Episode 4

Ramya Ramanathan | 03 Mar 2026 | Share

ஃபேக்டரி ரௌண்ட்ஸ் முடித்தவுடன் ,தனது அலுவலகத்தில் அமர்ந்து ரஞ்சித்திடம் ஆதிரா டெண்டர் பற்றிய மீதி விபரங்களை கூறி செய்து வர கூறினாள்

ரஞ்சித் பைலுடன் வெளியேறியதும் தனது இருக்கையில் சோர்ந்து சாய்வாக அமர்ந்தவளின் பார்வையோ கண்ணாடி தடுப்புக்கு வெளியே இலக்கின்றி வெறித்துக் கொண்டிருந்தது .

ஏதோ யோசனையில் , தனது மேஜையின் நடு டிராயரை திறந்து அதிலிருந்து ஒரு கவரை எடுத்தாள் .

மூன்று மாதங்களுக்கு முன்பு ஒரு நாள் இரவு , தனது தாய் ஒரு புகைப்படத்தை கையில் வைத்து அழுததும் , பின்பு ஆசையாக ரசித்ததையும் கண்டவள் ,அவர் தூங்கியவுடன் , அந்த புகைப்படத்தை கையில் எடுத்து பார்த்தாள்

“அழகன் தான் ” ,அவள் வாய் அவளை மீறி முனுமுனுத்தது .

தனது கைப் பேசியில் அந்த புகைப்படத்தை ஓர் படம் எடுத்துக் கொண்டாள் .

அதை டிடெக்டிவிடம் அனுப்பி யாரென்று விபரங்கள் கேட்டிருந்தாள். அவர் அனுப்பிய விபரங்கள் நிரம்பிய கோப்பு தான் அது .

இரண்டு மாதங்களுக்கு முன்பே அது கையில் கிடைத்தாலும் அன்றிருந்த வேலைப் பளுவில் அதை தனது மேசை டிராயரில் போட்டு வைத்திருந்தாள் .
அடுத்தடுத்த வேலையில் அதை மறந்தும் போனாள் ‌.இன்று திடீரென்று அது ஞாபகம் வரவும் அதை தேடி எடுத்து பார்க்கிறாள் இப்போது .

அதில் முறுக்கி விட்ட மீசையும் , பச்சை வண்ண சட்டையும் , வெள்ளை வேஷ்டியுமாய் தனது ராயல் என்ஃபீல்டில் சாய்ந்த படி நின்று அலை பேசியில் யாரிடமோ சிரித்த படி பேசி கொண்டிருந்தான் வெற்றி வேந்தன்.

அவனது ஒரு கை அலைபேசியை பிடித்திருந்தாலும் இன்னொரு கை அவனது முடியை சிலுப்பிக் கொண்டிருந்தது .

அந்த புகைப்படத்தை பார்த்தவுடன் மூச்சடைத்தது போல் உணர்ந்தால் ஆதிரா .

பார்த்தவுடன் காதல் இதுவோ !?

தமிழ்நாட்டு மன்மதனே வாராய்
பெண் மயங்க மயங்க நடந்து நடந்து வாராய்
நீ இந்திர மகராஜனே
வெற்றி மாலைக்கென பிறந்தவனே
நீ தொட்டதெல்லாம் ஜெயமாக
சொன்னதெல்லாம் நிஜமாக
கன்னி நிலா வந்திடுச்சு கனவுகாண
… “

….

அண்ணே , ” அந்த பய முரளி நாம சொல்ற வழிக்கு வரமாற்றானே .. “

” சொன்னதையே தான் திருப்பி திருப்பி சொல்றான் ,இல்லனா போலீஸ்ட போவானாம் “

“நாம பாக்காத போலீசா கலெக்டரா ? “

” ஆமாண்ணே ஆமாண்ணே , ஆனாலும்…. “

” ஏன் டா , சரி விடு , நாம சொல்றத கேக்கலனா , முடிச்சு விட்டுறு , ஏன் பூமிக்கு வேற பாரமா இருந்துகுட்டு … “

” சரினே , நாளைக்கு நீங்க சொன்ன வேலையை முடிச்சிட்டு வந்து பார்க்குறேன் .. “

….

சென்னை அடையார் சிக்னலில் பைக்கில் நின்றுகொண்டு இருந்த வரதனின் அலைபேசி விடாமல் அடித்துக் கொண்டிருந்தது .

பீக் ஹவர் என்று சொல்லப்படும் காலை ஒன்பது மணி இருக்கும் அப்பொழுது .
அழைப்பவர்கள் யாரென தெரிந்தும் , கோபம் கொண்ட மனது எடுக்க அனுமதிக்க வில்லை

விடாது அழைத்த அலைபேசியை ஸ்விட்ச் ஆஃப் செய்து விட்டு நிமிர்ந்த போது பச்சை சிக்னல் விழுந்திருந்தது .

சென்னை டிராபிக்கில் தனது வண்டியை இயக்கி கூட்டத்தோடு கூட்டமாய் மறைந்து அந்த இடத்தை விட்டு சென்றான் .

பிரபல ஐ டி நிறுவனத்தில் வேலை செய்யும் வரதன் நீலாங்கரையில் ஒற்றை படுக்கை அறை உள்ள வீட்டில் இரண்டு வருடங்களாய் தங்கி இருக்கிறான்.

