Episode 6

Valanchuli Tamil | 23 May 2026 | Share

அத்தியாயம்-6

கழுத்தில் கிடந்த துப்பட்டா உருவப்பட்டத்தில் நெஞ்சுக்கு குறுக்காக கைகளை கட்டிய படி அதிர்ந்து திரும்பிய மீரா துப்பட்டாவை காலில் மிதித்து கொண்டு இருந்த காளிதாஸை பார்த்தவளுக்கு கோபத்தில் என்ன நடந்தது என்றெல்லாம் யோசிக்க தோன்றவில்லை..

அவனது சட்டையை பற்றி இழுத்தவள் ஓங்கி அறைந்திருந்தாள்.

சுற்றி இருந்த மக்கள் ஆங்காங்கே நின்றபடி இவர்கள் இருவரையும் வேடிக்கை பார்க்க சிவந்த விழிகளுடன் அவளை பார்த்த காளிதாஸ் ஏதோ பேச முன் வர

“ச்சி பேசாதே.. நீ எல்லாம் மனுஷனா?.. ஒரு பொண்ணோட துப்பட்டாவை பிடிச்சு இழுக்குற அறிவு இல்லை” என்ன நடந்தது என்று தெரியாமல் ஊரார் மத்தியில் தனது துப்பட்டாவை பிடித்து இழுத்ததில் கோபம் கொண்டு கத்தினாள் மீரா..

சுற்றி அத்தனை ஆண்கள் மத்தியில் அவன் செய்த காரியத்தை அவளால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை..

“ஏய்ய்…” என பல்லை கடித்தபடி அவளை நெருங்கி வந்தான் காளிதாஸ்..

“மச்சான் வேணாம் டா..” அவனின் நண்பர்கள் இருவர் அவன் இரண்டு கைகளையும் பற்றிக்கொண்டனர்..

“ஹேய் மீரா என்ன சத்தம் இங்க?” கூட்டமாக இருப்பதை கண்டு விசித்ரா பதறி ஓடி வந்தவள் நடப்பது புரியாமல் சுற்றிலும் பார்த்தவள் காளிதாஸின் கோபம் கண்டு இன்னும் குழம்பிப் போனாள்..

“என்ன ஆச்சு டி?” விசித்ரா தங்கையிடம் மீண்டும் கேட்டாள்

அவளோ தன் அக்காவிற்கு எந்த பதிலும் சொல்லாமல் “உன்னை எல்லாம் அன்னைக்கே போலீஸ்ல கம்ப்ளைன்ட் பண்ணி இருக்கணும்.. போனால் போகுதுன்னு விட்டேன்ல நீ இதுக்கு மேலயும் பண்ணுவ பொறுக்கி” என்றவள் தனது போனை எடுத்த போலீசுக்கு அழைக்க முயன்றாள்..

“ஏங்க ஒரு நிமிஷம் அமைதியா இருங்க.. இவன் வேணும்ன்னே உங்க துப்பட்டாவை பிடிச்சு இழுக்கல.. உங்க துப்பட்டாவுல தீ பிடிச்சு இருந்தது.. அதை அணைக்கறதுக்காக தான் துப்பட்டாவை பிடிச்சு இழுத்தான்.. அது தெரியாமல் நீங்க என்னமோ தேவை இல்லாம போலீஸுக்கு எல்லாம் போன் பண்றீங்க” காளிதாஸின் நண்பன் பரணி நடந்ததை கூறினான்..

போன் திரையை தட்டிக் கொண்டிருந்த மீராவின் விரல்கள் அப்படியே அந்தரத்தில் நிற்க நிமிர்ந்து காளிதாஸைபார்த்தாள்.

“இங்க பாரு மா அடுப்புல தீ எரிஞ்சிட்டு இருக்கு.. நீ பக்கத்திலேயே நின்னு இருக்க அந்த தம்பி மட்டும் சரியான நேரத்துக்கு வந்து உன் துப்பட்டாவை பிடிச்சு இழுக்காமல் போய் இருந்தால் உன் துணி முழுக்க அந்த தீ பரவி இருக்கும்..‌ அந்த தம்பிக்கு நன்றி சொல்றத விட்டுட்டு இப்படி எல்லார் முன்னாடியும் அடிச்சிட்டியே” என்ற கூட்டத்தில் ஒரு‌‌ பெண்மணி கூறிட அவளின் வலது பக்கம் திரும்பி பார்த்தாள் மீரா 

அருகில் மக்கா சோளம் வேக வைக்கும் அடுப்பு இருந்தது.. சிலுசிலுவென வீசிய காற்றில் தீப்பொறி அங்கும் இங்கும் விசிறி கொண்டிருந்தது. அருகில் நின்று இருந்த தன் துப்பட்டா காற்றில் அசைந்து இருக்கும்.. அதனால் தான்‌ துப்பட்டாவில் தீ பற்றிய விட்டது என்பதை புரிந்து கொண்டவள் குற்ற உணர்வுடன் காளிதாஸை பார்த்தாள்..

