அவரு என் கிரஷ்..
அடுத்த நாள் ஆபீசுக்கு சென்றவள் சூர்யாவிடம் யுகன்யா முதல் நாள் நடந்தது அத்தனையும் கூறினாள்.
“என்னடி சொல்றா விடி குரூப்ஸ் எம்டிக்கு நீ பிஏ வா? நிஜமாதான் சொல்றியா?” என்று நம்ப முடியாமல் கேட்டாள் சூர்யா,
அட ஆமாண்டி இதுல பொய் சொல்றதுக்கு என்ன இருக்கு அதுவும் இல்லாம அன்னைக்கு என்ன நடந்துச்சு தெரியுமா என்று காலையில் சிக்னலில் நடந்த சம்பவத்தையும் தெரிவித்தாள்.
பின்னர் ஆபீஸில் நடந்ததையும் தெரிவிக்க , ஏன்டி உனக்கு ஏன் அந்த பாட்ட கேட்டா ஒரு மாதிரி ஃபீல் ஆகுதுன்னு சொல்ற, ஏன் அந்த பாட்டு கேட்கும் போது உன்னையும் மறந்து ஏதாவது ஆக்சிடென்ட் நடந்துச்சா என்று மிகவும் சீரியஸாக கேட்டாள்.
அவள் கேட்ட தோரணையில் யுகன்யாவிற்கு தான் சிரிப்பு வந்தது.
“அட நீ வேறடி அதெல்லாம் ஒன்னும் இல்ல, ஆனா எனக்கு எப்படின்னு சொல்ல தெரியலடி, அதுதான் ஈவினிங் ஒரு சைக்காலிஸ்ட் பாத்துட்டு வந்து இருக்கேன், பட் அவங்க வந்து அந்த ஃபீலிங்ஸ் வரும் பொழுது யார் கூட இருக்கிற, எந்த மாதிரி டைம் அது? எந்த சிச்சுவேஷன்ல வருதுன்னு கொஞ்சம் அனலைஸ் பண்ணி ஒன் மன்த் கழிச்சு வர சொல்லி இருக்காங்க” என்று கூறினாள்.
“அதான்டி எதனால அப்படி வருதுன்னு சொன்னாங்களா?” என்று கேட்டாள் அவள்,
” இதனால் வருதுன்னு சொல்லல, ஆனா நெக்ஸ்ட் டைம் கண்டிப்பா சொல்றேன்னு சொல்லி இருக்காங்க” என்றாள்.
” எனக்கு என்னவோ இது ஏதோ பெரிய இஷூவா இருக்குன்னு தோணுது” என்றாள் சூர்யா,
“அது என்னவோ? இப்போதைக்கு எதுவும் நான் ரொம்ப டீப்பா திங்க் பண்ண விரும்பலடி, எனக்கு இப்ப இருக்குற பெரிய கவலையே அந்த அரக்கன் பிஹேவியர் உள்ள அந்த மிஸ்டர் விடி கூட எப்படி இப்போ ஒர்க் பண்றதுதான் கஷ்டமா இருக்கு” என்றாள் அவள்.
“அடியே என்னடி இப்படி சொல்ற நானா இருந்தா அவர் பக்கத்தில் இருந்து பார்க்கிறதே பெரிய விஷயம், ஆளு சும்மா ஹேண்ட்ஸமா இருப்பார், அவர் வராத அமெரிக்கன்,யுகே மேகஸின்ஸ் இல்லை ஃபாரின் மார்க்கெட்ல பெரிய ஆள்,இப்போ தான் விடி குரூப்ஸ் பார்க்க வந்திருக்கார்
நீ பார்த்திருக்கிறேனா செம, ஏன் நம்ம டீஎல் அந்த தேங்கா மடையனே அவருக்கு ஃபேன் தெரியுமா?” என்று கூறினான்.
“ஓஹோ அப்படியா?” என்று அதிசயமாக கேட்டவள், “அப்போ அந்த தேங்காய் மடையனே போய் அவருக்கு பிஏவா இருக்க சொல்லு, அந்த ஆளு என்ன பாத்தாலே கத்துறாரு, இதுல ,எப்படியே அவர் கூட நான் ஒர்க் பண்றது?” என்று கேட்டாள்.
