Episode 21

ஶ்ரீ துர்க்கா | 17 Jan 2026 | Share

அல்லி 21

ஏற்காடு 

தலைமை ஆசிரியரின் அனுமதியுடன் ‘கலைமகள் கலைக்கூடம்’ தனியார் பள்ளியை சுற்றி வர நோட்டம் விட்டுக் கொண்டிருந்தாள் இனியா. தேவை கருதி, அன்று சாதாரண மஃப்டியிலேயே வந்திருந்தார் வாசுதேவன். 

“தென்றல் முதல்ல மூணாம் வகுப்பு பிள்ளைங்களுக்கு தானே பாடம் எடுத்ததா சொன்னாங்க… அந்த குழந்தைங்க கிட்ட போய் தென்றல் பத்தி கொஞ்சம் கேட்டு பாக்கலாமா..?” என்ற இனியாவுக்கு, “சரிங்க மேடம்..” என்று சம்மதமாய் தலை அசைத்து வைத்தார் வாசுதேவன்.

இனியா வகுப்பிற்குள் காலடி எடுத்து வைத்தது தான் தாமதம், “சித்தி…” எனக் கூவியபடியே வந்து அவளது இடுப்பைக் கட்டிக் கொண்டது நர்த்துக்குட்டி. மென்னகையோடு மெல்ல அவளை விடுவித்தவள், “சித்தி இங்க ஒரு வேலையா வந்திருக்கேன்ம்மா… வீட்டுக்கு வந்து பேசறேன் சரியா..?” என மென்மையாய் அவளது நெற்றியில் முத்தமிட்டு சொன்னாள் இனியா.

அப்படி இருந்தும், “இவங்க தான் என்னோட சித்தி… போலீஸ் வேலை பாக்கறாங்க… நிறைய கள்ளன்களை கண்டுபிடிச்சிருக்காங்க… தப்பு பண்ணினா தூக்கி ஜெயிலுக்குள்ள போட்டிடுவாங்க…” என்று இனியாவின் வீரதீரபராக்கிரமங்களை ஒவ்வொரு நண்பருக்கும் சொல்ல ஆரம்பித்திருந்தது நர்த்துக் குட்டி.

“மேடம் வாங்க… உங்களுக்கு தேவையான ஃபுல் சப்போர்ட் குடுக்க சொல்லி ஹெச்.எம் சொல்லி இருக்காங்க… சாரி, நான் சின்ன வேலையா பக்கத்து க்ளாஸ் வரைக்கும் போய் இருந்தேன்…” என்றபடியே அவள் பின்னோடு வந்து சேர்ந்தார் அந்த வகுப்பின் வகுப்பாசிரியர் நிர்மலா.

“பரவாயில்லை மிஸ்… எனக்கு ஒரு சின்ன ஹெல்ப்… இங்க இருக்கிற ஒவ்வொரு குழந்தை கிட்டவும் நான் தனித்தனியா அஞ்சு நிமிஷம் பேசணும்… அதுக்கு அரேஞ்மென்ட் செஞ்சு தர முடியுமா..?”

“கண்டிப்பா மேடம்… நீங்க க்ளாஸ்ரூம்லயே இருங்க… நான் பசங்கள வெளிய அழைச்சுட்டு போய், ஒவ்வொருத்தரா உள்ள அனுப்பறேன்… நீங்க பேசி முடிச்சுட்டு அவங்கள வெளிய அனுப்புங்க…”

“ஓகே மிஸ் ஷ்யூர்… தாங்க் யூ…”

“வித் ப்ளெஷர் மேடம்… எங்களுக்கு எங்களோட தென்றல் வேணும்… அதுக்காக இதை கூட செய்ய மாட்டோமா என்ன..?”

“தென்றல் இங்க வந்து ஜஸ்ட் த்ரீ மன்த்ஸ் தானே ஆச்சு… அதுக்குள்ள அவ எல்லாருக்கும் பெட் ஆகிட்டாளா என்ன..?”

“ஆமா மேடம்… அவள யாருக்கு தான் பிடிக்காது..? இன்னசென்ட் ப்யூட்டி மேடம் அவ… அவள எல்லாம் ஒரு வார்த்தை கடிந்து சொல்லக் கூட யாருக்கும் மனசு வராது… அப்படிப் பட்டவள யாரு என்ன நோக்கத்துக்காக…” என நிறுத்தியவர், “அது யாரா இருந்தாலும் கடவுளுக்கு பதில் சொல்லியே ஆகணும் மேடம்…” என்றார் தொடர்ந்து. 