அவனோ அவளை எரித்து விடுவது போல் பார்த்து விட்டு தன் கையை பிடித்துக் கொண்டு இருந்த நண்பர்களின் கைகளை உதறிவிட்டு அங்கிருந்து வேகமாக நகர்ந்து இருந்தான்

கீழே கிடந்த மீராவின் துப்பட்டாவை உதறி அவள் கழுத்தில் போட்டுவிட்ட விசித்ரா “குட்டி கொஞ்சம் பார்த்து பேசக் கூடாதா இத்தனை பேர் முன்னாடி அவரை‌ கை நீட்டி அடிச்சு இருக்க அவருக்கு எவ்வளவு அவமானமாக இருக்கும்.. சரி வா போகலாம்” என்று அவளை அழைத்துக் கொண்டு அங்கிருந்த நகரத்தாள்..

என்ன புரண்டு படுத்தும் இரவு உறக்கமே பிடிக்கவில்லை மீராவிற்கு.. ‘தேவையில்லாம கோவப்பட்டு விட்டோமே.. இன்னும் இரண்டு வார்த்தை பேசி கூட‌ இருக்கலாம் அடிச்சி இருக்க வேண்டாம்.. அக்கா சொன்ன மாதிரி அவனுக்கு ரொம்ப அவமானமாக தான்‌ இருந்திருக்கும்.. ஆனா அவன் பெரிய நல்லவன் மாதிரி என் மோதிரத்தை பிடுங்க அவர்கிட்ட கொடுத்துட்டு மறுபடியும் இவனே தானே வச்சு‌ இருந்தான்..‌’

‘இவனும்‌ அவ்வளவு நல்லவன் எல்லாம் இல்லை.. இருந்தாலும் ஏன் என் மனசு இந்த பாடு படுது.. ஹேய் உனக்கு என்ன ஆச்சு?’ காளிதாஸ் பற்றிய சிந்தனை ஒரு பக்கம் தன் மனம் அவனை நினைத்து இத்தனை வருத்தம் அடைவது ஏன் என்ற குழப்பம் மறுபக்கம் என இரண்டும் சேர்த்து அவளை பாடாய்படுத்தியது..

இத்தோடு கோவில் திருவிழா முடிந்து இரண்டு நாட்கள் கடந்து இருந்தது.. மீண்டும் அவனை கோவிலில் சந்தித்தால் ஒரு முறை மன்னிப்பு கேட்டு விடலாம் என்று மீராவும் கோவிலை பலமுறை வட்டம் அடித்து பார்த்து விட்டாள்..

ஆனால் காளிதாஸ் மட்டும் அவள் கண்களுக்காக அகப்படவே இல்லை.. வீடு எங்கே என்று தன் அக்காவிடம் போட்டு வாங்கி அவன் கண்களுக்கு சிக்குககறானா என்று அவன் வீடு இருக்கும் தெருவில் அப்படி‌ இப்படி நடந்தும் பார்த்து விட்டாள் ஆனால் அவன் அவள் கண்களுக்கு சிக்கவே இல்லை.. 

மிகவும் மென்மையான மனம் படைத்தவளுக்கு தன்னை காப்பாற்றிய ஒருவனை தவறாக புரிந்து கொண்டு அத்தனை கூட்டத்திற்கு நடுவே ஓங்கி அறைந்தது மனதை வெகுவாகவே பாதித்திருந்தது.. ஒரு முறை அவனிடம் மன்னிப்பு கேட்டுவிட்டால் அனைத்தும் மனம் அமைதியாகி விடும் என்று தான் அவனை இந்த அளவுக்கு தேடுகிறாள்.. ஆனால் அவனோ எங்கேயோ ஓடி ஒளிந்து கண்ணாமூச்சி ஆடி கொண்டு இருக்கிறான்.

அன்று மீரா சைக்கிளை தள்ளியபடி அந்தி பொழுதில் அந்த ஆலமரம் இருக்கும் வயல்வெளிகளில் நடந்த வந்து கொண்டிருந்தவள் கண்களில் நண்பர்களுடன் அமர்ந்திருந்த காளிதாஸ் பட்டான்..

