்பகத்தின் பொறுப்பாளர் சரஸ்வதி அங்கு வர அவரை பார்த்த ஆதிரா, ” என்னை ஆசீர்வாதம் பண்ணுங்கம்மா.. ” என காலில் விழ,

” நல்லா இரும்மா.. எழுந்துரு.. ” என சரஸ்வதி சொல்லவும் எழுந்து நின்றாள் ஆதிரா.

” பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஆதிரா..” 

” தேங்க்ஸ்மா.. உங்ககிட்ட ஆசீர்வாதம் வாங்கிக்கிட்டு குழந்தைகளையும் பார்த்துட்டு போலாம்னு வந்தேன்மா.. ” என ஆதிரா சொல்ல,

” சரிம்மா.. என்கூட வா.. உன்கிட்ட சில விஷயங்கள் பேசணும்.. ” என சரஸ்வதி அவரது அறைக்கு செல்ல ஆதிராவும் பிரியாவும் அவருடன் சென்றனர்.

தனது அறைக்கு வந்த சரஸ்வதி அவரது சேரில் அமர்ந்தவர், ” ரெண்டு பேரும் உட்காருங்கம்மா.. ” என சொல்ல ஆதிராவும் பிரியாவும் சேரில் அமர்ந்தனர்.

ஆதிராவை பார்த்த சரஸ்வதி, ” உன்னோட இந்த பிறந்தநாளுக்கு தான் நான் ரொம்ப வருஷமா காத்துட்டு இருந்தேன்மா.. உனக்கு இது 25வது பிறந்தநாள்.. உன் வாழ்க்கையையே மாற்ற போற பிறந்தநாள்மா இது.. ” என சொல்ல பிரியாவும் ஆதிராவும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர்.

சரஸ்வதியை பார்த்த ஆதிரா, ” என்னமா சொல்றிங்க.. எனக்கு ஒன்னும் புரியல.. ” என கேட்க,

” உனக்கு புரியற மாதிரி சொல்றேன்.. உனக்கு நினைவு தெரியறதுக்கு முன்னாடியே உன் அப்பா, அம்மா இறந்துட்டாங்க..  அதுக்கு அப்புறம்தான் நீ இங்க வந்த.. இது உனக்கு ஏற்கனவே தெரிஞ்ச விஷயம் தான்… ஆனா உனக்கு தெரியாத விஷயம் ஒன்னு இருக்கு.. உன் அப்பா அவர் சாகறதுக்கு முன்னாடியே உன் பேர்ல உயில் எழுதி வச்சிருக்காரு.. அவரோட எல்லா சொத்துக்களயும் உன் பேர்ல தான் எழுதி இருக்காரு.. உனக்கு பல கோடி சொத்துக்கள் இருக்கு ஆதிரா.. ” என சரஸ்வதி சொல்ல இருவரும் அதிர்ந்து போய் அவரை பார்த்தனர்.

” என்னமா சொல்றிங்க.. அவ்ளோ சொத்து இருக்கப்ப என்னை ஏன் இங்க கொண்டு வந்து விட்டாங்க.. உங்களுக்கு எப்படி இதெல்லாம் தெரியும்.. ” என ஆதிரா கேட்க,

” நான்தான்மா சொன்னேன்.. நான்தான் உன்னை இங்க கொண்டு வந்து சேர்த்தேன்.. ” என குரல் கேட்க எல்லாரும் திரும்பி பார்க்க அங்கு வக்கீல் சுவாமிநாதன் அவர்களை பார்த்து சிரித்தவர் அவர்களிடம் வந்தார்.

ஆதிரா அவரை அடையாளம் தெரியாமல் குழப்பதுடன் பார்க்க அவளை பார்த்து சிரித்தவர், ” என் பேர் சுவாமிநாதன்மா.. உங்க பேமிலி லாயர்.. ” என சொல்ல,

” இங்க என்ன சார் நடக்குது.. அம்மா என்னென்னமோ சொல்லறாங்க.. எனக்கு எதுவும் புரியல.. ” என குழப்பதுடன் சொன்னாள் ஆதிரா.

” உனக்கு புரியற மாதிரி நான் சொல்றேன்மா.. உன் பேமிலியில எல்லாரும் ஆக்சிடென்ட்னால இறக்கல.. அவங்கள வேணும்னே ஆக்சிடென்ட் பண்ணி இருக்காங்க.. ஆனா அந்த ஆக்சிடென்ட்ல நீ உயிர் பிழைச்ச மாதிரி உன் அம்மா வேதாவும் உயிர் பிழைச்சுட்டாங்க.. ஆமாம்மா உன் அம்மா அந்த ஆக்சிடென்ட்ல சாகல.“ என வக்கீல் சொல்ல அதை கேட்ட ஆதிரா அதிர்ச்சியுடன் அவரை பார்த்தாள்.

