Episode 25

ஶ்ரீ துர்க்கா | 29 Jan 2026 | Share

அல்லி 25

ஏற்காடு

“என்னாச்சு மேடம்… இந்த வீட்டோட ஓனர் என்ன சொல்றாங்க… அவங்களுக்கும் அந்த ஆரக்ஷா பத்தி எதுவும் தெரியாதாமா..?”

ஆர்வமாய் கேட்டார் வாசுதேவன்.

“தெரியாதுன்னு தான் சொல்றாங்க… அவங்க ஃபேஸ்புக் போஸ்ட் போட்டாங்களாம்… அத பாத்து தான் அந்த பொண்ணு வீட்ல இருந்து கான்டாக்ட் பண்ணி வீடு கேட்டாங்களாம்… அவங்க கான்டாக்ட் பண்ணின நம்பரும், இவங்க ஃபேஸ்புக்ல போட்டிருந்த போஸ்ட்டும் ஷேர் பண்ண கேட்டிருக்கேன்…‌ அனுப்பிச்சு விட்றதா சொன்னாங்க…” இனியா சொல்ல சொல்லவே அவளது ஃபோன் மெசேஜ் டோன் வாட்ஸப்பில் செய்தி வந்திருப்பதை அறியத் தந்தது. 

வாட்ஸ்அப்பை ஓப்பன் செய்து பார்த்தவள், “ஊப்ஸ்… அவங்க அனுப்பிச்ச நம்பரும் நாங்க வச்சிருக்க நம்பரும் சேம் தான் சார்… பரவால்ல, இங்க அக்கம் பக்கத்தில இருக்கிறவங்கள்ல யாருக்காச்சு அவங்கள பத்தி தெரியுதான்னு கேட்டு பாக்கலாம்…” என்றவள், செய்தி அனுப்பி வைத்ததற்காக அந்த வீட்டு ஓனரம்மாவுக்கு நன்றி கூறி பதில் செய்தி அனுப்பி வைத்தாள். 

இருவரும் சேர்ந்து அக்கம் பக்கத்தில் விசாரித்த போதும், அவர்களுக்கு இப்படி ஒரு குடும்பம் இங்கு இருந்ததாக தெரிந்ததே தவிர, அவர்கள் எங்கு சென்றார்கள் எனத் தெரிந்திருக்கவில்லை. 

“அவங்க கொஞ்சம் வித்தியாசமான கேரக்டர்ஸ் சார்… யாரு கூடவும் க்ளோஸா பழக மாட்டாங்க… சரி, பெரியவங்க தான் அப்படின்னு பாத்தா அந்த சின்னப் பொண்ணும் எப்பவும் உர்ருனு தான் இருக்கும்… நாங்க எவ்வளவோ ட்ரை பண்ணி, முடியாத கட்டத்துல நாங்களாவே அவங்க கிட்ட பேச்சை குறைச்சுக்கிட்டோம்…”

பெரும்பாலான பதில்கள் இப்படி இருக்க, “அப்படி ஒரு குடும்பம் இங்கு இருந்ததா..?” என்ற பதில் கேள்வியைக் கேட்டுக் கூட இரண்டு குடும்பங்கள் ஷாக் ட்ரீட்மெண்ட் கொடுத்தது இருவருக்கும். 

ஆரக்ஷா பற்றி எந்தவொரு தகவலும் பெயர்ந்திராத நிலையில், திரும்பி தமது மகிழுந்துக்கு வந்தனர் இனியாவும் வாசுதேவனும். 

“சார், ஆரக்ஷா பத்தின‌ இன்வெஸ்டிகேஷன இந்த இடத்துல நிறுத்திக்கலாம்… தென்றல் பத்தி இன்னும் டீப்பா விசாரிக்கலாம்… மே பீ தென்றல் தன்னோட க்ளோஸான பர்சன் யாருக்காச்சு ஆரக்ஷா பத்தி சொல்லி இருக்கலாம்… இல்லன்னாலும், வேற ஏதாவது உபயோகமான தகவல் நமக்கு கிடைக்கலாம்… இப்போ நம்ம சுலோச்சனா மிஸ் கிட்ட விசாரிக்க போகலாம்… இன்னைக்கு அவங்க ஸ்கூல் லீவ்ங்கிறதுக்கு என்ன ரீசன் சொன்னாங்க ஹெச்.எம்..?”

