Kk 5
சில வினாடி அமைதியாக இருந்த ஆதிரா, “ஒர்க் எல்லாம் உங்களுக்கு இங்க செட் ஆகிடுச்சா ஆர்யன்…” என்று கேட்க
” ம்ம் கொலிக்ஸ் எல்லாம் ஸ்வீட்டா இருக்கும் போது செட்டாகாம இருக்குமா….” என்றான் சிரித்துக்கொண்டே.
அவன் சொன்னதை கேட்டு சிரித்த ஆதிரா கேஷ்வலாக அவனிடம் பேச்சு கொடுத்தவள் ” ஆர்யன் உங்களுக்கு பிரதர் யாராவது இருக்காங்களா.. ?.
” என கேட்க,
” நோ ஐயம் சிங்கிள் சைல்ட்…. ஏன் கேட்கறீங்க….” என்றான் ஆர்யன்.
” சும்மா தான்…. ஆர்யன் உங்களுக்கு என்னை இதுக்கு முன்னாடி எங்கையாவது பார்த்த மாதிரி தோணுதா…”
ஆர்யன் அவளையே பார்த்தவன் ” ம்ம் பார்த்து இருக்கேனே….”என்று சொல்ல முகம் மலர்ந்தவள், “எங்க?… எப்போ?..”என கேட்க,
“ கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி விஷால் இன்ட்ரோ கொடுத்தப்ப பார்த்தேன்.. அதுக்கு முன்னாடி லிப்ட்ல பார்த்தேன்.. “ என ஆர்யன் சீரியஸாய் சொல்ல அவனை முறைத்தாள் ஆதிரா.
“ என்ன ஜோக்கா.. நான் சீரியஸா கேட்டுட்டு இருக்கேன்.. நீங்க என்னடான்னா ஜோக் பண்ணிட்டு இருக்கீங்க.. “
“ ஹேய் ரிலாக்ஸ்.. நான் சும்மா விளையாட்டுக்கு தான் சொன்னேன்.. நீங்க எதுவும் தப்பா எடுத்துக்காதீங்க.. “
“ சரி ப்ளீஸ் கொஞ்சம் யோசிச்சு சொல்லுங்களேன்.. நாம இதுக்கு முன்னாடி பார்த்த மாதிரி உங்களுக்கு தோணுதா.. “
“ இல்லங்க.. எனக்கு அப்படி எல்லாம் எதுவும் தோணுல.. ஏன் உங்களுக்கு அப்படி தோணுதா.. “
“ ம்ம் ஆமா.. நான் முன்னாடி மும்பையில இருந்தப்போ.. “ என ஆதிரா சொல்ல வர அதற்குள் பிரியா காபியுடன் வரவும் உடனே அமைதியானாள் ஆதிரா.
“ ஆர்யன் இந்தாங்க காபி.. “ என பிரியா நீட்டவும் தேங்க்ஸ் சொல்லி அதை வாங்கி கொண்டான் ஆர்யன்.
ஆர்யன் காபி குடித்துகொண்டே போனை பார்க்க ஆதிராவின் அருகே குனிந்த பிரியா,” என்னாச்சுடி.. பேசிட்டியா.. நீ சொன்ன செல்வா தான் இவரா.. “ என கேட்க,
“ இல்லடி.. அவரு என்னை பார்த்ததே இல்லன்னு சொல்லிட்டாரு.. நான் மும்பையில பார்த்ததை பத்தி சொல்ல வரதுக்குள்ள நீ வந்துட்ட.. நீ எதுக்குடி இவ்ளோ பாஸ்ட்டா வந்தா.. கொஞ்சம் மெதுவா காபி வாங்கிட்டு வந்துருக்கலாம்ல.. “ என ஆதிரா கோபப்பட அவளை முறைத்தாள் பிரியா.
” ஏய் என்னடி விளையாடறியா.. நானே பொறுமையா தான் காபி வாங்கிட்டு வந்தேன்.. நீ என்னடான்னா இதுவே சீக்கிரம் அப்படின்னு சொல்லிட்டு இருக்க.. உனக்காக யோசிச்சேன் பாரு.. என்னை சொல்லனும்.. பேசாத என்கிட்ட.. “
” ஓகே ஓகே.. சாரிடி.. கோவிசிக்காத ப்ளீஸ்.. நான் சும்மாதான் சொன்னேன்… சாரி.. ப்ளீஸ்.. ” என ஆதிரா முகத்தை பாவமாய் வைத்துக்கொண்டு சொல்ல பிரியாவும் உடனே சமாதானம் ஆனாள்.
” இப்படி பாவமா முகத்தை வச்சுக்கிட்டு என்னை ஏமாத்திருடி.. என்னோட வீக்நெஸ் நல்லா தெரிஞ்சுகிட்ட.. ” என பிரியா சிரிக்க ஆதிராவும் அவளுடன் சேர்ந்து சிரித்தாள்.
