Episode 3

Ramya Ramanathan | 03 Mar 2026 | Share

பார்க்கும் கோணத்தில் தான் வாழ்க்கையின் சூட்சுமம் ஒளிந்திருக்கிறது .


தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள மலை வாழிடம் ,
ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காடு , இளங் காலை வேளையை மெதுவாக உள்வாங்கிக் கொண்டிருந்தது . மஞ்சள் பூசிய வானம் இருட்டை விரட்டி அடித்து கொண்டு இருந்தது .

உயர்ந்த மலை , அடர்ந்த காடு , பரந்த புல்வெளிகள் , பசுமையான பள்ளத்தாக்குகள் , திரும்பும் திசையெல்லாம் தேயிலைத் தோட்டங்கள் என குளிர்ந்த காற்றோடு இயற்கையோடு ஒன்றி இருக்கும் ஏழைகளின் விருப்பமான மலை வாசஸ்தலம் தான் ஏற்காடு ‌.

தமிழ்நாட்டில் முக்கியமாக உள்ள மலைப்பிரதேச சுற்றுலா தலங்களில் இதுவும் ஒன்றாக விளங்குகின்றது .

ஏற்காடு கிழக்குத் தொடர்ச்சி மலைத்தொடரில் உள்ள சேர்வராயன் மலைத் தொடரில் அமைந்துள்ளது .ஏரிக் காடு என்பதே ஏற்காடு என்று மருவி விட்டதாக கூறப்படுகிறது.

ஏற்காடு மலையடிவாரத்தில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக சற்று தொலைவில் பச்சை பசேலென்ற புல்வெளிகளுக்கு நடுவில் இருக்கிறது அன்னை குடில் எனும் அனாதை இல்லம் .

அறுபத்து ஐந்து குழந்தைகளை கொண்டுள்ள இந்த குடில் , சாரதா என்பவரால் நிறுவப்பட்டு அவரின் தலைமையில் இயங்கிக் கொண்டிருக்கிறது .

அன்னை குடில் , தாய் தகப்பன் இல்லாத அனாதரவான குழந்தைகளுக்கு கிடைத்த அன்னை மடி என்றே கூறலாம்.

சாரதா அங்குள்ள அத்தனை குழந்தைகளுக்கும் அன்னை யாகவே இருக்கிறார் .

தன் தந்தை , தாய் , தம்பியை விபத்தில் பறிக் கொடுத்து , கற்பினை‌க் கயவர்களிடம் இழந்து தப்பித்து பிழைத்து எப்படியோ இவ்வுலகில் போராடி வென்று வாழ்ந்து கொண்டிருக்கிறார் இரும்பு பெண்மணியாக .

தனக்கென கணவன், குழந்தை என்று வாழும் குடும்ப பாங்கை விட்டு , தனியொரு பெண்ணாய் ஆதரவு இல்லாதவர்களுக்கு தன்னால் முடிந்தவற்றை செய்வதற்கெனவே வாழும் சிலரும் இவரும் ஒருவர் .

இருபத்து இரண்டு வருடங்களுக்கு முன்பாக இவரால் தொடங்கப்பட்ட இ அன்னை மடி இல்லமானது அப்பொழுது இரு குழந்தைகளை மட்டுமே கொண்டிருந்தது .

இப்பொழுதோ பல மாறுதல்களுடன் அறுபத்து ஐந்து குழந்தைகளையும் ,
அங்கு பணிபுரிய வென நான்கு பேரையும் கொண்டு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது .

இங்கு உள்ள குழந்தைகள் அருகில் உள்ள அரசு பள்ளிகளில் பயில்கின்றனர் . பல நல்ல மனிதர்களின் உதவியாலும் , ஸ்காலர்ஷிப் மூலமாகவும் அவர்களின் வாழ்க்கை நகர்ந்து கொண்டிருக்கிறது .

ஏனைய இல்லங்களில் இருந்து மாறுபட்டதாக , பள்ளி கல்லூரி முடித்து அவர்களுக்கென சுய சம்பாத்தியம் கிடைக்கும் வரை அவர்கள் இந்த குடிலில் இருக்கலாம் என்பதே இந்த இல்லத்தின் தனித்துவமாக இருக்கிறது .

தன்னைப் போல் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தன்னால் முயன்ற உதவிகளை செய்து கொண்டிருக்கிறார் சாரதா‌ .

” கற்பும் ஒரு உறுப்பு போல் தான் . கற்பை பறிக்கொடுத்தவர்களும் வாழ தகுதியானவர்களே . எவ்வாறு ஒரு உடல் உறுப்பை பறி கொடுத்தவர்கள் மீதி உள்ளவற்றை வைத்து வாழ்கின்றார்களோ அது போல தான் இதுவும் . “

” கற்பை சூறையாடி யவர்களே இச் சமூகத்தில் தலை நிமிர்ந்து செல்லும் போது , எந்த ஒரு தவறும் செய்யாது , தன்னை மீறி நடந்த ஓர் செயலுக்கு சம்பந்தப்பட்ட பெண் எப்படி பொறுப்பாவாள்‌ ” .

” கற்பு மனம் சம்பந்தப்பட்டது உடல் சம்பந்தப்பட்டது அல்ல ” ……

இவ்வாறு தக்க சமயத்தில் பல பெண்களுக்கு எடுத்துக் கூறி அவர்களை மனதளவில் தெளிவு படுத்திய பெரும் பங்கு சாராதவுடையது .

