என்ன பகல் கனவா?
விஷ்வாதீரன் அந்த கம்பெனியில் செய்யப் போகும் சில மாற்றங்கள் எல்லாவற்றையும் அவர்களுக்கு விவரித்துக் கொண்டு இருந்தான்.
“ஒரு விஷயத்தை எப்போவும் மைண்ட்ல வச்சுக்கோங்க, நீங்க நான் நினைக்கிற மாதிரி இல்லனா, நான் நீங்க நினைக்கிறது விட மோசமா இருப்பேன்”, என்றவன் இவருடைய எல்லா ஷேரையும் ட்ராப் அவுட் பண்ணி ரிட்டர்ன் அனுப்புங்க” என்று அங்கிருந்து குப்தாவை பார்த்து சொல்லிவிட்டு, அவன் அந்த அறையில் இருந்து வெளியேறினான்.
“என்னடி ப்ராஜெக்ட் சப்மிட் பண்ற நேரத்துக்கு, வேலைய ரிசைன் பண்ண போறேன்னு சொல்ற?” என்று கேட்டுக் கொண்டிருந்தாள் சூர்யா யுகன்யாவிடம்,
“அது வந்து எனக்கு இந்த ஐடி வொர்க் பிடிக்கலடி, நான் இன்னோவேஷனா ஏதாவது பண்ணனும்னு நினைக்கிறேன்” என்றாள் அவள்,
“அதுவும் இல்லாம ஃபேஷன் டிசைனிங், கிராபிக் டிசைனிங் எல்லாம் நிறைய ப்ராஜெக்ட் பண்ணி கொடுத்துட்டு இருந்தல்ல, அதுல என்னுடைய ப்ராஜெக்ட் வந்து விடி குரூப்ஸ் கீழ இருக்கிற கம்பெனி வினோதா ஃபேஷன்ல செலக்ட் ஆயிருக்கு, அதனால அந்த கம்பெனியில் இன்டர்வியூ வர சொல்லி இருக்காங்க, நான் புதுசா அதை பேஸ் பண்ணி ஒரு இன்னோவேடிவ் திங்ஸ் கிரியேட் பண்ணி இருந்தேன், அதனால செலக்ட் பண்ணி இருக்காங்க, அதாவது நம்ம டிரஸூடைய டிசைன்ஸ் பேஸ் பண்ணி ஒரு அனிமேட்டிக் ஒரு 3 மினிட்ஸ்ல வீடியோ ஒன்னு பண்ணி இருந்த, அதிலேயே வந்து என்னென்ன டிசைன்ஸ் எல்லாம் நம்ம கொண்டு வரலாம் அப்படின்னு, பேஸ்ட் ஆன் தட் ப்ராஜெக்ட் செலக்ட் ஆகி இருக்கு, சோ இன்னைக்கு அங்க இன்டர்வியூ போகனும், அதாண்டி” என்று சொன்னாள் அவள்.
“ஓ சூப்பர் ,சூப்பர், இது என்னுடைய ப்ரொபஷன், அது என்னுடைய பேஷன், பேஷன் ப்ரொஃபஷனலா மாறுச்சுனா, அது இன்னும் நல்லா இன்ட்ரஸ்டா இருக்கும்ல, அதான், அதுல என்ன புதுசு புதுசா இதுக்கப்புறம் பண்ண முடியுமோ அதை நான் பண்ணிட்டு தான் இருப்பேன்,
” இப்போ நிறைய கம்பெனிக்கு ப்ராஜெக்ட் டிசைன் பண்ணி கொடுக்கிறேன், ஈவன் பேஷன் டிசைன் காக நிறைய மாடல்ஸ்க்கு டிரஸ் ரெடி பண்ணி தரேன், அப்படி இருக்கும் பொழுது அதெல்லாம் எனக்கு பிடிச்சிருக்குடி அதனால பண்றேன்” என்றாள்.
“அப்படின்னா நீ பேப்பர் போட்டுடியா?” என்று கேட்டாள் சூர்யா, “இல்லடி இன்னும் பேப்பர் போடல, பிறகு டிசைன் பண்ணிக்கலாம் அப்படின்னு இருக்கேன், ஆனா ஒன் மன்த் சேலரி முன்னாடியே பே பண்ண சொல்லுவானே” என்று கூறினாள்.
