K 10
ஆதிராவின் முடிவை கேட்டு மூவரும் கவலையுடன் அவளை பார்க்க ஆதிராவோ தன் முடிவில் உறுதியுடன் இருந்தாள். அவளை பார்த்த சுவாமிநாதன்,
“ ஆதிரா.. இப்போ உடனே எதுவும் முடிவு எடுக்க வேண்டாம்மா.. நீ வேணும்னா கொஞ்சம் டைம் எடுத்துக்கோ.. பொறுமையா யோசிச்சு உன் முடிவை சொல்லு.. “ என சொல்ல,
“ இல்ல சார்.. எனக்கு டைம் எல்லாம் எதுவும் வேண்டாம்.. நான் என் முடிவுல உறுதியா இருக்கேன்.. நீங்க எந்த பேப்பர்ல சைன் போட்டு கொடுக்கணும்னு சொல்லுங்க.. நான் சைன் போட்டு கொடுத்தறேன்.. “ என்றாள் ஆதிரா.
சில வினாடி அமைதியாக இருந்த சரஸ்வதி, “ சரி ஆதிரா.. உனக்கு சொத்து எல்லாம் வேண்டாம்னு சொன்னது உன்னோட விருப்பம்.. ஆனா நீ அதை இந்த ஆசிரமதுக்கு எழுதி வைக்க வேண்டாம்.. ஏற்கனவே இந்த ஆசிரமத்துக்கு நிறைய நன்கொடைகள் வந்துட்டு இருக்கு.. அதுவே இங்க இருக்கறவங்களுக்கு போதும்மா..
நீ ஒன்னு பண்ணு.. சொத்து எல்லாத்தையும் வித்துட்டு அந்த பணத்தை வச்சு உன் அம்மா அப்பா பேருல தனியா ஒரு டிரஸ்ட் ஆரம்பிச்சு அதுல குழந்தைங்க, பெரியவங்க, எல்லாருக்கும் நல்லது கிடைக்கற மாதிரி செய்.. உன் அம்மாவும் அப்பாவும் இப்போ இல்லனாலும் இந்த டிரஸ்ட் மூலமா அவங்க நிறைய பேரை வாழ வச்சுட்டு இருப்பாங்க.. அந்த புண்ணியம் எல்லாம் உனக்கு வந்து சேரும்.. உன் அம்மாவும் அப்பாவும் கண்டிப்பா இதை பார்த்து ரொம்ப சந்தோசப்படுவாங்க.. நீ என்னமா சொல்ற.. “ என சொல்ல ஆதிரா யோசனையில் ஆழ்ந்தாள்.
ஆதிரா யோசிப்பதை பார்த்த பிரியா அவளின் கையை பிடித்தவள், ” ஏய் இன்னும் என்னடி யோசிக்கற.. அம்மாதான் இவ்ளோ தூரம் சொல்றாங்கல்ல.. அவங்க சொல்றதை கேளு.. எனக்கும் அதுதான் சரியான இருக்கும்னு தோணுது.. சரினு சொல்லு ” என சொல்ல சில வினாடி யோசித்த ஆதிரா சுவாமிநாதனை பார்த்தவள்,
” சரிங்க சார்… அம்மா சொன்னது மாதிரி எல்லாத்தையும் வித்துட்டு என் அம்மா அப்பா பேர்ல ஒரு டிரஸ்ட் ஓபன் பண்ணிருங்க.. பேப்பர்ஸ் எல்லாம் ரெடி பண்ணிருங்க.. நான் சைன் பண்ணி கொடுத்தறேன்.. ” என சொல்ல,
” நான் மறுபடியும் ஒரு தடவை கேக்கறேன்மா.. இதுதான் உன் முடிவா.. எல்லா சொத்துக்களையும் வித்தறவா.. ” என கேட்டார் சுவாமிநாதன்.
” ஆமாம் சார்.. என் முடிவுல எந்த மாற்றமும் இல்ல.. எனக்கு எந்த சொத்தும் வேண்டாம்.. நீங்க பேப்பர்ஸ் ரெடி பண்ணிருங்க.. “
” சரிம்மா.. வேலையை முடிச்சுட்டு நான் உனக்கு போன் பண்றேன்.. “ என்ற சுவாமிநாதன் எழுந்து செல்ல ஆதிரா சரஸ்வதியை பார்த்து சிரித்தவள்,
“ நான் இன்னிக்கு ரொம்ப சந்தோசமா இருக்கேன்மா.. நான் போய் குழந்தைங்களோட இருக்கேன்.. “ என்றவள் எழுந்து ஓட சரஸ்வதி சிரித்தார்.