மைவடிவக் குழலியர்தம் வதனத்தை
        நிகர்‘ஒவ்வா மதியே! மானே!!
செய்வடிவைச் சிற்றிடையை வேய்தோளைத்
        திருநகையைத் தெய்வ மாக
இவ்வடிவைப் படைத்தவடி வெவ்வடிவோ
        நானறியேன்! உண்மை யாகக்
கைபடியத் திருமகளைப் படைத்திவளைப்
        படைத்தனன் நல்கமலத் தோனே! ”

யாழினி இங்கு வந்து ஏழு நாட்கள் ஓடி விட்டது . கருப்பு நிறத்தழகி .
சதை பற்றுடன் கூடிய உடல்வாகு ‌.
4 ‘ 7 அடி உயரம் . அம்பு தொடுக்கும் விழிகள் , கூர் மூக்கு , உப்பிய கன்னங்களை உடையவள் .

நாங்க ஷார்ட் இல்ல கியூட் அப்டின்னு சொல்வோமே‌ அது போன்ற தோற்றத்தை உடையவள் .

யாழினி தமிழ் பெண் தான் . சிறு வயதிலேயே பெற்றோரால் கை விடப்பட்டு , தத்தெடுத்து வளர்க்கபட்டவள் .தன்னை வளர்த்த தாயின் ஆசைக்கு இணங்கி தமிழ்நாட்டிற்கு வந்தவள் எங்கெங்கோ அலைந்து திரிந்து கடைசியில் சாராதாவின் கண்ணில் பட , அவர்கள் இவளை இங்கு கூட்டி வந்தனர்‌ .

இங்கு இல்லத்தில் அவளால் முடிந்த அளவு அனைவருக்கும் உதவிக் கொண்டு எப்படியோ இத்தனை நாட்களை ஓட்டி விட்டாள் .

தனக்கு ஒரு வேளை பார்த்து தரும்படி அம்மாவிடம் கூறியுள்ளாள் . சாரதாவை அம்மா என்று கூப்பிட்டே பழகி விட்டாள்
இந்த ஏழு தினங்களில் .

குழந்தைகளை பார்க்கும் பொழுதோ  , இல்லை அவர்களது ஆழ்மனதில் உள்ள தாய் தந்தையின் ஏக்கத்தை உணரும் பொழுதோ , தன்னை வளர்த்த அன்னை தந்தையை நினைத்துக் கொள்வாள் .

ஏதோ தான் முற்பிறவில் செய்த புண்ணியம் தான் இப்படிப் பட்ட தாய் தந்தையுடன் தான் வளர்ந்தேன் என எண்ணிக் கொள்வாள்.

யாழினிக்கு நல்ல கல்விச் செல்வத்தையே அவர்கள் வழங்கினார்கள் .

ஒரு புகழ்பெற்ற கல்லூரியில் கணினி அறிவியல் படித்துவிட்டு மேற்கொண்டு மாஸ்டர் ஆஃப் பிசினஸ் அட்மினிஸ்ட்ரேஷனையும்  படித்து முடித்திருந்தாள்.

தன்னை பெற்றவர்கள் வளர்த்திருந்தாள் கூட இப்படி வளர்த்திருப்பார்களோ என்னமோ , அவ்வளவு நன்றாகவே தன்னைப் பார்த்துக் கொண்டவர்களுக்கு ஆயுள் வரை நன்றிக் கடனுடன் இருப்பேன் என்று அடிக்கடி தனக்குள்ளே சொல்லிக் கொள்வாள் .

ஏனோ ,  இத்தனை குழந்தைகள் தன்னை அம்மா எனக்கு கூப்பிடும்போது உணர்ந்த உணர்வைவிட யாழினி தன்னை அம்மா என கூப்பிடும் பொழுது ஏற்படும் உணர்வு புதியதாக இருப்பதை எண்ணி சாரதா வியந்தார் ‌. அவருக்கும் அந்த உணர்வு பிடித்ததாகவே இருந்தது . அதைப் பற்றி அதிகம் சிந்திக்க அவரது வேலைப் பளு அவரை விடவில்லை .

இருந்தும் , அவளது அத்தனை கவலைகளையும் தீர்த்து வைத்து அவளை சந்தோஷமாக பார்த்துக் கொள்ள வேண்டும் எனும் எண்ணம் அவர் ஆழ்மனதில் வேரூன்றி
இந்த சிறிது நாளிலேயே விருட்சமாய் வளர்ந்து நிற்கிறது .

பெற்றால் தான் தாயா என்ன ? தாயின் பாசத்திற்கு  இருந்தது சாரதாவின் பாசமும் அரவணைப்பும் .

வாழ்வு தொடங்கும் இடம்
நீ தானே
வானம் முடியுமிடம்
நீ தானே
காற்றைப் போல நீ வந்தாயே
சுவாசமாக நீ நின்றாயே
மார்பில் ஊறும் உயிரே ….

செல்ல மழையும் நீ
சின்ன இடியும் நீ
செல்ல மழையும் நீ
சின்ன இடியும் நீ
பிறந்த உடலும் நீ
பிரியும் உயிரும் நீ
பிறந்த உடலும் நீ
பிரியும் உயிரும் நீ
மரணம் ஈன்ற ஜனனம் நீ …


உறவு வரும் ….

என்றும் அன்புடன் ,
ரம்யா ராமநாதன் .

    No comments yet.