இதுக்கு ஏன் இவ்ளோ டீப்பா யோசிக்கிற, ஃபர்ஸ்ட் இம்ப்ரேஷன் இஸ் த பெஸ்ட் இம்ப்ரேஷன், பட் உங்க இம்ப்ரஷன் ரொம்ப பேட் இம்ப்ரஸ்னா மாறிட்டு இருக்கு, நீ வந்து அந்த தாட்ட மைண்ட்ல இருந்து டெலிட் பண்ண பாரு, ஏதாவது ஒரு நல்ல வொர்க் பண்ணி அதுல அவரு உன் மேல வச்சிருக்க அந்த பேர சேஞ்ச் பண்ணு, உனக்கு நான் சொல்லி தெரியணுமா என்ன? என்று சூர்யா கேட்க,
“எல்லாம் ஓகே தான் டி, ஆனா அந்த ஆளு என்னய பாத்தாலே அப்படியே அவன் முகம் போற போக்க பார்க்கணுமே, நல்ல இஞ்சி தின்ன குரங்கு மாதிரி” என்று சொல்லி முடிக்கிறதுக்குள் கோபமாக எழுந்து நின்றாள் சூர்யா.
“ஏய் என்னடி எதுக்கு இப்போ நீ இவ்ளோ டென்ஷனா இருக்குற?” என்று கேட்க, “இங்க பாருடி, நீ என்ன வேணா என்னை சொல்லு, ஆனா என் க்ரஷ்ஷ நீ இப்படி எல்லாம் பேசக்கூடாது, அவர் நின்னா ஒரு ஸ்டைலு, நடந்த ஒரு ஸ்டைல, எப்படி சொல்றது ஹாங் அந்த அழகிய தமிழ் மகன் படத்தில் விஜய்க்கு சொல்வாரு பாத்தியா, “அவன் நின்னா தேரு, நடந்தா திருவிழா, உட்கார்ந்தா உற்சவம் கண்ணசைச்சா கட்டளைன்னு அந்த மாதிரி” என்று சொல்ல,
” அம்மா தாயே, நீ வேற எதற்காவது இப்படி போர் கொடி தூக்கிருந்தா கூட மனசு ஆறும் ,போயும் போயும் அந்த ஆளுக்கு.. என்று யுகன்யா பேச, “ஏய் வாய் மூடி” என்று எச்சரித்தாள் சூர்யா.
“அவர் கோபப்பட்டா கூட அழகா தான் இருப்பாரு ,வேணா நீ கொஞ்சம் ரசித்து பார்க்க ஆரம்பிச்சின, உனக்கும் அவர புடிக்க ஆரம்பிக்கும்” என்று சொல்ல,
“வேணாம் தாயே வேணவே வேணாம், ஏற்கனவே மண்டைக்குள்ள ஆயிரம் பிரச்சனை ஓடுது, இதுல இதையும் வேற தூக்கி போட்டுக்கவா? உன் கிரஷ் உனக்கு கிரஷ்ஷாக இருக்கட்டும், நமக்கெல்லாம் செட் ஆகாதுபா” என்று இவர்கள் பேசிக்கொண்டு இருந்தனர்.
“ஏய் நீ அங்க வேலைக்கு சேர்ந்த பிறகு, அப்பப்ப நீ எனக்கு அவர பத்தி போட்டோ எடுத்து எடுத்து அனுப்புடி, ஐயோ அவரு பக்கத்துல இருந்து பாக்குற வாய்ப்பு கிடைக்காம உனக்கு கிடைச்சிருக்கு, அய்யோ” என்று அவள் பாட்டுக்கு சொல்ல,
“ஏய் நீ ஆள விடு” என்று அங்கிருந்து சென்றால் யுகன்யா.
இங்கே தீனதயாளன் தினகரிடம், “விஷ்வா கிட்டா அந்த பொண்ணு வந்து என இங்க ஜாயின் பண்ற வரைக்கும் அவனுக்கு பிஏ அப்படிங்கறத நீ சொல்லவே கூடாது, அது அவனே பார்த்து தெரிஞ்சுக்கட்டும்” என்றார்.