“ஃபீவர்னு சொல்லி தான் லீவ் கேட்டிருக்காங்க…”

“ஓகே… அவங்களோட அட்ரஸ் அன்ட் ஃபோன் நம்பர் கலெக்ட் பண்ணினீங்களா..?”

“யெஸ் மேடம்…”

“கால் பண்ணி நாங்க இன்வெஸ்டிகேஷனுக்கு வர்றதா சொல்லிடுங்க… அவங்க வீட்டுக்கு போய்ட்டு, அவங்க பாடி கன்டிஷன் பாத்து மத்த விசயங்களை பேசுறது பத்தி யோசிக்கலாம்…”

“சரிங்க மேடம்…” என்றவர், அடுத்த நிமிடமே சுலோச்சனா மிஸ்ஸிடம் தகவலைப் பெயர்த்திருந்தார்.

“என்ன சொல்றாங்க..?”

“தென்றலோட விசயம்னா எனி டைம் அவங்க வீட்டுக்கு வரலாமாம்… தென்றல் கிடைச்சா மட்டும் போதும்னு சொன்னாங்க…”

“ஓஓ… சரி வாங்க சார், கிளம்பலாம்…”

இனம் புரியாத இரு முகங்களையும் பார்த்து முதலில் தடுமாறிய சுலோச்சனா, பின்னர் தானாகவே அவர்கள் யாரென ஊகித்துக் கொண்டு உள்ளே வரவேற்றார். 

இனியாவும் வாசுதேவனும் ஆளுக்கொரு நாற்காலியை ஆக்கிரமித்துக் கொள்ள, அவர்கள் முன்பிருந்த சோஃபாவில் அமர்ந்தார் சுலோச்சனா. 

“தென்றல் பத்தி ஏதாவது தகவல் கிடைச்சிருக்கா மேடம்..?” 

அவரே உரையாடலை ஆரம்பித்தும் வைத்திருந்தார்.

“அன்ஃபார்ச்சுனேட்லி நோ… தென்றல் பத்தி யாருமே ஒரு வார்த்தை தப்பா சொல்லல… அவளோட பேக் ரவுண்ட் பத்தியும் தீர விசாரிச்சுட்டோம்… அவள கடத்தற அளவுக்கோ கஷ்டப்படுத்தற அளவுக்கோ அவங்களுக்கு எதிரிகள் யாரும் கிடையாது. சீரியல் கிட்னாப்பிங்கும் இல்லை… மனித உடல் பாகங்களை எடுத்து விற்பனை பண்ணற க்ரூப்போட வேலை மாதிரியும் தெரியல… வழமையான கேஸஸ்ல ஐ விட்னஸ் இருக்கும் இல்லன்னா சிசிடிவி ஃபூட்டேஜஸோட சப்போர்ட் இருக்கும்… அட்லீஸ்ட் விக்டிம் எந்த இடத்துல காணாமப் போனாங்கன்னாவது தெரிஞ்சிருக்கும்… ஆனா இந்த கேஸ்ல எந்த க்ளூவுமே இல்லை எங்களுக்கு… தென்றல் வழமையா போய் வர்ற பாத் வேல ஒரு மளிகைக்கடை இருக்கு… அதில இருக்கற சிசிடிவி ஃபூட்டேஜஸ்ல தென்றல் க்ராஸான மாதிரி எந்த எவிடென்ஸும் இல்லை… சந்தேகப்படற மாதிரி எந்த வண்டியும் கூட அந்த இடத்தை கடந்து போகல… எந்த ஒரு லூப் ஹாலுமே இல்லாம தான் இந்த கேஸ் மூவ் ஆகிட்டு இருக்கு…”

“ஜீஸஸ்…” என சிலுவைக்குறி போட்டுக் கொண்டார் சுலோச்சனா.

“நீங்க கிறிஸ்டியனா..?

