அல்லி 42
ஏற்காடு
“மேடம்...” என அவசரமாக அழைத்தபடியே இனியாவிடம் வந்தார் வாசுதேவன்.
“சொல்லுங்க சார் என்னாச்சு..? எதுக்கு இப்படி பதட்டமா வர்றீங்க..?”
“பூங்குன்றன் சார்கிட்ட நானே டைரக்டா பேசிக்கலாம்னு, அத்திப்பட்டு போலீஸ் ஸ்டேஷன் நம்பரை எங்க ஸ்டேஷன்ல இருந்து வாங்கி கால் பண்ணி பாத்தேன் மேடம்…”
“ம்ம்…”
“ஆனா அவங்க என்ன சொல்றாங்கனா அத்திப்பட்டு இன்ஸ்பெக்டரா வேலை பாத்த பூங்குன்றன் சார் இறந்துட்டதா சொல்றாங்க… அதுவும் இப்போ கொஞ்ச நாள் முன்னாடி தான் இறந்திருக்காரு…”
“மை காட்… கோர்ஸ் ஆஃப் டெத் என்னனு கேட்டீங்களா..?”
“ஆமா மேடம்… ஏதோ அமானுஷ்யம் அது இதுன்னு சொல்லிட்டு இருக்காங்க… எனக்கு நம்பறதா வேணாமான்னு தெரியல… அவரு மட்டும் இல்ல, இன்னும் அஞ்சு போலீஸ் ஆஃபீஸர்ஸ் கூட அப்படி இறந்திருக்காங்களாம்… இன்னொரு பொண்ணும் கூட அப்படி இறந்து போயிருக்கு… அதுல இருந்து தான் இதெல்லாம் ஆரம்பிச்சதா சொல்றாங்க… ஒரு வீட்டுல இருந்து கிடைச்ச சிசிடிவி பூட்டேஜ் கூட அப்படி ஒரு உருவத்தை பதிவு பண்ணி காட்டி இருக்கு…” என தொடங்கி அவர்கள் கூறியிருந்த தகவல் மொத்தத்தையும் இனியாவிடம் தந்தார் வாசுதேவன்.
“என்ன சார் சொல்றீங்க, அதுக்கு அவங்க சைட்ல இருந்து இப்போ என்ன நடவடிக்கை எடுத்திருக்காங்கனு கேட்டீங்களா..?”
“ஆமா மேடம்… யாரோ அந்த ஊரை சேர்ந்த ரெண்டு பூசாரிங்க பூஜை பண்ணறதா சொல்லி இருக்காங்களாம்… அத்திப்பட்டு மொத்தமும் கேமரா ஃபிக்ஸ் பண்ணி இரவு பகலா வாட்ச் பண்ணிட்டு இருக்கதா சொன்னாங்க… மாலை ஆறு மணிக்கு மேல யாரும் வெளிய வரக் கூடாதுன்னு தடை உத்தரவும் போட்டிருக்காங்களாம்… அவங்களோட சப்இன்ஸ்பெக்டர கூட ஏதோ கேஸ் விசயமா ஆஜராக சொல்லி இருக்காங்க போல… அப்புறம் அத்திப்பட்டுக்குள்ள ஸ்ட்ரேஞ்சா என்ன விசயங்கள் நடந்திருக்குன்னு விசாரிச்சுட்டு இருக்கதாவும் சொன்னாங்க…”
“ஓஓ… ஆனா எந்த மீடியாவிலயும் இப்படி ஒரு நியூஸ நம்ம பாக்கவே இல்லையே..?”
“ஆமா மேடம்… ஏன்னா சரியான காரணம் தெரியாம இந்த விசயத்தை வெளிய கசிய விட வேண்டாம்னு மாஜிஸ்திரேட் சொல்லி இருந்தாங்களாம்… அதோட அது ரொம்ப சின்ன கிராமம் எங்கிறதால நியூஸ் அவ்ளோ ஈஸியா பரவலன்னு சொல்லறாங்க…”
“ஓஓ…”
“ம்ம்… அப்புறம் பூங்குன்றன் சாருக்கு இன்னைக்கு காலையில தான் குழந்தை கிடைச்சிருக்காம் மேடம்… அவங்க வீட்டுக்காரங்களுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கும்ல்ல..?”
