Episode 5

GS Novels | 12 Jan 2026 | Share

விஷ்வாவின் செக்ரட்டரி

அந்த மனநல மருத்துவமனையில் தனக்கு திடீர் திடீர் என்று ஏற்படும் உணர்வுகளை டாக்டரிடம் தெரிவித்தாள் யுகன்யா.

டாக்டர் எனக்கு சமீப காலமா ஒரு பர்டிகுலர் சாங் மட்டும்,  அது கேட்கும் போதெல்லாம் எனக்கு ஏதோ, ஐ ஃபில் சம்திங், ஆனா அந்த மூவி இப்பதான் வந்தது, அந்த மூவியை நான் பார்த்தது கூட இல்ல,  எனக்கு இப்படி ஃபீல் ஆகா ஆரம்பிச்சதுல இருந்து ஒரே ஒருமுறைதான் அந்த மூவியை நான் பார்த்தேன்,

அதுக்கப்புறம் எனக்கு தெரியல, அதே மாதிரி சில பிளேசஸஸ் ஏற்கனவே பார்த்த மாதிரி இருக்கு, அப்புறம் சடனா,   இன்னைக்கு தான், அதுவும் இதுக்கு முன்னாடி அந்த மாதிரி ஒரு ஃபீலிங், ..யப்பா  ஒரு மாதிரி மனசு அழுத்துற மாதிரி அந்த வலிய எனக்கு எக்ஸ்பிளைன் பண்ண தெரியல, நான் இன்னைக்கு என்ன பண்ணேனா?” என்று அவள் சிக்னலில் நடந்ததை கூறினாள்.

“தென் அப்புறம் அங்க இன்டர்வியூக்கு போகும்போது சடனா எனக்கு அதே மாதிரி ஒரு ஃபீல் வந்துச்சு, ஆனா நான் இன்டர்வியூல இருக்கிறேன் அப்படின்ற ஒரு கான்ஷியஸ் ல சில மூச்சுப் பயிற்சிகள் அந்த மாதிரி பண்ணி, அதை நான் ஸ்டாப் பண்ணிட்டேன், ஸ்டாப் பண்ணிட்டேன்னு சொல்ல முடியாது, ஒரு மாதிரி என்னுடைய கண்ட்ரோல்ல அந்த பீலிங்ஸ் கொண்டு வந்துட்டேன்,

ஆனா இதுக்கு முன்னாடி இப்படி எல்லாம் நடந்ததே இல்லையே, சடனா இப்படி நடக்க வேண்டிய காரணம் என்னன்னு எனக்கு தெரியல டாக்டர்” என்றாள் அவள். 

டாக்டர் அதற்கு எதுவும் சொல்லவில்லை, ஒரு கணம் ஆழ யோசித்தார், “இப்பவும் உன்னால வேற ஏதாவது  ரெகக்னைஸ் பண்ண முடியுதா இந்த ப்ளேஸ் போன மாதிரி இருக்கு, அந்த மாதிரி?” என்று கேட்டார் அவர், 

“அதுக்கப்புறம் எனக்கு அப்படி ஃபீல் ஆகல, இன்னும் வேற எந்த பிளேஸையும் அந்த மாதிரி என்னால கனெக்ட் பண்ண முடியல” என்றாள்.

“ஓகே அந்த சாங் எப்ப நீங்க ஃபர்ஸ்ட் டைம் கேட்டீங்க” என்றார், அவள், “அது ஆக்சுவலா காஷ்மீருக்கு போனப்ப தான் கேட்டேன்” என்றாள்,

“காஷ்மீர்ல இந்த சாங் இருக்கா என்ன?” என்று  டாக்டர் கேட்க,

” இல்ல என் ஃபிரண்டு ப்ளூடூத்ல கனெக்ட் பண்ணி கேட்டுட்டு இருந்தா, எனக்கு.. நான்.. அந்த சிச்சுவேஷன் எனக்கு எப்படி எக்ஸ்ப்ளைன் பண்றதுன்னு தெரியல டாக்டர்..” என்று அவள் தலையைப் பிடித்துக் கொண்டு அமர்ந்தாள்.

“ஓகே ஓகே ஜஸ்ட் ரிலாக்ஸ்..” என்று அவளுக்கு குடிக்க கொஞ்சம் தண்ணீர் எடுத்து வந்து கொடுத்த டாக்டர், “நிதானமா யோசிச்சு சொல்லுங்க, ஒன்னும் அவசரம் இல்ல, உங்களுக்கு பெருசா வியாதி எல்லாம் எதுவும் கிடையாது, இது சம்திங் உங்க மனதில் இருக்கிற நினைவுகள் தான்” என்று டாக்டர் சொன்னதும் சட்டென நிமிர்ந்து பார்த்தாள். 