அவர் சொன்னதை கேட்டு பிரியாவும் அதிர்ச்சியுடன் அவரை பார்க்க சரஸ்வதிக்கும்கூட இது அதிர்ச்சியாக தான் இருந்தது. சரஸ்வதியை பார்த்த  வக்கீல்,

“ ஐம் சாரி மேடம்.. உங்ககிட்டகூட நான் உண்மைய மறைச்சுட்டேன்.. ஆதிராவுக்கு அம்மா இருக்காங்கன்னு சொன்னா நீங்க எங்க அவளை இங்க சேர்த்துக்க மாட்டீங்கன்னு தான் நான் உண்மைய சொல்லுல.. வேதா மேடமும் உண்மைய வேண்டாம்னு சொல்லிட்டாங்க… அதனால தான் சொல்லுல மேடம்.. மன்னிச்சுருங்க.. “ என சொல்ல,

“ பரவாயில்ல சார்.. ஆதிராவுக்கு அம்மா இருக்காங்கன்னு நீங்க சொன்னதே எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு.. தனக்கு யாரும் இல்லையேன்னு ஆதிரா எவ்ளோ பீல் பண்ணுனா அப்படினு எனக்கு நல்லா தெரியும்.. இப்போதான் நிம்மதியா இருக்கு.. ஆனா அவங்க அம்மா உயிரோட இருக்கப்ப எதுக்கு ஆதிரா இப்படி ஆசிரமத்துல வளரனும்.. “ என புரியாமல் கேட்டார் சரஸ்வதி.

“ அதுக்கு காரணம் இருக்கு மேடம்.. இவங்களோட சொத்துக்காக யாரோ பிளான் பண்ணித்தான் மொத்த குடும்பத்தையும் ஆக்சிடென்ட் பண்ணி கொல்ல பார்த்துருக்காங்க.. அது யாரு என்ன ஏதுன்னு எனக்கு எதுவும் தெரியாது.. சொத்து ஆதிராவோட அப்பா விக்ரம் பேர்ல இருக்குன்னு நினைச்சு கொல்ல பார்த்துருக்காங்க.. ஆனா சொத்து ஆதிரா பேர்ல இருந்தது வேதா மேடமுக்கே அப்புறம்தான் தெரிஞ்சுருக்கு.. 

ஆதிரா பேர்ல சொத்து இருக்கப்ப அவ உயிரோட இருக்கான்னு தெரிஞ்சா அது அவளோட உயிருக்கும் ஆபத்து அப்படினு தான் உன்னை இங்க கொண்டு வந்து விட சொன்னாங்க… “ என்ற சுவாமிநாதன் ஆதிராவை பார்க்க அவளோ எதுவும் பேசாமல் சிலையென அமர்ந்து இருந்தாள்.

“ உங்க அப்பாவோட சொத்தையும் காப்பாத்தனும் உன்னையும் காப்பாத்தனும் தான் வேதா மேடம் இப்படி ஒரு முடிவு எடுத்தாங்கம்மா.. உனக்கு 25வது வயசு ஆகறப்ப இந்த சொத்து எல்லாம் உன்கிட்ட சட்டபூர்வமா ஒப்படைக்கனுங்கறது உங்க அப்பாவோட உயில்ல இருக்கு.. அதுக்கு அப்புறம் உன்னை யாரும் எதுவும் பண்ண முடியாது.. உன்னை எதாவது செஞ்சா சொத்து முழுசும் ஆசிரமத்துக்கு போற மாதிரி உன் அப்பா சொத்து எழுதி வச்சிருக்காரு.. “ என சுவாமிநாதன் சொல்ல அவரை பார்த்த பிரியா,

“ நீங்க சொல்றது எல்லாம் ஏதோ சினிமாவுல வர மாதிரி இருக்கு சார்.. அப்போ ஆதிராவோட அம்மா எங்க இருக்காங்க சார்.. எந்த ஊர்ல இருக்காங்க.. “ என கேட்க சுவாமிநாதன் தயக்கத்துடன் ஆதிராவை பார்க்க அவரை பார்த்த ஆதிரா,

“ என்ன சார் சொல்லுங்க.. என் அம்மா இப்போ எங்க இருக்காங்க.. அவங்கள நான் பார்க்கணும்.. “ என அழ,

“ அவங்கள இனி நீ பார்க்க முடியாதும்மா.. அவங்க கொஞ்ச மாசத்துக்கு முன்னாடிதான் இறந்து போனாங்க.. “ என சுவாமிநாதன் சொல்ல அதை கேட்ட ஆதிரா கதறி அழ பிரியா அவளை சமாதானம் செய்தாள்.