“ஆமா மேடம்… நான் கிறிஸ்டியன், என் ஹஸ்பன்ட் ஹின்டு… இன்டர் ரிலியன் மேரேஜ் எங்களது… அதனால ரெண்டு மதம் சார்ந்த செயற்பாடுகளும் ஓரளவு தெரியும் எனக்கு… தென்றல் விசயத்தில கூட சாஸ்திர சம்பிரதாயங்கள் நிறைய இருந்திச்சே… பாவம், கல்யாணம் ஆகியும் குழந்தை பெத்துக்க அனுமதிக்கல அவள… அவளுக்கு குழந்தைங்கன்னா ரொம்பவே இஷ்டம் மேடம்…”

“கேள்விப்பட்டேன்…‌ கூடவே, சூப்பர்நேச்சுரல் பவர் பத்தின பயமும் அவளுக்குள்ள இருந்திச்சாமே..?”

“ஆமா மேடம்… ஏதோ ஒரு கருப்பு சுழல் தன்னையே சுத்தி சுத்தி வர்ற மாதிரி சொல்லிட்டு இருந்தா… அவ ஹஸ்பன்ட் கூட போய், நல்லா சாஸ்திரம் பாக்கக் கூடிய ஜோசியக்காரர் ஒருத்தர் கிட்ட இது சம்ந்தமான விபரங்களை கேக்கலாம்னு இருந்தா… அதுக்குள்ள தான் இப்படி ஆயிடுச்சே…”

“யாரைப் பார்க்கப் போறதா இருந்தான்னு தெரியுமா உங்களுக்கு..?” 

“இல்ல மேடம்… அது தென்றலுக்கே தெரியாது… அவ ஹஸ்பன்ட் அந்த மாதிரி ஜோசியம் பாக்கக் கூடிய ஒருத்தரை தேடிட்டு இருந்தார்… என்னோட பங்குக்கு நானுமே விசாரிச்சு பாத்தேன்… பட் அவளோட பிரச்சினைக்கு தீர்வு சொல்லக் கூடிய ஒருத்தரை எங்களால கண்டுபிடிக்கவே முடியாம போய்டுச்சு…”

“ஓஓ… இப்ப எங்களுக்கு இரண்டு விசயங்களை மாத்திரம் யோசிக்கிற மாதிரி இருக்கு… ஒண்ணு, தென்றலுக்கு ஸ்கூலுக்கும் மளிகைக் கடைக்கும் இடையில இருக்கற கேப்ல தான் ஏதாவது ஆகி இருக்கணும். இல்லன்னா, ஏதோ ஒரு காரணத்துக்காக தென்றல் மறுபடியும் ஸ்கூலுக்குள்ள வந்திருக்கணும்… ஆனா அது அவ வழமையா வர்ற என்ட்ரன்ஸ் வழியா இருக்காது… ஏன்னா அவங்களோட ஃபோன் ஸ்கூலுக்குள்ள தான் லாஸ்ட் லொக்கேஷன் காட்டுது… அதே நேரம், வாசல்ல இருக்கற சிசிடிவில அவ திரும்ப வந்த மாதிரி இல்ல… இந்த ரெண்டும் தான் இப்போதைக்கு யோசிச்சோம்… ஏதோ ஒரு இடத்துல வச்சு தென்றலை கடத்திட்டு, திரும்ப வந்து அவ ஃபோனை ஸ்கூலுக்குள்ள போட்டுட்டு போற அளவுக்கு ஒரு கிட்னாப்பர் இருப்பாங்கன்னு தோணல…”

“முதல்ல இவ்வளவு ஓப்பனா பேசறதுக்கு ரொம்ப நன்றி மேடம்…‌ யாரும் இவ்வளோ டீடெய்லா அவங்க இன்வெஸ்டிகேஷன் டீடெய்ல்ஸ் சொல்ல மாட்டாங்க… அதான்…”

“நோ நோ… அது எங்க கடமை… நாங்க எந்த இடத்துல நின்னுட்டு இருக்கோம்னு கண்டிப்பா விக்டிம் சார்பில இருக்கற ஆட்களுக்கு தெரியப் படுத்த வேண்டியது எங்களோட பொறுப்பு… பை த வே, நீங்க பத்தாம் வகுப்பு பிள்ளைங்களுக்கு க்ளாஸ் எடுக்கறீங்களா ஸ்கூல்ல..?”

