அத்தியாயம் – 6

Udhaya Novel's | 23 Mar 2026 | Share

K 6

ஆர்யன் சொன்னதை கேட்டு வைஷாலியின் முகம் மலர அதை பார்த்த ஆதிராவுக்கு ஏனோ கடுப்பானது. அவள் முகம் மாறியதை கவனித்த பிரியா,

” ஏய் என்னடி.. எதுக்கு இப்போ உன் முகம் இப்படி சந்திரமுகியா மாறுது.. என்னாச்சுடி.. ” என கேட்க,

” அவ எதுக்குடி ஆர்யனையே பார்த்துட்டு இருக்கா.. அவன் பார்ட்டிக்கு வரதா சொன்னதும் அவ எதுக்குடி இப்படி இளிச்சுட்டு இருக்கா.. ” என கோபமாய் சொன்னாள் ஆதிரா.

அவளை வித்தியாசமாய் பார்த்த பிரியா, ” ஏய் உனக்கு என்னடி ஆச்சு.. அவ என்னமோ பண்றா.. அதைப்பத்தி உனக்கு என்னடி… நீ ஏன் இப்படி எல்லாம் ரியாக்ட் பண்ணிட்டு இருக்க.. நீ இப்படி எல்லாம் பண்ற ஆள் இல்லையேடி.. என்னாச்சு உனக்கு.. ஹாஸ்பிடல் எதுவும் போகணுமா.. ” என கேட்க,

” ஏய்.. என்ன..எனக்கு என்ன பைத்தியம் பிடிச்சுருச்சுன்னு சொல்றியா.. ” என அவளை முறைத்தாள் ஆதிரா.

” நான் அப்படி சொல்லுலடி.. நானும் அந்த ஆர்யன் வந்ததுல இருந்து உன்னை கவனிச்சுட்டு தான் இருக்கேன்.. உன் நடவடிக்கை எல்லாம் கொஞ்சம்கூட சரி இல்ல.. நான் சொல்ல வேண்டியதை சொல்லிட்டேன்.. அதுக்கு அப்புறம் உன் இஷ்டம்.. ” 

பிரியா முகத்தை திருப்பி கொண்டதும் ஆதிராவும் முகத்தை திருப்பி கொண்டவள் வைஷாலியை பார்க்க அவளோ ஆர்யனையே இமைக்காமல் பார்த்து கொண்டு இருக்க ஆதிராவுக்கு பற்றி கொண்டு வந்தது.

ஆதிரா வைஷுவை முறைத்துக் கொண்டு இருப்பதை பார்த்த பிரியா, ” ம்ஹூம்.. இதுக்கு மேல இதை விட்டா சரி வராது.. அவளை கூட்டிட்டு கிளம்பிற வேண்டியது தான்.. ” என நினைத்தவள்,

” ஓகே விஷால்.. நாங்க இப்போ கிளம்புனா தான் நைட் பார்ட்டிக்கு வர முடியும்.. நைட் பார்க்கலாம்… வா ஆதிரா போலாம்.. ” என்ற பிரியா அவளை பார்க்க அவளும் எழுந்து நின்றாள்.

எல்லாரிடமும் சொல்லிக்கொண்டு இருவரும் வெளியே வர பெருமூச்சு விட்ட பிரியா, ” இப்போதான்டி எனக்கு நிம்மதியா இருக்கு… உன்னை வச்சுக்கிட்டு என்ன பண்ண போறேனோ தெரியல.. சரி நான் ஒன்னு கேக்கறேன்.. நீ ஆர்யனை லவ் பண்றியா.. ” என கேட்க அதிர்ந்து போய் அவளை பார்த்தாள் ஆதிரா.

” என்னடி இப்படி கேக்கற.. அதெல்லாம் எதுவும் இல்லடி.. என்னைப்பத்தி உனக்கு தெரியும்ல.. “

” உன்னைப்பத்தி தெரிஞ்சதுனால தான் உன்னோட நடவடிக்கை எனக்கு வித்தியாசமா தெரியுது.. அதனால நான் டேரக்டாவும் உன்கிட்ட கேக்கறேன்.. உனக்கு ஆர்யனை லவ் பண்றியா… இல்ல அவர்மேல இன்ட்ரெஸ்ட் ஆர் ஐடியா எதுவும் இருக்கான்னு கேக்கறேன்.. ” 

” உண்மையாலுமே எதுவும் இல்லடி.. நான் போய் லவ் எல்லாம்.. சான்ஸே இல்ல.. நீ வா.. நைட் பார்ட்டிக்கு போய் ரெடியாகலாம்..  பார்ட்டி போய் பன் பண்ணி ரொம்ப நாள் ஆச்சு.. இன்னிக்கு ஜாலி பண்றோம்.. வா.. ” என்ற ஆதிரா பிரியாவை இழுத்துக்கொண்டு செல்ல பிரியாவும் அவளுடன் சென்றாள்.