“பாத்துக்கலாம், முதல்ல செலக்ட் ஆகணும், அதுக்கப்புறம் என்ன பண்ணலாம்னு யோசிக்கலாம், அங்க நமக்கு நல்ல சேலரி, நல்ல பே இருந்ததுனா நாம பார்த்துப்போம்” என்று சொன்னாள் யுகன்யா,
“அப்புறம் எங்களை விட்டு போயிடுவியாடி” என்று சோகமாக கேட்பது போல் கேட்க.
“யாரோ, எல்லா ரிலேஷன்ஷிப்பும் பேசஞ்சர் மாதிரி தான் சொன்னார்கள்” என்று யுகன்யா கிண்டலாக கேட்கவும், “நான் சொன்னது எனக்கே சொல்றியா?” என்றாள் அவள்,
“சரி சரி இப்போ அந்த தேங்காய் மண்டையன் கிட்ட என்ன லீவு சொல்லி இருக்கா?” என்று கேட்டாள்.
“ஏதோ ஒன்னு சொன்ன மச்சி, அவன் கிட்ட அப்புறமா வந்து விளக்கம் குடுத்துக்கலாம், இவனுக்கு ஒரு மெயில் தட்டி விட்டு, நான் கிளம்புறேன், எதுவா இருந்தாலும் அப்புறம் பாத்துக்கலாம், இன்டர்வியூ முடிஞ்ச பிறகு வந்து நான் பேசுகிறேன், பாய்” என்று அங்கே இருந்து கிளம்பினாள்.
அவள் ஏற்கனவே இரண்டு ப்ராஜெக்ட் சப்மிட் செய்து கொடுத்திருந்தால் ,அது செலக்ட் ஆகிவிட்டது என்று தான் நேர்காணலுக்கு இன்று அழைத்திருந்தார்கள்,
இன்னும் அவளுடைய கம்யூனிகேஷன் ஸ்கில்ஸ் மற்றும் வேறு டெக்னிகல் ஸ்கில் செக் செய்துவிட்டு, இன்டர்வியூ ப்ராசஸில் பங்கேற்க அவளை அழைத்திருந்தனர்.
அதற்காக அவள் தன் ஸ்கூட்டியில் வந்து கொண்டு இருந்தாள், அப்போது அவளுடைய வண்டி டிராபிக்கில் நின்று கொண்டு இருந்தது,
தீடிரென.. அவளுக்கு மனதில் இனம் புரியாத உணர்வு, எதனால் இப்படி ஒரு உணர்வு,வலி,வேதனை,அழ வேண்டும் என்பது போல் அழுத்தம், தனக்கு சொந்தமானது தன்னை சுற்றி எங்கோ இருப்பது போன்ற உணர்வு, தன் மனதுக்கு நெருக்கமான ஒன்று தன் அருகில் இருப்பது போன்று உணர்வு வந்து கொண்டே இருந்தது,
நடு ரோட்டில் நின்று கொண்டு சுற்றி சுற்றி பார்த்துக் கொண்டிருந்தாள், அந்த நேரம் பார்த்து எங்கிருந்தோ அவளை வருத்தத்தும் அந்த பாடல் வரிகள் ஒலிக்க ஆரம்பித்தது,
” கனவே உன்னை வந்து சேர” என்று அவ்வளவுதான், சுற்றம் மறந்தது போல, அந்தப் பாட்டை கேட்டாலே பைத்தியம் போல் ஆகி விடுகிறாள், போதாததற்கு தன்னை சுற்றி தனக்கு நெருக்கமானவர்கள் யாரோ இருப்பது போன்ற உணர்வு அவளுக்கு, அந்த நேரம் சிக்னல் வேறு போட்டு விட்டார்கள்,
இவள் வண்டியை எடுக்காமல் மலங்க மலங்க கண்களில் இருந்து கண்ணீர் வழிய நடுரோட்டில் நின்று சுற்றி சுற்றி பார்த்துக் கொண்டிருந்தாள்.