“ஆமா சார்… நம்ம என்ன தான் செஞ்சாலும் நம்மளுக்குன்னு விதிக்கப்பட்டது நடந்தே தீரும்… இது தான் யதார்த்தம்…”
“ஹூம்… பை த வே, அவங்ககிட்ட பூங்குன்றன் சாரோட அட்ரஸ் தான் இருக்காம்… அவங்க அப்பா வீடும் கொஞ்ச தூரத்துல தான் இருக்கற மாதிரி சொல்லி, பூங்குன்றன் சாரோட அட்ரஸ் அன்ட் அவங்க வீட்டு ஃபோன் நம்பரை குடுத்தாங்க மேடம்…”
“சரி சார்… பூங்குன்றன் சார் வீட்டுக்கு கால் பண்ணி அவங்க அப்பாவோட அட்ரஸ் அன்ட் ஃபோன் நம்பர் எடுத்துக்கங்க… ஒரு இன்பர்மேஷனுக்காக அவங்களை நேர்ல பாக்க வரோம்னு தகவலும் சொல்லிடுங்க…”
“சரிங்க மேடம்…” என்று விட்டு கைப்பேசியை எடுத்த வண்ணம் சென்றவர், இரண்டு நிமிடங்களில் திரும்பி வந்தார்.
“கிடைச்சிடிச்சு மேடம்… ஊரோட பேரு அருவியாறுன்னு சொல்லி அவங்க வீட்டு அட்ரஸும் குடுத்தாங்க… மேப் போட்டு பாத்தேன், இங்க இருந்து நம்ம கார்ல ஷார்ட் கட்ல போறதுன்னா ஆறு மணி நேரம் காட்டுது…”
“போலாம் சார்… ரெண்டு பேரும் மாத்தி மாத்தி ட்ரைவ் பண்ணிக்கலாம்… நான் ராகவேந்திரா சாருக்கும் வீட்டுக்கும் ஒரு வார்த்தை சொல்லிட்டா சரி…”
“ம்ம் சரி மேடம்… நானும் வீட்டுக்கு சொல்லிட்டு வந்துடறேன்…”
அதன் பின் அவ்வளவு நேரம் மெனக்கெடவில்லை இருவரும். அடுத்த ஐந்து நிமிடங்களில் எல்லாம் அருவியாறை நோக்கி சீற ஆரம்பித்திருந்தது வாசுதேவனின் மகிழுந்து. ஓரளவுக்கு அழகான பாதை தான் என்றாலும் அதை லயிக்கும் மன நிலையில் இருவரும் இல்லை.
அவர்கள் ஆறு மணி நேரம் தான் என நினைத்திருந்தாலும், இடையில் சற்று ஓய்வெடுத்து அங்கு வந்து சேர கிட்டத்தட்ட ஏழரை மணி நேரங்கள் செலவாகி இருந்தது.
“மூணு மணிக்கு வந்துடுவோம்னு நினைச்சோம்… ஆனா நாலரை மணி ஆச்சு சார்…”
“ஆமா மேடம்… வந்த வேகத்துலயே விசயத்தை முடிச்சுட்டு, இங்க எங்கேயாவது தங்கி கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துட்டு இரவுக்கு கிளம்பலாம்…”
“ம்ம் சார்…”
இருவரும் சரவணகுன்றன் வீட்டின் முன் நின்றிருந்தார்கள். இவர்களுக்காக வாசலிலேயே காத்திருந்தார் அவர்.
“வாங்க… உங்களுக்காக தான் வெய்ட் பண்ணிட்டு இருக்கேன்… இவ்வளோ நேரம் பையன் வீட்டுல இருந்துட்டு வந்தேன்…” என்றவர்,வேதனையாய் ஒரு பெருமூச்சை வெளியேற்றினார்.
“விசயம் கேள்விப்பட்டோம் சார்… நாங்களுமே ரொம்ப வருத்தப்பட்டோம்…”
“எல்லாம் நம்மளோட விதி தம்பி… நேரம் சரியில்லை… ஊப்ஸ்… ஏதோ கடவுள் மேல் பாரத்தை போட்டுட்டு வாழ்க்கையை ஓட்டிக்கிட வேண்டியது தான்…”
“எங்களால ஆறுதல் மட்டும் தான் சொல்ல முடியும் சார்… அந்த இடத்துல இருந்து அந்தப் பிரச்சினையை கடந்து வர வேண்டியவங்க நீங்க தான்… எல்லாத்தையும் காலம் ஓரளவுக்கு குணமாக்கும்னு நம்புவோம் சார்…”
“சரி தான் ம்மா… நீங்க ஏதோ கேஸ் விசயமா என்னை பாக்க வர்றதா சொன்னீங்க..? விவரமா சொன்னீங்கன்னா என்னால ஏதும் உதவ முடியுமான்னு பாக்கறேன்…”
“சரிங்க சார்… என்னனா நீங்க ஏற்காட்டுல வேலை செய்யும் போது ‘கலைமகள் கலைக்கூடம்’ பள்ளிக்கு பின்னாடி இருந்த ஒரு ஏரியாவை மக்கள் பாவனைக்கு தடை விதிச்சாங்க… உங்களுக்கு ஞாபகம் இருக்கா..?”