ஆர்யன் ஷக்தியுடன் அந்த பைவ் ஸ்டார் ஹோட்டலுக்கு வர விக்னேஷும் சரியாக வந்து சேர்ந்தான். மூவரும் ஒன்றாக உள்ளே வர விஷால் அவர்களுக்காக வாசலிலயே காத்து கொண்டு இருக்க மூவரையும் பார்த்து சிரித்தான்.

” வந்து ரொம்ப நேரமாச்சா விஷால்.. ” என ஆர்யன் கேட்க,

” இல்ல ஆர்யன்.. வந்து கொஞ்ச நேரம்தான் ஆச்சு.. நீங்க எல்லாம் வந்துட்டீங்க.. சரி வாங்க உள்ள போலாம்.. ” என்றான் விஷால்.

” நம்ம டீம் கேர்ள்ஸ் எல்லாம் வந்துட்டாங்களா விஷால்.. ” என சக்தி கேட்க,

” ஏன்டா நீயே இப்போதான் ரெடியாகி வந்துருக்க.. அவங்க எப்படிடா அதுக்குள்ள ரெடியாகி வருவாங்க.. “ என விஷால் சொல்ல அனைவரும் சிரித்தனர்.

“ ஏன் விஷால் இன்னிக்கு நம்ம எம். டி யும் பார்ட்டி அட்டென்ட் பண்றாரு தான.. “ என ஆர்யன் கேட்க,

“ ம்ம் ஆமா ஆர்யன்.. அவருதான் பார்ட்டிய அரேஞ் பண்ணுனது.. இன்னிக்கு பார்ட்டி முடிஞ்சதும் அப்ராதான் போயிருவாரு.. அப்புறம் மறுபடியும் எப்போ இந்தியா வருவாருன்னு யாருக்குமே தெரியாது.. சார் அவ்ளோ பிசி.. “ என விஷால் சிரித்துக்கொண்டே சொல்ல ஆர்யனும் சிரித்தான்.

“ சரி வாங்க.. நாம உள்ள போலாம்.. “ என்ற விஷால் அனைவரையும் அழைத்துக்கொண்டு உள்ளே வர உள்ளே அனைவரும் சந்தோசமாய் டான்ஸ் ஆடிக்கொண்டு இருக்க டி. ஜே அவர்களின் ரசனைக்கு ஏற்ப பாட்டை மாற்றிகொண்டே இருந்தான்.

விஷால் அங்கிருந்து சென்றுவிட இவர்கள் மூவர் மட்டும் தனியாக நின்றுகொண்டு இருந்தனர்.

” ஆர்யன் நீங்க ட்ரிங்க்ஸ் பண்ணுவிங்களா.. ” சக்தி கேட்க,

” இல்ல சக்தி.. எனக்கு அந்த பழக்கம் இல்ல.. ” என சிரித்துகொண்டே சொன்ன ஆர்யன் அப்பொழுது உள்ளே வந்த ஆதிராவை பார்த்து தடுமாறியவன் தன்னையும் அறியாமல் அவளையே பார்த்துக்கொண்டு இருந்தான்.

அவளுடன் பிரியாவும் வைஷாலியும் வர ஆனால் அவன் கண்ணுக்கு ஆதிரா மட்டும் தான் தெரிய அவளையே பார்த்தபடி நின்றிருந்தான் ஆர்யன்.  நாகரிகம் என்ற பெயரில் முகத்தை சுழிக்கும் வண்ணம் ட்ரெஸ் அணியாமல் அதே சமயம் இடத்திற்கு ஏற்றார் போலவும் அழகு தேவதையாய் வந்து இருந்தாள் ஆதிரா. ஆர்யன் மட்டும் இல்லாமல் இன்னும் நிறைய கண்கள் அவளை மொய்க்க அவளோ யாரையும் திரும்பிகூட பார்க்கவில்லை.

அதே போல் உள்ளே வந்த ஆதிரா முதலில் பார்த்தது ஆர்யனை தான்.. ஆர்யன் அவ்வளவு ஹேண்ட்சமாய் ரெடியாகி வந்துருக்கவும் ஆதிராவின் கண்களும் அவனைவிட்டு விலக மறுத்தது.வேகமாய் அவனிடம் வந்த வைஷாலி,

” ஹாய் ஆர்யன்.. யூ லுக் லைக் சோ ஹேண்ட்சம்.. ” என அவனை அணைக்க போக அவளை தடுத்த ஆர்யன், 

” இட்ஸ் ஓகே.. தேங்க்ஸ்.. ” என சிரிக்க வைஷுவின் முகம் வாடியது.

அதை பார்த்த ஆதிராவின் முகம் திருப்தி அடைய அவளை பார்த்த ஆர்யன், ” ஹாய் ஆதிரா.. யூ லுக் லைக் சோ கார்ஜியஸ்.. ” என சொல்ல,

” தேங்க்ஸ்.. ” என சிரித்தாள் ஆதிரா.

” நாங்களும் இங்கதான் இருக்கோம்.. எங்களுக்கும் கம்ப்ளீமெண்ட் கொடுக்கலாம்ல… ” என பிரியா சொல்ல அவளை பார்த்து சிரித்த ஆர்யன்,

” யூ ஆல்சோ லைக் சோ பியூட்டிபுல் பிரியா.. ” என சொல்ல பிரியா சிரித்தாள்.

