அத்தியாயம் 6

தளிர் நிலா | 26 Nov 2025 | Share

சிறை6

“என்ன எங்க கூட்டிட்டு வந்துருக்கீங்க வாசு?” என்ற படி வானதி ஜீப்பிலிருந்து இறங்க…

அவளது கைப் பிடித்து அவள் இறங்க உதவி செய்தவன்… “நீ தானே சொன்ன ரணதீரன் கேஸை மேல்முறையீடு பண்ணனும் அதுக்கு யாராவது நல்ல வக்கீலா பார்க்கனும்னு” என்றான் வாசு.

“ம்ம்” என்றாள் அவள்.

“அது தான் உன்னை இங்க கூட்டிட்டு வந்தேன்” என்றவன் முன்னே நடக்க.

“அதுக்குள்ள வக்கீல் பிடிச்சிட்டிங்களா?” என்றவள் அவனை யோசனையாகப் பார்க்க.

“ம்ம் ஏற்கனவே எனக்கு இந்த ஐடியா இருந்தது இரண்டு மாசம் முன்னாடியே அப்பாயின்மென்ட் போட்டேன் இப்போ தான் கிடைச்சது அது தான் உன்னை கூட்டிட்டு போலாம்னு வந்தேன்” என்றான் அவன்.

“இரண்டு மாசம் முன்னாடி போட்ட அப்பாயின்மென்ட்டா?” என்றாள் அவள் விழி விரித்து.

“ஆமா வானும்மா இவரு பேமஸ் லாயர். நீ கூட கேள்விபட்டு இருப்பியே லாயர் விக்னேஷ்வரன். இவர் எடுத்த கேஸ்ல இதுவரை தோற்றதே இல்லை. இவரை அவ்வளவு சுலபத்துல பிடிக்க முடியாது. ரணதீரன் கேஸ்க்கு இவரைப் போல ஒரு ஸ்ட்ராங் லாயர் தான் வேணும்” என்றான் அவன்.

“ம்ம் கேள்விபட்டுருக்கேன் நானும் இரண்டு மூனு டைம் இவர்கிட்ட அப்பாயின்மென்ட் ட்ரை பண்ணேன் இப்போ வரை கிடைக்கலை” என்றவள் “ஆனா நீங்க ஒழுங்க இந்த கேஸை ஹேன்டில் பண்ணிருந்தா கூட என் மாமா வெளிய வந்துருப்பாரு. இப்படி வக்கீல் பின்னாடி அலைய வேண்டி இருந்துருக்காது” என்றாள் அவனை ஒரு மாதிரி பார்த்தபடி.

அவளை முறைத்தவன் “இப்போ எப்படி உள்ளே போய் அவரை பார்க்கலாமா? இல்லை வந்த வழியைப் பார்த்து போய்றலாமா?” என்றவன் கேட்க.

“உண்மையை சொன்னா மட்டும் கோவம் வந்துருமே. ரொம்ப பண்ணாம வாங்க வாசு” என்றாள் அவள்.

“இங்க பாரு வானு, ரணதீரன் ஜெயில்ல இருக்கனும்னு எனக்கு எந்த அவசியமும் இல்லை ஆசையும் இல்லை. அண்ட் இந்த கேசை ஹேண்டில் பண்ணது நான் கிடையாது. இருந்தும் நமக்கு சாதகமா எதாவது எவிடன்ஸ் கிடைக்குமா? ரணதீரனை எப்படி வெளிய கொண்டு வரலாம்னு நான் நினைக்காத நாள் கிடையாது. சோ சும்மா என்னை இப்படி இரிடேட் பண்ணாத” என்றவன் ரிஷப்ஷனிடிடம் தன் அப்பாயின்மென்ட்டை உறுதி செய்தவன் வெயிட்டிங் ஹாலில்  காத்திருக்க.

சற்று நேரத்தில் ஒரு பெண் வந்து அவர்களை விக்னேஷ்வரன் இருக்கும் அறைக்கு அழைத்து சென்றாள்.

அந்த பத்து நிமிடத்திலும் அடுத்த ஒரு உலகப் போரே நடந்து முடிந்து விட்டது.

“வெல்கம் இன்ஸ்பெக்டர் வாசுதேவன்.. உட்காருங்க. என்ன திடீர்னு இந்தப் பக்கம்?” என்று லாயர் விக்னேஷ்வரன் வாசுவை வரவேற்க.

“ஹாய் சார்… நான் ஏற்கனவே உங்ககிட்ட ஒரு கேஸ் விஷயமா பேசியிருந்தேனே” என்றவன் சொல்ல.

“ம்ம்… யாஆ… அப்போ ஒரு  கேஸ்ல பிஸியா இருந்தேன் அதனால உங்க கேஸ் எடுக்க முடியா போச்சு. என்னோட அஸிட்டன் லாயர்ஸூம் மத்த கேஸ்ல பிசி அதனால உங்களுக்கு கெல்ப் பண்ண முடியல. பட் அந்த கேஸ் தீர்பாகிருச்சுன்னு கேள்வி பட்டனே” என்றவர் வாசுவை அழுத்தமாகப் பார்க்க.