“  என்ன சார் இது.. அவங்க இருக்கப்ப இந்த உண்மை தெரிஞ்சுருந்தா ஆதிரா அவளோட அம்மாவை பார்த்திருப்பால்ல சார்.. “ என பிரியா ஆதங்கத்துடன் கேட்க,

“ நான் என்னம்மா பண்றது.. ஆதிராவோட உயிருக்கு ஆபத்து இருக்கறதுனால வேதா மேடம் தான் பிடிவாதமா இருந்துட்டாங்க.. ஆதிராவுக்கு 25வயசு ஆனதுக்கு அப்புறம் தான் இந்த உண்மை எல்லாம் ஆதிராவுக்கு தெரிய வரணும்னு என்கிட்ட ஸ்ட்ரிக்ட்டா சொல்லிட்டாங்கம்மா.. “ என்றார் சுவாமிநாதன்.

கண்களை துடைத்துக்கொண்ட ஆதிரா, “ எல்லாம் சரிதான் சார்.. ஆனா அந்த ஆக்சிடென்ட் பண்ணுனது யாரு.. அவங்கள பத்தி எதுவும் தெரிஞ்சுதா.. என் குடும்பத்தையே கொன்னு இருக்காங்க.. அவங்க யாரு என்ன ஏதுன்னு தெரிஞ்சுதா.. அவங்களுக்கு தண்டனை கிடைச்சுதா.. “ என கேட்க,

“ இல்லம்மா.. நான்தான் முன்னாடியே சொன்னேன்ல.. அதை பண்ணுனது எல்லாம் யாருனு எனக்கு தெரியல.. வேதா மேடமுக்கு தெரிஞ்சு இருக்குமோ என்னமோ அவங்களும் என்கிட்ட எதுவும் சொல்லுல.. கம்பளைண்ட் கொடுக்கலாம்னு சொன்னதுக்கு வேதா மேடம் வேண்டாம்னு சொல்லிட்டாங்க..” என கவலையுடன் சொன்னார் சுவாமிநாதன்.

சில நிமிடம் அமைதியாக இருந்த சுவாமிநாதன், “ இப்போ இந்த சொத்து எல்லாத்தையும் உன்கிட்ட ஒப்படைக்க தான் நான் இங்க வந்துருக்கேன்மா.. நீ கிளம்பி என்கூட வந்தன்னா அதிகாரபூர்வமா உன்னை எல்லா சொத்துக்கும் வாரிசா எல்லாருக்கும் சொல்லிருவேன்.. கிளம்பலாமா.. “ என கேட்க அவரை பார்த்து சிரித்த ஆதிரா,

“ இல்ல சார்.. நான் எங்கையும் வருல.. எனக்கு எந்த சொத்தும் வேண்டாம்.. “ என சொல்ல அதை கேட்ட மூவரும் அதிர்ந்து போய் அவளை பார்த்தனர்.

“ என்னமா சொல்ற.. சொத்து எதுவும் வேண்டாமா.. உனக்கு எவ்ளோ சொத்து இருக்குனு தெரிஞ்சா நீ இப்படி எல்லாம் பேசமாட்ட.. “ 

“ இல்ல சார்.. எனக்கு அதெல்லாம் எதுவும் தெரிய வேண்டாம்.. என் அம்மா அப்பாவே இல்லனு ஆனதுக்கு அப்புறம் எனக்கு அவங்களோட சொத்து மட்டும் எதுக்கு சார்.. அதனால எனக்கு அவங்களோட எந்த சொத்தும் வேண்டாம்.. அதை நான் என்னை வளர்த்த இந்த ஆசிரமதுக்கு எழுதி கொடுத்தறேன்.. “ என ஆதிரா சொல்ல அவளை பார்த்த சரஸ்வதி,

“ என்னமா நீ.. ஏன் இப்படி சொல்லிட்டு இருக்க.. பிழைக்க தெரியாத பொண்ணா இருக்கியேம்மா.. “ என சொல்ல,

“ இல்லம்மா.. இந்த சொத்துக்காக தான என் குடும்பத்தையே கொன்னு இருக்காங்க.. அம்மா இருந்தும் நான் அனாதையா இருந்துருக்கேன்.. எல்லாத்துக்கும் காரணமான இந்த சொத்து எனக்கு வேண்டாம்மா.. “ என ஆதிரா சொல்ல அவளுக்கு எப்படி புரிய வைப்பது என தெரியாமல் மூவரும் அவளை கவலையுடன் பார்த்தனர்.

இந்த episode பிடிச்சிருந்தா எழுத்தாளரை உற்சாகப்படுத்துங்க!!
இப்போதே உற்சாகப்படுத்துங்கள்

இந்த படைப்பை மதிப்பிட விரும்புகிறீர்களா?

Click on a star to rate it!

No votes so far! Be the first to rate this post.

    No comments yet.