Episode 3

GS Novels | 02 Dec 2025 | Share

வேலை கிடைக்குமா? கிடைக்காதா?

யுகன்யா அந்த இன்டர்வியூக்கு வரும் பொழுது , மற்ற பிராசஸ் எல்லாம் வேறொரு தளங்களில் நடந்தது, 

எல்லாவற்றையும் முடித்துவிட்டு, பிரவீன், தன்வி யுகன்யா, மூவரும் அவர்கள் எம்டி இருக்கும் தளத்தில் அமர்ந்திருந்தார்கள், அப்பொழுது அவளுக்குள் மீண்டும் அதே விதமான ஒரு உணர்வு தோன்றியது,

” ஓ காட், இப்ப நான் என்ன பண்றது?” என்று தவிப்புடன் தன் கைகளை இறுக்க மூடிய படி அமர்ந்தாள், தன்னை முயன்ற வரை கட்டுப்படுத்திக் கொள்ள தவித்தாள்.

அருகிலிருந்த பிரவீன் தான் எதிர்ச்சியாக திரும்ப, அவள் மிகவும் பதற்றமாக இருப்பதை உணர்ந்தவன், “மிஸ். யுகன்யா  ஆர் யூ ஓகே?ஏன் இவ்வளவு நர்வஸா இருக்கீங்க? இன்டர்வியூக்கா பயப்படுறீங்க?” என்று கேட்டான்,

அவள் இல்லை என்பதை போல் தலையாட்டினாள், தன்வியும், “ஆஹா இவளுக்கு பதற்றம் இருக்கிறது பார்த்தா, ஒழுங்கா இன்டர்வியூ அட்டென்ட் பண்ணமாட்டா போலையே, நாம செலக்ட் ஆகிடலாம் போல” என்று ஒருவித குதூகலத்துடன் அமர்ந்திருந்தாள்.

“ஏன் இந்த பதற்றம், தவிப்பு?” என்பது அவளால் புரிந்து கொள்ள முடியவில்லை, “நான் ஓகே தான்” என்று மூச்சுப் பயிற்சி செய்து தன்னை கொஞ்சம் தெளிவு படுத்திக் கொண்டாள்,ஆழ பெருமூச்சு எடுத்து ஆனால் அவளுக்கு உள்ளுக்குள் தோன்றும் இந்த தவிப்பை மறைக்க பெரிதும் சிரமப்பட்டாள்,

ஆனால் எதுவும் முயற்சியினால் சாத்தியம் தானே, ஒரு இரண்டு நிமிடம் மூச்சுப் பயிற்சி அவளை இயல்பு நிலைக்கு திருப்பியது.

மனதை ஒருநிலைப்படுத்தி, “யுகன்யா எதை பற்றியும் யோசிக்காதே, இது எந்த மாதிரி ஃபீலிங்கா இருந்தாலும் இப்போது நீ உன் ஃபீலிங்ஸ்க்கு இடம் கொடுக்காதே” என்று தன்னைத்தானே தேற்றிக்கொண்டாள்.

முதல்ல இன்னைக்கு ஒரு சைக்காலஜிஸ்ட் போய் பார்த்தே ஆகணும் என்று மனதில் முடிவெடுத்துக் கொண்டாள் அவள். 

முதலில் பிரவீன் உள்ளே இன்டர்வியூ முடித்து வந்த பிறகு, அவனை காத்திருக்க சொன்னார்கள், அவனும் அந்த வழியாக வரவில்லை, அவன் வேறு வழியில் வேறு  ஹாலில் காத்திருந்தான், யுகன்யா அனுமதி கேட்டுக்கொண்டு உள்ளே சென்றாள்.

விஷ்வாதீரன்  பிரவீன் ஃப்ரோபைலை பார்த்துக் கொண்டிருந்தான், அவனுக்கு எதிர் இருந்த இருக்கையில் தினகரன் யுகன்யாவின் ப்ரொபைலை பார்த்துக் கொண்டிருந்தான்.