அடுத்த சிக்னல் போடுவதற்கு அங்கே கவுண்டவுன் ஸ்டார்ட் ஆகி இருந்தது, இன்னும் இவள் சாலையை கடக்காமல் முதலில் வேறு நின்று கொண்டு, பின்னால் இருக்கும் வண்டிகளுக்கும் இடையூறாக இருந்தாள்,
பின்னால் இருக்கும் வாகனங்கள் எல்லாம் ஓயாமல் ஹாரன் அடிக்க ஆரம்பித்தது ,பின்னால் இருந்த கார்கள் விடாமல் ஹாரன் அடித்துக் கொண்டே இருந்தார்கள்,
ஆனால் அவளுக்கு அது எல்லாம் கேட்கும் மனநிலையில் இல்லை, மற்ற விஷயங்களை விட, அந்தப் பாடல் அவள் மனதில் அந்த உணர்வுகளும் தான் எல்லாவற்றை காட்டிலும் மேலெழுந்தது,
பின்னால் இருந்து ஹாரன் சவுண்டுகள் வந்து கொண்டே இருந்தது, அவளை திட்டிக்கொண்டு கடந்து செல்பவர்களுக்கும் சென்று கொண்டு தான் இருந்தனர்,
அடுத்த சிக்னல் இவர்கள் இருக்கும் பக்கத்தில் வாகனங்கள் நிறுத்திவிட்டு எதிர் பக்கத்தில் செல்வதற்காக மாறிவிட்டது, அதை பார்த்து பின்னால் இருந்த காரில் இருந்து ஒருவன் இறங்கி வந்து, “என்ன பண்ணிட்டு இருக்க, நீ நடுரோட்டில் என்ன டான்ஸ் ஆடிட்டு இருக்கியா, இல்ல அட்டென்ஷன் சீக்கிங் பர்சன் மாதிரி கவனத்தை ஈர்த்திட்டு இருக்கியா? இல்லை டே ட்ரீம்மா என்ன? ” என்று அவன் பாட்டிற்கு கேள்விகளை அடக்கிக் கொண்டே வந்தான் விஷ்வா தீரன்,
அவன் கண்களில் கோபம் சிவப்பேறியிருந்து, அவன் திடீரென கத்தவும், “யாரது” என்று பார்த்தவள், மலங்க மலங்க விழித்தாள்.
இருந்தாலும் அவன் தன்னை என்னவெல்லாம் திட்டிக் கொண்டிருக்கிறான் என்பதை உணர அவளுக்கு சில கணங்கள் பிடித்தது.
பின்னர் தான், தான் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்பது புரிப்பட, தன் கண்களை வேகமாக துடைத்தவள், அங்கிருந்த வண்டியை எடுக்க போனாள் பதற்றத்தில்,
“ஆமா சிக்னல் போட்டிருக்கும் போது போனா, ஒன்னு நீ போய் சேர்ந்துடுவ, இல்லனா உன் மாமனார் வீட்ல வந்து உன்னை கூட்டிட்டு போவாங்க” என்று கடுப்புடன் பேசினான் விஷ்வா,
” ஹலோ மிஸ்டர்” என்று அவனை முறைத்தாள்,அப்போதுதான் அவன் அப்படி சொல்வதற்கும், அவள் வண்டியை எடுக்கும் பொழுது எதிர் தரப்பில் இருந்து ஒரு வண்டி சரியாக அவளை இடிப்பது போல் வரவும், சடார் என பிரேக் போட்டு நிறுத்தினார்.
“தூக்கம் தெளியாம எங்கேயோ மேக்கப் போட்டு கிளம்பிட்டியா? இப்படி இடியட் மாதிரி நடுரோட்டில் நின்னு என்ன பண்ணிக்கிட்டு இருக்க, சாகனும்னு ஆசை இருந்தா, அடுத்தவங்களுக்கு டிஸ்டர்பன்ஸ் இல்லாம அந்த வேலையை பண்ணனும், இப்படி நடுரோட்டில் வந்து நியூசன்ஸ் பண்ணிட்டு இருக்க கூடாது.
இரிடேடிங் இடியட், எனக்கு ஒவ்வொரு செகண்டும் ப்ரிஷியஸ், உன்ன மாதிரி இர்ரெஸ்பான்ஸிபில் பர்சன பார்த்து எரிச்சல் ஆகுது” என்று அவன் கத்தவும்,
அங்கே பைக்கில் இருந்தவர்களும், “சார் அந்த பொண்ணு பண்ணது தப்பு தான், இருந்தாலும் இவ்வளவு ஹார்ஷா பேச வேணாமே” என்று ஆளாளுக்கு ஒவ்வொரு கருத்துக்களை தெரிவித்தனர்,
” சிலர் ஆமா சார் இந்த மாதிரி எங்கேயாவது காலையில கிளம்பி வர வேண்டியது, பகல் கனவு கண்டுட்டு நடுரோட்டில் நிற்க வேண்டியது” என்று ஒருவர் திட்ட,
இன்னொரு நபர், “பாவம் அந்த பொண்ணு, அழுது இருக்கிற மாதிரி இருக்கு, ஏதாவது பதட்டமான நியூஸ் வந்திருக்கலாம்” என்று ஒரு சிலரும் கூற, அதற்கு காரணமானவளோ வாயையே திறக்காமல் நின்றிருந்தாள்.