“என்ன டாக்டர் சொல்றீங்க? மனசுல இருக்கிற நினைவுகளா? இப்போ அது  நினைவுகளாவே இருந்தாலும், நம்ம ஆல்ரெடி அந்த சிச்சுவேஷன்ல இருந்து கடந்து வந்த ஒரு சூழ்நிலை  மட்டும்தானே  நினைவுகளாக சுமக்க முடியும், ஆனா இது அப்படி, அந்த இடமெல்லாம் நான் போனது இல்லையே..

காஷ்மீருக்கு எனக்கு நினைவு தெரிஞ்ச நான் இப்பதான் ஃபர்ஸ்ட் டைம் போறேன், ஆனா அந்த சோன்மார்க் ப்ளேஸ், சினார் ஃபாரஸ்ட் இதெல்லாம் எனக்கு ஆல்ரெடி ரொம்ப ஃபேமிலியரான ப்ளேஸ் மாதிரி இருக்கு, அந்த இடத்தில் எல்லாம் முன்னால ரொம்பவே பழக்கப்பட்ட இடம் போல தோணுது, அடிக்கடி போயிட்டு வந்த மாதிரி, என் ஃபிரண்ட்ஸ்க்கு எல்லாம் நானே வழி சொல்லிட்டு போனேன், அதுவும் இல்லாமல்..” என்று ஏதோ யோசித்தாள். 

“சொல்லுங்க மிஸ் யுகன்யா என்ன விஷயம்” என்று கேட்டார் அவர், நான் ஏதோ ஒன்று தேடிட்டு இருந்தேன், ஆனா அது என்ன தேடிட்டு இருந்தேன்னு எனக்கே தெரியல, பட் எனக்கு ரொம்பவே முக்கியமான ஒன்னு அங்கு இருக்கிறதா என் மனசு சொல்லுச்சு, அது எப்படி எனக்கு சொல்ல தெரியல” என்றாள் அவள்,

“இன்னைக்கே எல்லாத்தையும் போட்டு நீங்க கன்பூஸ் பண்ணிக்காதீங்க, ஜஸ்ட் உங்களுக்கு வரும் ஃபீலிங்ஸ் நீங்க இப்போதைக்கு அனுபவிக்கணும், யூ ஹேவ் டு எண்டியூர் திஸ் பைன், ஆர் ஹேப்பினஸ், அது எந்த மாதிரி ஒரு சிச்சுவேஷனா இருந்தாலும் அதை அக்சப்ட் பண்ணிக்க பாருங்க, நான் இப்போ சொன்னா நம்புற மாதிரி இருக்கலாம், நம்பாத மாதிரி இருக்கலாம் ஆனா நீங்க போக போக கொஞ்சம் கொஞ்சமா புரிஞ்சிப்பீங்க” என்றார் டாக்டர். 

“என்ன டாக்டர் சொல்றீங்க நம்புற மாதிரியா, நம்பாத மாதிரியுமா எனக்கு எதுவும் புரியலையே” என்றாள் அவள் 

“தட்ஸ் வாட் ஐ செட்,  நான் அதைத்தான் சொல்றேன் நீங்க எல்லாத்தையும் ஒரே நாள்ல தெரிஞ்சுக்கணும் அப்படின்னா அது உங்களை ரொம்ப ஸ்ட்ரெஸ்ல தள்ளும், சோ ஜஸ்ட் ஸ்லீவ் இட், அன்ட் , மூவ் ஆன்,

நெக்ஸ்ட் ஒன், இது உங்களுக்கு ஸ்டார்டிங் தான், இனிமேல அதனுடைய தாக்கம் இன்னும் கொஞ்சம் அதிகமாக இருக்கலாம், பட் உங்களுக்கு அந்த மாதிரி பீலிங்ஸ் எந்த டைம்ல வருதோ அந்த டைம்ல எல்லாம் நீங்க யாரை சந்திக்கிறீங்க, இதெல்லாம் கொஞ்சம் மட்டும் நோட் பண்ணிக்கோங்க , 

உங்களுக்கு நான் ஒரு ஒன் மந்த் டைம் தரேன், எப்பல்லாம் இந்த பீலிங்ஸ்  வருது, எங்க வருது, அந்த டைம்ல யாரு உங்க கூட இருக்கிறா, இத மட்டும் கொஞ்சம் பார்த்துட்டு எனக்கு கன்வே பண்ணுங்க, அதுவரைக்கும் உங்களுக்கு இந்த மாதிரி தாட்ஸ் எல்லாம் வந்தா ஜஸ்ட் அக்செப்ட் இட் அண்ட் மூவ் ஆன் “என்றார் டாக்டர். 