“ரொம்ப நல்லா ஞாபகம் இருக்கு தம்பி… மறக்கக் கூடிய சம்பவங்களா அங்க நடந்துச்சு..?”
“அந்த இன்சிடென்ஸ பத்தி கொஞ்சம் சொல்றீங்களா..?”
“ம்ம்… இதுலாம் 1980கள்ல நடந்த சம்பவம் ப்பா… அந்த டைம்ல ஊர் மக்கள் அத்தனை பேருக்குமே தண்ணியை வாரி வழங்கிட்டு இருந்தது அந்த ஸ்கூல் பின்னாடி இருந்த குழாய்க்கிணறு தான்… ஆனா திடீர்னு என்னாச்சுன்னு தெரியல, நிறைய துர்மரணங்கள் அந்த இடத்துல நடக்க ஆரம்பிச்சுது… அதுக்குலாம் என்ன காரணம்னு ரொம்பவே கஷ்டப்பட்டு ஆராய்ஞ்சு பாத்தோம்… ஆனா என்ன ஏதுன்னு சின்ன க்ளூ கூட கிடைக்கல எங்களுக்கு… அப்போ ஃபார்ன்ஸிக் ஆஃபீஸரா வேலை பாத்தவரு மிஸ்டர் ஜானகிராமன்னு ஒருத்தர்… என் கூடவே சேர்ந்து ராத்திரி பகலா அவரும் வேலை பாத்தாரு… ஆனா அவராலயும் எதுவும் கண்டுபிடிக்க முடியல… காலப்போக்கில பிரச்சினை அதிகமாகவும் தான், இது மனித சக்தியை தாண்டின வேற ஏதோ விசயம்னு சொல்லி பூஜை புனஸ்காரம்லாம் பண்ணி அந்த இடத்தை டெம்ப்ரரியா க்ளோஸ் பண்ணினோம்… பட் நடந்து முடிஞ்ச சம்பவங்களால மக்கள் மனமுடைஞ்சு போய், கூடவே அவங்களுக்கு இருந்த பயம் காரணமாவும் அந்த பாதையை முற்றாவே யூஸ் பண்ணாம தவிர்த்துட்டாங்க…”
“அந்த ஜானகிராமன் சார் இப்போ எங்க இருக்காங்க..?”
“அவரு இறந்துட்டாங்க ம்மா… அந்த டைம்லயே இந்த கேஸ் விசயமா தன்னால எந்த சப்போர்ட்டும் குடுக்க முடியலன்னு ரொம்ப வருத்தப்பட்டாரு… ஏன்னா அவரு எந்த கேஸை எடுத்தாலும் அதுல ஃபெய்லியர் ஆனதில்ல… அப்படிப்பட்டவருக்கு இந்த கேஸ்ல எந்த ஒரு விசயத்தையும் தன்னால கண்டுபிடிக்க முடியலன்னு ரொம்பவே வருத்தமாகிடுச்சு… நாங்க எவ்வளவோ எடுத்து சொன்னாலும் அதை ஏத்துக்கிற மனநிலைல அவரு இல்லை… காலப்போக்கில வேலையும் ரிசைன் பண்ணிட்டாரு… அப்படியே அடுத்த வருஷம் ஹார்ட் அட்டாக்ல இறந்தும் போயிட்டாரு…”
“ஓஓ… அவரோட ஃபேமிலி மெம்பர்ஸ் இப்போ எங்க இருக்காங்கன்னு தெரியுமா சார்..?”