“அட அங்கிள் என்ன நீங்க? அவங்க ரெண்டு பேரும் ஒரு பாஸ் எம்ப்ளாயி அவ்வளவுதான், என்னமோ பொண்ணு மாப்பிள்ளையா சர்ப்ரைஸ் ஷாக் கொடுக்கிற மாதிரி இவ்ளோ பில்டப் பண்ணிக்கிட்டு இருக்கீங்க?” என்று கடுப்பாக வந்தது அவனுக்கு,
ஏன் இவ்வளவு கடுப்பாகிறது என்று அவனுக்கே தெரியவில்லை, அதுவும் விஷ்வா அவளை திட்டினாலே அவனுக்கு அவ்வளவு கோபம் வருகிறது.
“உனக்கு ஏன்டா இவ்வளவு கடுப்பாகுது?” என்று அவர் கேட்க,
“அதில்லை அங்கிள், அவன் எப்ப பாரு அவளை திட்டிட்டு தான் இருக்கிறான், எனக்கு அதை நினைச்சா தான் பயமா இருக்கு, உங்க மகனுடைய கேரக்டர் உங்களுக்கு தெரியாதா என்ன? என்று கேட்டான்.
“டேய் என்னடா ரொம்ப தான் பேசிகிட்டு இருக்க, அவன் என்ன மிருகமா ? இல்லை இந்த பொண்ணு லேசு பட்ட பொண்ணு கிடையாது, ஏதோ அன்னைக்கு அமைதியா இருந்து இருக்கா அவ்ளோ தான் என்றார்,
ஏன் இப்படி செய்கிறோம் என்று அவருக்கே தெரியவில்லை, “அட போங்க அங்கிள்” என்று தன் அதிருப்தியை வெளிப்படையாகவே காட்டினான் தினகர்.
அவனுக்கு அவளை விஷ்வாவினன் பிஏவாக போடுவதில் விருப்பமில்லை, அவ்வப்போது வந்து கவனித்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்தான்.
யுகன்யா தன் ஆபிசில் ஒரு மந்த் சேலரியை ப்ரீபெய்ட் ஆகவே முன்பாக செலுத்தி விட்டாள், எல்லாவற்றையும் சமர்ப்பித்து விட்டாள் நாளை விஷ்வாவின் ஆபீஸிற்க்கு செல்ல வேண்டும்,
அவளுக்கு அப்பா இல்லை, அப்பா ஒரு விபத்து இறந்து விட்டார் ,அம்மாவும் தங்கையும் மட்டும் தான் இருக்கிறார்கள், தங்கை படிப்பில் சுட்டி, காலேஜ் படித்துக் கொண்டு இருக்கிறாள் இளங்கலை கடைசிவருடம் படிக்கிறாள்,
காலையில் அவள் ஆபீசுக்கு கிளம்பும்பொழுது, அம்மா தான் பிள்ளைகள் இருவருக்கும் உணவுகளை தயார் செய்து எடுத்து வந்தார்,
” விஷ்வா சார், எப்படி இருந்தாரு? அவர நேர்ல பாக்குற சான்ஸ் கிடைச்சிருக்கு, அவர பத்தி எவ்வளவு நியூஸ் தெரியுமா? வாட் எ பர்சன் இஸ் என்றாள் தங்கை யுவதி,
அவனை ஒரேடியாக புகழ்வதை பார்த்து கடுப்பாக இருந்தது யுகன்யாவிற்கு.
“ஏய் சாப்பிட்டு காலேஜ் கிளம்புற வழிய பாரு, விட்டா விஷ்வாதிரன் புராணம் பாடிட்டு இருப்ப” என்றாள்,
” அவர் உனக்கு பாஸா வரப்போறாரு, நீ என்ன அவர பத்தி இப்படி பேசுற?” என்று கேட்டாள்.
“எனக்கு ஏனோ அந்த பாஸ், அவரு கீழ ஒர்க் பண்றதுக்கு இஷ்டம் இல்ல” என்று சொன்னதும், அம்மா பிள்ளைகள் அடித்துக் கொண்டிருக்கும் லூட்டியை பார்த்து அமைதியாக அவர்களுக்கு பரிமாறிக் கொண்டிருந்தவள்,
” ஏன்டாம்மா எதுக்கு உனக்கு அப்படி தோணுது, ஏதாவது அன் கம்ஃப்ர்டபிலா இருந்தா அந்த வேலைக்கு நீ போகாதடா, வேற ஏதாவது பாத்துக்கலாம்” என்று சொன்னார்.