வரதன் படித்து முடித்து வேலையில்லாமல் ஊரார் வாய்க்கு அகப்பட்டு பல்வேறு வசவுகளுக்கு உள்ளாக்கப்பட்ட சராசரி இந்திய குடிமகன் .

நண்பனின் நண்பன் மூலமாக தற்போது பணி புரியும் கம்பெனியின் வேலைவாய்ப்பு முகாமில் பங்கு கொண்டு அதில் சிறப்பாக செயல்பட்டு வெற்றியும் கண்டு இப்பொழுது அங்கு வேலை பார்த்துக் கொண்டிருக்கிறான் .

…..

பசுமை போர்த்திய வயல்வெளிகள் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விரிந்து கிடக்கும் வீரனூர் கிராமம், இயற்கையின் மடியில் துயிலும் ஒரு சிறிய சொர்க்கம் போல தெரியும். காலையில் உதயமான சூரியன் தங்க நிற ஒளியை வயல்களில் சிந்த, பனித்துளிகள் வைரங்கள் போல மின்னும்.

தென்றல் காற்றில் நெற்பயிர்கள் அலைபாயும் காட்சி மனதை மயக்கும்
பக்கத்தில் ஓடும் சிறிய கால்வாயில் தெளிந்த நீர் சலசலவென ஓடும் சத்தம் அமைதியை கூட்டும் .

தன்னவள் தன்னுடையே இருக்கிறாள் என்ற எண்ணத்துடன் தூங்கிய வெற்றிக்கு எழுந்தவுடன் தான் உண்மை விளங்கியது நிதர்சனம் புரிந்தது தன்னவள் தன்னுடன் இல்லை என்பது .

யாரிடமும் வெளிப்படுத்தப்படாமல் சிரிப்பு எனும் முகமூடியுடன் இத்தனை வருடங்களை வாழ்ந்தவன் இந்த அறையில் மட்டும் அந்த முகமூடியை அணியாமல் இருந்தது தன்னறை என்பதால் மட்டும் அல்ல தன்னவளுடன் இருந்ததால் மட்டும் தான் .

சிறிது நாட்களிலேயே ஒருத்தி மேல் பைத்தியமாக தான் இருப்பேன் என்று யாரேனும் ஒரு வருடத்திற்கு முன்பு கூறியிருந்தால் கூட நம்பி இருக்க மாட்டான் .

பார்த்து பழகி சிறிது நாட்களே அவளுடன் வாழ்ந்திருந்தாலும் அந்த சிறிது நாட்களிலேயே அவனது சித்தத்தை பைத்தியமாக மாற்றி விட்டாள் அவள் .

காதலின் உச்சத்தில் அவளை கொண்டாடி தீர்த்தவனை விட்டுவிட்டு சென்றது .

விதியின் சதியா
பெண்ணின் மதியா …

காலத்தின்‌ கணக்கியலில் யாரும் தப்பிக்க முடியாதே !

எழுந்தவன் மணியை பார்க்க ஐந்து முப்பது என காட்டியது . மாடுகளுக்கு வைக்கோலிட அந்த இடத்தை சுத்தபடுத்த , பால் கறக்க ,என வீட்டின் கொள்ளைப் புறம் பேச்சு சத்தமும் ஆள் நடமாட்டமுமாய் இருந்தது .

ராஜமும் அங்கு தான் இருந்து , ஆட்களிடம் வேலை வாங்கிக் கொண்டிருந்தார் .

தனது அறையின் பால்கனி வழியாக கீழே பார்த்தான் . மாடுகளின் அம்மா என்ற சத்தத்தில் உள்ளுக்குள் ஏதோ உடைந்தது .

அவளுடன் இருந்த நாட்களில் தனக்கு பெண் குழந்தை வேண்டும் என இவன் கேட்டதும் தனக்கு ஆண் குழந்தை தான் வேண்டும் என அவள் கூறியதும் என அவர்களின் தனித்துவமான நேசங்களின் சொற்கள் நெஞ்சை வெட்டிக் கூறுபோட்டது .

இங்கு எதைப் பார்த்தாலும் நினைவுகளோ அவளை சுற்றிய நிற்கிறது ஏதோ ஒரு விதத்தில் ஒவ்வொரு விஷயத்திலும் அவளது நினைவுகள் தட்டி எழுப்பப்படுகிறது . நெஞ்சு ரணமாய் வலித்தாலும் அவள் மேல் வெறுப்போ கோபமோ பட இயல வில்லை என்பது விந்தையிலும் விந்தையே

“கண்ணை மூடி கொண்டாலும்
உன்னைக் கண்டேன்
மீண்டும் ஏன் இந்த ஏக்கம்
வெள்ளை மேகத் துண்டுக்குள்
எழும் மின்னல் போல்
எந்தன் வாழ்வெங்கும் மின்னல்
என் இதழ் மேல் இன்று
வாழும் மௌனங்கள்
என் மனம் பேசுதே
நூறு எண்ணங்கள்
சொன்ன சொல்லின் அர்த்தங்கள்
என்னுள் வாழுதே
தூரம் தள்ளிச் சென்றாலும்
உயிர் தேடுதே
ஆசை வார்த்தை எல்லாமே
இன்று கீறலாய்
எந்தன் நெஞ்சின் ஓரத்தில்
பாயச் செய்கிறாய்
என்னுள் நீ வந்தாய்
இன்னும் வாழ்கின்றாய்”

உறவு வரும் …

என்றும் அன்புடன்
ரம்யா ராமநாதன்.

    No comments yet.