கிடைத்த வேலை..
விஷ்வா தீரன் அங்கிருந்து சென்ற பிறகு யுகன்யாவை உள்ளே அழைத்தனர்,
” அய்யோ அந்த ஆளு வேற அப்படி முறைச்சுட்டு போனாரு, இவங்க இப்போ எதுக்கு கூப்பிடுறாங்க? வேலை இருக்கா இல்லையா? இன்டர்வியூ எடுப்பாங்களா மாட்டாங்களா? என்று யோசனையுடன் உள்ளே சென்றாள்.
“எக்ஸ்கியூஸ் மீ சார்” என்று அவள் அழைக்க, “எஸ் கம்மிங்” என்று அழைத்தார் தயாளன்.
இப்போது விஷ்வா உட்க்கார்ந்திருந்த இருக்கையில் தயாளன் அமர்ந்திருந்தார், “வாங்க உட்காருங்கள்” என்று அவளுடைய ப்ரொஃபைல் எல்லாம் பார்த்துக் கொண்டிருந்தார்.
” இப்ப நீங்க ஒரு ஐடி கம்பெனியில் ஒர்க் பண்ணிட்டு இருக்கீங்க இல்லையா?” என்று கேட்டார்.
“ஆமா சார்” என்றாள் அவள், “எதுக்கு அத கட் பண்ணிட்டு இதுக்கு வரணும்னு நினைக்கிறீங்க?” என்று கேட்டார் அவர்.
“அது வந்து என்னுடைய ப்ரொபஷனல், அதை பண்ணனும் நினைச்சேன் பண்ணிட்டேன், பட் இது என்னுடைய ஃபேஷன், நமக்கு பிடிச்ச வேலையை நம்ம ப்ரொபஷன மாத்திக்கும்போது அதுல நமக்கு ஒரு சாட்டிஸ்ஃபேக்ஷன் கிடைக்கும். மணியை விட சாட்டிஸ்ஃபேக்ஷன் ரொம்ப முக்கியம் இல்லையா அதுக்காக தான் சார்” என்றாள் அவள்,
“சவுண்ட் குட்” என்று கூறினார் அவர்.
பிறகு துறை சம்பந்த சில கேள்விகளையும் அவளிடம் கேட்டார், சில ஐடியாக்களையும் அவளிடம் கேட்டார், அவள் அவருக்கு திருப்தி தரும் அளவிற்கு பதில்களை சொல்ல, தினகருக்கு அவளை மிகவும் பிடித்திருந்தது,
அவளுடைய பதில்கள், அவளுடைய நடவடிக்கைகள் எல்லாமே ஒரு நேர்த்தியாக இருந்தது, அவள் அவளை இம்ப்ரஸிவ் ஆக பார்த்துக் கொண்டிருந்தான் ஆனால் வெளியே எதையும் காட்டவில்லை,
நீங்க இந்த ஜாபுக்கு தான் செலக்ட் ஆகுறீங்க, ஆனா கொஞ்ச நாள் என் பையனுக்கு செகரட்டரியா நீ ஒர்க் பண்ணும். உனக்கு சம்மதமா என்று கேட்டார்.
இப்படி ஒரு டிவிஸ்ட்டை தினகரன் எதிர்பார்க்கவில்லை, இவளும் எதிர்பார்க்கவில்லை, “என்ன?” என்று அதிர்ச்சியுடன் அவள் அவரைப் பார்த்தாள்.
“என்னமா அப்படி பாக்குற? சில ஃபீல்ட் எல்லாம் ரொம்ப கஷ்டமா இருக்கும், ஆனா அதுல நம்ம நல்லா ட்ரெயின் ஆயிட்டோம்னு வைங்க, எல்லா இடத்திலுமே நம்மளால சர்வைவ் பண்ண முடியும், அது மாதிரி தான் என் பையன் அவனுக்கு உன்னை பத்தின ஒரு தவறான ஒரு பிளாக் மார்க் வந்து இருக்கு,
அவன் எப்படின்னா அவன் நேச்சரே சம்திங் டிப்ரண்ட், எல்லாரும் மாதிரி அவன் யோசிக்க மாட்டான், நம்ம ஒரு விஷயத்தை எல்லாரும் ஒரே வழியில் பார்த்தா, அவன் அதை வேற வழியில பாப்பான்.