சற்று தூரத்தில் அப்படியே நின்றவள் ‘நம்ம போய் சாரி கேட்கலாமா’ என்று யோசித்தாள்.

அவனின் நண்பர்களும் அங்கு இருப்பதில் சற்று தயக்கத்துடன் அங்கேயே நின்று இருந்தாள். 

ஐந்து நிமிடத்திற்கு மேலாக அங்கேயே நிற்பதை பார்த்த காளிதாஸ் அவளை கண்டும் காணாதது போல் போனில் எதையோ பார்த்து கொண்டு இருந்தான்

“நீ ஊரார் முன்னாடி தானே அவனை கை நீட்டி அடிச்ச இப்போ சாரி கேட்க மட்டும் யாருமே இருக்கக் கூடாதா உனக்கு” என்ற மனசாட்சி கேள்வி எழுப்பியது..

‘சரி நான் தான் தப்பு பண்ணிட்டேன்.

 யார் இருந்தா என்ன நான் சாரி கேட்டுட்டா‌‌ என் மனசு‌ கொஞ்சம் நிம்மதியா இருக்கும்’ என்று மூச்சை இழுத்து விட்டுக் கொண்டு காளிதாஸை நோக்கி நடந்தாள்..

“என்ன மேடம் கோவில்ல அடிச்சது பத்தாதுன்னு இங்கேயே அடிக்க வந்துட்டீங்களா?” காளிதாசன் நண்பன் பரணி கிண்டலாக கேட்டான்..

‘இல்லை’ என தலையை அசைத்தவள் காளிதாஸையே பார்த்திருக்க “டேய் அந்த பொண்ணு உன் கிட்ட தான் ஏதோ பேச வந்திருக்கு” மற்றோரு‌ நண்பன் காளிதாஸ் தோளில் இடிக்க காளிதாஸ் அவனை ஒரு முறை முறைத்தான்..‌

“வாங்க டா அவங்க ஏதாவது தனியா பேசுவாங்க நம்ம எதுக்கு நடுவில் நந்தி மாதிரி” என்ற‌ பரணியை தொடர்ந்து அவனின் மற்றும் இரண்டு நண்பர்களும் அங்கிருந்து நகர்ந்து இருந்தனர்.

ஆலமரத்தை சுற்றி அமைக்கப்பட்டு இருந்த திண்டில் அமர்ந்திருந்த காளிதாசும் கீழே குதித்து இறங்கி அங்கிருந்து சென்றான்..

“இவன் கிட்ட தானே பேச வந்து இருக்கோம் இவன் பாட்டுக்கு போறான்..‌ திமிரு புடிச்சவன்” என்று முணுமுணுத்து கொண்டவள் அவன் பின்னாலேயே ஓடிவந்த மீரா “ஹலோ ஹலோ நில்லுங்க..‌ யோவ் நில்லுயா… டேய் திருடா நில்லு டா” அவளின் கடைசி வாக்கியத்தில் பல்லை கடித்தவன் சர்ரென்று திரும்பி “இன்னொரு தடவை வாடா போடான்னு சொன்ன கழுத்தை திருப்பிடுவேன்” என்று விரல் நீட்டி எச்சரித்தபடி அவளை நெருங்கி நின்றான் காளிதாஸ் 

அவனின் நெருக்கத்திலும் திடீர் கோபத்திலும் சற்று பயந்தவள் மெல்ல பின்னால் நகர்ந்து “நான் உன் கிட்ட பிரச்சனை பண்ண‌ வரல” 

“அப்புறம் எதுக்கு என் பின்னாடியே ஓடி வந்துட்டு இருக்கேன்.. உன்‌ முகத்தில் முழிக்கிறதுக்கே விருப்பம் இல்ல தயவு செஞ்சு போயிடு” எரிச்சலாக சொன்னவன் வண்டியில் ஏறி அமர்ந்தான்‌ காளிதாஸ்..

“ஏன் என் மோதிரத்தை திருடினதை நான் கண்டு பிடிச்சுட்டேன்னு ரொம்ப கில்டியா இருக்கா” மீரா நக்கலாக கேட்டாள்..