“ ஆதிரா ரொம்பவே வித்தியாசமா இருக்காம்மா.. இவளை மாதிரி எல்லாம் ஒரு பொண்ணு இருப்பாங்களான்னு எனக்கு ஆச்சரியமா இருக்கு.. அப்பா அம்மா தனக்கு எந்த சொத்தும் சேர்த்து வைக்கலன்னு திட்டற பசங்கதான் இப்போ அதிகமா இருக்காங்க.. இவ என்னடான்னா அம்மா அப்பாவே இல்ல.. அவங்க சொத்து மட்டும் எனக்கு எதுக்குன்னு சொல்லி எதுவும் வேண்டாம்னு சொல்றா.. இப்படிகூட ஒருத்தி இருப்பாளாம்மா.. “
“ அதான் உன் கண்ணு முன்னாடியே ஒருத்தி இருக்காளேம்மா.. அப்புறம் என்ன.. ஏன் இப்படி கேக்கற.. ஆதிராவோட இந்த நல்ல மனசுக்கு அவளுக்கு எப்பவும் நல்லது தான் நடக்கும்.. சரி நான் உன்கிட்ட ஒரு விஷயம் பேசணும்னு இருந்தேன்.. ஆதிரா யாரையாவது லவ் பண்றாளா என்ன.. “ என சரஸ்வதி சட்டென கேட்க அதை கேட்ட பிரியா அதிர்ந்து போய் அவரை பார்த்தாள்.
பிரியா அதிர்ச்சியுடன் அவரை பார்க்க அவளை பார்த்து சிரித்த சரஸ்வதி, “ என்னமா.. நான் ஏன் திடிர்னு இப்படி கேக்கறேன்னு ஷாக்கா இருக்கா.. எல்லாம் காரணமா தான் கேக்கறேன்.. ஆதிரா முகத்துல ஏதோ ஒரு மாற்றம் தெரியுது.. வழக்கத்தை விடவும் அவ ரொம்ப சந்தோசமா இருக்க மாதிரி இருக்கு.. அதான் இப்படி எதாவது இருக்குமோன்னு கேட்டேன்.. “ என சொல்ல,
“ அது வந்தும்மா.. அவ மனசுல என்ன இருக்குனு எனக்கும் சரியா தெரியல.. அவ எதுவும் உறுதியா சொல்லாதப்ப நான் எப்படி உங்ககிட்ட சொல்றதுன்னு எனக்கு தெரியல… “ என பிரியா தயக்கத்துடன் சொல்ல சரஸ்வதி மெல்ல சிரித்தார்.
“ சரிம்மா.. அப்படி எதாவது இருந்தா ஆதிராவே என்கிட்ட என்னனு சொல்லட்டும்.. அவளுக்கும் கல்யாண வயசு ஆகிருச்சு.. அப்படி எதுவும் இல்ல அப்படினா நானே அவளுக்கு ஒரு நல்ல மாப்ளயா பார்க்கறேன்.. “ என சரஸ்வதி சொல்ல பிரியாவும் சரியென தலை அசைத்தாள்.
இருவரும் பேசிக்கொண்டு இருக்க ஆதிரா அங்கு வந்தவள், ” நேரமாச்சும்மா.. ஆபீஸ் கிளம்பனும்.. நாங்க கிளம்பறோம்.. ” என சிரித்துக்கொண்டே சொல்ல,
” என்னது கிளம்பறியா.. அதுக்குள்ளயேவா.. உன் பர்த்டே அப்போ நீ எப்பவும் புல் டே இங்க இருந்துட்டு தான போவ.. இன்னிக்கு என்ன வந்ததும் கிளம்பறதா சொல்லிட்டு இருக்க.. ” என சந்தேகத்துடன் கேட்டார் சரஸ்வதி.
சரஸ்வதி கேட்டதும் பிரியாவை பார்த்துவிட்டு திரும்பி மறுபடியும் அவரை பார்த்தவள், ” இல்லம்மா அது.. அது வந்து இன்னிக்கு கம்பெனியில நிறைய வேலை இருக்கு.. அதனால நாங்க இப்போ போய் ஆகணும்.. நான் மறுபடியும் வந்து பார்க்கறேன்மா.. ” என சொல்ல,
” சரிம்மா.. உனக்கு வேலை இருக்குன்னு சொல்ற.. சரி ரெண்டு பேரும் கிளம்புங்க… ” என சரஸ்வதி சிரித்துக்கொண்டே சொல்ல பிரியாவுடன் வெளியே வந்தாள் ஆதிரா.
