அத்தியாயம் – 4

Udhaya Novel's | 21 Mar 2026 | Share

Kk 4 

மூவரும் மீட்டிங் ஹாலுக்கு செல்ல அங்கு ஆல்ரெடி அவர்கள் டீம் மெம்பர் சக்தி, வைஷாலி இருவரும் அமர்ந்து இருந்தனர்.

” எதுக்காக இந்த மீட்டிங்….” ஆதிரா கேட்க,

“ஏதோ புது தலைவலி வர போகுதுன்னு நினைக்கறேன்….  “ என சக்தி சோகமாய் சொல்ல அவனை புரியாமல் பார்த்தாள் ஆதிரா.

” என்ன சொல்ற.. தலைவலியா…. அப்படினா.. “ 

“அதான்ப்பா பிராஜக்ட்….”

அவர்களுக்குள் சிரித்து பேசிகொண்டிருக்க அப்பொழுது “ஹாய் கைஸ்….” என்றபடி அவர்களின் டீம் லீடர் விஷால் உள்ளே வர அவனை தொடர்ந்து வந்த ஆர்யனை பார்த்ததும் ஆதிரா எழுந்து நிற்க அவளை பார்த்து சிரித்த விஷால்,

” என்ன  ஆதிரா டுடே ரெஸ்பெக்ட் எல்லாம் அதிகமா இருக்கு…. பரவாயில்ல உட்காருங்க.. “என சிரித்தவன் தன்னிடத்தில் சென்று உட்கார ஆர்யன் அவன் பக்கத்தில் அமர்ந்தான்.

ஆதிரா மட்டும் இன்னும் உட்காராமல் நின்று கொண்டே இருக்க, “ஏன்டி நிக்கிற உட்காரு….” என்ற பிரியா அவள் கைபிடித்து இழுக்கவும் ஆர்யனையே பார்த்து கொண்டிருந்தவள்,

“இவன் ஏன் என்னை தெரியாத மாதிரியே பிகேவ் பண்றான்…” என தனக்குள் சொல்லிக் கொண்டவள் யோசனையுடனே சேரில் அமர்ந்தாள். 

எதிரில் இருந்த வைஷாலி ஆர்யனையே பார்க்கவும் அதை எதற்சயாக பார்த்த ஆதிராவுக்கு பயங்கரமாக கோபம் வர அவளை முறைத்த ஆதிரா திரும்பி பிரியாவை பார்க்க அவளும்  ஆர்யனைதான் சைட் அடித்து கொண்டிருந்தாள்..

” என்ன எல்லாரும் அவனையே பாக்கறாங்க…. இவங்க எப்படி பார்க்கலாம்…” என சட்டென கோபமானவள் டேபிலுக்கு அடியில் கைவிட்டு பிரியாவை கிள்ளிவைத்தாள்.

“ஏய் என்னடி… எதுக்குடி கிள்ளுன.. “ 

“அவனை எதுக்குடி பார்க்கற.. பார்க்காதடி….” என்றாள் ஆதிரா விழியசைவில் மிரட்டலாக.

அதை பார்த்த பிரியா, ” ஏன்டி.. நான் பார்த்தா உனக்கு என்ன.. நீயும் வேணுனா பாரு.. யார் வேண்டாம்னு சொல்றா.. ” என சொல்ல,

” ஏய் உன்னை பார்க்காதன்னு சொன்னா பார்க்காம இருக்க வேண்டியது தானடி.. எதுக்குடி இதெல்லாம் சொல்லிட்டு இருக்க.. ” என்றாள் ஆதிரா கோபமாய்.

” ம்ம்க்கும் ஏதோ இவ பாய் பிரண்ட் மாதிரி….” என முனுமுனுக்க அதை கேட்ட ஆதிரா அதிர்ந்து போனாள்.

“ ஆமா நான் ஏன் இப்படி நடந்துக்கறேன்…யாரோ அவனை பார்த்தா எனக்கு என்ன.. ஆதிரா.. நோ.. ஒழுங்கா இரு.. “ என தனக்குள் சொல்லிக்கொண்டவள் விஷால் பேசுவதை கவனிக்க ஆரம்பித்தாள்.

எல்லாரையும் பார்த்து சிரித்த விஷால், “கைஸ் நம்ம டீம்க்கு ஒரு நீயூ பிராஜக்ட் கிடைச்சிருக்கு அதுக்காக நம்ம டீம்ல பெங்களுர் பிராஞ்ல இருந்து மிஸ்டர் ஆர்யன் ஜாயின் பண்ண போறாரு….மீட் மிஸ்டர் ஆர்யன்….”என்று எல்லாருக்கும் அவனை இன்ட்ருடியூஸ் செய்தான்..

” ஹாய் கைஸ்….ஐயம் ஆர்யன் யுவர் நீயூ கொலிக் நோ நோ நீயூ பிரண்ட்….”என்றான் சிரித்தப்படி..

அப்படியே செல்வாவுக்கு ப்போஸிட்டாக இருக்கும் ஆர்யனை ஆதிரா ஆச்சிரியம்மாய் பார்த்துக்கொண்டு இருந்தாள்.