” ஜஸ்ட் ஸ்டாப் இட், நாம இவ்வளவு பேசுறோம், எங்கேயாவது வாய் திறக்கிறத பாரு, எல் போர்ட்டா வண்டி ஓட்ட தெரியுமா தெரியாதா? இல்ல உன்ன தூக்கி ஓரங்க கட்ட கூட யோசிக்க மாட்டேன், என்ன உன் பிரச்சனை” என்று சொல்லவும் அவனை முறைத்தாள் யுகன்யா.
“என்ன முறைக்கிற இந்த இன்டியன் பீப்பிள்ஸ்னாலே இப்படித்தான் இருக்கீங்க” என்று சொல்லிவிட்டு அவள் மீண்டும் காருக்கு போய் அமர ஒரு வார்த்தை கூட அவள் பேசவில்லை,
காரணம் இன்னும் அந்தப் பாட்டின் தாக்கத்திலிருந்து, அந்த சூழ்நிலையின் தாக்கத்திலிருந்து வெளியே வரவில்லை, அதனால் அவளால் எதற்கும் ரியாக்ட் செய்ய முடியாமல் போனது,
” முதலில் இந்த இன்டர்வியூ முடிச்சிட்டு இவன ஒரு கை பார்க்கணும்” என்று நினைத்துக் கொண்டாள்,
அதற்குள் சிக்னல் போட வரவும், “ஏய் சிக்னல் போடப் போறாங்க முதல்ல இந்த தகர டப்பா வண்டிய எடு இல்லன்னா, இடிச்சு தள்ளிட்டு போயிட்டே இருப்பேன்” என்று விஷ்வாதீரன் சொல்லிவிட்டு அவன் காருக்கு செல்ல, “என்னது?” என்று கோபமாக அவ முறைத்துப் பார்த்து அவள் திரும்ப, “ஐயோ..” என்று அவனுக்கு வெறிபிடிக்கும் ரேஞ்சுக்கு போய் விட்டான்.
” நடுரோட்டில் இப்படி போஸ் கொடுத்துட்டு இருக்க, திரும்பி பார்த்துகிட்டு, டேமிட் என்று அவன் கத்தினான்.
அப்பொழுது அவனுடன் காரில் இருந்த அவன் நண்பன் தினகர், “டேய் கூல் டா எதுக்கு இவ்ளோ டென்ஷன் ஆகிற, உண்மையாவே அந்த பொண்ணு ஏதோ ட்ரபிள்ல இருக்குன்னு நினைக்கிறேன், அவ ஃபேஸ் பார்த்தா உனக்கு தெரியல, ஏன் அவ கிட்ட போய் இவ்ளோ ஹர்ஷா பிஹேவ் பண்ற, ஜஸ்ட் லீவிட்” என்று சொல்ல ,
இவர்கள் விண்டோவை ஓபன் பண்ணி கொண்டு பேசிக் கொண்டிருந்ததால் இதையெல்லாம் அவள் கேட்டு கொண்டிருந்தாள்.
“சரியான அவசர குடுக்கையா இருக்கிறான், சுடுதண்ணிய காலில் ஊத்திக்கிட்ட மாதிரியே இப்படி பண்ணிட்டு இருக்கான், ஆம்புலன்ஸ் கூட இந்த அளவுக்கு வேகமா இருக்காது நினைக்கிறேன், சரியான பிரஷருக்கு பிரஷர் கொடுக்கிறவனா இருப்பான் போல இருக்கு, கடவுளே,
பரவால்ல கூட இருக்கிற அந்த பர்சன் கொஞ்சம் நல்ல டைப்பா தெரியுறாரு, இல்லன்னா இவன மாதிரி ஆளுங்க பிரஷர் வந்து சாகணும்” என்று அவளும் அவனை முறைத்து விட்டு ஸ்கூட்டியை எடுத்தாள்.