” நீங்க எல்லாம் வந்து ரொம்ப நேரமாச்சா.. ” என பிரியா கேட்க,

” இல்ல இப்போதான் வந்தோம்.. உங்களுக்காக தான் வெயிட்டிங்.. ” என பிரியாவிடம் பதில் சொல்லியவனின் கண்கள் ஆதிராவையே பார்க்க அவள் வெட்கத்துடன் அவனை பார்த்து சிரித்தாள்.

அதை கவனித்த பிரியா, ” க்கும்.. ” என இரும இருவரும் அவசரம் அவசரமாக பார்வையை விலக்கி கொண்டனர்.

” சரி வாங்க.. போய் கொஞ்ச நேரம் டான்ஸ் ஆடலாம்… ” என சக்தி சொல்ல பிரியா அவனுடன் ஜோடி சேர்ந்து ஆட போனாள். 

வைஷு ஆர்யனுடன் டான்ஸ் ஆடலாம்  என எண்ணியவள் அவனிடம் கையை நீட்ட போக ஆதிரா அதற்கு முன் முந்திகொண்டவள், ” ஆர்யன் வாங்க.. நாம டான்ஸ் ஆடலாம்.. ” என்றவள் அவனின் கையை பிடித்து இழுத்துக்கொண்டே செல்ல கடைசியில் வேறு வழி இல்லாமல் வைஷுவும் விக்னேஷும் ஒன்று சேர்ந்து ஆட சென்றனர்.

எல்லாரும் டான்ஸ் ஆட வர டி.ஜே அடுத்த பாடலை பிளே செய்தான்.

🎶🎶

அன்ட் ஏ சிறகுகளின்

வணக்கம் ஸ்வகத நமஸ்காரம்

வந்தனம் விண்ணிலும் மண்ணிலும்

உள்ள நட்சத்திரங்களோடு ஒன்னா

சேர்ந்து இணைந்து பிணைந்து

நினைந்து பிச்சி பின்னி

பேர்தெடுக்கலாம் யே..

அக நக நக சிரிப்புகள் அழகா திகு

தக தக நிலவுகள் அழகா

வெரி வெரி வெரி சமத்துகள்

அழகா கொழு கொழுப்புகள் அழகா..

லம்போகினி லவ் ஓ மெனி வெள்ளி

சனி இரவெல்லாம் இதழ் பணி

நீ பத்தினி தீ பத்தினி உன்மேல்

இனி யாரடி தேனி..

தோள் சாய்த்தால்

அணைப்பு அவன் தோழன்

என்ற நினைப்பு ஏன் இந்த

படைப்பு இங்கு இல்லை

களைப்பு.. 

தாக்க தாக்கவே துடிக்குதே நெஞ்சம்

நோக்க நோக்கவே புடிக்குதே கொஞ்சம்

யு மே கோ

யே தொட தொட

ரோலெக்ஸ் மின்ன

தொன தொன வெர்சியு

பேச ஜிலு ஜிலு சம்பெயின்

பொங்க சுவிஸ் சீஸை

மெல்ல… 

🎶🎶

பாட்டுக்கு ஏற்றவாறு ஆர்யனும் ஆதிராவும் வளைந்து வளைந்து ஆட அவர்களின் டான்ஸை எல்லாரும் ரசித்து பார்க்க விக்னேஷும் வைஷாலியும் மட்டும் சோகமாய் பார்த்தனர்.

விக்னேஷ் அதற்குமேல் அங்கு நிற்க பிடிக்காமல் அங்கிருந்து செல்ல ஆர்யன் அதை பார்த்துவிட ஆதிராவிடம் இருந்து விலகியவன் வேகமாய் விக்னேஷை தேடி ஓடினான்.

விக்னேஷ் பார்ட்டி ஹாலில் இருந்து வெளியே செல்ல வேகமாய் ஓடி வந்த ஆர்யன் அவனை வழிமறித்து நின்றவன்,

“ என்னாச்சு விக்னேஷ்.. எங்க கிளம்பிட்டீங்க.. “ என கேட்க,

“ எனக்கு கொஞ்சம் தலை வலிக்குது…நான் கிளம்பறேன் “ என்ற விக்னேஷ் அவனின் பதிலை எதிர்பார்க்காமல் அங்கிருந்து வேகமாய் செல்ல ஆர்யன் என்னவென புரியாமல் குழப்பதுடன் நின்றிருந்தவன் நேரம் ஆவதை உணர்ந்து மறுபடியும் அவன் உள்ளே செல்ல அங்கு ஆதிராவின் நிலையை கண்டு அதிர்ந்து போய் நின்றான்

இந்த episode பிடிச்சிருந்தா எழுத்தாளரை உற்சாகப்படுத்துங்க!!
இப்போதே உற்சாகப்படுத்துங்கள்

இந்த படைப்பை மதிப்பிட விரும்புகிறீர்களா?

Click on a star to rate it!

No votes so far! Be the first to rate this post.

    No comments yet.