” ஹாய் ஆர்யன் ஐயம் வைஷாலி…” என்றவள் கைநீட்ட ஆர்யனும் அவள் கையை பிடிக்க செல்லும் பொழுது வேகமாய் இடைப்புகுந்த ஆதிரா அவன் கைபிடித்து ஹாண்ட்ஷேக் செய்தவள்,

“ஹாய் ஆர்யன்.. ஐயம் ஆதிரா….”என சொல்ல அவன் சிரித்தான்.

” ஹாய் ஆதிரா நாம லிப்ட்ல பார்த்தோம்ல…”

“எஸ் ஸாரி நான் என் பிரண்ட் ஒருத்தர் மாதிரி நீங்க இருக்கவும் அந்த மாதிரி பேசிட்டேன்….”

” இட்ஸ் ஓகே….”என்றவன் அவளிடமிருந்து கையை எடுத்து கொண்டதும் மற்ற இருவருக்கு கை கொடுக்காமல் “ஹாய்….”என்று மட்டும் சொன்னான்.

” ஹாய் டியூட் ஐயம் விக்னேஷ்…”என்று சொல்ல அவனுக்கு மட்டும் கைகொடுக்க அதில் ஆதிரா முகம் மலர்ந்தது… அதேசமயம் வைஷாலி முகம் ஆர்யன் கை கொடுக்கவில்லையே என்று வாடியது..

விஷால் ப்ராஜெக்ட் பற்றி பேசி ஆர்யனும் தன்னுடைய ஐடியாவை ஷேர் செய்ய ஆதிராவின் குழப்பம் மேலும் அதிகமாகியது.

” இவன் பேசறதை பார்க்கும் போது இந்த பீல்ட்ல இருக்க மாதிரி தான்…. இவன் ஐடியில ஒர்க் பண்றான்னா அப்போ மும்பையில ரவுடியா எப்படி இருந்து இருக்க முடியும்…” என யோசித்த ஆதிராவுக்கு விடைதான் கிடைக்கவில்லை.

அவள் யோசித்து கொண்டிருந்த கேப்பில் விஷால் ஆர்யன் இருவரும் ப்ராஜெக்ட் பற்றி பேசி முடித்து விட ” எனி டவுட்?….”என ஆர்யன் கேட்க,

ஆதிரா முந்திக்கொண்டு கையை உயர்த்த அவளை பார்த்து சிரித்த ஆர்யன், “எஸ் சொல்லுங்க… என்ன டவுட்…”என்று கேட்க,

” நீங்க சிங்கிளா கமிட்டடா?…” என அவள் சட்டென கேட்க எல்லாரும் ஆச்சிரியம்மாய் பார்த்தனர்.

மற்றவர்களை விட ரொம்பவே அதிர்ந்து போன பிரியா, “நீயாடி இப்படி கேட்கிற?…”என்பது போல் பார்க்க அவளோ பதிலை எதிர்பார்த்து ஆர்யனையே பார்த்துக்கொண்டு இருந்தாள்.

அவள் தன்னையே பார்ப்பதை உணர்ந்து அவளை பார்த்து சிரித்த ஆர்யன், ” ஐயம் சிங்கிள்….” என்றவன் விஷாலுடன் பேசியபடி எழுந்து செல்ல பிரியா ஆதிரா  தவிர மற்றவர்களும் எழுந்து சென்றனர்.

” சிங்கிளா அப்போ ஓகே….” என தனக்குள் சொல்லிக்கொன்டவள் பிரியாவை பார்க்க அவளோ வாயை பிளந்துகொண்டு அவளையே பார்த்துக்கொண்டிருந்தாள்.

“என்ன பாக்கிற….”

” உன்னைதான்டி பாக்கறேன்….”

“அதான் ஏன் பாக்கற?….”

” என்னாச்சுடி உனக்கு இந்த மாதிரி எல்லாம் யாருகிட்டயும் பேசமாட்டியே நீ…. அந்த ஆர்யன்கிட்ட மட்டும் என்ன ரொம்ப ஸ்பெஷலா….”

ஆதிரா மெல்ல தலையசைத்தவள் “ம்ம் ஆமா ரொம்ப ரொம்ப ஸ்பெஷல்….” என்று சொல்ல அதை கேட்ட பிரியா அதிர்ந்து போய் அவளை பார்த்தாள்.

“என்னடி சொல்ற…”

“நான் மும்பையில இருக்கும் போது ஹீரோ மாதிரி ஒருத்தன் வந்து காப்பாத்துனான்னு சொல்வேன்ல….”

“ஆமா அந்த ரவுடி ஹீரோ…. டெய்லியும் ட்ரீம்ல மீட் பண்ணிட்டு இருக்கியே….”

” ம்ம் அந்த ரவுடி ஹீரோ தான் இந்த ஆர்யன்…. புரியலயா செல்வா தான் ஆர்யனா வந்திருக்கான்னு சொல்றேன்….”என்று ஆதிரா சொல்ல பிரியா அதிர்ந்து போய் அவளை பார்த்தாள்.

கேன்டீன்.. 

