Episode 7

Valanchuli Tamil | 23 May 2026 | Share

அத்தியாயம்-7 

பச்சை பசேலென வளர்ந்து நிற்கும் நிற்கும் நெற்கதிர்களுடன் கதை பேசிக் கொண்டிருக்கும் பனித்துளிகளை ரசித்தபடியே காலைப் பொழுதில் தன் அக்காவுடன் தோட்டத்திற்கு சென்று திரும்பி வந்து கொண்டிருந்தாள் மீரா.. 

அவளைப் பார்ப்பதும் சாலையை பார்ப்பதுமாக அவளுடன் நடந்து வந்து கொண்டிருந்த விசித்ரா “மீரா குட்டி உன் கிட்ட ஒரு விஷயம் கேக்கணும்னு நினைச்சேன்” என்று ஆரம்பித்தாள்.

“என்ன அக்கா சொல்லு” மார்புக்கு குறுக்காக கைகளை கட்டி கொண்டு அதிகாலை தென்றல் காற்றை உள்வாங்கியபடி நடந்தாள் மீரா 

“உனக்கும் காளிதாஸ் அண்ணாவுக்கும்‌ என்ன பிரச்சனை? அன்னைக்கே போலீஸ்ல பிடிச்சு கொடுத்து‌ இருக்கணும்னு ஏதோ கோபமா சொன்னியே? அப்படி என்ன நடந்துச்சு? நீ எதையோ என்கிட்ட சொல்லாம விட்டு இருக்க என்ன ஆச்சுன்னு சொல்லு” 

“நீ அப்பவே கேட்பன்னு நினைச்சேன்.. திருவிழா முடிச்சு ரெண்டு நாளுக்கு அப்புறம் கேட்கிறேன்” 

“நீயே ரொம்ப சோகமாக இருந்த காளிதாஸ் அண்ணாவை பத்தி கேட்டு இன்னும் டென்ஷனாக்க வேணாமேன்னு தான் அமைதியா இருந்துட்டேன்.. இப்ப சொல்லு என்ன பிரச்சனை உங்களுக்குள்ள”

“சொல்லுவேன் ஆனா நீ வீட்ல சொல்ல கூடாது” என்று கண்டிஷன் போட்டாள் மீரா 

“அதெல்லாம் தப்பு குட்டி நம்மளை சுத்தி நடக்குற எல்லா விஷயமும் வீட்டுக்கு தெரியணும்.. மறைக்கிறது பல சமயங்களில் நமக்கே ஆபத்தாக வந்து முடியும்..‌ நீயும் எத்தனையோ நியூஸ் பார்க்கிற தானே” என்று கண்டிப்பான அக்காவாக பேசினாள் விசித்ரா..

“அந்த அளவுக்கு நம்ம வாழ்க்கையில பெரிய பிரச்சனை உருவாக்குற விஷயம் இல்ல.. இருந்தாலும் இதை எல்லாம் ஏன் வீட்ல சொல்லிட்டு தான் வேணாம்னு சொல்றேன்”

“சரி நீ சொல்லு.. வீட்ல சொல்லலாமா‌ வேணாம்னு அப்புறம் யோசிக்கலாம்” என்றாள் விசித்ரா..

“அந்த திருடன் என்னோட மோதிரத்தை என்கிட்ட இருந்து வலுக்கட்டாயமா பிடுங்கி விக்கலாம்னு ட்ரை பண்ணி இருக்கான் அக்கா.. அதுக்குள்ள நான்‌ எப்படியோ கண்டுபிடித்து மோதிரத்தை வாங்கிட்டு வந்துட்டேன்.. இது எவ்வளவு ஸ்பெஷல் தெரியுமா?” என்று நடந்தது‌ அனைத்தையும் அக்காவிடம் கூறிய மீரா “சரியான ப்ராடு அக்கா அவன்”, என்றாள் இறுதியாக..

“வாய்ப்பே இல்லை மீரா.. நீ காளிதாஸ் அண்ணாவை பத்தி ஏதோ தப்பா புரிஞ்சு வச்சு இருக்க.‌ அடுத்தவங்க பொருளுக்கு ஆசைப்படுறவர் கிடையாது அவர்” விசித்ரா காளிதாஸுக்காக பரிந்து பேச மீரா அவளை ஆச்சரியமாக பார்த்தாள்.. 

“என்ன அக்கா இந்த விஷயத்தை சொன்னால் கோபப்படுவன்னு‌ பார்த்தால் நீ அவனுக்கு சப்போர்ட் பண்ணுற.. உனக்கு புத்தி கெட்டு போச்சா” நின்ற இடத்திலேயே கோபமாக கேட்டாள் மீரா..

