Episode 8

Valanchuli Tamil | 23 May 2026 | Share

அத்தியாயம்-8

“காளிதாஸ் பத்தி இன்னொரு விஷயம் சொல்றேன் கேளு” என்றவரை முகத்தை உற்று நோக்கினாள் மீரா..

“நம்ம விசித்ரா ஒரு நாள் காலேஜ் முடிச்சு வர்றதுக்கு லேட் ஆயிடுச்சு.. உனக்கு தான் தெரியுமே நம்ப விசித்ராவோட காலேஜ் பஸ் நம்ம ஊருக்கு உள்ள வராது.. அப்படியே மெயின் ரோட்டிலேயே இறக்கி விட்டுட்டு போயிடும்.. 6 மணிக்கே இருட்டா ஆகுற குளிர்காலம் அது.. அந்த அன்னைக்குன்னு பார்த்து நானும் வேலை விஷயமா வெளியூர் போயிட்டான்..‌‌ உன் சித்தியும் கோவிலுக்கு போயிட்டாள்.. ..”

“இரண்டு பேருமே இல்ல நீயே பார்த்து பத்திரமா வந்துருமான்னு சொல்லிட்டேன்.. பாப்பா அப்படி நடந்து வந்துட்டு இருக்கும் போது அந்த ஆலமரம் இருக்குல்ல அங்க யாரோ மூணு வெளியூர் பசங்க நம்ம விசித்ரா கிட்ட தப்பா நடந்துக்க பார்த்து இருக்காங்க.. அந்த நேரத்துல அந்த வழியா போன காளிதாஸ் தான் அவனுங்களை‌ அடிச்ச மரத்துல கட்டி போட்டுட்டு பாப்பாவ பத்திரமா வீட்டுக்கு கூட்டிட்டு வந்து விட்டுட்டு போனான்” 

“அப்படி ஒரு சம்பவம் நடந்ததுக்கு அப்பறம் சாயங்கால நேரம் ஆனாவே காளிதாஸ் அந்த ஆலமரத்துக்கு பக்கத்துல தான் இருப்பான்.. நான் போகலைன்னா கூட விசித்ரா தைரியமா வீட்டுக்கு வந்துருவாள்.. அவன பத்தி முழுசா தெரியாதவங்களுக்கு தான் அவன் பொறுக்கி பொறுப்பில்லாதவன்.. ஆனா அவனை பத்தி முழுசா புரிஞ்சுகிட்டவங்களுக்கு அவன் ஊரை காக்குற அய்யனார் சாமி மாதிரி..”

மீரா விழி விரித்து ஆச்சர்யமாக பார்த்தாள்.. ஈஸ்வரன் அவ்வளவு எளிதில் யாரையும் நம்பும் நபர் அல்ல.. அவரே இவ்வளவு தூரம் அவனை பற்றி சொல்கிறார் என்றால் அவ்வளவு நல்லவனா என்று ஆச்சர்யமாய் தான் இருந்தது அவளுக்கு..

“உன் பார்வையில் ஏன் அவன் தப்பா விழுந்தான்னு எனக்கு தெரியல.. அவன் நல்லவன் தான்.. கரடு முரடா இருக்கிற எல்லாருமே முரடானா பொறுப்பு இல்லாதவனா இருக்கணும்னு அவசியம் இல்லை குட்டி.. உன்னை விட வயசுல மூத்தவன்.. அவன் இவன்னு பேசாமல் மரியாதையா அவர் இவருன்னு பேசணும் சரியா” கண்டிப்பை கூட அன்பாக சொல்லி அவள் தலை வருடி விட்டு தோட்டத்திற்கு கிளம்பி இருந்தார் ஈஸ்வரன்..

“அப்போ அக்கா காளிதாஸை அண்ணா அண்ணான்னு சப்போர்ட் பண்ண காரணம் இதுதானா?.. நம்ம தான் அவனை‌‌ ப்ச்ச் இல்லை‌ அவரை தப்பா நினைச்சுட்டு இருந்திருக்கோம் போல..‌ ஆனா ஆரம்பத்துல இருந்தே நடந்த விஷயங்களும் அப்படி தானே இருந்துச்சு..” யோசித்தபடி திண்ணையில் அமர்ந்து கொண்டாள் மீரா..

“ம்ம்ம் அக்காஆ உன் கை பக்குவத்தை அடிச்சுக்க ஆளே இல்லை போ… மட்டன் பிரியாணி செம போ.”, அன்று ஒரு ஞாயிற்றுக்கிழமை வீடே அசைவ உணவு வகைகளின் வாசம் வீட்டை நிறைத்திருந்தது..