ஆதிராவும் பிரியாவும் ஆளுக்கொரு கோல்டு காபியை வாங்கிக்கொண்டு டேபிளில் சென்று அமர பிரியா அதிர்ச்சியில் இருந்து வெளி வந்தவள்,

“நீ சொல்றது உண்மையாடி செல்வா தான் ஆர்யனா… அப்புறம் ஏன் உன்னை தெரியாத மாதிரியே பேசினான்…” என கேட்க,

” அதான்டி எனக்கும் தெரியல….பார்க்க அப்டியே செல்வா தான்..  ஆனா…” என இழுத்தாள் ஆதிரா.

“என்ன இழுக்கிற… என்னடி ஆனா..” 

” பட் ரெண்டு பேரும் டிப்பரன்ட் கேரக்ட்டரா இருக்காங்கடி….”

” இங்க பாரு எனக்கு யாராச்சும் நல்லா தெளிவா சொன்னாவே புரியாது இதுல நீ ரொம்ப கன்பியூஸ் பன்ற….”

” ஓகே தெளிவாவே சொல்றேன்…”என்ற ஆதிரா அவளின் கோல்டு காபியை தன் பக்கம் நகர்த்த,”ஹேய் என்னோட காபி…”பிரியா பதறினாள்.

“குடிக்கமாட்டேன்டி….இங்க பாரு இது செல்வா இது ஆர்யன்… செல்வா ரவுடி ரூட் பர்ஸன் பட் அவன்கிட்ட ஒரு ஆட்டிடுயூட் கெத்து தெரிஞ்சுது….”என்று சொல்ல பிரியா கன்னத்தில் கைவைத்து கொண்டவள் “பக்கா ஹீரோ மெட்டிரியல்டி….”என்றாள்..

“ஹேய்…”

“ஓகே மேல சொல்லு…”

” ஆர்யன் அப்படியே செல்வாக்கு ஆப்போஸிட்டா இருக்கான்….வெல் எஜிகேட்டட் ஸ்மார்ட்டா இருக்கான் பிரண்ட்லியா பேசறான்…செல்வாகிட்ட இருந்த அந்த கெத்து இல்ல சாக்லேட் பாய் மாதிரி இருக்கான்…”

“அப்போ வேற வேற பர்ஸனா இருக்கலாம்ல….”

“அதெப்படி பேஸ் ஒரு மாதிரி இருக்க முடியும்….” என ஆதிரா குழப்பதுடன் கேட்க,

சிலவினாடி யோசித்த பிரியா, ” ஆங்.. ஒருவேளை ட்வின்ஸா இருப்பாங்களோ…அதுக்கு சான்ஸ் இருக்குல்ல…” என சொல்ல  “டிவின்ஸா…” என யோசனையில் ஆழ்ந்தாள் ஆதிரா.

அவள் தீவிரமாக யோசித்து கொண்டு இருக்க அப்பொழுது ஆர்யனே அங்கு வர அவனை பிரியா தான் முதலில் பார்த்தவள்,  ” ஆர்யன் இங்க வாங்க…”என்று கத்தி கூப்பிட அதில் அவனோடு சேர்த்து எல்லாரும் திரும்பி பார்த்தனர்.

“ஹேய் ஏன்டி கத்தற….”

“அவனை கூப்பிட்டேன்டி….”

ஆர்யன் அவர்கள் அருகில் வந்தவன் “ரெண்டு பேரும் இங்க தான் இருக்கீங்களா….” என்று கேட்டபடி சேரில் உட்கார ஆதிராவும் பிரியாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

“என்ன?…” என ஆர்யன் இருவரையும் பார்க்க, 

“அது.. எங்களுக்கு போர் அடிச்சா இப்டி தான் கேன்டின் வந்திடுவோம்… ” என சிரித்துக்கொண்டே சொன்னாள் பிரியா.

“அப்போ ஒர்க் எல்லாம் பாக்கறது இல்ல….” என ஆர்யன் கேட்க அதை கேட்டு சிரித்த ஆதிரா,

” உங்களுக்கு காபி சொல்லட்டுமா….”என்று கேட்க,

“ம்ம்…”என்றவன் திரும்பி பார்க்கவும்,

“நான் வாங்கிட்டு வர்றேன்…”என்று சொல்லி எழுந்த பிரியா ஆதிராவை பார்த்து விழியசைவில்,

“அவன்கிட்ட கேளு….”என்பது போல் கண்ணை காட்டிவிட்டு அங்கிருந்து சென்றாள்.

அவன் எதாவது பேசுவான் என ஆதிரா அவனையே பார்க்க அவனோ போனை எடுத்து நோண்டி கொண்டு இருக்கவும் எப்படி ஆரம்பிப்பது என மனதுக்குள் ஒத்திகை பார்க்க ஆரம்பித்தாள் ஆதிரா.

இந்த episode பிடிச்சிருந்தா எழுத்தாளரை உற்சாகப்படுத்துங்க!!
இப்போதே உற்சாகப்படுத்துங்கள்

இந்த படைப்பை மதிப்பிட விரும்புகிறீர்களா?

Click on a star to rate it!

No votes so far! Be the first to rate this post.

    No comments yet.