” உறவினர்கள் பிரிய நேரலாம்
ஆனால்
உறவுகள் பிரிக்க இயலாதது ;
மறந்தாலும் மறுக்க இயலாதது “
சியாட்டில் டகோமா பன்னாட்டு சர்வதேச விமான நிலையம் வழக்கம் போலவே பரபரப்பாக செயல்பட்டுக் கொண்டிருந்தது .
இரண்டாயிரத்து ஐந்நூறு ஏக்கர் பரப்பளவை உள்ளடக்கிய விமான நிலையமானது பல தரப் பட்ட மக்களை
தினமும் பார்க்கிறது . அமெரிக்காவில் உள்ள பெரிய விமான நிலையங்களிள் இதுவும் ஒன்று .
சராசரியாக நாள் ஒன்றுக்கு லட்சக்கணக்கான பயணிகள் இந்த விமான நிலையத்தில் வரவும் போகவும் ஆக இருக்கிறார்கள்.
அங்கு தற்போது தான் தரையிறங்கிய போயிங் விமானத்திலிருந்து இறங்கிய ஆதிரா அனைத்து நடைமுறை களையும் முடித்துக் கொண்டு தனது வேக நடையோடு வெளியே வந்தாள் .
அவள் வருவதற்காகவே காத்திருந்த அவளது பிஏ வான ரஞ்சித்துடன்
தனது ரோல்ஸ் ராய்ஸ் காரில் ஏறினாள் .
அந்த சிறு இடைவெளியிலேயே பல கேள்விகளை கேட்டு அவனிடமிருந்து பதிலையும் பெற்று விட்டால் . அவள் இல்லாமல் இருந்த இரண்டு நாட்களில் என்னென்ன நடந்தது என்பதை தெரிந்து கொள்ள .
” ரஞ்சித் நான் சொன்ன அந்த பைலை எடுத்து வச்சுட்டியா , நாளைக்கு டெண்டர் கான மீட்டிங் இருக்குல . ? “
” அவனோ நாலு மணிக்கு எழுந்த கடுப்பில் 5:00 மணிக்கு வர பிளைட்டுக்கு என்னையே கூப்பிடுறாங்களே டிரைவரை மட்டும் கூப்பிட்டா என்ன
தெரியாத் தனமா இந்த கம்பெனில வந்து ஜாயின் பண்ணிட்டோம் இவங்க தான் கம்பெனியே கதி அப்டின்னு சுத்துறாங்கன்னா என்னையும் இந்த கம்பெனியே கட்டிட்டு சுத்த வைக்கறாங்களே
நான் என்னைக்கு எனக்குனு நாலு நல்லத பார்க்கிறதோ .. ? “
அப்படின்னு மனசுக்குள்ளயே புலம்பிக் கொண்டு இருந்தான் அவளது நடைக்கு ஈடு கொடுத்துக் கொண்டே .
” ரஞ்சித் நான் கேட்டது என்ன ஆச்சு .. “
” ஆ..ஹான் மேடம்…!? என்ன கேட்டிங்க சாரி நான் சரியா கவனிக்கல “
” காத எங்க வச்சிருக்க மேன் உன்னை நம்பி பொறுப்பா ஒரு வேலையை கொடுக்க முடியுதா ? “
ரஞ்சித்தோ தலையை நிமிர்த்தாமல் குனிந்த படியே இருந்தான் .
” டெண்டர் கான ஃபைல் ரெடி ஆயிடுச்சா சரி பார்த்துட்டு சைன் பண்ணிடலாமா “
” எஸ் எஸ் மேம் எல்லாமே ரெடியா இருக்கு நீங்க ஒரு தடவ பார்த்துட்டு சைன் பண்ணிட வேண்டியது தான் மேம் ” .
” எட்டு மணிக்கெல்லாம் ஃபேக்டரி யூனிட்டு போயிட்டு ஒரு ரவுண்ட்ஸ் போயிட்டு , அப்படியே அங்க இருந்து ஆபீஸ் போகலாம் . ஏழு ஐம்பதுக்கு எல்லாம் கரெக்டா வீட்டுக்கு வந்துரு . “
பேசிக்கொண்டே நடந்து சென்ற இருவரும் பார்க்கிங்கில் நிறுத்தி இருந்த ரோல்ஸ் ராய்ஸை அடைந்தனர் .
டிரைவர் விக்டர் இவளை பார்த்தவுடன் இவளிடம் கார் சாவியை பவ்யமாக கொடுத்து விட்டு கிளம்பி சென்றார் .
இவளது கையில் அந்தக் கார் பறந்தது என்றே சொல்ல வேண்டும் . அதற்காக சாலை விதிகளை மீறினால் என்று கூறவில்லை. சாலை விதிகளுக்கு உட்பட்டு இவளது கையில் அந்த கார் வழுக்கிக் கொண்டு சென்றது .
கார்ல ஏறியது தொடங்கி மறுபடியும் டென்டருக்கான விளக்கங்களை இருவரும் கலந்து ஆலோசித்துக் கொண்டே தான் சென்றனர் .
என்ன தான் அவள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் உரைத்தாலும் அவன் இவள் லாவகமாக வண்டி ஓட்டும் திறனை கண்டு மெச்சிக்கொண்டான் .