போன் பார்த்துக்கொண்டு இருந்த ஆர்யன் அவர்கள் சிரிக்கும் சத்தம் கேட்டு நிமிர்ந்து பார்த்தவன், ” ரெண்டு பேரும் ஏன் சிரிக்கறீங்கன்னு சொன்னிங்கன்னா நானும் சிரிப்பேன்ல.. ” என சொல்ல,
” அது ஒன்னும் இல்லங்க.. சும்மாதான்.. சரி உங்களை பத்தி சொல்லுங்க.. நீங்க சென்னை தானா.. “ என பேச்சை மாற்றினாள் பிரியா.
” இல்லங்க.. என் சொந்த ஊர் திருச்சி.. ஆனா படிப்பு வேலை எல்லாம் சென்னை தான்.. நான் மட்டும் தான் இங்க இருக்கேன்.. எல்லாரும் ஊருல இருக்காங்க.. அப்போ அப்போ போய் பார்த்துட்டு வருவேன்.. நீங்க.. ” என ஆர்யன் கேட்க,
” நான் கோயம்புத்தூர்.. வீட்ல எல்லாரும் ஊருல இருக்காங்க.. நான் வேலைக்காக இங்க வந்து தங்கிருக்கேன்.. நானும் ஆதிராவும் தான் ரூம் எடுத்து தங்கிருக்கோம்.. ” என்றாள் பிரியா.
ஆதிராவை பார்த்த ஆர்யன், ” நீங்க எந்த ஊருங்க.. உங்க வீட்ல எல்லாரும் எங்க இருக்காங்க.. ” என கேட்க அதை கேட்டதும் ஆதிராவின் கண்கள் கலங்கியது.
அதை பார்த்த ஆர்யன், ” என்னாச்சு ஆதிரா.. ஏன் அழறீங்க.. நான் எதுவும் தப்பா கேட்டுட்டேனா.. ” என பதட்டத்துடன் கேட்க விரக்தியுடன் சிரித்தாள் ஆதிரா.
கண்களை துடைத்துக்கொண்டு அவனை பார்த்த ஆதிரா,“ நீங்க எதுவும் தப்பா கேக்கல.. இத்தனை கோடி பேர் இருக்க இந்த உலகத்துல எனக்கு சொந்தம்னு சொல்லிக்க தான் யாரும் இல்ல.. சிம்பிளா சொல்லணும்னா நான் ஒரு அனாதை ஆர்யன்.. “ என சொல்ல அதை கேட்ட ஆர்யன் அவளை கவலையுடன் பார்த்தான்.
பிரியா ஆறுதலாக ஆதிராவின் கையை பிடிக்க கண்களை துடைத்துக்கொண்டு இருவரையும் பார்த்து சிரித்தாள் ஆதிரா.
” சாரி.. இதை விடுங்க.. டைம் ஆச்சு.. ஒர்க் இருக்குல்ல கிளம்பலாம்.. ” என்ற ஆதிரா எழ பிரியாவும் அவளுடன் எழுந்தவள்,
” ஓகே ஆர்யன் நாங்க கிளம்பறோம்.. ” என சொல்ல ஆர்யன் சரியென தலை ஆட்டவும் இருவரும் அங்கிருந்து சென்றனர்.
காபியை குடித்து முடித்த ஆர்யன் எழுந்து செல்ல போக,” ஆர்யன் உட்காருங்க.. உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்.. ” என்ற விக்னேஷ் அவனுக்கு எதிரே அமர ஆர்யனும் சிரித்துக்கொண்டே அமர்ந்தான்.
” நான் காபி குடிச்சுட்டேன்.. நீங்க எதுவும் குடிக்கறிங்களா.. காபி ஆர்டர் பண்ணட்டுமா.. ” என ஆர்யன் கேட்க,
இல்ல அதெல்லாம் எதுவும் வேண்டாம்.. நான் உங்ககிட்ட ஒரு விஷயம் பேசணும்.. பேசலாமா.. நீங்க எதுவும் தப்பா எடுத்துக்க கூடாது.. ” என விக்னேஷ் சீரியஸாய் சொல்ல ஆர்யன் அவனை யோசனையுடன் பார்த்தான்.
” என்னாச்சு விக்னேஷ் .. ஏதோ சீரியஸா பேசுற மாதிரி இருக்கு.. எதாவது பிரச்சனையா.. “
” அது வந்து.. பிரச்சனை எதுவும் வந்தர கூடாதுன்னு தான் நான் இப்போ உங்ககிட்ட பேச வந்தேன்.. எனக்கு சுத்தி வளைச்சு எல்லாம் பேச வராது.. நான் நேரடியாவே விஷியதுக்கு வரேன்.. நான் ஆதிராவை லவ் பண்றேன்.. ” என விக்னேஷ் சொல்ல அவனை பார்த்து சிரித்தான் ஆர்யன்.