தென் இனிமேல் அவன் தான் இந்த கம்பெனியா ரன் பண்ண போறான், அப்படி இருக்கும் பொழுது உங்க ரெண்டு பேருக்குள்ள ஒரு கிளாஷ் இருக்கும்னா அது சரியா இருக்காது, மேபி அவனுடைய பாயிண்ட் ஆஃப் வியுல உன் மேல ஒரு சின்ன பிளாக் மார்க் இருக்கு, அத ஃபர்ஸ்ட் கிளியர் பண்ணனும், அதுக்குன்னு நீ போய் அவனை கன்வின்ஸ் பண்ணு அப்படி எல்லாம் நான் எதுவும் சொல்லல,
ஜஸ்ட் செக்ரட்டரியா அவனுக்கு நீ என்ன ஜாப் பண்ணணுமோ ,அதை பண்ணு ,அட் நி சேம் டைம், நீ இந்த டிசைனிங் டிபார்ட்மெண்ட்லயும் ஒர்க் பண்ணலாம் ,உனக்கு ப்ராஜெக்ட் அசைன் பண்ணுவாங்க, நீ அதுல ஒர்க் பண்ணு,
” என்னடா சம்பந்தமே இல்லாம ஒரு வேலைய கொடுக்கிறோம் அப்படின்னு யோசிக்கிறியா என்று கேட்டார் அவர், “இல்ல சார்” என்றாள், “என் பையன பார்த்து பயமா இருக்கா?” என்று கேட்க, அவள் ஒரு கணம் அமைதியாக இருந்தாள்,
ஏற்கனவே முறைத்து விட்டு சென்றிருக்கிறான். இந்த விஷயம் அவனுக்கு தெரியுமா என்று இருந்தது அவளுக்கு.
“இஃப் யூ டோன்ட் மைன் நான் கொஞ்சம் பேசலாமா சார்?” என்றாள் அவள், யா எஸ் அப் கோர்ஸ் யூ கேன் ஸ்பீக், இது பேச்சு சுதந்திரம் உள்ள நாடு தாம்மா, அதனால ஒன்னும் பிரச்சனை இல்ல” என்றார் அவர் சிறு புன்னகையுடன்,
அவளுக்கு அவர் மீது ஒரு நல்ல மரியாதையும் மதிப்பும் வந்தது, இவர் போல் ,ஏன் அவர் இல்லை என்று..
எனக்கு ஓகே தான் சார், நான் இந்த ஜாப் பண்றேன், அது அவருக்கு ஓகேவா என்று கேட்டுக்கோங்க, பிகாஸ் ஒரு பாசுக்கும் ஸ்டாஃப்க்கும் என்ன பர்சனல் கிளாஷ் இருந்தாலும் அது வேலைய பாதிக்க கூடாது,
ராங் ஒப்பினியன் அப்படி என்னும் பொழுது அதை சரி பண்ணனும் தான், ஆனா அதையே வச்சுட்டு மார்க் பண்ண மாதிரி யோசிக்க கூடாது இல்லையா என்று சொல்ல,
அவர் லேசாக புன்னகைத்து, “இதுக்கு நான் எப்படி ரியாக்ட் பண்ணனும்னு நீ நினைக்கிற?” என்று சிரித்தபடி கேட்டார்.
“நீங்க ஒரு ஜெனியூன்னா பர்சன்னு எனக்கு தோணுது, சோ நியாயமா பதில் சொன்னீங்கன்னா போதும்” என்றாள் அவள், அவரும் சிரித்தபடி, ஆக்சுவலி யாரு யாருக்கு ஜாப் தரா அப்படிங்கற ஒரு சினாரியோவே இங்கு மாறி போயிருக்கு, ஆஸ் எ ஸ்டாஃப் உனக்கு பாஸா இருக்க அவனுக்கு விருப்பமான நீ என்கிட்டயே கேட்கிற, அதுவும் இல்லாம அவனுடைய கேரக்டர் பற்றி என்கிட்டயே சொல்லி இருக்க” என்று அவர் கூறவும், அவள் ஒரு கணம் பதற்றம் அடைந்தாள் தான், பின்னர் தன்னை நிதானப்படுத்திக் கொண்டு.