“சரியா தெரியாது… ஆனா அவர் இறந்ததுக்கு அப்புறம் அவங்க ஃபாரின் போய் செட்டில் ஆகிட்டதா கேள்விப்பட்டேன்…”
“ஓஓ… உங்களுக்கு அவர் எதையும் கண்டுபிடிக்கலன்னு உறுதியா தெரியுமா சார்..? ஏன் கேக்கறேன்னா, யாராவது அவரை பிரஷர் பண்ணி ஃபேமிலியை வச்சு ப்ளாக் மெயில் பண்ணிக் கூட எந்த விசயத்தையும் வெளிய வராத மாதிரி பண்ணி இருக்கலாமே..? அதான் அப்படி ஏதும் இருக்குமான்னு தெரிஞ்சுக்க கேக்கறேன்…”
“அந்த ஆங்கிள்லயும் கேட்டு பாத்தேன் ம்மா… அவங்க வீட்டுக்கு போலீஸ் ப்ரொக்டெக்ஷன் கூட குடுத்தோம்… அதுவுமில்லாம வெளியில இருந்து ரிசோர்ஸா ஒரு பர்ஸன வரவழைச்சும் திரும்ப ஒருவாட்டி தரோவா செக் பண்ணி பார்த்தாங்க… பட் பதில் என்னவோ ஒண்ணு தான்…”
“ஓஓ…”
“அந்த ரிசோர்ஸ் பர்ஸன் யாருன்னு தெரியுமா..?”
“அவங்க பேரு கல்யாண் ம்மா… அதை தவிர வேற எந்த டீடெயிலும் தெரியாது எனக்கு… ஏன்னா ஜஸ்ட் டெம்ரரி வர்க்குக்காக அன்னைக்கு மட்டும் அவங்கள கூப்பிட்டு இருந்தாங்க… அவ்ளோ தான்…”
“சரி சார்… ரொம்ப நன்றி… நாங்க நிறைய எதிர்பார்த்து வந்தோம் இங்க… பட் அன்போர்ச்சுனேட்லி எல்லா விசயங்களையும் அவ்ளோ ஈசியா டீகோட் பண்ண முடியல… பட் நாங்க எதிர்பார்த்திருக்காத சில புது தகவல்களையும் நீங்க குடுத்து இருக்கீங்க… அதுவும் உங்க
சிட்ஜுவேஷன் இப்படி இருக்கும் போதும்… அதனால தான் உங்களை டெடிகேட்டட் போலீஸ் ஆபீஸர்னு சொன்னாங்க… ரொம்ப நன்றி சார்… நாங்க வரோம்… பை த வே, இங்க எங்கேயாவது ரூம் எடுக்கலாமா சார் கொஞ்சம் ரீப்ரெஷ் ஆகிட்டு கிளம்பலாமேன்னு பார்க்கிறோம்…”
“உங்களுக்கு ஆட்சேபனை இல்லன்னா இங்கேயே கூட நீங்க ஃப்ரெஷ் ஆகிக்கலாம்மா… எனக்கொண்ணும் பிரச்சினை இல்லை…”
அவருக்கு சிரமமாக இருக்குமோ என நினைத்து சற்றே தயங்கியவள், அவர் தொடர்ந்தும் அதையே சொல்ல, வாசுதேவனின் சம்மதத்துடன் சரி என்று தலையாட்டி வைத்தாள்.
இருவரும் ஓய்வெடுத்துக் கொண்டு கிளம்ப கிட்டத்தட்ட எட்டு மணி ஆகி விட்டிருந்தது.
“இந்த டைம்ல பொம்பள பிள்ளையை கூட்டிக்கிட்டு கிளம்பறது நல்லது இல்லை தம்பி… இன்னைக்கு நைட்டு இங்கேயே தங்கிட்டு நாளைக்கு காலையில கிளம்பலாமே..?” என்றார் சரவணகுன்றன் அக்கறையாய்.
“இல்ல சார்… நாளைக்கு நம்மளுக்கு கொஞ்சம் முக்கியமான வேலை இருக்கு… இப்போ ரெஸ்ட் எடுத்ததுக்கு அப்புறம் ஓகே தான்… ரெண்டு பேர் கிட்டவும் துப்பாக்கி இருக்கு… சோ சமாளிச்சுக்கலாம்… நீங்க எதுக்கும் கவலைப் படாதீங்க… நாங்க ஊருக்கு போயிட்டு உங்களுக்கு தகவல் சொல்றோம்…”
“சரி ம்மா… நீங்க முடிவெடுத்துட்டீங்க… பாத்து போயிட்டு வாங்க…”
இருவரும் விடைபெற்றுக் கொண்டு வந்து காரில் ஏற, மிதமான வேகத்தில் காரை செலுத்த ஆரம்பித்தாள் இனியா. தொடர்ந்து வந்து கொண்டிருந்த ஆபத்தை அறியாமலேயே வாசுதேவனிடம் வளவளத்தபடி வண்டியை செலுத்திக் கொண்டிருந்தாள் அவள்..!
✯✯✯✯✯✯
– அல்லி மலரும்…
No comments yet.