“இன்னும் கொஞ்சம் போடு அக்கா” தலைவாழை இலையில் அடுக்கப்பட்டு‌ இருந்த விதவிதமான மட்டன் வகைகளை வெளுத்து வாங்கிக் கொண்டிருந்தாள் மீரா.. அதிலும் அவளுக்கு பிரியாணியின் சுவை மிகவும் பிடித்து போனது.. இத்தோட மூன்றாவது முறையாக கேட்கிறாள். 

விசித்ரா முகம் கொள்ளா புன்னகையுடன் அருகில் அமர்ந்து தங்கைக்கு பரிமாறி அவள் சாப்பிடுவதை பாசத்துடன் பார்த்துக் கொண்டிருந்தாள்

“அடியே இப்படி தின்னு வயிறு வலிக்க போகுது” அவளை அதட்டினார் மீராவின் தாய் ஆனந்தி 

“அட சும்மா இரு ஆனந்தி நீ.. பிள்ளை சாப்பிடட்டும்.. சித்ரா அந்த ஈரல் இன்னும் கொஞ்சம் வை” என்று அன்புடன் கூறினார் கோமதி..

“அப்படி சொல்லுங்க பெரியம்மா என் அக்காவோட சமையலை சாப்பிடுவதற்கு கொடுத்து வச்சிருக்கணும்.. மாமா ரொம்ப லக்கி” என்று விசித்திராவின் கன்னம் கிள்ளி கொஞ்சியபடி மீரா சாப்பிட விசித்ரா உதட்டை கடித்து வெட்கத்துடன் தலை குனிந்து கொண்டாள் 

“அடடா புள்ளைக்கு வெட்கத்தை பாரு.. இப்போவே முகத்தில் கல்யாண கலை வந்த மாதிரி இருக்கு” என்று ஆனந்தி சிரிப்புடன் கூறினார்.. 

“போங்க சித்தி” என்ற சிணுங்கி கொண்டு சமையலறைக்குள் ஓடி இருந்தாள் விசித்ரா..

அன்று மாலை அனைவரும் வீட்டிற்கு வெளியே அமர்ந்து பேசி கொண்டு இருக்க “சகலை நாங்களும் நாளைக்கு கிளம்பலாம்னு இருக்கோம்.. வந்து ரெண்டு வாரத்துக்கு மேல ஆச்சு..‌‌ அங்க போய் வேலையை பார்க்கனும்” என்றார் சந்திரன்..

“கொழுந்தனாரே அதுக்குள்ள என்ன அவசரம்.. வீட்ல ஒரு நல்ல விசேஷம் வரப்போகுது.. அதை முடிச்சிட்டு அப்புறம் போகலாமே” என்றார் கோமதி 

“விசேஷமா என்ன அக்கா இப்போ தானே திருவிழா கூட முடிஞ்சது.. மறுபடியும் என்ன விசேஷம்” என்று குழப்பமாக கேட்டார் ஆனந்தி 

“நம்ம விசித்ராவுக்கு ஒரு நல்ல வரன் கைக்கூடி வந்திருக்கு.. இன்னும் ரெண்டு நாளில் பொண்ணு பார்க்க வரதாக மாப்பிள வீட்ல இருந்து சொல்லியிருக்காங்க மா”.. 

சந்திரன் ஆனந்தி இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொள்ள ஐஸ்க்ரீமை அமுக்கிக் கொண்டிருந்த மீரா வாயில் வைத்த ஸ்பூனுடன் அப்படியே விசித்ராவை திரும்பி பார்த்தாள்.. அவளோ வெட்கமாக தலை குனிந்து அமர்ந்திருந்தாள் 

“என்ன அக்கா விசித்ராக்கு மாப்பிள்ளை பாக்குறேன்னு ஒரு வார்த்தை கூட சொல்லலியே” வருத்தத்துடன் கேட்டார் ஆனந்தி 

“அட நீ என்ன இப்படி யோசிக்கிற? நான் போன் பண்ணும் போதே சொல்லிருந்தேன்ல சித்ரா காலேஜ் முடிச்சிட்டாள் இனி வரேன் பாக்க ஆரம்பிக்கணும்னு” 

“இல்லை இந்த வரன் கைக்கூடி வந்து இருக்குன்னு சொல்லவே இல்லையே..” ஆனந்திக்கு மிகவும் வருத்தமாக இருந்தது.. அவருக்கு மீராவும் விசித்திராவும் வேறு வேறு அல்ல.. 