“இதுக்கு வேற சொல்யூஷனே இல்லையா டாக்டர்?” என்று கேட்க, டாக்டர் லேசாக சிரித்தார்.

“எந்த பிரச்சினைக்குமே சொல்யூஷன் இருக்கு, ஆனா நீங்க எதிர்பார்க்கிற மாதிரி சொலுஷன் இருக்காது, அதுக்காக தான் சொல்றேன்,  நீங்க நெக்ஸ்ட் டைம் வரும்போது உங்களுக்கு என்ன பிரச்சனை நான் கண்டிப்பா சொல்றேன், அதனால அதை பத்தி ரொம்ப டீப்பா திங்க் பண்ணாம அப்படியே விடுங்க” என்றார்.

அதற்கு மேல் அவளும் அதைப்பற்றி பெரிதாக எதையும் கேட்கவில்லை, சரி என்று அங்கிருந்து சென்றாள்,

தன் தோழி சூர்யாவிடமும் விஷயத்தை தெரிவித்துவிட்டு, “இன்னைக்கு நான் வீட்டுக்கு போயிடுறேன், நாளையகலிருந்து ஆபீஸ் வந்து, இன்னும் பேலன்ஸ்  த்ரீ டேஸ் தான் இருக்கு, அதையும் முடிச்சுட்டு மண்டே நியூ ஜாப் ஜாயின் பண்ணிடுறேன் என்றாள். 

“என்னடி சொல்ற த்ரீ டேஸ் தான் வருவியா? என்ன ஜாப்? நீ சொன்ன மாதிரி பேஷன் டிசைனிங் ஃபீல்டா?” என்று கேட்க, 

“அதுவும் தான் ஆனா அதைவிட முக்கியமான ஒரு வேலையை கொடுத்திருக்காங்க என்றாள்.

“என்ன வேளை?” என்று கேட்டாள் சூர்யா, அதை நாளைக்கு வந்து சொல்றேன் டி என்று சோகமாக சொன்னாள் அவள்,

” ஏண்டி அவ்வளவு அலுத்துகிற?” என்று சூர்யா கேட்க, “அதான் சொல்றேன் இல்ல, நாளைக்கு சொல்றேன்னு, எனக்கு கொஞ்சம் டயர்டா இருக்கு, நான் இப்போ கொஞ்சம் தூங்கனும், அப்புறமா உனக்கு கால் பண்றேன், இல்லனா நாளைக்கு ஆபீஸ்ல பேசுவோம்” என்று காலை கட் செய்துவிட்டாள்.

” அடியே.. இவளுக்கு என்ன நடந்தது என்று சொல்லாமல் எப்படி பண்றா”.. என்று  அவளும் போனை எடுத்து வைத்துவிட்டு சென்று விட்டாள். 

அங்கிருந்து வந்த விஷ்வா தீரன் நேராக வந்தது தன்னுடைய வீட்டிற்கு தான், அவன் ஏன் இவ்வளவு கோபமாக இருக்கிறான் என்று அவருடைய அம்மா வதனி கேட்டார்.

” விஷ்வா ஏம்பா ஆபீஸ்க்கு போகலையா இப்பதான் அப்பா அங்க வந்தாரு அப்பாவ மீட் பண்ணியா?” என்று கேட்டார்.

“ஹ்ம்ம் பார்த்தேன்மா” என்றவன், அவன் பாட்டுக்கு மேலே சென்றான்,

” டேய் என்னாச்சு? ஏன் ஒரு மாதிரி இருக்க? இங்க வா?” என்று அழைத்தார். 

“ஆமா ப்ளீஸ் எனக்கு கொஞ்சம் டிஸ்டர்ப்டா இருக்கு, நான் கொஞ்ச நேரம் ரூமுக்கு போறேன், அதுக்கப்புறம் நான் வந்து பேசுறேன்” என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டான்.

“என்ன ஆச்சு இவனுக்கு?”

அவன் மூட் அவுட் ஆனால் இப்படித்தான், அதை யாரிடமும் ஷேர் செய்ய மாட்டான், சிறிது நேரம் தனியாக இருந்துவிட்டு, அவனே வந்து பேசுவான் அம்மா எவ்வளவோ அவனின் அந்த சூழ்நிலை மாற்ற முயற்சிப்பார், ஆனால் அவன் ஒரு வட்டத்துக்குள்  பழகி விட்டான். 

