” … ஆயிற்று , இன்றோடு பதினோரு நாட்கள் ஓடி விட்டது அவள் என்னை விட்டுச் சென்று…. எனக்கு சிறிய அளவில் காய்ச்சல் வந்தால் கூட கண் கலங்கும் என்னவள் தான் இன்று , என்னை பிடிக்கவில்லை என்று சொல்லி என்னை விட்டு சென்றாள் . அவள் கொடுத்த ரணங்கள் நெஞ்சில் வடுக்கலாய் இருந்தாலும் , மருந்தாகவும் அவளே வேண்டும் என கேட்கிறதே காதல் கொண்ட இதயம் ….. “
செவ்வானம் சிவந்து,பூமிக்கு சூரியன் வரவிருப்பதை முன்னறிவிப்பாய் கூறிக் கொண்டு இருந்தது. தான் நேற்றிரவு டைரியில் எழுதிய பக்கங்களை புரட்டிக் கொண்டிருந்தான் வெற்றி .
அதிகாலை எழுநது தொடங்கி நடு சாமத்தில் உறங்குவது வரை ஆயிரம் வேலைகள் செய்தாலும் அவளது நியாபகம் நெஞ்சை கசக்கி பிழிந்து கொண்டுதான் இருக்கிறது அவனுக்கு. ஆனால் அவன் முகத்தில் இருந்து ஒன்றையும் படிக்க இயலாது.
இன்று நேற்று அல்ல முகமூடி போட்டு வாழ்ந்தே பழகி போனவன் அவன் , நடுவில் உள்ள சிறிது நாட்களைத் தவிர…
வெற்றிவேந்தன் , பெயருக்கு ஏற்றது போல வெற்றி வாகை சூட வென்றே பிறந்தவன். ஆயினும் , இப்போது நடப்பது
கணிப்பதற்கு கெல்லாம் அப்பாற்பட்டது.
திகழ்செழியன் – ராசாம்மாள் வீரனூரில் வாழ்ந்து வரும் பெரிய தலைக்கட்டு, அவர்கள் வீட்டையே பெரிய வீடு என்று தான் கூறுவார்கள் . அவ்வூரின் தலைவரும் அவரே ஆவார்.
அவர்களுக்கு நான்கு பெண்ணும் ஒரு ஆணுமாய் ஐந்து பிள்ளைகள்.திகழ்செழியன் ஊருக்கே நாட்டாமை செய்தாலும், வீட்டில் மனைவியை கலந்தாலோசித்து தான் எந்த ஒரு முடிவையும் எடுப்பார் .
தந்தையை பார்த்து வளர்ந்த வெற்றியும் அவளுக்கு எவ்வித குறையும் வைக்கவில்லை தான் .
அவ்வீட்டில் உள்ள யாராலும் வெளியே தலைக்காட்ட முடியவில்லை.முகத்திற்கு நேராக பேசவில்லை என்றாலும் இந்த பத்து நாட்களாக அவ்வூரின் தலைப்பு செய்தி இக்குடும்பமே .
வயலில் வேலை செய்யும்போது ஆகட்டும்,காலை மாலை நேர டீக் கடை அலவளாவலில் ஆகட்டும்,ஆலைகளில் பணிக்கு இடையே ஆகட்டும்,ஆலமர நிழலில் ஊர் வம்பு பேசும் போது ஆகட்டும்,கண் காது மூக்கு வைத்து ,
“நம்ப வெற்றி தம்பியை போய் அந்த பொண்ணு விட்டுட்டு போயிடுச்சு பாரு”
” அழகில்லையா அறிவில்லையா , என்னத்துக்கு குறைச்சல் “
“பணங் காசுக்கும் ஒன்னும் பிரச்சினையில்லை”
“மாமியார் மருமகள் சண்டையா இருக்குமா ? “
” புடிச்சு தான அன்னைக்கு கல்யாணத்துக்கு ஒத்துக்குச்சி ? “
” விரைப்பாவே இருக்குறவரு , அந்த பொண்ணுக் கூட இருக்கும் போது தான்
சிரிச்சாப்ல இருந்தாரு “
” பாவம் , யாரு கண்ணு பட்டுச்சோ “
” சொந்த பந்தம் வேற யாரும் இல்லனு சொன்னுச்சே,எங்க போச்சோ ?”
” வேற யாரையும் மனசுல நினைச்சுட்டு இருந்திற்பாலோ”
” அய்யோ ! அந்த தம்பிக்கா இப்படி நடக்கனும் , .. “
அப்படி இப்படின்னு பலபேர் பல மாதிரி பேச, வெற்றி வாழ்க்கையை பற்றி பஞ்சாயத்து ஓடிக் கொண்டிருந்தது மூலை முடுக்கெல்லாம்.
அவனது அறையிலேயே ஒட்டியிருந்த குளியலறையில் குளித்து வயலுக்கு செல்ல கிளம்பி வந்தான் வெற்றி .