” ஹேய் செம பர்சன் விஷ்வா, கண்டிப்பா இந்த பொண்ணு இந்த கம்பெனிக்கு ஒரு பெரிய பிரெஸ்டிஜ் கிஃப்ட் என்று தான் சொல்லுவேன், அந்த பொண்ண நீ  கொஸ்டின் கேட்டாலும் கேட்கலன்னாலும் இந்த பொண்ணு செலக்ட் பண்ணு, பிகாஸ் அவளுடைய ப்ரொபைல் எல்லாம் பார்க்கும் பொழுது சச் எ அமேசிங் பர்சன்,

அவ நம்ம கம்பெனிக்கு கிடைப்பது நமக்கு தான் பெரிய பிராஃபிட் புரியுதா?” சொல்லிக் கொண்டிருக்கும்போது விஷ்வாவிடம் எந்த பதிலும் இல்லை. 

“என்ன நான் சொல்லிட்டே இருக்கேன்” என்று அவன் நிமிர, விஷ்வா தீரன் புருவங்கள் இடுங்கி எதிரே எதையோ உருத்து விழித்துக் கொண்டிருந்தான். 

கண்களிலோ முகத்திலோ எந்தவொரு பாவணையும் இல்லை, அமைதியாக இருந்தது, அவன் ஒருவரை அடி ஆழத்திலிருந்து வெறுத்தால் மட்டும்தான் இப்படி பார்ப்பான். நண்பனான அவனுக்கு இது நன்றாகவே தெரியும், யாரை இப்படி பார்த்துட்டு இருக்கான் என்று திரும்பிப் பார்க்க, எதிரே யுகன்யா தான்.,

” அடப்பாவி நீயாடா எம்டி, ஓ நீ தான் அந்த வீடி குரூப்ஸ் உடைய விரிவாக்கமா, விஷ்வாதீரன், சுத்தம், மிஸ்டர் VD இவ்வளவு அரெகென்ட்டா இருப்பாருன்னு நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கலையே, ஆஹா வேலை ஸ்வாஹா” என்று மனதில் நினைத்தாள்.

பின்னர் தான் தினகர் திரும்பி, யுகன்யாவை பார்க்க, சுத்தம் இவ பேருதான் யுகன்யாவா என்று நினைத்தவன், “வாட்ஸ் யுவர் நேம் என்றான், “ஐ அம் யுகன்யா புருஷோத்தமன்” என்றாள்.

விஷ்வா எந்த பதிலும் சொல்லவில்லை, அவன் அமைதியாக அவளைக் கூர்ந்து கவனித்துக் கொண்டு இருந்தான் 

உடனே தினகரன், “விஷ்வா நீ என்ன சொல்ல வரேன்னு ஐ கேன் அண்டர்ஸ்டாண்ட், சோ இவங்கள நான்..” என்று அவன் சொல்ல வர,

“இல்ல தினகர், என்னால  செலக்ட் பண்ண முடியாது” என்றான் தெளிவாக.

இருவரும் ஃபிரண்ட்ஸ் அதற்கு பிறகு தான் பார்ட்னர்,  “உன்னுடைய பர்சனல் வென்ஜென்ஸ இதுல காமிக்காத” என்று தினகர் கூற,

” டேய் நான் அப்படி எல்லாம் பண்ற ஆளா, சரியான இர்ரெஸ்பான்ஸிபில் பர்சன் மாதிரி இருக்கா, நடுரோட்டில் நின்னுட்டு, அதுவும் எப்படிப்பட்ட சிச்சுவேஷன்ல நின்னுட்டு இருந்தா, நீயும் பார்த்துட்டு தானே இருந்த, இதே மாதிரி நாளைக்கு கம்பெனில ஒரு இம்பார்ட்டண்ட் மீட்டிங்ல இம்போர்ட்டண்ட் சிச்சுவேஷன்ல நின்னா என்ன பண்றது?” என்று கேட்டான் அவன்.

