அத்தியாயம் – 17

Udhaya Novel's | 14 Apr 2026 | Share

17,18

விக்னேஷ் சொன்னதை கேட்டு ஆதிரா கண் கலங்கியவள் கலங்கிய கண்களை துடைத்துக்கொண்டு அவனை பார்த்தவள், “ நீ இப்படி சொன்னதை கேட்டதுமே எனக்கு ரொம்ப நம்பிக்கை வந்த மாதிரி இருக்கு.. நீ சொன்னது மாதிரி வந்து இருக்கறது செல்வா தான் அப்படினு கண்டுபிடிச்சி சொல்லிரு அதுக்கு அப்புறம் ஆக வேண்டியதை நான் பார்த்துக்கறேன்.. “ என சொல்ல,

“ கண்டிப்பா.. நான் சொன்னது மாதிரி கண்டிப்பா வந்து இருக்கறது யாருனு கண்டுபிடிச்சி சொல்றேன்… எனக்கு ஒரு ரெண்டு நாள் மட்டும் டைம் கொடு.. அதுக்குள்ள நான் உண்மை என்னனு கண்டுபிடிச்சி சொல்லிறேன்.. ஆனா ஒரு கண்டிஷன்.. “ என விக்னேஷ் சொல்லவும் அவனை புரியாமல் பார்த்தாள் ஆதிரா.

“ கண்டிஷனா.. என்ன கண்டிஷன்.. நீ என்ன விக்னேஷ் சொல்ற.. “ 

“ ஆமா கண்டிஷன் தான்.. இனி நீ இப்படி எல்லாம் உட்கார்ந்து அழுதுட்டு இருக்க கூடாது.. எப்பவும் போல பழைய ஆதிராவா சந்தோசமா சிரிச்சுட்டு இருக்கணும்.. அப்படி இருப்பன்னு சொல்லு நான் சொன்னது மாதிரி கண்டுபிடிச்சி சொல்றேன்.. “ என விக்னேஷ் சீரியஸாய் சொல்ல அதை கேட்ட ஆதிரா அவனை பார்த்து சிரித்தாள்.

“ ஓகே விக்னேஷ்.. நீ சொன்ன கண்டிஷன் எனக்கு ஓகே.. இனி நான் அழமாட்டேன்.. சரி ஓகே வா போலாம்.. “ என்ற ஆதிரா எழ விக்னேஷும் எழுந்து அவளுடன் உள்ளே சென்றான்.

இருவரும் ஒன்றாக அதுவும் சிரித்தபடி பேசிக்கொண்டு வருவதை பார்த்த பிரியா குழம்பி போக லேப்டாப் வழியே பார்த்துக்கொண்டு இருந்த ஆர்யனோ கோபத்தில் முகம் சிவந்து போனான்.

ஆதிராவும் விக்னேஷும் சிரித்தபடி வந்து அவர்களது இடத்தில் உட்கார ஆதிராவின் கையை பிடித்து அவள் பக்கம் இழுத்த பிரியா,

“ என்னடி நடக்குது இங்க.. விக்னேஷை எதுக்கு தனியா கேன்டீன் கூட்டிட்டு போன.. அவன்கிட்ட என்ன பேசுன.. ரெண்டு பேரும் எதுவுமே நடக்காத மாதிரி எப்படி உங்கனால இப்படி சகஜமா சிரிச்சுட்டு இருக்க முடியுது.. இல்ல இல்ல இதுல என்னவோ இருக்கு.. ஒழுங்கா என்ன நடந்துச்சுன்னு சொல்லு.. “ என பிரியா கேட்க,

“ அதெல்லாம் ஒன்னும் இல்லடி.. எனக்கு வேலை இருக்கு.. நான் என் வேலைய பார்க்கறேன்.. “ என்ற ஆதிரா அவளது லேப்டாப்பை ஆன் செய்ய பிரியா அவளை முறைத்தாள்.

“ என்னடி.. நான் என் வேலைய பார்க்கறேன்.. நீயும் உன் வேலையை பாருன்னு சொல்லாம சொல்றியா.. அந்த அளவுக்கு வந்துட்டியா.. “ என பிரியா சற்றே கோபமாய் கேட்க,

“ ஹேய் அப்படி எல்லாம் ஒன்னும் இல்லடி.. உண்மையாலுமே எனக்கு வேலை இருக்கு.. அதனால தான் சொன்னேன்.. எதுனாலும் ரூம்ல போய் பேசிக்கலாம் சரியா.. தப்பா எடுத்துக்காத.. “ என்ற ஆதிரா அவளது வேலையை பார்க்க பிரியாவும் கோபமாய் முகத்தை திருப்பி கொண்டாள்.