“சார் இந்த ஜாப் எனக்கு முக்கியம்தான், அதைவிட முக்கியம் என்னுடைய செல்ஃப் ரெஸ்பெக்ட் அது ஒரு இடத்துல கேள்விக்குறியாகுது, அப்படின்னும் பொழுது, நான் ஒரு செல்ப் டிபன்ஸ் காக அது குறித்து நான் கொஸ்டின் பண்ண வேண்டியது தானே,
உங்க பையன் அப்படிங்கிறதுக்காக ஒரு விஷயத்தை இல்லன்னு நான் மாற்ற முடியுமா?” என்று அவள் கேட்க, அவர் சத்தமாக சிரித்தார்,
“அவனுடைய செக்ரட்டரியா ஒரு டூ மந்த்ஸ் பண்ணு, அதுக்கப்புறம் நான் டிசைனிங் டிபார்ட்மெண்ட்க்கு உன்ன மாத்த சொல்றேன்” , என்று தினகரன் பக்கம் திரும்ப, அவன் கண்களில் இன்னும் அதிர்ச்சியை கண்டவர் பிறகு அவனிடம் பேசிக் கொள்ளலாம் என்று, “தினகர் இவங்க இப்போதைக்கு விஷ்வாவுடைய பிஏ தான், தேன் வொர்க் லோட் அதிகம் இல்லாத டைம், அதாவது விஷ்வாக்கு மீட்டிங்ஸ் கம்மியா இருக்கிற நேரம், வெளியே போற ஷெடூல்ஸ் எதுவும் இல்லை அப்படின்ற பொழுது அந்த டைம்ல இவங்களுக்கு டிசைனிங் ப்ராஜெக்ட் அசைன் பண்ணுங்க புரிஞ்சுதா” என்றார், ஓகே அங்கிள் என்றான் அவன்.
“அவளோ என்னடா நாம ஒரு கேள்வி கேட்டோம். அது எந்த கேள்விக்குமே ஒரு பதில் சொல்லல, இவர் பாட்னு ஜாப் சென்ட் பண்றாரு, ஓகேன்னு சொல்றாரு இப்ப நாம என்ன பண்ணனும்” என்று யோசனையுடன் நின்றிருந்தாள்,
அவள் கண்களில் கேள்வியை உணர்ந்தவர், அவள் பக்கம் திரும்பி என்னம்மா யோசிக்கிற, “என்னடா நம்ம இவர சில கேள்வி கேட்டோம், இவர் எதுவுமே பதில் சொல்லாம இருக்காருன்னு பாக்குறியா? தினகர் சொன்ன மாதிரி, நீ சச் எ அமேசிங் பெர்சன் தான், ஆனா இன்னொரு விஷயம் என் பையன் எப்படி உன்ன தப்பா ஜட்ஜ் பண்ணி வச்சிருக்கானோ, அதே மாதிரி தான் நீ அவன பத்தி தப்பா ஜட்ஜ் பண்ணி வச்சிருக்க,
மேபி உங்க ஃபர்ஸ்ட் மீட்டிங் அப்படிங்கறது ஒரு ஆக்சிடென்ட்டலா தவறான ஒரு இன்ட்ரோவா மாறி இருக்கு, அதனால உங்களுக்கு அந்த ஒப்பினியன் வந்து இருக்கலாம், பியூச்சர்ல அது சேஞ்ச் ஆக வாய்ப்பு இருக்கு,
ஏன ரெண்டு பேரும் ஒரே இடத்தில் ஒர்க் பண்ணும் பொழுது, அப்படிப்பட்ட தாட்ஸ் தேவையில்லை இல்லையா, அது சரி பண்றதுக்கு என்னோட முயற்சி, இந்த ப்ராஜெக்ட் டிசைனிங் முழுக்க முழுக்க அவன் கண்ட்ரோல்ல தான் இருக்கு, சோ அவனுக்கு கீழ் தான் நீ ஒர்க் பண்ண போற, அதுக்கு அவனுக்கும் உனக்கும் ஒரு நல்ல பான்ட் கிரியேட் ஆனா பெட்டர் ,
அவன் கூட ஒர்க் பண்ணு ன நான் தினகரன் பார்க்க சொல்ற ,உன்கிட்ட ரொம்பவே ஹார்ஷா நடந்துக்கிறான் அப்படின்னா ஹேவ் பைண்ட் அவுட் சம்மதர் சொல்யூஷன், வெளியே வெயிட் பண்ணனுமா, ஆஃபர் லெட்டர் கலெக்ட் பண்ணிட்டு போயிடு” என்றார்,
ஓகே சார் தேங்க்யூ. உங்க கம்பெனில ஒர்க் பண்றது எனக்கும் ஒரு பெரிய பிளசர் தான் என்றாள்.