” அப்படியா.. சூப்பர்.. அதுல என்ன பிரச்சனை.. ”
” அது வந்து.. நான்தான் ஆதிராவை லவ் பண்றேன்.. இன்னும் அவகிட்ட இதை சொல்லக்கூட இல்ல.. “
” ஏன் விக்னேஷ்.. சீக்கிரமே லவ்வ சொல்லுங்க.. லவ்ல லேட் பண்ணுனா மூணாவதா எவனாவது வந்து ஆட்டத்தை கலைச்சு விட்ருவான்.. அதனால லேட் பண்ணாம ஆதிராகிட்ட ப்ரொபோஸ் பண்ணிருங்க. “
” எனக்கும் இது தெரியும் ஆர்யன்.. அப்படி எல்லாம் எதுவும் நடந்தற கூடாதுன்னு தான் உங்ககிட்ட பேச வந்தேன்.. நீங்க எதுவும் ஆதிராகிட்ட.. ” என அவன் தயங்க அவன் என்ன சொல்ல வருகிறான் என புரிந்து கொண்ட ஆர்யன் அவனை பார்த்து சிரித்தான்.
” நீங்க எதுவும் சொல்ல வேண்டாம்.. எனக்கே எல்லாம் புரியுது.. நீங்க பயப்படற மாதிரி எல்லாம் எதுவும் ஆகாது.. உங்க லவ் ட்ராக்ல நான் வரமாட்டேன்… எனக்கு அதுல எல்லாம் இன்ட்ரெஸ்ட்டும் இல்ல.. ஆனா அதுக்காக நீங்க இப்படியே வெயிட் பண்ணிட்டு இருக்காதீங்க.. நான் இல்லனாலும் வேற யாராவது இடையில வந்து உங்களை டிஸ்டர்ப் பண்ண போறாங்க.. அதனால சீக்கிரமே ஆதிராகிட்ட உங்க லவ்வ சொல்லிருங்க.. இது ஒரு பிரண்ட்டா நான் உங்களுக்கு கொடுக்கற அட்வைஸ்.. ” என ஆர்யன் சிரிக்க,
” கண்டிப்பா ஆர்யன்.. நாளைக்கு ஆதிராவோட பர்த்டே.. நாளைக்கு அவளை சர்பிரைஸ்ஸா கூட்டிட்டு போய் ப்ரொபோஸ் பண்ணலாம்னு இருக்கேன்.. அவளும் கண்டிப்பா என் லவ்வ அக்சப்ட் பண்ணிக்குவான்னு நானும் நம்பறேன்.. ” என சிரித்தான் விக்னேஷ்.
” சூப்பர்.. அப்போ சீக்கிரமே ட்ரீட் கிடைக்கும்னு சொல்லுங்க.. “
” ம்ம் கண்டிப்பா ஆர்யன்.. நான் ஆதிராகிட்ட ப்ரொபோஸ் பண்ற வரைக்கும் நீங்க எதுவும் அவகிட்ட இதைப்பத்தி சொல்ல வேண்டாம்.. ” என விக்னேஷ் சொல்ல ஆர்யன் சரியென தலை அசைத்தான்.
விஷாலிடம் இருந்து போன் வரவும் இருவரும் எழுந்து செல்ல அங்கு ஏற்கனவே டீம் மெம்பெர்ஸ் அனைவரும் உட்கார்ந்து இருக்க இவர்களும் அவர்களுடன் சேர்ந்து கொண்டனர்.
ப்ராஜெக்ட் பத்தி பேசிய விஷால், “ அப்புறம் ஒரு விஷயம் சொல்ல மறந்துட்டேன்.. போன ப்ராஜெக்ட் சக்சஸ்சா முடிஞ்சதுக்கு நம்ம பாஸ் இன்னிக்கு பார்ட்டிக்கு ஏற்பாடு பண்ணிருக்காரு.. ஹோட்டல் லொக்கேஷன் நான் உங்க எல்லாருக்கும் வாட்சப் பண்ணிறேன்.. எல்லாரும் கண்டிப்பா பார்ட்டி அட்டென்ட் பண்ணனும்.. ஆர்யன் நீங்களும் கண்டிப்பா பார்ட்டி அட்டன் பண்ணனும்.. “ என சொல்ல,
“ கண்டிப்பா விஷால்.. நான் வந்த முதல் நாளே பார்ட்டி வைக்கறீங்க.. அதை எப்படி மிஸ் பண்ணுவேன்.. கண்டிப்பா நான் வரேன்… “ என ஆர்யன் சொல்ல அதை கேட்டு வைஷாலியின் முகம் மலர அதை பார்த்த ஆதிராவுக்கு ஏனோ கடுப்பானது.
No comments yet.