Episode 10

Ramya Ramanathan | 06 Mar 2026 | Share

கல் மண்ணால் நிறைந்ததல்ல வீடு மனிதர்களால் நிறைந்தது 

அன்பின் வழி வாழியது 

தோப்பூர் :

ஏலே மருது ! முத்தம்மா எங்கலே, பெரிய வூட்டில தேடிட்டு இருக்காங்க….

அடியே வாணி மாட்டுக்கு தண்ணி காமிச்சது போதும்ளே கிளம்பு கிளம்பு எல்லாரும் பெரிய வூட்டு பக்கம் வெரசா போங்க…

வேலை கிடக்கு நிறைய….இன்னும் ரெண்டு நாளுல விசேசம் இருக்குல்ல..

என்னடி ஆத்தா இடுப்ப நெலிக்கிற 

என்னால முன்ன மாதிரி முடிஞ்சா நான் ஏன் உங்களை எல்லாம் விரட்ட போறேன்…

சரி சரி நீங்க இப்படிக்கா வாங்க இவிங்க பேசிக்கிற பெரிய வீட்டு பாத்துட்டு வந்துருவோம்…

மொத்தமா தோப்பூரில் இருக்கிறது 18 தெருதாணுங்க 

அந்த ஊருக்கு நடுவுல இருக்குதுங்க பெரிய வீடு.

வீடுனு சொல்றதுக்கு இல்ல அரண்மனை அந்த காலத்து கட்டிட கலைக்கு நல்ல எடுத்துக்காட்டு.

பெரிய தேக்கு மரத்தூண் நாலு பக்கமும். வெளி கேட்டுக்கும் வீட்டுக்கு நடுவுல அரை கிலோமீட்டர் இடம் இருக்கும்.

 நான்கு பக்கமும் காம்பவுண்டு கட்டி ,

சுத்தி மா, பலா தென்னை வாழை மரமுன்னு வீட்டுக்கு புறத்தாளை பக்கமும்,

முன் பக்கத்துக்கு ரோஜா மல்லி என்று செடி வச்சிருக்காங்க 

இடது பக்கத்துல குடில் மாதிரி அமைச்சிருக்காங்க 

பத்து பேர் உட்கார்ந்து சாப்பிடுவதற்கு 

அதே தாங்க அதே தானுங்க மழை பெய்றப்ப மழைய ரசிச்சுக்கிட்டே சாப்பிடுவாங்கள அதே மாதிரி தாங்க 

வீட்ல இருந்தே அங்க போறதுக்கு வழியும் மழை பேஞ்சா நனையாம போறதுக்கான ஏற்பாடு பண்ணி இருக்காங்க 

இடது பக்கம் அதுனா வடக்கால பக்கம் நல்லா தேக்கு மரத்துல ஒரு கலை நயத்தோட ரெண்டு அன்னப்பச்சிங்க அழகா ஒன்னு ஒன்னு பாத்து சிரிச்சுக்கிற மாதிரி கண்ண கவரும் வண்ணத்துல செஞ்ச ஊஞ்சலுங்க

அதுக்கு மேலே ஷெட் மாதிரி ஒன்னு போட்டு இருக்காங்க மழை காலத்துல நினையாம ஊஞ்ச லாடுறதுக்குங்க 

இதெல்லாம் இப்ப புதுசா பத்து வருஷத்துக்கு முன்னாடி காலத்துக்கு தகுந்த மாதிரி மாத்தி அமைச்சது தாங்க 

ஆனா வீடு அந்த காலத்து வூடு தானுங்க

பின்ன ஜமீன் வீடுன்னா சும்மாவா இப்ப தாங்க ஜமீன்னா ஒன்னும் இல்ல அந்த காலத்துல ஜமீனா வாழ்ந்தவங்க 

இப்பயும் ஜமீன் பரம்பரைனா என்ன சும்மாவா கெத்து தானுங்களே…

வீட்டை சுத்தி சுத்தி இவ்ளோ சொல்றனே‌ 

அதனால வீடு ரொம்ப மாடலா இருக்கம்னு தப்பா மட்டும் நினைச்சி புடாதீங்க 

வீடு பழங்காலத்து வீடு தானுங்க அதிலேயே கொஞ்சம் மாடுலேஷன் எல்லாம் பண்ணி இருக்காங்க 

சொல்றதுக்கு குட்டியா இருக்கேனு நினைச்சுறாதீங்க 

நீங்க பாத்தா தான் தெரியும் அதோட 

அருமை.

அப்படியே கற்பனை ரோல சுத்தி அந்தரந்துல சுத்துற ஃபேன பாத்துக்குடடே 

வீட்டை நினைச்சிக்கோங்க

அவ்ளோ அழகா இருக்குல….அதே அதே…

( தலைக்கு மேல ஃபேன் எப்படி சுத்துதுன்னு நீங்களா சொல்லலாம்னு நீங்க நினைக்கிறது எனக்கு புரியுது ஏனா என் தலைக்கு மேல ஃபேனு தாங்க சுத்துது அதனாலதான் சொன்னேன்..