“அவங்கள கண்டுபிடிக்கிறதுக்கு தான் நாங்களும் மேக்ஸிமம் ட்ரை பண்ணிட்டு இருக்கோம் மிஸ்… எங்களால ஆன எல்லா பாத் வே லையும் நாங்க ட்ரை பண்ணிட்டு தான் இருக்கோம்… ஹோப் ஃபார் த பெஸ்ட்…”

“ஐ ட்ரஸ்ட் யூ மேடம்… சரி, நான் பசங்கள அழைச்சுட்டு வெளிய போறேன்… நீங்க ஒவ்வொருத்தரா கூப்பிட்டு பேசுங்க…” என்றவர், பிள்ளைகளை அழைத்துக் கொண்டு சென்றும் இருந்தார்.

கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேர உரையாடலில், ஒவ்வொரு குழந்தையிடமும் இருந்து கிடைத்த தகவல்களை ஆராய்ந்து பார்த்தால், எல்லாக் குழந்தைகளுக்கும் தென்றலை பிடித்திருந்தது. தென்றல் அவர்களை அடிக்காமலேயே அரவணைத்து வளர்த்த ரகம் எல்லாம் இல்லை. அடித்திருக்கிறாள் தான், அவர்களுக்கு காயம் வராத வண்ணம், குழந்தைகளின் உடல் நிலையையும் மன நிலையையும் கருத்தில் கொண்டு அடித்திருக்கிறாள். அதன் பின்னர் சேயை அடித்து விட்டு தான் அழும் தாயாய் அவர்களை அரவணைத்தும் இருக்கிறாள். இது பொதுவாக கிடைத்த தகவல்கள் தான். 

அதில் சில குழந்தைகள் தென்றலுக்கு சுலோச்சனா மிஸ்ஸிடம் அதிக ஒட்டுதல் உண்டு என்ற தகவலையும் பகிர்ந்திருந்தார்கள். ஒரே ஒரு குழந்தை மாத்திரம் இதற்கு அப்பாற்பட்ட தகவல் ஒன்றையும் வழங்கி‌‌ இருந்தது. 

“தென்றல் மிஸ்ஸுக்கு பத்தாம் வகுப்பில ஒரு அக்கா ரொம்ப க்ளோஸ்… ஒருநாள் அவங்க அழுதப்போ தென்றல் மிஸ் அவங்கள கட்டிப்பிடிச்சு தடவி விட்டத நான் பாத்தேன்…” என்ற தகவல் தான் அது. 

அத்தனை தகவல்களையும் திரட்டிக் கொண்டு நிர்மலா மிஸ்ஸுக்கு நன்றி சொல்லிக் கொண்டு, அங்கிருந்த அத்தனை குழந்தைகளுக்கும் மிட்டாய்களும் கொடுத்து விட்டு, கையோடு நான்காம் வகுப்பு பிள்ளைகளையும் அதே முறையில் விசாரித்து விட்டு கிளம்பினர் இனியாவும் வாசுதேவனும். 

“உங்க கூட சேர்ந்து வர்க் பண்றது நிஜமாவே ஒரு க்ரேட் எக்ஸ்பீரியன்ஸ் மேடம் எனக்கு… குழந்தைங்கள இப்படி ஒரு முறைல என்கொயர் பண்ணலாம்னு நினைக்கவே இல்லை நான்…”

“எல்லாத்துக்கும் காரணம் அனுபவம் தான் வாசுதேவன் சார்… என்னோட சீனியர் கிட்ட இருந்து நான் கத்துக்கிட்டேன்… என் கிட்ட இருந்து நீங்க… உங்க கிட்ட இருந்து உங்க ஜூனியர்ஸ்… இந்த மாதிரி நம்ம எல்லாருமே இம்ரூவ் ஆனா நல்லது தானே…”

“கரெக்ட் தான் மேடம்…”

“இப்போ பத்தாம் வகுப்புக்கு போய், தென்றல் கிட்ட பேசுன அந்தப் பொண்ணு யாருன்னு கண்டுபிடிப்போம்‌ முதல்ல…”

“ம்ம்…”

பரந்த மர நிழலில் இருந்து படித்துக் கொண்டிருந்தார்கள் பத்தாம் வகுப்பு மாணவர்கள். வகுப்பில் இருந்து சலசலத்துக் கொண்டிருந்தவர்களை க்ரூப் ஆக்டிவிட்டிக்காக இங்கு அழைத்து வந்திருந்தார் அந்த வகுப்பின் ஆசிரியை ஶ்ரீமதி. 

இனியாவும் வாசுதேவனும் அங்கு வந்திருந்த போது அவர்களைப் புரியாமல் பார்த்தார் ஶ்ரீமதி. தென்றல் பற்றிய தகவல்களை அறிந்து கொள்ள அவர்கள் அங்கு வந்திருந்ததால், அவள் கல்வி கற்பித்த ஆரம்பக்கல்வி வகுப்புகளுக்கும் சுலோச்சனா டீச்சருக்கும்‌ மாத்திரம் தான் அறிவித்தல் வழங்கப்பட்டிருந்தது. இதனால் இனியாவையோ வாசுதேவனையோ அங்கிருந்த வேறு யாருக்கும் தெரிந்திருக்கவில்லை.