தன்னை இப்படி உள்ளே வரவும் விடாமல், வெளியே போகவும் விடாமல், தன் எதிரிலேயே இவர்கள் இந்த வாக்குவாதத்தை நடத்துவது யுகன்யாவிற்கு சுத்தமாக பிடிக்கவில்லை, இருந்தாலும் இருவரும் பாஸ், அவளால் என்ன செய்ய முடியும் அவர்களேப் பேசி ஒரு முடிவுக்கு வரட்டும் என்பதை போல் அமைதியாக இருந்தாள்.

“டேய் அந்த பொண்ணு அப்படி நின்னதுக்கு மே பி ஏதாவது ரீசனா இருக்கலாம்” என்று தினகர் பேச வர,

“வாட்டெவர் இட்டிஸ், எந்த பர்சனல் ரீசனா இருந்தாலும் பர்சனல் ஃபீலிங்ஸ் மத்தவங்கள அஃபெக்ட் பண்ற அளவுக்கு இருக்குதுன்னா இட்ஸ் நாட் குட், அதுவும் ஒரு வொர்க் லொகேஷன்ல அந்த மாதிரி இவ நடந்துக்கிட்டா என்ன ஆகிறது, ஈவன் மார்னிங்  இந்த இன்டர்வியூக்கு தான் வந்திருக்கா, இவ பண்ண வேலையால இவளுக்கு மட்டும் இல்ல, நமக்கும் தான் அந்த நேரம் வீணா போயிருக்கும் உனக்கு அது புரியுதா?” என்று தினகரிடம் கேட்டான்.

இவன் இப்படியே பேசிக் கொண்டிருந்தால் நிச்சயம் யுகன்யாவை செலக்ட் செய்ய மாட்டான் என்று தினகருக்கு புரிந்தது, அவன் கூறும் பாயிண்ட் எல்லாம் வாலிட் தான், ஆனால் அவளுடைய ப்ரொஃபைல் அதைவிட வேலிடாக இருக்கிறது, ஏதோ ஒரு தவறு செய்து விட்டாள், ஆனால் இப்படிப்பட்ட ஒரு பெண் ஒரு கம்பெனிக்கு கிடைப்பது அரிது. 

அது அந்த கம்பெனிக்கு தான் நஷ்டம், ஆனால் விஷ்வாவை மீறி தினகரன் ஒன்றும் செய்ய முடியாது ,வேறு வழி இல்லாமல்,

” இங்கு பார் விஷ்வா, நானும் இந்த கம்பெனியுடைய பார்ட்னர் தான், டிசிஷன் அத்தாரிட்டி எனக்கும் இருக்கு, இந்த பொண்ண நான் செலக்ட் பண்றேன்” என்றான்‌.

“தீனா” என்று விஷ்வா கோபமாக கத்தவும், அந்த நேரம், “எக்ஸ்கியூஸ் மீ” என்று அரைக்கதவை தட்டி விட்டு உள்ள வந்தார் தீனதயாளன், தனக்கு முன் ஒரு பெண் நின்று கொண்டிருப்பதை கவனித்தார், 

அவர் குரல் கேட்டு அவளும் வழி விட்டு நகர்ந்தாள், அவளையும் ஒரு முறை பார்த்துவிட்டு, இருவரும் வாக்குவாதம் செய்து கொண்டிருப்பதையும் பார்த்தார். 

“என்ன இங்க நடக்குது? ஒரு கேண்டிடேட் நிக்க வச்சுட்டு நீங்க இங்க ஆர்கியூமென்ட் பண்ணிக்கிட்டு இருக்கீங்க, இதுதான்  இன்டர்வியூ ப்ராஸ்ஸசா, இட்ஸ் நாட் ஃபேர்ல” என்று கேட்டார் கோபமாக..