“ஐயோ அம்மா உங்க பொண்ணு தான் ரொம்ப ஓவரா சீன் போடுறனா அவளுக்கு மேல இருக்கீங்க, அவரு எவ்வளவு பெரிய செலிபிரிட்டி தெரியுமா? அமெரிக்கன் மேக்சன்ஸ் எல்லாமே அவரை பத்தின நியூஸ் தான் மோஸ்ட்லி ட்ரெண்டிங்கில் இருக்கும், அவர் நம்ம நாட்டுக்கு வந்து இருக்கிறது பெரிய விஷயம், அதுவும் அவர் இந்தியன்னு தெரிஞ்ச பிறகு ஐயோ கடவுளே அவர்தான் என் கிரஷ் போங்க” என்று சொல்லவும் நீயுமா என்பதைப் போல் கடுப்பாக இருந்தது யுகன்யாவிற்கு,
“அவர் யாரா வேணாலும் இருக்கட்டும், என் பொண்ணுக்கு பிடிக்கலனா வேலை செய்ய வேண்டாம், அவளுக்கு சாதாரணமா ஒருத்தர் மேல் வெறுப்பு பிடிக்கல அப்படின்னு சொல்ல மாட்டா, அப்படி அவளே சொல்றானா, அந்த ஆள் கிட்ட ஏதோ பிரச்சனை இருக்குன்னு அர்த்தம்” என்று சொல்ல..
” தெய்வமே உங்கள மாதிரி ஒரு தாய் கிடைக்க நாங்கள் ரொம்ப புண்ணியம் பண்ணி வச்சிருக்கணும், பசங்க வேலைக்கு போக மாட்டேன் என்று சொன்னா அடி செருப்பால சம்பாரிச்சிட்டு சாப்பாட்டுல கையை வைனூ சொல்ற இந்த காலத்துல, உங்க பொண்ணு வாக்கு தான் கட்டளை, கட்டளையே சாசனம் ஏத்துக்கிறீங்க பாத்தீங்களா? இப்படி ஒரு தாய் யாருக்கு கிடைக்கும்,
பொண்ணுங்கனா அப்பாக்கு ஃபேவரா தான் இருப்பாங்க, அப்பாவும் பொண்ணுங்களுக்கு ஃபேவரா தான் இருப்பார் என்று பார்த்தேன், ஆனா இந்த பாச பிணைப்ப பார்க்க முடியாம தான் எங்களுக்கு பாய் சொல்லிட்டாரு போல் என்ற அப்பாரு” என்று அவள் சீரியஸாக பேச பட்டென்று ஒன்று முதுகில் வைத்தார் அம்மா.
“ஏய் வாலு வாயடிக்கலான உனக்கு தூக்கம் வராது ஒழுங்கா போய் காலேஜ் படிக்கிற வழிய பாரு “என்று அவர் கூறவும்,
“அட என்னமா, நான் ஏதாவது சொல்லனும்னா மட்டும் வரிஞ்சு கட்டிட்டு வர, உன் பொண்ணு சொன்னா கேக்க மாட்டேங்குற, இதெல்லாம் ஒரு பாராபட்சம் எங்களுக்குள்ளே பார்ஷியாலிட்டி பாக்குறியா சந்திரமதி என்றாள் யுவதி..
“இவளுக்கு வர வர வாய்க்கொழுப்பு ஜாஸ்தியா தாண்டி போச்சு, வாயை உடைத்து எண்ணெய் சட்டியில் வதக்கினால் சரியா போயிடும்” அம்மா கூறவும்,
“ஐயோ ஆள விடுங்க”, என்றவள், என்ன நீங்க ஒரு பொறுப்பே இல்லாம இருக்கீங்க, எனக்கு காலேஜ் டைம் ஆகுது, என்ன போய் இப்படி நிக்க வச்சு விளையாடிட்டு இருக்கீங்க?” என்று கூறவும்,
அடிப்பாவி என்பதை போல் அம்மா பார்க்க, யுகன்யாவிற்கு தங்கை செய்யும் லூட்டிகளை பார்த்து சிரிப்புதான் வந்தது, அம்மா கையை முகவாயில் வைத்துக்கொண்டு பார்க்க, “பாத்தியா எப்படி பிளேட்டை மாத்துறா” என்று சொல்ல,
“பை மதி, பாய் யுகா” என்று தாய்க்கும் தமக்கைக்கும் கன்னத்தில் முத்தமிட்டு சிட்டாய் பறந்து விட்டாள் அவள்.