தன் அறைக்கு வந்த விஷ்வா தீரன் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தான். ஏனோ யுகன்யாவை நினைக்க நினைக்க அவனுக்கு கோவம் வந்தது,

நடுரோட்டில் நின்னுகிட்டு அழுதுட்டு இருக்கா, இவள நான் போய் விசாரிக்கணும் வேற, ஏமா அழுற எதுக்கு அழுறன்னு இப்படி எல்லாரும் விசாரிச்சுட்டு இருந்தா, அவங்க வேலையை யார் பார்க்கிறது, இதே மாதிரி நாளைக்கு ஆபீஸ்ல அவளை சேர்த்து இப்படி முக்கியமான மீட்டிங் டைம்க்கு பிரசன்டேஷன் டைம்லயோ இப்படி அழுதுட்டு நின்னுட்டு இருந்தா என்ன ஆகிறது? 

எத்தனை முறை தான் அப்பாக்கு சொல்றது, ஃபீலிங்ஸ்க்கும் வேலைக்கும் சம்பந்தம் இல்லைன்னு, வேலைன்னு வரும் பொழுது வேலைதான் ஃபீலிங்ஸ் எல்லாம் வீட்டோடவே இருக்கணும், அப்படி ஃபீலிங்ஸ் தான் முக்கியம்னா வீட்டிலேயே இருந்துக்கலாம்,

ஆபீஸ்க்கு வெளியில் ரோட்ல எதுக்கு வரணும், தனக்கும் பிரச்சனை, தன்னை சுத்தி இருக்கிறவங்களுக்கும் பிரச்சனை, 

இந்த தினகருக்கு, இடியட் நான் வேணாம்னா அவன் இப்பதான் அப்பாயிண்ட் பண்ணுவானாம், இவன் இந்த மாதிரி பண்ணதில்லையே, அப்படியே அந்த பொண்ணுக்கு அப்படி சப்போர்ட் பண்ணிட்டு வரான், அவனுக்கு இருக்கு நாளைக்கு, எப்படியும் அப்பாவும் அவனும் சேர்ந்து அந்த பொண்ணு அப்பாயிண்ட் பண்ணி தான் இருப்பாங்க நினைக்கிறேன்,

நம்ம கண்ணுல படாம இருந்தா சரி, டிசைனிங் டிபார்ட்மெண்ட் தான இவ, எல்லா எம்ப்ளாயோட இவ்வளவு எம்ப்ளாய், தப்பி தவறி கூட இவள நம்ம கிட்ட நெருங்க விடக்கூடாது, அவள பாத்தாலே அப்படியே இரிட்டேட் ஆகுது, சரியான இரிடேட்டிங் இடியட்” என்று நினைத்தான்,

அவ லெப்ட் வந்தா நான் ரைட்ல போகணும், அவ நேரா வந்தா நான் சைட்ல போயிடனும், இந்த மாதிரி இர் ரெஸ்பான்சிபில் பிஹேவியர் பர்சன பாத்தாலே எனக்கு டென்ஷன் ஆகுது ,

அதுவும் இவ காலையில் பண்ண வேலைக்கு என்னால் அவளை அக்செப்ட் பண்ணவே முடியாது, அப்படியே டிசைனிங் டிபார்ட்மெண்ட்ல இருந்தா கூட அவளுடைய ரிப்போர்ட்டிங் ஆத்தாரிட்டிய மாத்தி விட வேண்டியது தான், தப்பி தவறி கூட என் கண்ணில் படக்கூடாது, 

அப்படியே அவளைத் திட்டினால் இந்த தினகருக்கு என்னவாம் என்று கோபமாக நினைத்தான். 

பின்னர் தன்னைத்தானே ஆசுவாசப்படுத்திக் கொண்டவன், சிறு ஆழ பெருமூச்சுகளை எடுத்து தன்னை சமன் செய்து கொண்டு, 

ஓகே  ரொம்ப ரொம்ப இதெல்லாம் மைண்டுக்கு எடுத்துட்டு போக வேணாம், அவ யாரோ, நான் யாரோ தட்சிட் அவளை என் கண்ணுல படாத மாதிரி பாத்துக்கணும், அவ்வளவுதான், அதுக்கு மேல  விஷ்வா ரொம்ப எதையும் திங்க் பண்ணாத” என்று தனக்குத்தானே அறிவித்துக் கொண்டு, தன் அம்மாவை பார்க்க சென்றான்.

  நீ அவளை பார்க்கவே கூடாதுனு நினைக்கிறேன், ஆனா அவ தான் உன் பி.ஏ னு தெரிஞ்சா என்ன ஆவ? என்ன பண்றேன்னு பாப்போம் ,ஆனா நீ பாவமா அவ பாவமானு போக போக தெரியும். 

தொடரும்..

    No comments yet.