“இன்டர்வியூ ப்ராசஸ்காக தான் இந்த ஆர்கியூமென்ட்” என்றான் விஷ்வா,

தினகர், “அங்கிள் இன்னைக்கு மார்னிங் ஒரு இன்ஸிடெண்ட் நடந்தது, அதை பேஸ் பண்ணி இவன் இந்த பொண்ணு ரிஜெக்ட் பண்றான், அட் தி சேம் டைம் அந்த பெண்ணுடைய ப்ரொஃபைல நீங்களே பாருங்க” என்று காட்டினான்.

விஷ்வா யுகன்யாவை முறைத்துக் கொண்டிருந்தான், நான் உனக்கு சலைத்தவள் இல்லை என்பது போல் யுகன்யாவும் விஷ்வாவை அப்படி முறைத்துக் கொண்டிருந்தாள், 

எம்டியா, இல்லை எமனா கூட இருந்துக்க, எனக்கு உன்கிட்ட என்ன பயம் என்று அவளும், அதே ரேஞ்சுக்கு லுக்கு விட்டாள்.

” திமிரு, திமிரு, உடம்பு முழுக்க திமிரு” என்று மனதில் நினைத்திருந்தான் விஷ்வா,

“சரியான அரகண்ட்டா இருப்பான் போல இருக்கு, இந்த வேலை கிடைக்கலனா கூட பரவாயில்லை, ஆனால் இவன்கிட்ட மட்டும் வேலை செஞ்சிட கூடாது, நம்மள வச்சு வச்சு செய்வான் போல இருக்கு” என்று மனதிற்குள் புலம்பினாள்.

ஆனால் இது நல்ல கம்பெனி, இங்க வேலை செய்வதே ஒரு மிகப்பெரிய பெயர் தான்.

பின்னர் தீனதயாளன், “எதுவா இருந்தாலும் யோசித்து பண்ணுங்க” என்றவர், யுகன்யாவிடம், “நீங்க கொஞ்சம் வெளிய வெயிட் பண்ணுங்க, ஐ கால் யூ பேக்” என்றார்.

” ஓகே சார்” என்று அவளும் வெளியே சென்று விட்டாள் பணிவாக, பின்னர் இருவரும் எழும்ப எம்டி சீட்டில் வந்து அமர்ந்தார் தயாளன். 

“இன்னும் என்ன உங்க பிரச்சனை?” என்று கேட்டார் தயாளன், இந்த விடி குரூப்ஸின் நிறுவனர், விஷ்வாவின் தகப்பன் விஷ்வாவும் தினகரன் சிறுவயதிலிருந்து நண்பர்கள் இப்போது பிசினஸ் பார்ட்னர்கள், இருவரும் சேர்ந்துதான் ஃபாரினில் மிகப்பெரிய கம்பெனி தொடங்கி நடத்திக் கொண்டிருக்கிறார்கள். 

தினகர் காலையில் நடந்ததை தீனதயாளிடம் சொன்னான், பின்னர் இப்போது அவளின், ப்ரோபைலையும் நீட்டினான் இன்டர்வியூ அதற்கு முன்பாக நடந்த டெஸ்ட் கிராபிக் டிசைன், அவள் செய்த வீடியோ எல்லாவற்றையும் அவருக்கு காண்பித்தான்.

“பாருங்கள் இந்த பொண்ணு மார்னிங் எந்த மாதிரி சிச்சுவேஷன்ல இருந்ததுன்னு நமக்கு தெரியாது, பட் இவ்வளவு ஸ்கில்ஸ் இருக்கிற பொண்ணா எப்படி விட சொல்றீங்க?” என்று கேட்டான் தினகர்,

  தயாளன் விஷ்வை பார்க்க அவன் கண்களின் கோபம் அப்பட்டமாக தெரிந்தது, “விஷ்வா நீ என்ன சொல்ற?” என்று கேட்டார். 

“டேட் ஐ அம் நாட் சாடிஸ்பைட் வித் தட், எவ்வளவு ஸ்கில்ட் பர்சனா இருந்தாலும், ப்ரெசென்ஸ் ஆஃப் மைண்ட் இல்லன்னா ஒன்னும் பண்ண முடியாது, மார்னிங் அவ்ளோ திட்டுறேன் ஒன்னும் சொல்ல மாட்றா, தென் இவ எப்படி..?” என்று கேட்டான் விஷ்வா..