“இல்லையே மேடம்…”

“ஓஓ ஓகே… ஆரக்ஷான்னு ஒரு பொண்ணு பத்தி தெரியுமா உங்களுக்கு..?”

“ஆரக்ஷாவா… இல்லையே மேடம்… எனக்கு அப்படி யாரையும் தெரியாதே…”

“தென்றல் எதுவும் சொன்னதில்லையா அவங்க பத்தி..?”

“இல்ல மேடம்… இதுவரைக்கும் தென்றல் என்கிட்ட அப்படி ஒரு பேரே யூஸ் பண்ணினதில்ல…”

“நான்‌ உங்களை ஒரு கேள்வி கேக்கறேன், அதுக்கு நல்லா யோசிச்சு பதில் சொல்லுங்க… தென்றல் எப்படிப்பட்ட கேரக்டர்…‌ உங்ககிட்ட எல்லாமே ஷேர் பண்ணிக்கற கேரக்டரா, இல்லன்னா சில விசயங்கள்ல மூடியாவும் இருந்திருக்காங்களா..?”

“இல்ல மேடம், அவ என்கிட்ட எல்லாமே ஷேர் பண்ணிக்கிற கேரக்டர் கிடையாது… அவளோட விசயத்திலயும் சரி, மத்தவங்க விசயத்திலயும் சரி… ஒரு விசயம் ரகசியமா இருக்கணும்னா அத வேற யார் கிட்டவும் மூச்சு கூட விட மாட்டா… சில விசயத்துல ஓப்பன் டைப், சில விசயங்கள்ல மூடி டைப் தான்…”

“மிஸ் எக்ஸ்கியூஸ் மீ… எனக்கு ஒரு சின்ன கேள்வி இருக்கு உங்க கிட்ட…” என சுலோச்சனாவின் கவனத்தை தன் புறம் திருப்பினார் வாசுதேவன்.

“ஷ்யூர் சார், கேளுங்க…”

“உங்களோட தனியார் பள்ளி காலைல ஏழரை மணிக்கு ஆரம்பிச்சு, பின்னேரம் ஒண்ணரை மணிக்கு க்ளோஸ் ஆகுது கரெக்டா..?”

“ஆமா சார்… கரெக்ட் தான்…”

“ஒண்ணரை மணிக்கு ஸ்கூல் முடிஞ்சாலும் ஸ்டூடன்ட்ஸ்லாம் கிளம்பினதுக்கப்புறம் தானே டீச்சர்ஸ் லீவ் பண்ணுவீங்க..?”

“ஒவ்வியஸ்லி… பட் சில நேரங்கள்ல மாணவர் தலைவர்கள் இருப்பாங்க இல்ல… அவங்க மட்டும் ஏதாவது டியூட்டினு சொல்லி லேட்டா கிளம்புவாங்க…”

“ஓகே… காமனா தென்றலும் நீங்களும் ஸ்கூல்ல இருந்து ஒண்ணாவா கிளம்புவீங்க..?”

“இல்ல… தென்றல் கொஞ்சம் லேட்டா கிளம்பறது தான் வழமை…”

“எதனால அப்படி..?”

“அடுத்த நாள் பாடவேளைக்கான ஆயத்தங்களை அவ ஸ்கூல்ல வச்சே ரெடி பண்ணிட்டு தான் கிளம்புவா… வீட்டுக்கு போனதுக்கப்புறம் அவளோட மொத்த டைமும் எழிலுக்கு, அதாவது அவ ஹஸ்பன்டுக்கு மட்டுமா இருக்கணும்னு சொல்லுவா…”

“அப்படீன்னா அவங்க வழமையாவே ரெண்டு மணிக்கு அப்பறம் தான் ஸ்கூல் லீவ் பண்ணுவாங்களா..?”