நாற்காலியை இழுத்து போட்டு ஆனந்தியின் அருகில் வந்து அமர்ந்த கோமதி தன் தங்கையின் கைகளை பற்றிக் கொண்டு “ஆனந்தி என்ன மா நீ இப்படி யோசிக்கிற? தரகர் மூலமாக தான் இந்த வரன் அமைஞ்சுது. எங்களுக்கு எல்லா விதத்திலும் பரிபூரண சம்மதம் தான் ஆனால் மாப்பிள்ளை வீட்ல தான் சம்மதம் சொல்ல கொஞ்சம் லேட் பண்ணிட்டாங்க” 

“அவங்க சரின்னு சொல்ல மாட்டாங்களோ என்னவோன்னு ஒரு தயக்கத்தில் தான் நாங்களும் வெளியே சொல்லலை.. இன்னைக்கு காலையில தான் மாப்பிள்ளை வீட்ல இருந்து போன் பண்ணி ரெண்டு நாளுக்கு அப்புறம் பொண்ணு பார்க்க வராதாக சொன்னாங்க.. உன் கிட்ட சொல்லக் கூடாது எல்லாம் இல்ல மா.. எங்களுக்கு முடிவு தெரியாத அப்போ உங்களுக்கு நாங்க என்னன்னு சொல்றது? அதனால தான் கொஞ்சம் தயங்கிட்டு அமைதியா இருந்துட்டோம்” கோமதி சங்கடத்துடன் பேசினார்..

“ஆமாம் சகலை என்னடா பொண்ணு பாக்க வர்றதுக்கு ரெண்டு நாள் முன்னாடி சொல்றாங்களே அவ்வளவு அந்நியமா போய்ட்டமான்னு நினைக்காதீங்க… ஜாதகம் கை கூடி வந்து பொண்ணுக்கும் மாப்பிள்ளைக்கும் ஒருத்தரை ஒருத்தர் போட்டோவுல பார்த்து பிடிச்சிருச்சு..‌ அப்புறம் போன் பண்ணி கூட பேசி பார்த்தாங்க..”

“அதுலயும் நம்ம பாப்பாவுக்கு மாப்பிள்ளையை ரொம்ப பிடிச்சிருச்சு.. அதுக்கு அப்புறம் தான் நாங்க சரின்னு சொன்னோம்.. இருந்தாலும் அவங்க தான் லேட் பண்ணிட்டு இருந்தாங்க.. ஒருவேளை மாப்பிள்ளைக்கு பிடிக்கலையோ என்மோன்னு தான் அமைதியா இருந்தோம்.. தயவு செஞ்சு நீங்க வருத்தப்படாதீங்க எங்களுக்கு ரொம்ப சங்கடமா இருக்கு” என்று ஈஸ்வரனும் வருத்தமாக கூறினார்.

நிலைமையை புரிந்து கொண்ட சந்திரன் “சரி சகலை உங்க இடத்துல நாங்க இருந்தாலும் அப்படித் தான் பண்ணி இருப்போம்‌. சரி அதை‌ விடுங்க மாப்பிள்ளை எந்த ஊரு? என்ன படிச்சிருக்காரு? என்ன வேலைக்கு போறாரு? நல்ல இடமா? எல்லாம் தெளிவா விசாரிச்சிட்டிங்களா.. நம்ம பொண்ணு‌ இங்க இருக்குற மாதிரியே அங்கேயும் சந்தோஷமா இருக்கணும்ல” உண்மையான அக்கறையிலும் அன்பிலும் கேட்டார் சந்திரன்..

“அதெல்லாம் நல்லா விசாரிச்சிட்டோம் சகல.. மாப்ள பக்கத்து ஊருதான்.. குடும்பம் நம்மளை விட வசதியில் கொஞ்சம் கம்மி தான்.. ஆனால் அந்த ஊரில் யாரை கேட்டாலும் ரொம்ப நல்ல குடும்பம்னு நல்ல விதமாக தான் சொல்றாங்க.. பையனுக்கு இந்த கெட்ட பழக்கமும் இல்லை.. பெரிய கம்பெனியில தெரிய உத்தியோகத்தில் இருக்கிறதா சொன்னாங்க பையன் சென்னையில் வேலை பார்த்துட்டு இருக்காரு வீட்டுக்கு ஒரே பையன் ரொம்ப மரியாதையான குடும்பம் தான்.. தைரியமா நம்ம பொண்ணை கொடுக்கலாம்” என்று நீண்ட விளக்கத்தை கொடுத்தார் ஈஸ்வரன்..

“சரி அக்கா நீங்களே இந்த அளவுக்கு விசாரித்து இருக்கும் போது நிச்சயமாக நல்ல குடும்பமா தான் இருக்கணும்.. எப்படியோ நம்ம வீட்ல நடக்க போற முதல் கல்யாணம் ஜாம் ஜாம்னு நடத்திடனும்” என்று ஆனந்தி விசித்ராவின் கன்னம் கிள்ளி முத்தம் வைக்க அவளுக்கு ஒரே வெட்கம் தான்..