“குட்மார்னிங் மிஸ்… ஐம் மிஸஸ் இனியா வில்லியம்ஸ் ஃப்ரம் க்ரைம் பிராஞ்ச்… இவங்க இன்ஸ்பெக்டர் வாசுதேவன்…” என்றதும், மாணவர்களிடையே சிறிது சலசலப்பு எழுந்தது.

“யாரும் எதுக்கும் பயப்பட வேணாம்… நானும் மேடமும் ஒரு ஃபார்மல் என்கொயரிக்காக தான் உங்களை பார்க்க வந்திருக்கோம்…” என பிள்ளைகளை பார்த்து சொன்ன வாசுதேவன், ஆசிரியை ஶ்ரீமதியைப் பார்த்து தொடர்ந்தார்.

“மிஸ் நீங்க எங்களுக்கு கொஞ்சம் சப்போர்ட் பண்ணணுமே…”

“நான் எப்..படி…?”

“காணாம போனாங்க இல்ல தென்றல் மிஸ்..? அவங்கள கண்டுபிடிக்க நீங்க கொஞ்சம் சப்போர்ட் பண்ணணும்… வீ நீட் யுவர் ஹெல்ப்…”

“தாராளமா… எனக்கு தென்றல் மிஸ் பத்தி அவ்ளோவா தெரியாது, பட் ஸ்டாஃப் ரூம்ல சில டீச்சர்ஸ் பேசும்போது கேட்டிருக்கேன்… மோஸ்ட்லி எல்லாருக்குமே அவங்கள ரொம்ப பிடிக்கும்…”

“ஓஓ… ஃபைன் மிஸ்… தாங்க் யூ…”

“ம்ம்… நான் என்ன மாதிரியான ஹெல்ப் பண்ணணும்னு சொல்லுங்க சார்… தாராளமா பண்றேன்…”

“பெருசா எதுவுமில்லை மிஸ்… நீங்க இப்போ க்ளாஸ் எடுத்துட்டு இருக்கற இந்த பசங்கள்ல ஒருத்தருக்கு தென்றல் மிஸ் ரொம்ப க்ளோஸ்னு கேள்விப்பட்டோம்… அந்த ஸ்டூடன்ட் யாருன்னு அவங்களாவே சொல்லணும்… நீங்க தான் அதுக்கு ஹெல்ப் பண்ணணும்…”

“ஷ்யூர் சார்…” என்றவர், “பசங்களா, உங்கள்ல யாருக்கு தென்றல் மிஸ்னா ரொம்பப் பிடிக்கும்… யார் அவங்க கூட அதிகமா பழகி இருக்கீங்க..?” என அந்த மாணவர்களிடம் கேட்டார்.

கூட்டத்தில் மீண்டும் சலசலப்பு எழுந்தது.

“நீங்களா முன்வந்து அதை தெரியப்படுத்தினா தான் காவல்துறைக்கு தென்றல் மிஸ்ஸ கண்டுபிடிக்க ஈஸியா இருக்கும்… ப்ளீஸ் கோ-ஆப்பரேட்…” 

அதன் பின்னரும் அங்கு யாரும் தென்றலுடன் நெருங்கி பழகியதாய் சொல்லவில்லை. 

“ஸ்டூடன்ட்ஸ் லிசன்… உங்கள்ல யாருக்காவது தென்றல நல்லா தெரியும்னா, உங்க கிட்ட சில டீடெய்ல்ஸ் கேட்டுக்கிறதுக்காக மட்டும் தான் நாங்க இதை கேட்டுட்டு இருக்கோம்… அப்படி யாராவது க்ளோஸா பழகி இருந்தா அவங்களோட நம்ம ஒரு பத்து நிமிஷம் தனியா பேச வேண்டியதிருக்கும்… மற்றபடி உங்களை ஸ்டேஷனுக்கு கூப்பிடறதோ, உங்க வீட்டுக்கு வந்து டிஸ்டர்ப் பண்ணறதோ இந்த மாதிரி எந்த பிரச்சனையும் வராதுங்கிறதுக்கு நான் கேரண்டி…”

ம்ஹூம், இனியா அவ்வளவு சொல்லியும் யாரும் முன்வருவதாக இல்லை.

“மிஸ்… சாரி ஃபார் த ட்ரபுள்… எனக்கு ஒரு டூ மினிட்ஸ் டைம் தரீங்களா..?” என தன்மையாக ஶ்ரீமதியிடம் கேட்டாள் இனியா. 