“சத்தம் போடாத‌‌ டி.. எனக்கு ஒன்னும் புத்தி கெட்டு போகல.. நான் தெளிவா தான் சொல்றேன் காளிதாஸ் அண்ணா மோதிரத்தை திருட எல்லாம் ட்ரை பண்ணி இருக்கவே மாட்டாரு”, அடித்து கூறினாள் விசித்ரா

“அவனை பத்தி விசாரிச்ச வரைக்கும் இந்த ஊரே பொறுப்பில்லாதவன் பொறுக்கி ரவுடி அப்படி இப்படின்னு பல சர்டிபிகேட் கொடுத்து இருக்கு.. அவனுங்கு கோவம் வந்தால் யாரு என்னன்னு எல்லாம் பார்க்காமல் அடிப்பானாம்.. அவனை திருப்பி அடிக்க இங்க யாருக்குமே தைரியம் இல்லையாம்.. இப்படி ஒரு ரவுடிய ஊர்ல வளர விட்டுட்டு இருக்கீங்க.. இதெல்லாம் எங்க போய் முடிய போகுதோ தெரியல.. அவன் இந்த அளவுக்கு‌ வளர்ந்து நிற்க நீங்களும் ஒரு காரணம்”, வெறுப்பாக சொன்னாள்..

“மீரா ஒருத்தரை பத்தி முழுசா தெரியாம நீ பாட்டுக்கு எதையாவது பேசாதே” என்று கண்டிப்புடன் கூறினாள் விசித்ரா. 

“நான் ஒன்னும் தெரியாம எல்லாம் பேசல அக்கா..‌ அவனை பத்தி இங்க நிறைய பேர் கிட்ட விசாரிச்சிட்டேன்.. ஏன் நம்ம வீட்ல வேலை பாக்குறவங்க கூட அவன் கோபக்காரன் அவன் கிட்ட எதுக்கு வம்புன்னு பயந்து பேசினதை எல்லாம் கேட்டு இருக்கேன்.

கண்களை சுழற்றியபடி நீண்ட மூச்சை இழுத்து விட்டுக் கொண்டு அங்கேயே கைகட்டி நின்று மீராவை அழுதமாக பார்த்தாள் விசித்ரா 

“என்ன அக்கா நான் சொல்லுறதுல நம்பிக்கை இல்லையா” வீரா புரியாமல் கேட்டாள்..

“நீ சின்ன பொண்ணுங்குறதை நிரூபிக்குற மீரா.. அவங்க சொன்னாங்க இவங்க சொன்னாங்கன்னு சொல்றதெல்லாம் விடு.. நீ சொல்ற மாதிரி காளி அண்ணா பொறுக்கியாவோ ரவுடியாவோ திருடனாவோ இருந்திருந்தால் ஏற்கனவே உன் மேல இருக்க கோபத்துல உன்னை காப்பாற்றி இருக்கக் கூடாதுல.. ஆனா எதையும் மனசுல வச்சுகாமல் உன்னை காப்பாத்தினாரு தானே..

“சரி‌ நான் சொல்லுறதை விடு.. காளி அண்ணா நீ சொல்ற மாதிரியே ரவுடியா பொறுக்கியா இருக்கட்டும்.. நீ ஊரே கூடி இருக்க இடத்தில் அவரை கை நீட்டி அடிச்ச ஆனால் அவர் உன் கிட்ட சண்டைக்கு வந்தாரே தவிர உன்னை திருப்பி அடிக்க கையை ஓங்கி கூட இல்லை.. அதை நீயே நேருக்கு நேரா பார்த்த தானே”

இரண்டு நிமிடம் யோசித்த மீரா “அது சரி நீ ஏன் அவனுக்கு இவ்வளவு சப்போர்ட் பண்ற?” என்று தன் அக்காவை சந்தேகமாக பார்த்தாள்..

“நான் ஏன் சப்போர்ட் பண்றேன்னு கடைசியில் சொல்றேன்.. நீ நல்லா யோசிச்சு ஒரு முடிவுக்கு வா.. எந்த ஒரு மனுஷனையும் அவங்க சொல்றாங்க தால் ்க சொல்றாங்கன்னு நம்பி தப்பா பேசக்கூடாது மீரா.. நம்ம கண்ணார பார்க்காமல் அவங்க கூட பழகாமல் எந்த ஒரு முடிவுக்கும் வரக் கூடாது.. ஊர் சொல்ற மாதிரி காளி அண்ணா கெட்டவனா இருந்திருந்தா நிச்சயமா உன்னை காப்பாற்றி இருக்க மாட்டார்..”சொல்லி முடித்த விசித்ரா முன்னால் செல்ல மீரா தீவிரமாக யோசித்தபடியே அவள் பின்னால் சென்று கொண்டிருந்தாள்..