சில நிமிடத்தில் விக்னேஷின் இன்டெர்காம் அடிக்க அதை அட்டன் செய்தவன் சில வினாடி பேசிவிட்டு அதை கீழே வைத்தவன் ஆதிராவை பார்த்து சிரித்துவிட்டு எழுந்து செல்ல ஆதிராவும் சிரித்தபடி லேப்டாப்பா பார்க்க அதை பார்த்த பிரியாவுக்கு தலையே வெடித்துவிடும் போல் இருந்தது.

ஆதிராவிடம் கேட்டாலும் அவள் எதுவும் சொல்லமாட்டாள் என நினைத்த பிரியா வேறு வழி இல்லாமல் அமைதியாக அவள் வேலையை தொடர ஆதிராவும் பிரியாவின் பக்கம் திரும்பாமல் அவளது வேலையை பார்த்தாள்.

ஆர்யன் அறைக்கு வந்த விக்னேஷ் கதவை தட்டிவிட்டு உள்ளே செல்ல முகத்தை சாதாரணமாக வைத்துக்கொண்டு அவனை பார்த்து சிரித்தான் ஆர்யன்.

“ வாங்க விக்னேஷ்.. உட்காருங்க.. “ என ஆர்யன் அவனது இடத்தில் அமர விக்னேஷ் அவனுக்கே எதிரே இருந்த சேரில் அமர்ந்தான்.

ஆர்யனை பார்த்த விக்னேஷ், “ சக்தி எல்லாம் சொன்னான் சார்.. ஐம் சோ ஹாப்பி பார் யூ.. “ என சிரிக்க பதிலுக்கு சிரித்த ஆர்யன்,

“ சார் எல்லாம் எதுக்கு.. என்னை ஆர்யன் அப்படினே கூப்பிடுங்க.. “ என சொல்ல,

“ இல்ல சார்.. அது சரியா வராது.. நீங்க இந்த கம்பெனியோட எம். டி.. அதுக்கான மரியாதையை நான் கொடுக்கணும்ல.. எல்லார் மாதிரி நானும் சார்னு கூப்பிடறேன்.. நோ ப்ரோப்லம் சார்.. “ என விக்னேஷ் சிரிக்க ஆர்யனும் சிரித்து வைத்தான்.

ஆர்யன் எப்படி ஆரம்பிப்பது என தயக்கத்துடன் இருக்க அவனை பார்த்த விக்னேஷ், “ சொல்லுங்க சார்.. போன் பண்ணி வர சொல்லிருந்திங்க.. என்ன விஷயம் சார்.. “ என எதுவும் தெரியாதவன் போல் கேட்க,

“ இல்ல அது வந்து.. வந்து.. ஆதிராகிட்ட ப்ரொபோஸ் பண்றதா சொல்லி இருந்திங்க.. அது என்னாச்சுன்னு கேக்கறதுக்கு தான் கூப்பிட்டேன்.. “ என தயங்கி தயங்கி சொன்னான் ஆர்யன்.

அவன் சொன்னதை கேட்டு சிரித்த விக்னேஷ், “ நீங்க இந்த கம்பெனியோட எம். டி.. அப்படி இருந்தும் ஒரு பிரண்ட்டா நினச்சு நேத்து உங்ககிட்ட நான் சொன்னதை இப்பவும் நியாபகம் வச்சு கேக்கறீங்க.. உங்களுக்கு ரொம்ப பெரிய மனசு சார்.. ரொம்ப தேங்க்ஸ் சார்.. “ என சொல்ல,

“ தேங்க்ஸ் ரொம்ப முக்கியம்.. கேட்டதுக்கு முதல்ல பதிலை சொல்லுடா.. “ என மனதில் நினைத்த ஆர்யன் வெளியே அவனை பார்த்து சிரித்து வைத்தான்.

“ என் முகத்தை பார்த்தாவே உங்களுக்கு தெரியலயா சார்.. நான் எவ்ளோ சந்தோசமா இருக்கேன்.. அப்போ என்ன நடந்து இருக்கும்னு உங்களுக்கு புரியலயா.. ஓகே சார்.. நானே சொல்றேன்.. நான் உங்ககிட்ட சொன்னது மாதிரி ஆதிராகிட்ட ப்ரொபோஸ் பண்ணிட்டேன் சார்.. “ என விக்னேஷ் சொல்ல அதை கேட்டு அதிர்ந்து போய் அவனை பார்த்து ஆர்யன்.

அவனது அதிர்ச்சியை மனதில் குறித்துக்கொண்ட விக்னேஷ் எதுவும் பேசாமல் அமைதியாக அவனை பார்க்க தன்னிலை அடைந்த ஆர்யன் அவனை பார்த்து சிரித்தவன், “ ஓ.. சூப்பர் விக்னேஷ்.. நீங்க ப்ரொபோஸ் பண்ணுனதுக்கு ஆதிரா என்ன சொன்னாங்க.. “ என கேட்க,

“ நான்கூட எதிர்பார்க்கல சார்.. ஆதிரா நான் ப்ரொபோஸ் பண்ணுனதும் உடனே சரினு சொல்லிட்டா.. அவ சரினு அக்சப்ட் பண்ணுனது கனவா இல்ல நனவான்னு இப்போகூட என்னால நம்ப முடியல சார்.. “ என விக்னேஷ் சிரித்துக்கொண்டே சொல்ல அதை கேட்ட ஆர்யன் மேலும் அதிர்ந்து போய் எழுந்து நின்றான்.