“ஷ்யூர் மேடம்… டேக் யுவர் ஓன் டைம்… எங்களோட சக ஆசிரியையை கண்டுபிடிக்கிறதுக்கு கண்டிப்பா நாங்க முழு ஒத்துழைப்பு தருவோம்…”

“தேங்க் யூ மிஸ்…” என்றவள், வாசுதேவனை அழைத்து அவர் காதில் ஏதோ கிசுகிசுத்து அவரை அனுப்பி வைத்து விட்டு, இங்கிருந்த ஒவ்வொரு மாணவர்களையும் பார்வையால் அளவிட ஆரம்பித்தாள்.

கிட்டத்தட்ட ஐந்து நிமிடங்கள் கடந்த நிலையில் ஒரு சிறுமியை அழைத்தபடி வந்து சேர்ந்தார் வாசுதேவன். 

“சாரி மேடம்… நிர்மலா மிஸ் க்ளாஸ் ரூம்ல இல்லை… அதான் அவங்க வர்ற வரைக்கும் வெய்ட் பண்ணி பாப்பாவ கூப்பிட்டு வந்தேன்…”

“இட்ஸ் ஓகே சார்…” என்ற இனியா, “பத்தாம் வகுப்பு படிக்கிற ஒரு அக்கா கூட தென்றல் மிஸ் க்ளோஸா பேசினாங்கன்னு சொன்னீங்க இல்லம்மா… உங்களுக்கு அந்த அக்காவோட பேரு தெரியுமா..?” என்றாள் அந்த குழந்தையைப் பார்த்து.

“ம்ஹூம்… பேர் தெரியாது…”

“எப்படி அவங்க பத்தாம் வகுப்பு தான் படிக்கிறாங்கன்னு தெரியும் உங்களுக்கு..?”

“அந்த அக்கா ஒரு நாள் ஸ்கூல்ல பெருசா ஒரு மேடை இருக்குல்ல… சிடியம்… அதுல ஏறி நின்னு பாட்டு பாடினாங்க…‌ ரொம்ப சூப்பரா பாடினாங்களா… அதனால எல்லாருமே அவங்கள பாராட்டினாங்க… அப்போ தான் ஒரு சார் கேக்கும் போது அந்த அக்கா பத்தாம் வகுப்பு படிக்கிறதா சொன்னாங்க…”

“சூப்பர் அப்சர்வேஷன்… வெரி குட் கேர்ள்…” என‌ இனியா கை கொடுத்து அந்தக் குழந்தையைப் பாராட்டிய அதே நேரம், “மேடம்..! அப்படின்னா அவ ஆரக்ஷாவ சொல்லறா போல இருக்கு…” என ஒரு மாணவி சொல்ல, அவளைத் திரும்பிப் பார்த்தாள் இனியா.

“ஆரக்ஷா..?”

“ஒரு நிமிஷம் மேடம்… முதல்ல அவளைத் தான் இந்த பாப்பா சொல்லறாளான்னு உறுதிப்படுத்திக்கறேன்…” என்ற அந்த பெண், இவர்களது அனுமதியுடன் வகுப்பறைக்கு ஓடிச் சென்று பின் திரும்பி வந்தாள். வரும்போது கையில் ஒரு புகைப்படம் இடம் பிடித்திருந்தது. அந்தப் புகைப்படத்தில் ஒரு பெண்ணை தொட்டுக் காட்டியவள், “இந்த அக்காவா ம்மா நீங்க சொன்னது..?” என்றாள் அந்தக் குழந்தையிடம்.

“ஆமா… இவங்க தான்…” என அந்த குழந்தை உறுதிப்படுத்தியதும், “வெரிகுட் கேர்ள்…” என மீண்டும் அவளைப் பாராட்டி, எல்லோர் முன்னிலையிலும் அவளை முதன்மைப்படுத்தி தான் அனுப்பி வைத்தாள் இனியா. ஏதோ பெரிய காரியம் செய்து விட்ட திருப்தியுடன், வாசுதேவனுடன் மீண்டும் வகுப்புக்கு திரும்பியது குழந்தை. 

“நீ சொல்லும்மா… யார் இந்தப் பொண்ணு.. இவ தான் ஆரக்ஷாவா… இவளும் உங்க க்ளாஸ்ல தான் படிக்கறாளா… இன்னைக்கு ஸ்கூலுக்கு லீவா..?” என கேள்விகளை அடுக்கினாள் இனியா.

“ஆமா மேடம்… இவ பேரு தான் ஆரக்ஷா… ரொம்ப நல்லா பாடுவா… ஆனா பிரச்சினை என்னன்னா இன்னைக்கு மட்டும் இல்ல, இந்த ஒரு வாரமாவே அவ ஸ்கூலுக்கு வரல…”

                       ✯✯✯✯✯✯

                                       – அல்லி மலரும்…

    No comments yet.