அருகில் இருந்த மீரா தான் விசித்ராவை எரித்து விடுவது போல் பார்த்துக் கொண்டிருந்தாள் 

“நீ என்னடி பாம்பு மாதிரி புசுபுசுன்னு மூச்சுவிட்டு உட்கார்ந்து இருக்க” ஆனந்தி தன் மகளை பார்த்து கேட்டார்

“நான் பாம்பு மாதிரி புசுபுசுன்னு மூச்சை விடுறதோட நிறுத்திக்கிட்டேன்னு நீ சந்தோஷப்படு மா.. இவ்வளவு பெரிய விஷயத்தை மறைச்சிருக்காள் இவள்.. என்கிட்ட மட்டும் சந்தோஷமா இருக்கியா? நல்லா இருக்கியா? எதையாவது மறைக்குறியா? ஏதாவது மனசுல போட்டு குழப்பிட்டு இருக்கியான்னு? 1008 கேள்வி கேட்டு எல்லாத்தையும் துருவி துருவி வாங்கிக்கிறாள்.. ஆனா இவள் மட்டும் அமுக்கினி மாதிரி எதையுமே சொல்றது இல்ல.. நான் இவள் மேல செம கோவத்துல இருக்கேன்” என்றவள் டம் என்று ஐஸ்கிரீமை கீழே வைத்து விட்டு விறுவிறுவென கேட்டை தாண்டி வெளியே சென்று இருந்தாள்..

அவளின் சிறுபிள்ளைத்தனமான கோபத்தில் பெரியவர்கள் சிரித்துக் கொள்ள “மீரா நில்லு டி அப்பா இப்ப பெரிய விளக்கம் கொடுத்தார்.. சொல்லுறதை கேளு மீரா” விசித்ராவும் மீராவின் பின்னாலே கேட்டை தாண்டி வெளியே வந்து இருந்தாள்.

“அய்யய்யோ அக்கா காப்பாத்து” என பதறி கொண்டு ஓடி வந்த மீராவுக்கு பின்னால் ஒளிந்து கொண்டாள்..

“என்ன ஆச்சு டி” விசித்ரா பதற

“நா..நாய் துரத்திட்டு வருது” என்று அவள் பின்னால் மறைந்து கொள்ள விசித்ராவுக்கு சிரிப்பு தான் வந்தது..

துரத்தி வந்த நாயை விரட்டி விட்டவள் “ஒரு நாயை விரட்ட முடியல உனக்கு எதுக்கு டி இந்த வெட்டி வீராப்பு?” அவள் கன்னத்தில் இடித்தாள் விசித்ரா

இடுப்பில் கை வைத்து அவளை முறைத்த மீரா “என் வெட்டி வீராப்பை எல்லாம் விடு.. என் கிட்ட மனசுக்குள்ள எது இருந்தாலும் சொல்லு சொல்லுன்னு கேட்டு தெரிஞ்சுக்கிட்டல்ல இந்த மாதிரி எனக்கு மாப்பிள்ளை பார்த்து இருக்காங்க.. நான் அவர்கிட்ட பேசினேன்..‌ எனக்கு பிடிச்சிருக்குன்னு ஒரு வார்த்தை சொன்னியா?.. நம்ம ரெண்டு பேருக்குள்ளேயும் எந்த ஒளிவு மறைவும் இருக்க கூடாதுன்னு நீ‌ தானே சொல்லுவ.. இப்ப நீயே அதை ஃபாலோ பண்ணல பாத்தியா? இந்த விஷயத்துல நான்‌‌ உன்னை மன்னிக்கவே மாட்டேன் நான் உன் மேல செம கோவத்துல இருக்கேன்” என்றவள் முகத்தை திருப்பி கொண்டு விறுவிறுவென நடக்க 

“ஏய் அங்க நான் இருக்குடி” என்று விசித்ரா கூற சட்டென நின்றவள் மீண்டும் வீட்டுக்குள்ளேயே ஓடி இருந்தாள்

“குழந்தை டி நீ.. உன்னை எப்படி சமாதானம் பண்ணனும்னு எனக்கு தெரியாதா இதோ வரேன்” என்று சிரித்து கொண்ட விசித்ரா தங்கையை சமாதானம் செய்ய சென்று இருந்தாள்..

இந்த episode பிடிச்சிருந்தா எழுத்தாளரை உற்சாகப்படுத்துங்க!!
இப்போதே உற்சாகப்படுத்துங்கள்

இந்த படைப்பை மதிப்பிட விரும்புகிறீர்களா?

Click on a star to rate it!

No votes so far! Be the first to rate this post.

    No comments yet.