“இங்க பாரு அந்த அல்ப மோதிரத்தை திருடி தான் நான் வாழனும்னு எந்த அவசியமும் இல்லை.. தேவையில்லாம ஏதாவது உளறிட்டு இருந்த நல்லா இருக்காது” கண்கள் சிவக்க கூறினான் அவன்

“ஓகே கூல் ஆனால் என் முகத்திலேயே முழிக்க விருப்பம் இல்லன்னு சொல்றதெல்லாம் ஓவர்.. இதெல்லாம் நான் சொல்ல வேண்டியது ஒரு சின்ன பொண்ணோட மோதிரத்தை…’ அவள் முடிக்கும் முன் அவர் எரித்து விடுவது போல் பார்க்க…

“சரி சரி முறைக்காதீங்க..”

‘தப்பு பண்ணினவன் நெஞ்ச நிமித்திட்டு நிக்கிற காலம் இது நான் என்னத்த சொல்ல’ என்ற முணுமுணுத்துக் கொள்ள 

“ஏய் என்ன சொன்ன திரும்பவும் சொல்லு” என்ற அவள் முகத்தை பற்றி திருப்பினான் காளிதாஸ் 

அவன் கையை வேகமாக தட்டி விட்டதவள் “இங்க பாரு இந்த தொட்டு பேசுற வேலை எல்லாம் வேணாம்”‌ விரல் நீட்டி எச்சரித்து விட்டு பின்னால் நகர்ந்து நின்றாள்..

அவனோ கோபத்தில் பைக்கை உதைத்து ஸ்டார்ட் செய்ய அவள் வெடுக்கென்று சாவியை எடுத்து கொள்ள “ஏய்ய்”, உதட்டை கடித்து கோபத்துடன் இறங்கி நெருங்கி வந்தவனை கண்டு‌ பதறி நகர்ந்தவள் “வெயிட் வெயிட் நான் சொல்ல வந்ததை சொல்லிட்டு போயிடுறேன்”

“என்ன”, எரிச்சலாக கேட்டான் 

“அது என்னை காப்பாத்தினது தெரியாமல் உங்களை கைநீட்டி அடிச்சதுக்கு சாரி.. இதை சொல்ல தான் உங்க பின்னாடி வந்தேன்’ அவள் வந்த விஷயத்தை படபடவென சொல்லி முடித்திருந்தாள்..

“உன்‌ சாரி ஒன்னும் எனக்கு தேவை கிடையாது”

“வேற என்ன??.. ஓஹோ.. ஆனா அதுக்காக தங்கத்தட்டு எடுத்துக் கொடுத்து எல்லாம் சாரி கேட்க முடியாது.. தங்கம் என்ன விலை தெரியுமா” அவனிடம் மட்டும் அவள் வாய் அடங்குவதில்லை..

‘ஏய் ஒரு விஷயம் நடந்தால் அதுக்கு பின்னாடி என்னென்ன இருக்குன்னு யோசிக்க மாட்டியா? குருட்டாம் போக்குல நீயா ஒன்னை நினைச்சுகிட்டு பேசிட்டு இருப்பியா?? உனக்கெல்லாம் சொல்றதே வேஸ்ட்.. அப்படியே தீயில் கருகி சாவு‌டின்னு விட்டுருக்கணும்..‌ உன்னை காப்பாத்தினது என் தப்பு” என்றவன் பற்களை நரநரவென கடித்தவன் அங்கிருந்து தன் பைக்கின் மீது கோபத்தை காட்டினான்

“நானா எதையும் நினைக்கல என் கண்ணால பார்த்து தெளிவுபடுத்தின பிறகு தான் பேசுறேன்”.

“நல்லா தெளிவு.. இடியட்” என்றவன் எரிச்சலுடன் வண்டியை கிளப்பியிருந்தான்..

“இவன் கிட்ட சாரி கேட்க வந்தேன் பாத்தியா என் புத்திய செருப்பால அடிக்கணும்.. திமிரு புடிச்சவன்” என்று முகத்தைக் சுழித்து கொண்டவள் காலை தரையில் உதைத்து கொண்டு இருந்து வீட்டுக்கு கிளம்பி இருந்தாள்

எப்படி பேசினாலுமே இறுதியில் எப்படியோ இருவருக்குமே முட்டிக் கொள்கிறது..‌ இது எங்கு போய் முடியுமோ?

இந்த episode பிடிச்சிருந்தா எழுத்தாளரை உற்சாகப்படுத்துங்க!!
இப்போதே உற்சாகப்படுத்துங்கள்

இந்த படைப்பை மதிப்பிட விரும்புகிறீர்களா?

Click on a star to rate it!

No votes so far! Be the first to rate this post.

    No comments yet.