“ஏய் சித்ரா இங்க வேலை இருக்கு.. எங்க போய் ஊர் சுத்திட்டு வர?? சீக்கிரம் உள்ள வா” வீட்டுக்குள் நுழைந்த விசித்ராவை அழைத்தார் கோமதி..

“இதோ வந்துட்டேன் மா” விசித்ரா உள்ளே சென்று விட அவள் சென்றதைக் கூட கவனிக்காமல் ஆரம்பத்தில் இருந்து இன்று வரையில் தாஸ் உடனான நிகழ்வுகளை மனதில் ஓட்டி பார்த்துக் கொண்டே வந்தவள் ஏதோ ஒன்றின் மீது பலமாக மோதிக் கொண்டாள்.

“ஸ்ஸ் ஆஆ” கண்களை மூடி நெற்றியை நீவி கொண்டவள் எதன் மீது மோதினோம் என நிமிர்ந்து பார்க்க காளிதாஸ் அவளை முறைத்துக் கொண்டு நின்றான்..

‘இவனைப் பத்தி நம்ம தீவிரமா யோசிக்கும் போதெல்லாம் எப்படி கரெக்ட்டா நம்ம கண்ணு முன்னாடி வரான்’ அவள் தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கும் சமயம் “அடிபட்டுருச்சா குட்டி பார்த்து வரக்கூடாதா?” அவள் நெற்றியை தேய்த்து விட்டார் ஈஸ்வரன்.. 

“அதெல்லாம் இல்ல பெரியப்பா” என்றாள் மீரா..

“சரி உள்ள போ” என்று சொன்ன ஈஸ்வரன் “ரெண்டு வாரத்துல சரி பண்ணி கொடுத்துடு காளி.. தோட்டத்தில் நிறைய வேலை இருக்கு” என்ற காளிதாஸிடம் பேச ஆரம்பித்தார் ஈஸ்வரன்..

‘இவன்‌ என்னத்த முடிச்சு கொடுக்கணும்’ மீரா அங்கேயே நின்று இருவரும் பேசுவதை கேட்டுக் கொண்டிருந்தாள் 

“ஒரு வாரமே போதுமுங்க..‌ நாளைக்கு வந்து டிராக்டர் எடுத்துட்டு போயிடுறேன்.. ஒரு வாரத்துல சரி பண்ணி கொடுத்துடுவேன்.. நீங்க தைரியமாக என்னை நம்பலாம்” அவன் விறைப்பான குரலில் பேசினான் 

“அட உன்னை நம்பாம யாரை நம்ப போறேன் காளி.. உன் கிட்ட ஒரு பொறுப்பை கொடுத்தால் அது சொன்ன நேரத்துக்கு கணகச்சிதமா முடிச்சு கொடுக்குறவன் ஆச்சே நீ. உன்னை போல பொறுப்பான பையன் இந்த ஊரில் எங்க இருக்கானுங்க.. நீ நல்லா நேரம் எடுத்து டிராக்டர் சரி பண்ணி கொடுத்து என்ன போதும்” 

“கண்டிப்பா ஒரு வாரத்துல கொடுத்துடுவனுங்க” என்றவன் இருக்கை கூப்பி வணக்கம் வைத்துவிட்டு மீராவை ஏறெடுத்தும் பாராமல் நகர்ந்து இருந்தான்.. 

நடராஜன் கம்பீரமாக நடந்து செல்லும் காளிதாஸையே புன்னகையுடன் பார்த்துக் கொண்டு நின்று இருந்தார்.. 

“பெரியப்பா இவனை நம்பி எந்த பொறுப்பு கொடுக்கப் போறீங்க? நம்ம டிராக்டரை இவன்‌ கிட்ட கொடுக்க போறீங்களா?? என்ன ஆச்சு உங்களுக்கு??”, கேள்வி மேல் கேள்வி கேட்டாள்..

“இல்லை கண்ணு டிராக்டரை அவனுக்கு கொடுக்கப் போறதில்லை.. டிராக்டர் ரெண்டு மூணு நாளா ஸ்டார்ட்டே ஆக மாட்டேங்குது..‌ அப்படியே ஸ்டார்ட் ஆகி கொஞ்ச தூரம் போனாலும் அப்படியே நின்னு போயிடுது..‌ அதான் என்ன பிரச்சனைன்னு பார்க்கிறதுக்காக காளிதாஸ் கிட்ட சொல்லி இருக்கேன் நாளைக்கு வந்து எடுத்துட்டு போய் சரி பண்ணி கொண்டு வந்து விட போறான்”

“அதுக்கு ஒரு பொறுப்பான மெக்கானிக் கிட்ட கொண்டு போய் விடலாமே..‌ அதை விட்டுட்டு ஊர்ல வேலை வெட்டி இல்லாம ரவுடி மாதிரி அப்பாவி மனுஷங்களை எல்லாம் போட்டு அடிச்சிட்டு இருக்க அவனை நம்பி எப்படி டிராக்டரை‌ கொடுக்குறீங்க.. இவன் ட்ராக்டரில் இருக்க இரும்பு எல்லாம் திருடி வித்துட்டு ஏதாவது மோசமானதை போட்டு கொண்டு வந்து கொடுத்துட போறான்” அவளுக்கு நடந்ததை வைத்து மீரா பேசிக் கொண்டிருந்தாள்..