“எஸ்… பட் அவங்க வைப் மிஸஸ் ரணதீரனுக்கு தன்னோட ஹஸ்பண்ட் அந்த கொலையைப் பண்ணிருக்கா மாட்டாருனு ஸ்ட்ராக்கா பிலிவ் பண்றாங்க. அது தான் அவங்க நம்பிக்கையை கெடுக்க வேணாமேனு கேஸை மேல்முறையீடு பண்ணலாம்னு நினைச்சோம்” என்று வாசு சொல்ல.

“ம்ம் வெல். இவங்க தான் மிஸ்டர் ரணதீரனோட வைப்பா?” என்று வானதியை பார்த்தபடி கேட்க.

அவனும் எஸ் என்றான்.

“எதை வச்சு உங்க ஹஸ்பண்ட் தப்பு பண்ணலனு சொல்றீங்க? அவரோ தப்பை ஒத்துக்கிட்டு அப்ரூவர் ஆகியிருக்காரு. அவரு தப்பு பண்ணலனு உங்கக்கிட்ட எதாவது எவிடன்ஸ் இருக்கா மிஸஸ் ரணதீரன்” என்று நிதானமா அதே சமயம் அழுத்தமாக அவளை பார்த்தபடி விக்னேஷ்வரன் கேட்க.

வானதியோ எதோ சட்டத்தை கரைத்துக் கொடுத்த மிகப்பெரிய  பேமஸ் லாயர் என்று சொன்னதும் நாற்பது ஐம்பதுகளில் ஒருவரை எதிர்பார்க்க இருபத்தி எட்டு வயதில் எந்த செருக்கும் இல்லாம பேசும் அவனை அதிர்ந்து தான் பார்த்தாள்.

தன்னையே அவள் வெறித்தபடி இருக்க…

லாயர் விக்னேஷ்வரனோ அவள் முன் கைகளை ஆட்டி, “ஹலோ மேம், நான் பேசுறது கேட்குதா?” என்று சிரித்த படி கேட்க.

வாய் விட்டு சிரித்த வாசுவோ, “ஹாஹா நீங்க ஒரு பெரிய வக்கீல்னு சொல்லி கூட்டிட்டு வந்தேன். அதை வச்சி அவ உங்களை ஒரு நாற்பது ஐம்பது வயசுல கற்பனை பண்ணி வந்துருப்பா. சின்ன பையன பார்த்ததும் உங்க மேல கொஞசம் டவுட் வந்துருக்கும்” என்றவன் மீண்டும் சிரிக்க.

“என்ன டவுட் இன்ஸ்பெக்டர் சார்?” என்றார் அவர்.

“அதுவா? உண்மையாவே நீங்க பேமஸ் லாயர் தானா இந்த கேஸை ஒழுங்கா நடத்துவீங்களானு மேடமுக்கு டவுட் வந்துருக்கும்” என்க.

விக்னேஷ்வரனோ வானதியை அழுத்தமாகப் பார்த்தபடி “ஏஜ் இஸ் ஜஸ்ட் அ நம்பர், நாலேட்ஜ் இஸ் த பவர்” என்றான் அழுத்தமாக.

அவன் சொன்ன தோரணையே அவளுக்கு கிலியை ஏற்படுத்த அவனை மிரட்சியாகப் பார்த்தாள்.

“என்ன மிஸ்டர் வாசுதேவன் இவங்க பேசுவாங்களா இல்லை இப்படியே என்ன பார்த்துட்டே இருக்கப் போறாங்களா?” என்றான் நெற்றியை நீவிய படி.

வாசுவோ, “என்னடி எதாச்சி பேசு ஏன் இப்படி பார்த்துட்டே இருக்க” என்று கேட்க.

“வாசு மாமா, இவர் தீரன் மாமாவை வெளிய கொண்டு வந்துருவாங்களா?” என்றாள் அவள் சந்தேகமாக.

“ஏன்டி அப்படி கேட்குற?” என்றான் அவன்.

“இல்லை பெரிய லாயர்னு சொன்னீங்க. அந்த மொக்க லாயர் எவ்ளோ பந்தா பண்ணான் சீன் போட்டான் சிடுசிடுனு இருந்தான். ஆனா இவரு ரொம்ப கூலா இருக்காரு. எனக்கு என்னவோ பயமா இருக்கு” என்றாள் மிரட்சியாக.