இவர் குழந்தையாய் இருக்கும் பொழுது இவர்களின் தந்தை மூர்த்தி ஒரு விபத்தில் இருந்து விட்டார்,
தந்தை பாசத்தை பற்றி அறியாதவள் அதனால், அவர் இறப்பு அவளை அந்த அளவிற்கு பாதிக்கவில்லை, அதனால் அவர் இறப்பையும் சகஜமாகவே பேசி விடுவாள்
அவளுக்கு அந்த இழப்பு தெரியாத அளவிற்கு யுகன்யாவும் மதியும் பார்த்துக் கொள்வார்கள் ,அதனால் அப்பா இல்லை என்ற குறை அவள் அறியவில்லை, இருந்தாலும் மனதில் ஓரம் ஒரு சிறு வலி இருந்தது.
“சரிமா நானும் கிளம்புறேன் ஃபர்ஸ்ட் நாளே ஆபீஸ்க்கு லேட்டா போக முடியாது இல்லையா?” என்று அவளும் திரும்பினாள்.
” சரிடா பார்த்து போயிட்டு வா எதுக்குடா வேலை பிடிக்கலன்னு சொன்னே” என்று கேட்க,
” சும்மாமா, ரொம்ப சீரியஸா எல்லாம் யோசிக்காதீங்க, அவர ஆளாளுக்கு கிரிஷ் கிரஷ்னு சொல்லிட்டு இருக்காங்களா, அது கேட்க கேட்க கடுப்பாச்சு, அதான் வெறுப்பேத்த அப்படி சொன்னேன்” என்று தாய் காக சமாதானமாக கூறினார்.
அப்படியா வேற எதுவும் பிரச்சனை இல்லையே என்று கேட்க, அதெல்லாம் எதுவும் இல்லம்மா என்று அம்மாவிடம் விடை பெற்று ஆபிஸிற்க்கு கிளம்பினாள்.
விஷ்வா தன் சுழற் நாற்காலியில் அமர்ந்திருந்து, தன் லேப்டாப்பில் அன்று செட்யூல் டீடைல்ஸ் எல்லாம் பார்த்துக் கொண்டிருந்தான்,
“என்ன இன்னைக்கு என்னுடைய பி.ஏ வருவாங்கனு சொன்னிங்க?” என்று தற்சமயம் அவனுடன் இருக்கும் மிதுனிடம் கேட்டான்.
“வந்துட்டாங்க சார்” என்றான் அவன், “வந்துட்டாங்களா? வந்து என்னை இன்னும் மீட் பண்ணல கூப்பிடுங்க அவங்கள என்று சொன்னான்.
” இல்ல சார் பாஸ் கூப்பிட்டு இருந்தாரு, அதுக்காக போயிருந்தாங்க” என்றான்.
“அப்பாவா?” என்று கேட்கவும், “இல்லை சார், தினகர் சார் தான்” என்று சொல்ல,
” ஓ.. சரி அவங்க வந்ததும் என்னை வந்து பார்க்க சொல்லுங்க” என்றான்.
சிறிது நேரத்தில், “எஸ்.கியூஸ்மீ” என்று அழைப்பு வர, லேப்டாப்பில் சடசட சடவென டைப் செய்து கொண்டிருந்தவன், “எஸ் கம்மிங்” என்று சொல்லவும் உள்ளே வந்து நின்றாள் யுகன்யா,
” சார் கூப்டீங்களா? மிதுன் சொன்னாரு ?என்று சொல்லவும்,
” யா ஆமா” என்று அவன் பேசிக்கொண்டே நிமிர அதிர்ந்து போய் விட்டான். நீயா?
தொடரும்..
No comments yet.