“அப்படியெல்லாம் சொல்லக் கூடாது மீரா.. காளிதாஸ் நீ நினைக்கிற மாதிரி பையன் இல்ல ரொம்ப பொறுப்பானவன் ஒரு வேலையை கொடுத்தால் சொன்ன நேரத்துக்கு முடிச்சு கொள்வது கொடுத்து விடுவான்”

“என்ன சொல்றீங்க ஆனா ஊர்ல அவன் ரவுடி.. கோவம் வந்தா யாரை வேணாலும் தூக்கி போட்டு மிதிப்பான்னு அவனை பத்தி எல்லாரும் தப்பு தப்பா பேசுறாங்க நீங்களும் அக்காவும் மட்டும் அவனை பத்தி இவ்வளோ நல்லவிதமா சொல்றீங்க”

“ஊர் ஆயிரம் பேசும்.. நீ வார்த்தைக்கு வார்த்தை ரவுடி ரவுடின்னு சொல்லுற சரி.. அப்போ நம்ம நாட்டோட எல்லையில் நிக்கிற ராணுவ வீரர்களை மட்டும் ஏன் ரொம்ப மரியாதையாக நடத்துற?? அவங்க கூட தான் நம்ம நாட்டை தாக்க வரவங்கள சுட்டு கொல்றாங்க அப்படி பாத்தால் அவங்களும் ரவுடி தானே என்கவுண்டரில் எத்தனையோ பேரை போட்டு தள்ளுற போலீசும் ரவுடி தானே”

“பெரியப்பா யாரை யார் யார் கூட கம்பேர் பண்றீங்க.. நம்ம நாட்டு ராணுவ வீரர்கள் அவங்க குடும்பம் குழந்தை அத்தனை பேரையும் விட்டுட்டு இந்த நாட்டு மக்களுக்காக போராடுறாங்க.. நம்ம நாட்டை அழிக்க நினைக்கிறவங்களை கொல்றாங்க.. போலீஸ் தப்பு பண்றவங்களை தண்டிக்கிறாங்க.. அவங்க கால் தூசிக்கு சமம் ஆவானா இவன்” 

லேசாக சிரித்த ஈஸ்வரன் “அவங்க எல்லாரும் தப்பா தட்டி கேக்குறவங்க தப்புக்கு தண்டனை கொடுக்கிறவங்க..‌ அவங்க சரியானவங்கன்னா நம்ம காளிதாஸும் சரியானவன் தான் மா.. அவன் ஒன்னும் ரோட்ல போற வரவனை கை நீட்டி அடிக்கிறவன் கிடையாது.. அவன் கண்ணுக்கு தப்புன்னு பட்டால் தட்டி கேட்பான்.. மீறி திமிறினால் அடிப்பான்.. அதுக்கு அப்புறம் அடி வாங்கினவன் அந்த தப்பை பண்ணி நான் பார்த்ததே இல்லை.. தப்புன்னு தெரிஞ்சும் திருந்தாத சிலர் காளிதாஸ் பத்தி தப்பா பேசுவதை நானும் கேட்டு இருக்கேன்.. அவங்க யாரோ தான் காளிதாஸ் பத்தி உன் கிட்ட தப்பா சொல்லி இருக்கனும்.. அவன் முரடன் தான் ஆனால் மனசளவில் தங்கமானவன் மா..”

காளிதாஸின் மீதான மீராவின் பார்வை கொஞ்சம் கொஞ்சமாக மாற தொடங்கியது..

“இன்னொன்னு சொல்லுறேன் கேளு” என்று ஈஸ்வரன் கூடுதலாக காளிதாஸை பற்றி ஒரு விஷயத்தை கூற மீராவின் பார்வை மொத்தமாக தவறாக அவன் மீது படிந்து இருந்ததை புரிந்து கொண்டாள்.. அவன் மீது இருந்த தவறான கண்ணோட்டம் மாறி வேறு கோணத்தில் அவனை பார்க்க ஆரம்பித்தாள்..

இந்த episode பிடிச்சிருந்தா எழுத்தாளரை உற்சாகப்படுத்துங்க!!
இப்போதே உற்சாகப்படுத்துங்கள்

இந்த படைப்பை மதிப்பிட விரும்புகிறீர்களா?

Click on a star to rate it!

No votes so far! Be the first to rate this post.

    No comments yet.