அவனும் போனில், ‘யா ஐயம் ஆன் தி வே,யூ ஸ்டார்ட் தி ப்ராஸஸ்” என்று சொன்னான், “இங்கே யுகன்யாவோ என்னதான் நடக்குது, அந்த பாட்ட கேட்டா எனக்கு அப்படியெல்லாம் ஃபீல் ஆகுது, பத்தாததுக்கு அந்த ஒரு மாதிரி பீலிங்ஸ் அது எப்படி எனக்கு டிஸ்கிரைப் பண்ணதே தெரியலையே, அது ஏன் அந்த மாதிரி ஆச்சு தெரியலையே” என்று அவள் யோசனையுடன் சென்றாள்,
” போதாததுக்கு கடவுளே அவங்க கிட்ட வேற பேச்சு வாங்கினேன்,என்னமா பேசுறான், அவன் திரும்பவும் என் கண்ணுல மாட்னா, பல்ல ஒடச்சு கைல கொடுக்குறேன் பாரு, கார்ல வந்தா பெரிய கொம்பு என்று நினைப்பா, இவன் பெரிய டாட்டாவா இருந்தா, அடுத்தவங்கள மட்டமா பேசுவானா, நான் அப்படி நின்னது தப்புதான்,
இருந்தாலும் ஒரு ரெஸ்பெக்ட் கூட இல்லாமல், அவன் பாட்டுக்கு இஷ்டத்துக்கு பேசுறான், இவன் யார் அதெல்லாம் சொல்வதற்கு,
ஓ ஷிட் அவனுக்கு பதிலுக்கு எதுவும் கொடுக்காமல் வந்துட்டோமே, ஐயோ உன்ன போய் ஒருத்தன் எப்படி இப்படி பேசலாம், நீ எப்படி பேச விட்ட?” என்று தனக்கு தானே சண்டை போட்டுக் கொண்டாள்.
இன்னொரு முறை கண்ணுல மாட்னா அவ்வளவுதான், அவன கைமா பண்ணாம விட மாட்டேன் என்று திட்டிக் கொண்டாள்.
நல்ல
வேளை இன்டர்வியூ தொடங்குவதற்கு ஒரு பத்து நிமிடம் தான் இருந்தது, அதற்குள் சென்று விட்டாள்,
அவர்கள் இன்னும் சில கிராஃபிக் டிசைன்ஸ் எல்லாம் அவர்களுக்கு விருப்பத்திற்கு ஏற்றதுபோல பேஷன் டிசைனிங் மாற்றி சில டாஸ்கெல்லாம் கொடுத்திருந்தார்கள், அதை எல்லாம் நேர்த்தியாக செய்தாள்.
இப்போது 10 பேரை தேர்வு செய்து அந்த பத்து பேரில் இருந்து ,இரண்டு பேரை தான் வேலைக்கு இப்பொழுது எடுக்கப் போகிறார்கள், அந்த 10 பேரில் 6 பேர் ஷார்ட் லிஸ்ட் ஆனார்கள், அதன் பிறகு அவர்களின் எல்லாவற்றிலும் சிறந்ததாக தோன்றிய மூன்று பேரை தேர்வு செய்தார்கள்.
அந்த மூன்று பேரை இன்டர்வியூ எடுத்து, அவர்களில் இருவரை தான் தேர்வு செய்வார் பாஸ், அதில் யுகன்யா, தன்வி, பிரவீன் மூவரும் தேர்வானர்கள்,
அதில் யாரை தேர்வு செய்வது என்பது பெரும் குழப்பம் இருந்தது.
கன்ஃபார்ம் தனக்கு வேலை கிடைத்துவிடும் என்று உறுதியாக இருந்தாள் யுகன்யா, “நீங்க மூணு பேரும் தான் பைனலைஸ் ஆகி இருக்கீங்க, இப்போ பாஸ் கூட ஒரு இன்டர்வியூ இருக்கு, அதுல செலக்ட் ஆகுற ரெண்டு பேருக்கு ஆஃபர் லெட்டர் கொடுத்து விடுவோம், நீங்க ஒர்க்கில் இப்போ கூட ஜாயின் பண்ணிக்கலாம்” என்று சொன்னார்கள்.
முதலில் பிரவீன் இன்டர்வியூ அட்டென்ட் செய்துவிட்டு வந்தான், காத்திருக்க சொல்லியிருந்தார்கள், அடுத்தது யுகன்யா சென்றாள், வெளியே எம்டி என்று தான் போட்டிருந்தது.
“எக்ஸ் க்யூஸ் மீ” என்று அவள் அழைக்க, பிரவினுடைய ப்ரொபைலை பார்த்தபடியே அவன் அமர்ந்திருந்தான், “எஸ் கமிங்” என்று நிமிர்ந்தவன் புருவங்கள் இடுங்கியது, அதே நேரத்தில் யுகன்யாவும் “இவனா?” என்று அதிர்ந்து போய்விட்டாள்.
தொடரும்..
No comments yet.