விக்னேஷ் சொன்னதை கேட்டு ஆர்யன் அவனை அதிர்ந்து போய் பார்க்க விக்னேஷும் அவனை பார்த்து சிரித்தபடியே நின்றிருந்தான். அதிர்ச்சியில் ஆர்யன் எதுவும் பேச முடியாமல் அமைதியாக இருக்க,

” சார்.. என்னாச்சு சார்.. ஏன் திடிர்னு சைலண்ட் ஆகிட்டீங்க.. ” என விக்னேஷ் கேட்க தன்னிலை அடைந்த ஆர்யன் அவனை பார்த்து சிரித்தான்.

” அதெல்லாம் ஒன்னும் இல்ல விக்னேஷ்.. ஐம் சோ ஹாப்பி பார் யூ.. அண்ட் காங்கிராட்ஸ்.. ஆதிராகிட்டயும்  நான் விஷ் பண்ணுனதா சொல்லுங்க.. ” என ஆர்யன் சொல்ல,

” ம்ம் கண்டிப்பாக சார்.. எல்லாம் நீங்க வந்த நேரம்தான்.. நீங்க கொடுத்த தைரியதுனால தான் நான் ஆதிராகிட்ட ப்ரொபோஸ் பண்ணுனேன் சார்.. உங்களுக்கு தான் நான் தேங்க்ஸ் சொல்லணும்.. தேங்க் யூ சோ மச் சார்.. ” என விக்னேஷ் சொல்ல அவனை பார்த்து சிரித்தான் ஆர்யன்.

” இட்ஸ் ஓகே விக்னேஷ்..  லீவ் இட்.. ஹாப்பியா இருங்க.. ” 

” ஓகே சார்.. இப் யூ டோண்ட் மைண்ட் ஆதிராவுக்கு இன்னிக்கு பர்த்டே.. இன்னிக்கு எங்க லவ்வும் சக்ஸஸ் ஆகியிருக்கு.. ரெண்டுக்கும் சேர்த்து நைட் பார்ட்டிக்கு ஏற்பாடு பண்ணிருக்கேன்.. நீங்க கண்டிப்பா வரணும்.. லொக்கேஷனை உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன்.. நீங்க கண்டிப்பா பார்ட்டிக்கு வரணும்.. ” என விக்னேஷ் சொல்ல ஆர்யனும் சரியென தலை ஆட்டினான்.

அவனிடம் சொல்லிக்கொண்டு விக்னேஷ் வெளியே வந்தவன் ஆதிராவிடம் விசியத்தை சொல்ல அதை கேட்ட ஆதிரா அதிர்ந்து போய் அவனை பார்த்தாள்.

” என்ன விக்னேஷ் இது.. எதுக்கு நாம லவ் பண்றோம்னு அவர்கிட்ட பொய் சொன்ன.. “

” எல்லாம் காரணமாதான் ஆதிரா.. நீ நினைக்கற மாதிரி அவரு செல்வாவா இருந்தா அவருக்கு கண்டிப்பா பொஸ்ஸசிவ் வரும்.. அதை வச்சு உண்மை என்னனு கண்டுபிடிச்சறலாம்ல.. அதான் அப்படி சொன்னேன்.. நீ எதுவும் தப்பா எடுத்துக்காத ஆதிரா.. ” 

” தப்பா எல்லாம் எடுத்துக்கல விக்னேஷ்.. நீ சொல்றதும் சரிதான்.. இதுவும் நல்ல ஐடியாவா தான் இருக்கு.. ஆனா நான்தான செல்வாவை லவ் பண்றேன்.. செல்வா என்னை லவ் பண்ணுலயே.. ” என ஆதிரா சொல்ல,

” அதை எப்படி நீ சொல்ற.. உன் மனசுல செல்வா இருக்க மாதிரி அவரோட மனசுலயும் நீ இருக்கலாம்ல.. இல்லனா எதுக்கு ஆர்யன் ரூபத்துல நீ வேலை செய்யற கம்பெனிக்கு வரணும்.. இதுக்கு நீ பதில் சொல்லு.. ” என விக்னேஷ் கேட்க  அவளால் பதில் எதுவும் சொல்ல முடியவில்லை.

இந்த episode பிடிச்சிருந்தா எழுத்தாளரை உற்சாகப்படுத்துங்க!!
இப்போதே உற்சாகப்படுத்துங்கள்

இந்த படைப்பை மதிப்பிட விரும்புகிறீர்களா?

Click on a star to rate it!

No votes so far! Be the first to rate this post.

    No comments yet.