ஆதிராவை பார்த்த பிரியா, ” ஹேய் என்னடி.. எதுக்கு வேலை இருக்கறதா சரஸ்வதி அம்மாகிட்ட பொய் சொன்ன.. இப்போ கம்பெனிக்கு போகணுமா என்ன.. ” என கேட்க,
” ம்ம் ஆமாடி.. நான் ஆர்யனை பார்க்கணும்.. நேத்து பார்ட்டியில நடந்துகிட்டதுக்கு ஆர்யன்கிட்ட சாரி சொல்லணும்.. அண்ட் என்னை பத்திரமா வீட்டுக்கு கூட்டிட்டு போனதுக்கு அவருக்கு தேங்க்ஸ் சொல்லணும்.. ” என ஆதிரா சொல்ல அவளை சந்தேகமாய் பார்த்தாள் பிரியா.
” ஏய்.. நீ ஆளும் சரி இல்ல.. உன் பேச்சும் சரி இல்ல.. ஒழுங்கா உன் மனசுல ஏதாவது இருந்தா அதை என்கிட்ட மறைக்காம சொல்லுடி.. ” என பிரியா கேட்க,
” நான் என்னடி உன்கிட்ட மறைக்க போற.. அதெல்லாம் எதுவும் இல்ல.. நான் உன்கிட்ட எதுவும் மறைக்கலடி.. ” என்றாள் ஆதிரா.
” சரிடி.. நான் நேரடியாவே கேக்கறேன்.. நீ ஆர்யனை பார்த்ததுல இருந்து ஆளே சரி இல்ல.. நீ ஆர்யனை லவ் பண்றியா… ” என பிரியா கேட்க,
” லவ் எல்லாம் இல்லடி… அவர்கிட்ட சாரி அண்ட் தேங்க்ஸ் சொல்லணும்.. அவ்ளோதான்.. நீயா கண்டதையும் யோசிச்சிட்டு இருக்காத.. நேரமாச்சு.. வா போலாம்.. ” என்ற ஆதிரா ஆட்டோவை குறுக்காட்டி அதில் ஏற பிரியாவும் வேறு வழி இல்லாமல் ஆட்டோவில் ஏற ஆட்டோ அங்கிருந்து கிளம்பியது.
இருவரும் கம்பெனிக்கு வர அங்கு கம்பெனியே பரபரப்புடன் காணப்பட இருவரும் குழப்பதுடன் உள்ளே சென்றனர்.
ஆதிராவும் பிரியாவும் அவர்கள் இடத்திற்கு வர அவர்களை பார்த்த சக்தி, ” நல்லவேளையா நீங்க வந்துட்டீங்க… உங்க ரெண்டு பேரோட போனும் என்னாச்சு.. நான் நிறைய டைம் கால் பண்ணுனேன்.. ஆனா ரெண்டு பேரோட போனும் நாட் ரீச்சபிள் அப்படினு வந்துச்சு.. என்னாச்சு.. ” என கேட்க,
” அதெல்லாம் நான் மறுபடியும் சொல்றேன்.. நீ ஏன் இவ்ளோ பதட்டமா இருக்க.. நீ மட்டும் இல்ல மொத்தம் கம்பெனியுமே பதட்டமா இருக்க மாதிரி தெரியுது.. என்னாச்சுடா.. ” என கேட்டாள் பிரியா.
” அட நம்ம கம்பெனி லாஸ்ல போயிட்டு இருக்குனு சொல்லி நம்ம பழைய எம். டி நம்ம கம்பெனிய வேற ஒருத்தருக்கு வித்துட்டாருன்னு நியூஸ் வந்துச்சுல்ல.. அதுபத்தி நேத்து வரைக்கும் எதுவும் கன்பார்ம் ஆகாம இருந்துச்சு.. ஆனா இப்போ அது கன்பார்ம் ஆகிருச்சு.. நம்ம கம்பெனி வேற ஒருத்தருக்கு கைமாறி இருக்கு.. அந்த எம். டி இன்னும் கொஞ்ச நேரத்துல இங்க வர போறாரு.. அதனால தான் எல்லாரும் பதட்டத்தோட இருக்கோம்.. ” என சொல்ல இருவரும் அதிர்ந்து போய் அவனை பார்த்தனர்.
ஆதிராவை பார்த்த சக்தி, “ மறந்தே போயிட்டேன்.. இன்னிக்கு உன் பர்த்டேல்ல.. ஹாப்பி பர்த்டே ஆதிரா.. இன்னிக்கு ட்ரீட் இருக்குல்ல.. “ என சிரிக்க பிரியா அவனை முறைக்கவும் உடனே அவன் அமைதியானான்.
பியூன் வந்து எல்லாரையும் வர சொல்லிவிட்டு செல்ல கம்பெனியில் வேலை செய்த அனைவரும் வெளியே போய் புது எம். டிக்காக காத்துகொண்டு இருக்க அந்த பெரிய படகு போல் இருந்த கார் உள்ளே வர அனைவரும் ஆர்வமாய் காரையே பார்க்க காரில் இருந்து இறங்கிய ஆர்யனை பார்த்து அதிர்ந்து போய் நின்றாள் ஆதிரா.
No comments yet.