“கூடுதலா அப்படி தான்…”

“தாங்க் யூ மிஸ்…” என சுலோச்சனாவிடம் சொல்லிய வாசுதேவன், இனியாவிடம் திரும்பினார். 

“என்னோட கேள்விகள் முடிஞ்சுது மேடம்… நீங்களும் ஓகேன்னா கிளம்பலாம்…”

“ஷ்யூர் சார்…” என்ற இனியாவும் சுலோச்சனாவிடம் சொல்லிக் கொண்டு எழுந்தாள்.

மீண்டும் அவர்கள் காரினுள் தஞ்சமடைந்திருக்க, வழமை போல மெளனத்தை கலைத்தார் வாசுதேவன். 

“மேடம்‌, சுலோச்சனா மிஸ் சொன்ன விசயங்களை வச்சு எனக்குள்ள ஒரு கெஸ்… ஏதோ ஒரு நாள் தென்றல் ஸ்கூல் லீவ் பண்ணற டைமுக்குள்ள, அதாவது ரெண்டு மணி வாக்கில ஏதோ ஒரு தேவைக்காக ஆரக்ஷாவும் ஸ்கூல்ல இருந்திருக்கலாம்… அந்த அன்னைக்கு அவங்களுக்குள்ள ஏதாவது முக்கியமான விசயம் நடந்திருக்கலாம் அல்லது அவங்களுக்குள்ள ஏதாவது பர்சனலான விசயம் பரிமாறப்பட்டு இருக்கலாம்… அதுக்கு அப்புறம் அவங்க க்ளோஸாகி இருக்கலாம்… பின்னாடி வந்த ஒரு நாள்ல அவங்களுக்குள்ள ஏதாவது இன்டிமேட்டான விசயம் நடக்கும் போது தென்றல் ஆரக்ஷாவ ஹக் பண்ணி இருக்கலாம், அத அந்த குட்டிப்புள்ள பார்த்திருக்கலாம்… இல்லன்னா தென்றலும் ஆரக்ஷாவும் முதல் தடவையாக சந்திச்சு பேசினப்பவே ஏதாவது சென்சிடிவ்வான விசயத்துக்காக தென்றல் ஆரக்ஷாவ ஹக் பண்ணி இருக்கலாம்… அத அந்த குட்டிப் பாப்பா பாத்திருக்கலாம்… நாங்க அந்த குழந்தை கிட்ட தென்றல் மிஸ்ஸும் அந்த அக்காவும் என்ன டைம் போல நின்னு பேசிட்டு இருந்தாங்கன்னு கேக்கவே இல்லை… அத ஒரு தடவ க்ளியர் பண்ணிட்டோம்னா, மே பீ இந்த கேஸ்ல ஒரு லீட் கிடைக்கலாம்… இது ஒரு கெஸ் தான்..‌. எதையும் அந்தப் பிள்ளை கிட்ட கேட்டதுக்கப்புறம் தான் யோசிக்க முடியும்…”

“வெல் டன் வாசு சார்… மோஸ்ட்லி தென்றலுக்கும் ஆரக்ஷாவுக்குமான கான்வர்ஸேஷன் ஆஃப்டர் ஸ்கூல் தான் நடந்திருக்கணும்… அதனால தான் அவங்களும் அந்த பொண்ணும் இன்டிமேட்டா பழகினது யாருக்கும் தெரிஞ்சிருக்கல… அப்படீன்னா அந்த பாப்பா அந்த நேரத்துல அங்க என்ன பண்ணிச்சுனும் தெரிஞ்சுக்கணும்… இல்லன்னா, ஸ்கூல் டைம்லயே யாரும் இல்லாத ஒரு இடத்துல தென்றலும் ஆரக்ஷாவும் மீட் பண்ணி இருக்கலாம்… வீ மே மூவ் ஆன் திஸ் வே (நாம இந்த பாதையில பயணிச்சு பாக்கலாம்)…”

மெல்ல மெல்ல அவர்களது பயணத்திற்கான புதிய பாதை ஒன்று திறக்க ஆரம்பித்திருந்தது..!

                    ✯✯✯✯✯✯

                                   – அல்லி மலரும்…

    No comments yet.