அவன் வருவதை பார்த்ததும் , அவனுக்கு பரிமாற வந்தார் ராசம்.என்னதான் மனதை கவலைகள் அறுத்தாலும் , மகனுக்கு பார்த்து பார்த்து பரிமாறினார்
இட்லியும் கடலை சட்னியும் செய்திருந்தனர் சமையல் வேலைக்கென்று இருக்கும் எழுபது வயதான ரேவதி பாட்டியும் , முப்பத்தி இரண்டு வயதான மங்கையும்
ரேவதி பாட்டிக்கு உறவினர் என்று எவருமில்லை.கல்யாணம் செய்து இரு வருடங்கள் கணவரோடு நன்றாக வாழ்ந்தவர் தான் .
அப்போது உலகெங்கும் பரவிய விஷக் காய்ச்சலுக்கு கணவரையும் பிறந்து ஒரு வயது கூட பூர்த்தியாகாத குழந்தையையம் பறிகொடுத்து,வேலை தேடி அலைந்தவரை, ராசத்தின் மாமியார் தேனம்மாள் அரவனைத்து சமையல் பொறுப்பை கையில் கொடுத்தார் .
மங்கை ஆறு வருடங்களாக வீட்டு வேலைக்கென இருப்பவள்,சமையல் வேலைக்கும் உதவியாக இருப்பாள் .
அவ்வீட்டு நிலைபாடுகள் அனைத்தும் தெரிந்திருந்தாலும் அவர்கள் மூலமாக எந்த வீட்டு விஷயமும் வீட்டில் இருந்து வெளியில் செல்லாது. அவ்வளவு நம்பிக்கைக்கு உரியவர்கள் .
இரண்டு இட்லிகளை சாப்பிட்டு போதும் என எழுந்தான் வெற்றி . தாய் மனம் பிள்ளை உண்ண வில்லையே என ஏங்கினாலும் என்ன சொல்லி தேற்றுவது என தெரியாமல் கடுக்காப்பி கொடுத்தே அனுப்பினார் வெளியே .
ரேவதி பாட்டிக்கும் மங்கைக்கும் கூட அவன் உண்ணாதது மனதை அலைக்கழித்தது .
குளித்து வெளியே வந்ததுக்கள் செழியனும் உணவு வேண்டாம் என்று கூறி விட அவருக்காக கேப்பைக் கஞ்சி வைத்து கொண்டு வர சொல்லி , எப்படியோ பேசி பேசியே குடிக்க வைத்தார் ராசம் .
இருவரையும் எப்படியோ உண்ண வைத்த வரை தேற்றி உண்ண வைக்க தான் அங்கு யாருமில்லை !
ஆலைக்கு வந்த திகழ்செல்வத்திற்கு அங்கு பெரிதாக வேலை ஒன்றும் இருக்கவில்லை . என்றிலிருந்து வெற்றி தொழிலில் தந்தைக்கு துணையாக கால் பதித்தானோ அன்றிலிருந்து திகழ்ச் செல்வத்திற்கு வேலைப்பளு குறைவுதான் .
மேற் பார்வை யிட்டு நிறைகுறைகளை சொல்வது மட்டுமே அவரது வேலையாக இருக்கிறது .
அனைத்திலும் வெற்றி, தன்னைவிட மிகச் சிறந்து விளங்குவதை கண்டு தந்தையாக மிகவும் பெருமை கொண்டவர் , மீசையை முறுக்கி விட்டுக் கொள்வார், யாரேனும் அவனை பெருமையாய் பேசினாள்.
அத்தனை பெருமிதம் அவரது முகத்தில் தெரியும்.
” மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல்எனும் சொல் “
திருவள்ளுவர் எழுதிய திருக்குறளின் இவ் வரிகள் இந்த தந்தை மகனுக்கு சரியாக பொருந்தக் கூடியது .
( இக்குறளின் பொருள் :
தன்னைக் கல்வி அறிவு உடையவனாய் ஆளாக்கிய தந்தைக்கு மகன் செய்யும் கைம்மாறு, பிள்ளையின் ஒழுக்கத்தையும் அறிவையும் கண்டவர் , இப்பிள்ளையைப் பெறுவதற்கு இவன் தகப்பன் என்ன தவம் செய்தானோ என்று சொல்லும் சொல்லைப் பெற்றுத் தருவதே )
வயலுக்கு வந்த வெற்றியை அங்குள்ள வேலைகள் தனக்கு உள்ளே இழுத்துக் கொண்டது .
அங்குள்ள வேலைகளை அங்கு வேலை செய்யும் ஆட்களுக்கு பிரித்துக் கொடுத்து என்னென்ன எவ்வாறு செய்ய வேண்டும் என்று ஒவ்வொருவருக்காக எடுத்துக் கூறி அவனும் அவர்களுடன் சேர்ந்து செய்து என மதிய வேலையே வந்து விட்டது .
அங்கு வீட்டில் வேலை செய்யும் வேலை என்பவன் வெற்றிக்கான மதிய உணவை வீட்டில் இருந்து கொண்டு வந்தான் .
தான் சாப்பிடாமல் இருந்தால் தன் அம்மா மிகவும் வருத்தப்படுவார் என்று உணர்ந்த வெற்றி முடிய வில்லை என்றாலும் முயன்று எப்படியோ உள்ளே தள்ளினான்.