அவனும் கார் ஓட்டுவான் தான் ஆனால் இவள் அளவிற்க்கு அவனால் இன்னும் ஓட்ட இயலவில்லை .
இவர்கள் கிளம்பி விட்டதை முன்கூட்டியே விக்டர் இவளது அப்பாவிடம் கூறிவிட்டதால் வீட்டின் முன்னால் உள்ள பெரிய கதவு திறந்தே இருந்தது .
இல்லை யென்றால் இவளுக்கு வரும் கோபத்திற்கு புதுக் கதவு தான் மறுபடியும் போட வேண்டும் .
ஆதிரா செல்வம் ரேணுகாவின் ஏக புதல்வி . செல்வம் ரேணுகா தம்பதியினர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களே .
வீட்டை எதிர்த்து திருமணம் செய்து கொண்டதால் இருவரையும் வீட்டில் உள்ளவர்கள் சேர்க்கவில்லை .
வீட்டை விட்டு வெளியேறி மிகுந்த கஷ்டத்தை கலந்து வந்தனர் வாழ்வில் .
சென்னை பெங்களூர் என இரு இரு வருடங்கள் உழைத்து அதற்குப் பின் ஒரு நண்பர் மூலமாக சியாட்டில் வந்தனர் .
நிலையான வருமானம் வரும் வரை குழந்தை வேண்டாம் என இருந்தனர் .
சியாட்டில் வந்து தொழில் தொடங்கி
மெல்ல மெல்ல ஏறுப்பாதையில் ஏறினார்கள் .
இருந்தும் இரு வருடம் கழித்தே பல வேண்டுதலுக்கு பின்பு பிறந்தவள் ஆதிரா .
அப்படியே செல்வத்தைப் போலவே இருப்பதால் ரேணுகாவிற்கு மிகுந்த செல்லம் . ஏனென்றால் தன் கணவனைப் போலவே குழந்தை வேண்டுமென்று ஆசைப்பட்டவர் ஆச்சே .
ரேணுகாவின் கருப்பை பலவீனமாக இருந்ததால் மீண்டும் ஒரு கருவை அவரால் தாங்க இயலாது என்று ஆதிரா பிறந்த உடனே மருத்துவர் கூறிவிட்டார் அதனால் ஆதிரா அவர்களுக்கு ஏகப் புதல்வியானால் .
SR மருத்துவமனை
SR ஃபார்மஸி
SR இண்டஸ்ட்ரியல் யூணிட் என பார்மசி உலகில் கொடிகட்டி பறந்து கொண்டிருக்கின்றனர் .
காதலித்துக் கொண்டிருந்த சமயத்திலேயே செல்வம் எம் . ஃபார்ம் முடித்திருந்தார் . ரேணுகா மருத்துவக் கல்லூரியில் முதலாமாண்டு படித்துக் கொண்டிருந்தாள் . சந்தர்ப்ப சூழ்நிலைகளால் அவள் மருத்துவ படிப்பு பாதியிலேயே நிற்கப்பட்டது .
ஆதிரா பிறந்து இரு வருடங்கள் ஆன உடனேயே ரேணுகாவை எப்படியோ வற்புறுத்தி அவள் ஆசைப்பட்டதை மீண்டும் படிக்க வைத்தார் செல்வம் .
ரேணுகா குழந்தையை முன்னிறுத்தி வேண்டாம் எனக் கூற அவரும் என்னால் குழந்தையும் பார்த்துக் கொள்ள இயலும் என குழந்தையும் அவரே பார்த்துக்கொண்டார் இவள் படித்து முடிக்கும் வரை .
அம்மாவை விட அப்பாவிடமே அதிகம் வளர்ந்ததால் அப்பாவின் செல்லமாகவே வளர்ந்தாள் .
அவளுக்கு அனைத்திற்கும் சுதந்திரம் கொடுத்தே வளர்த்தனர் வீட்டில் .
என்னதான் வாழ்க்கை அவர்களை மேலே இழுத்துச் சென்றாலும் ரேணுகா அவள் பிறந்தவீட்டை நினைத்து எந்த ஒரு நிமிடமும் ஏங்க விட கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாய் இருந்தார் செல்வம் .
செல்வத்தின் காதலில் ரேணுகா மகிழ்ந்து வாழ்ந்து வந்தார் .
ஆதிரா வெண்மை நிற அழகி , அலை அலையாக சுருட்டை முடி , வில் போன்ற லேசர் விழிகள் , செர்ரி பழ உதடுகள் , அடுக்கி வைத்தது போல் பல் வரிசை சங்கு கழுத்து ,சின்ன இடை , 5 ‘ 5 அடி உயரம் . அழகான ரவிவர்மன் ஓவியம் போலவே இருப்பாள் .
” ஒரு ஊரில் அழகே உருவாய்
ஒருத்தி இருந்தாளே
அழகுக்கே இலக்கணம்
எழுத அவளும் பிறந்தாளே
மரகத சோம்பல் முறிப்பாளே
புல்வெளி போலே சிலிர்ப்பாளே விரல்களை ஆட்டி ஆட்டி பேசும்
போதிலே காற்றிலும்
வீணை உண்டு என்று தோன்றுமே “
உறவு வரும் ….
என்றும் அன்புடன்
ரம்யா ராமநாதன்.
No comments yet.