நீ பிளஷர்னு சொல்றது கூட உங்க கூட ஒர்க் பண்றது ரொம்ப பிரஷரா இருக்கு அப்படின்ற மாதிரி என் காதுல விழுதுமா என்று சொல்ல, அவளை லேசாக சிரித்தாள்..
அவர் தன்னை நல்ல முறையில் நடத்துவது அவருக்கு பிடித்திருந்தது , “சார் அப்புறம் ஒரு சின்ன ரெக்வெஸ்ட் நான் மண்டேல இருந்து ஜாயின் பண்ணி கிட்டுமா” என்றாள்
“ஓகே என்ன ஆச்சு?” என்றார், இம்மிடியட்டாவே நான் இப்ப கரண்ட் கம்பெனியில் இருந்து வெளியே வரவேண்டும் என்றால் என்னுடைய சேலரி நான் ப்ரீபெய்ட் பண்ண வேண்டியது இருக்கும், பண்றது பிரச்சனை இல்ல, எப்படியும் இந்த ஒன் வீக் அது கால்குலேட் பண்ணுவாங்க, அதுக்காக தான் என்றாள் அவள்,
ஓகே பட் மண்டே வந்து ஜாயின் பண்ணிடுமா என்று சொன்னார், அவளும் சரி என்று அந்த அறையில் இருந்து வெளியேறினார்.
அவளை விஷ்வாவின் கீழ் வேலைக்கு அமர்த்துவது தினகருக்கு பிடிக்கவில்லை, ஏனென்றால் பார்த்ததிலிருந்து அவளை திட்டிக்கொண்டு தான் இருக்கிறான் ,இந்த பெண்ணை திட்டியே தீர்த்து விடுவானே என்று தான் தோன்றியது தினகருக்கு.
“என்ன அங்கிள் விஷ்வா அந்த பொண்ண ஒரு வழி பண்ணிடுவான் போலயே, அவன் வேலைனு வந்தா பயங்கர அக்ரசிவா இருப்பான்னு உங்களுக்கே தெரியும் இல்ல, அந்த பொண்ணு போய் எதுக்கு அவன் கிட்ட செக்ரட்டரியா போட்டீங்க என்றான் தினகர்.
எல்லாம் ஒரு காரணமா தான் நான் அவகிட்ட சொன்னது தான் உன் கிட்டயே சொல்றேன், அந்த பொண்ணு ஜாபுக்கு நாம எடுத்தாலும் யார் கீழே வரா, அவ ரிப்போட்டிங் அத்தாரிட்டி யாரு? என்று கேட்க விஷ்வா தான் என்றான்.
அவங்களுக்குள்ள அப்ப அந்த மிஸ் அண்டர் ஸ்டாண்டிங் கிளியராக இரண்டு பேரும் வேற வேற டிஸ்டன்ஸ்ல இருந்தா, யாரு என்ன பண்ணாலும் மத்தவங்களுக்கு தப்பா தான் தெரியும் ,
அவங்க கொஞ்சம் க்ளோசா இருக்கிற மாதிரி ஒரு அட்மாஸ்பியர் கிரியேட் பண்ணா தான் ஒருத்தர் ஒருத்தர் அண்டர்ஸ்டாண்ட் பண்ணிக்க முடியும் என்றார் அவர் ,
ஆனால் தினகருக்கு மனதில் “இவங்க என்ன கல்யாணமா பண்ணிக்க போறாங்க பக்கத்துல இருந்தா அண்டர்ஸ்டாண்ட் பண்றத்துக்கு, வேலை தான பண்ண போறாங்க, அந்த பொண்ணு இவன் கிட்ட மாட்டிட்டு என்ன பாடுபட போறாளோ ?”என்று நினைத்தான்,
“டேய் ..”என்று அவன் மைண்ட் வாய்ஸ் புரிந்து தீனதயாளன் கேட்க, “அங்கிள்”.. என்றவன் ஈ.. என்று இளித்தான் அவன்.
வெளியே வந்த யுகன்யா நேராக சென்றது ஒரு மனநல மருத்துவரிடம்.
தொடரும்..
No comments yet.