வாழ்க்கை சில நேரங்களில் நமக்கு எவ்வளவு கஷ்டம் இருந்தாலும் அதை வெளிக் காட்டாது , பிறருக்காக ஒரு சின்ன சிரிப்பை ஒட்டிக்கொண்டு எப்படியோ வாழவைத்து விடுகிறது நம்மை .
மதியம் போல் அரிசி ஆலைக்கு வந்து தான் இதற்கு மேல் பார்த்துக் கொள்வதாகக் கூறி தந்தையை வீட்டிற்கு அனுப்பினான் .
இரவு வரை வேலை அவனை ஆட்கொண்டது . இரவு கடையைப் பூட்டி விட்டு வீட்டுக்கு வந்து தன்னறைக்கு சென்றான் .
கதவை திறந்ததும் அவனவளின் நியாபகம் நினைவுகளில் .
கனத்த மனத்தோடு முகம் கை கால் கழுவி கீழிறங்கி வந்தவன் தந்தையோடு வந்தமர்ந்து இரவு உணவு உண்டனர்.
சாப்பிட்டு விட்டு கூடத்திற்கு வந்தமர்ந்தனர் . என்ன பேசுவது என்று யாருக்கும் தெரியவில்லை . வேலை விஷயத்தைப் பற்றி அப்பாவும் பிள்ளையும் கருத்துகளை பரிமாறிக் கொண்டனர் .
அப்போது , அன்று மாலை கீதா வந்ததை பற்றியும் , அவள் நம் நிலையை நினைத்து புலம்பி அழுததை பற்றியும் கூறினார் . கனத்த சூழ்நிலை அந்த சனம் அங்கு .
கீதா , வெற்றியின் இரண்டாவது அக்கா . பக்கத்து டவுனில் தான் கட்டி கொடுத்தனர் . அக்காவின் கணவர் ராம் வங்கியில் பணிபுரிகிறார் . இரண்டு மகன்கள் .
பெரியவன் கதிர் பி.இ. சிவில் மூன்றாம் வருடம் படிக்கிறான் . சிறியவன் பதினோராம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறான் .
இருவருக்குமே மாமன் என்றால் உயிர் .
ஏதேனும் வேன்று மென்றாள் தொடங்கி , சின்ன சின்ன விசயத்தில் கூட மாமனிடம் கருத்து கேட்டே செய்வர் .
அந்த கனத்த நொடிகளை கடக்க வேண்டி , ” தம்பி போய் செத்த படுத்து எந்திரி , நாளைக்கு வெரசா உரம் பார்க்க போனுள்ள ” என்றார் .
அவளுக்கு புடிக்கும் என வாங்கிய பஞ்சு மெத்தை இவனைப் பார்த்து சிரித்தது .
அவளுடன் இருந்த நாட்கள் கண்முன்
தோன்றியது , தென்றலும் புயலும் ஒரு சேர தாக்கியதை போல் உணர்ந்தான் .
பாயை விரித்து படுத்தான் .உறக்கம் வருவேனா என் ஆட்டம் காட்டியது . கனவிலும் வந்தால் அவள் . புரண்டு கொண்டே இருந்தான் தூக்கம் வராமல் .
நடுநிசியும் வந்தது ! நிலவுகள் அவளது உலாவளை தொடர்ந்து கொண்டிருந்தாள் .
” உயிரே உயிரே வந்து
என்னோடு கலந்து விடு
உயிரே உயிரே
என்னை உன்னோடு கலந்து விடு
நினைவே நினைவே எந்தன் நெஞ்சோடு கலந்து விடு
நிலவே நிலவே இந்த
விண்ணோடு கலந்து விடு “
அவள் கைகள் கொண்டு அவன் நெற்றியை நீவி விட சுகமாய் உறங்கினான் கானலான அவள் பிம்பத்தை உண்மை என நம்பிக் கொண்டு !
உறவு வரும் ….
என்றும் அன்புடன் ,
ரம்யா ராமநாதன் .
( ஹாய் மக்களே ! ஒரு சின்ன வேண்டுகோள் அப்படியே படிச்சிட்டு போகாம கொஞ்சம் லைக் கமெண்ட் ஏதாவது போட்டீங்கன்னா எனக்கு கொஞ்சம் சப்போர்ட்டிவா இருக்கும் ! உங்களோட கருத்துக்களை கண்டிப்பா சொல்லுங்க ஏதாவது தப்பு இருந்தால் திருத்திக்கிறேன் ,
பூஸ்ட் இஸ் தி சீக்ரெட் ஆஃப் மை எனர்ஜி அப்படிங்கிற மாதிரி உங்களோட கமெண்ட்ஸ் எல்லாம் தான் என்னோட ம்
ஸோ கொஞ்சம் பார்த்து பண்ணி விடுங்க மக்காஸ்
இன்றும் என்றும் என்றென்றும் உங்கள் கருத்துக்களுக்காக ஆவலோடு காத்திருக்கும் ராமநாதனின் ரம்யா )
No comments yet.