விக்னேஷ்வரன் அவர்களை அழுத்தமாக பார்த்தபடி இருக்க,

“சாரி லாயர் சார். இதுக்கு முன்னாடி வேற ஒரு லாயர் தான் கேஸ் ஹேண்டில் பண்ணாரு. ஏதோ நான் தான் பெரிய ஆளு மாறி கொஞ்சம் சீன் போட்டாரு. பட் அவரோட மோட்டிவ் ரணதீரனை வெளிய கொண்டு வரதுக்கு பதில் அவரை உள்ள தள்ளுறதுல தான் இருந்தது. அதனால தான் நாங்க உங்களை தேடி வந்தோம். சின்ன பொண்ணு தானே அது தான் உங்களையும் அவரையும் கம்பேர் பண்ணி கன்ப்யூஸ் ஆகிட்டா. சாரி பார் தட்” என்றான் வாசு தன்மையாக.

அவளது மேடிட்ட வயிற்றை அழுத்தமாக பார்த்தவன் “சின்னப் பொண்ணா?” என்றான் ஒற்றைப் புருவம் உயர்த்தி.

வாசுவோ “ஷீ இஸ் ஜஸ்ட் நயன்டீன்” என்றதும் அதிர்ந்தது விக்னேஷ்வரன் தான்.

“அப்போ சைல்ட் மேரேஜா இவங்களோடது. இதுக்காகவே மிஸ்டர் ரணதீரன் மேல இன்னொரு கேஸ் போடலாமே” என்றான் அவன்.

“சைல்ட் மேரேஜ் எல்லாம் இல்லை. எனக்கு பதினெட்டு வயசு முடிஞ்ச அப்புறம் தான் கல்யாணம் ஆச்சு நான் மேஜர் தான்” என்றாள் அவள் அவசரமாக.

அவளைப் பார்த்து கேலியாக உதட்டை வளைத்தவன், “உங்களுக்கு மேரேஜ் ஆகி எவ்வளவு மாசம் ஆகுது” என்று அவன் கேட்க.

“எட்டு மாசம் ஆகுது” என்றாள் அவள்.

அவளது மேடிட்ட வயிற்றைப் பார்த்தவன் “எத்தனை மாசம்?” என்றான்.

தலையை குனிந்தவள் “எட்டு மாசம்” என்றாள்.

சலிப்பாக தலையசைத்தவன், “என்ன இது வாசு சார். பதினெட்டு வயசு பிள்ளையை கல்யாணம் பண்ணி லோட் பண்ணிட்டு நான் தான் கொலைப் பண்ணிட்டேன்னு போய் ஜெயில்ல இருக்கான் அவன். எப்படி பார்த்தாலும் அவன் நல்லவன்னு தோணைலையே” என்றான் விக்னேஷ்வரன் உதட்டைப் பிதுக்கி.

“என் மாமா நல்லவரு தான். அவரு எந்த தப்பு பண்ணல. அப்புறம் எங்க பர்சனல் லைப் பத்தி கமென்ட் பண்ண உங்களுக்கு ரைட்ஸ் இல்லை. உங்களாள இந்த கேஸ் எடுக்க முடியாதுனா ஸ்ட்ரெய்டா சொல்லுங்க. இப்படி தேவையில்லைமா பேசாதீங்க. வாங்க வாசு போலாம்” என்றவள் வாசு இழுத்துக் கொண்டு வெளியேப் போக முனைய.

அவளை சொடக்கிட்டு நிருத்திய விக்னேஷ்வரனோ “உன் ரணதீரன் மாமா கொலைப் பண்ணிருக்க மாட்டாருனு ஸ்டில் நீ நம்புற அப்படி தானே?” என்றவன் கேட்க.

அவளோ அழுத்தமாக ஆமென்று தலையசைத்தாள்.

“அப்போ நீயே போய் அவன் இந்த கொலையைப் பண்ணலைனு ஸ்ட்ராங் எவிடென்ஸ் கொண்டு வா. உன்னால முடிஞ்சா, உன் மாமா மேல உனக்கு நம்பிக்கை இருந்தா கொண்டு வா. அட்லீஸ்ட் ஒரு க்ளூவாவது கொண்டு வா. உன் ஹஸ்பண்ட்ட நான் வெளியேக் கொண்டு வரேன். என்ன என்னோட சவால்க்கு நீ தயாரா?” என்றவன் ஒற்றைப் புருவம் ஏற்றிக் கேட்க.

“என் மாமா மேல எனக்கு நம்பிக்கை இருக்கு. அவரு தப்பு பண்ணலைனு நான் நிரூபிக்குறேன்” என்றவள் அவனை அழுத்தமாக பார்த்தபடி வெளியேற.

“என்ன லாயர் சார் இது” என்று வாசு சோர்ந்து போய் கேட்க….

“எல்லாம் நன்மைக்கே சில் வாசு” என்றான் அவன் கண் சிமிட்டி.

இந்த episode பிடிச்சிருந்தா எழுத்தாளரை உற்சாகப்படுத்துங்க!!
இப்போதே உற்சாகப்படுத்துங்கள்

இந்த படைப்பை மதிப்பிட விரும்புகிறீர்களா?

Click on a star to rate it!

No votes so far! Be the first to rate this post.

    No comments yet.