“இங்க பாரு விஷ்வா இந்த விஷயத்துல நான் தினாக்கு தான் சப்போர்ட் பண்ணுவேன், பிகாஸ் நீ வந்து எல்லாத்தையும் மணி மயின்ட்டோட  பீலிங்ஸ் இல்லாம பார்க்கிற, எல்லா விஷயத்திலுமே ஃபீலிங்ஸ் இல்லாம இருக்கக்கூடாது, கொஞ்சமாவது ஹியுமானிட்டின்னு இருக்கணும்,

மேபி அவள அவ்ளோ திட்டு திட்டினேன்னு சொன்னியே, அவளுக்கு என்ன பிரச்சனைன்னு உனக்கு கேட்கணும்னு தோணுச்சா, உன்னுடைய பாயிண்ட் ஆஃப் வியூ ,உன்னுடைய டைம் வேஸ்ட் ஆகுது, உன்னுடைய ஒர்க் பாதிக்குது, இதைப்பற்றி தான் யோசிச்ச தவிர,

ஒரு பொண்ணு சிக்னல்ல அப்படி நிக்கிறா அப்படின்னா என்ன,ஏது, ஏதாவது எமர்ஜென்சி, அவளுக்கு கால் வந்ததா இல்ல சடனா அவளுக்கு ஏதாவது மெசேஜ் வந்ததானு ஏதாவது விசாரித்து இருக்கணும், இவ்வளவு பெரிய கம்பெனி எம்டியா இருக்கிறது முக்கியமில்லை, 

நீங்க ஒர்க்கர்ஸுடையா ஃபீலிங்ஸ், அவர்களுடைய குறை நிறைகள் எல்லாம் கவனிக்கணும், நான் அப்படி இருந்ததனால் தான், என்னால இந்த ஃபீல்டுல இவ்வளவு சீக்கிரம் இப்படி வர முடிஞ்சது, நீ என்னுடைய சன், உன்கிட்ட எப்படி அந்த ஹிமானிட்டி இல்லாம போச்சு” என்று  கேட்க விஷ்வா எதுவும் பேசாமல் தன் தந்தையை உறுத்து விழித்தான்.

விஷ்வா அப்படிப்பட்டவன் கிடையாது தான், ஆனால் ஏனோ அவனுக்கு முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பது போல, யுகன்யாவின் முதல் சந்திப்பை பிரச்சினையில் தொடங்கியதால் அது அவனுக்கு பிடிக்கவில்லை,

” இப்ப என்னதான் சொல்றீங்க, இட்ஸ் அப் டு யூ” என்றவன் அந்த அறையில் இருந்து வெளியேறினான்,

“விஷ்வா..” என்று தினகரன், தயாளனும் கத்தியும் கூட நிற்காமல் சென்று விட்டான், வெளியே அவன் கோபமாய் செல்வதை பார்த்த யுகன்யா தன்னால் ஏதாவது பிரச்சினை வந்திருச்சா என்று யோசனையுடன் பார்க்க, நின்று அவளை ஒருமுறை முறைத்து விட்டு சென்று விட்டான் அவன்.

இதைப் பார்த்த தன்விக்கு, “ஆஹா பாஸ் ஏன், இவள இப்படி முறைக்கிறார் ,அப்போ வேலை போச்சா” என்று நினைத்தபடி, தனக்குத் தான் அந்த வேலை என்று மனதில் சந்தோஷப்பட்டு கொண்டாள்.

உள்ளே இருந்து, அவளை அழைப்பதாக யுக ன்யாவிடம் சொன்னார்கள், பதற்றத்துடன் உள்ளே சென்றாள் அவள், வேலை கிடைக்குமா கிடைக்காதா? என்று..

தொடரும்..

    No comments yet.