ஹீ ஹீ சாரிங்க கதைக்குள்ள என் சொந்த கதைய சொல்லி கடுப்பேத்தாதனு நீங்க திட்றது புரியுதுங்கோ )

வீட்டுக்கு நடுவுல ரெண்டு பக்கம் போறதுக்கு மாடிப்படி இருக்குங்க 

மாடி ஒன்னுதான் அந்த மாடிக்கு இரண்டு பக்கம் போறதுக்கு வீடடுக்குள்ளயே வழிங்க

இருக்குங்க

 

அது இல்லாம மொட்டை மாடிக்கு போறதுக்கு வீட்டுக்கு புறத்தால பக்கமும் தனியா ஒரு வழி இருக்குங்க..

சாமியறை சமையலறை சாப்பிடறதுக்குனு ஒரு அறை எல்லாத்துக்கும் தனித்தனியா ஒரு அறைய ஒதுக்கி வச்சிருக்காங்க 

இதெல்லாம் என்னங்க ஊரு மக்கள் எல்லாம் வந்து பேசுறதுக்குன்னு தனியா வேற ஒரு அரை வச்சிருக்காங்க 

இங்க வீடு எப்படி பெருசோ அதே மாதிரி பெரிய வீட்டுல உள்ளவங்களுக்கும் மனசு ரொம்ப பெருசுங்க 

வாங்க ஒன்னு ஒன்னா பாத்து தெரிஞ்சுக்க தான போறோம் கதை ஃபுல்லா…

சரி வாங்க நாமளும் அந்த விசேஷத்துக்கு வேலை எல்லாம் செய்வோம் சும்மா இருக்கிறதே பெரிய வேலை தான் 

நாம்பளும் அங்குட்டு இங்குட்டு நாலு பொருளை தூக்கி வச்சிட்டு ஒரு அரை மணி நேரம் ஒரு மணி நேரம் வேலை செய்துவிட்டு வழக்கம்போல ஊட்டு கலர் நடக்குதுன்னு பாப்போம் வாங்க 

பூஜையறையில,தனது கணீர் குரலிலீ

சாமிநாதன்,

நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க

இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க

கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க

ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க

ஏகன் அநேகன் இறைவன் அடி வாழ்க 

வேகம் கெடுத்துஆண்ட வேந்தன் அடி வெல்க

பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்தன் பெய்கழல்கள் வெல்க

புறந்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க

கரங்குவிவார் உள்மகிழும் கோன்கழல்கள் வெல்க

சிரம்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க 

ஈசன் அடிபோற்றி எந்தை அடிபோற்றி

தேசன் அடிபோற்றி சிவன் சேவடி போற்றி

நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி

மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி

சீரார் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி 

ஆராத இன்பம் அருளும் மலைபோற்றி

சிவன் அவன் என்சிந்தையுள் நின்ற அதனால்

அவன் அருளாலே அவன்தாள் வணங்கிச்

சிந்தை மகிழச் சிவ புராணம் தன்னை

முந்தை வினைமுழுதும் ஓய உரைப்பன் யான். 

கண் நுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்தெய்தி

எண்ணுதற்கு எட்டா எழிலார் கழல் இறைஞ்சி

விண் நிறைந்தும் மண் நிறைந்தும் மிக்காய், விளங்கொளியாய்,

எண்ணிறந்து எல்லை இலாதானே நின் பெரும்சீர்

பொல்லா வினையேன் புகழுமாறு ஒன்றறியேன் 

புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்

பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்

கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்

வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச்

செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள் 

எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம்பெருமான்

மெய்யே உன் பொன் அடிகள் கண்டு இன்று வீடு உற்றேன்

உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற

மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள்

ஐயா எனவோங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே 

வெய்யாய், தணியாய், இயமான னாம்விமலா

பொய் ஆயின எல்லாம் போய் அகல வந்தருளி

மெய் ஞானம் ஆகி மிளிர் கின்ற மெய்ச் சுடரே

எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே

அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல் அறிவே 

ஆக்கம் அளவு இறுதி இல்லாய், அனைத்து உலகும்

ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள் தருவாய்

போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின் தொழும்பின்

நாற்றத்தின் நேரியாய், சேயாய், நணியானே

மாற்றம் மனம் கழிய நின்ற மறையோனே 

கறந்த பால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச்

சிறந்தடியார் சிந்தனையுள் தேன்ஊறி நின்று

பிறந்த பிறப்பு அறுக்கும் எங்கள் பெருமான்

நிறங்கள் ஓர் ஐந்து உடையாய், விண்ணோர்கள் ஏத்த

மறைந்திருந்தாய், எம்பெருமான் வல்வினையேன் தன்னை 

மறைந்திட மூடிய மாய இருளை

அறம்பாவம் என்னும் அரும் கயிற்றால் கட்டி

புறம்தோல் போர்த்து எங்கும் புழு அழுக்கு மூடி,

மலம் சோரும் ஒன்பது வாயிற் குடிலை

மலங்கப் புலன் ஐந்தும் வஞ்சனையைச் செய்ய, 

விலங்கு மனத்தால், விமலா உனக்குக்

கலந்த அன்பாகிக் கசிந்து உள் உருகும்

நலம் தான் இலாத சிறியேற்கு நல்கி

நிலம் தன்மேல் வந்தருளி நீள்கழல்கள் காட்டி,

நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத் 

தாயிற் சிறந்த தயாவான தத்துவனே

மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே

தேசனே தேனார் அமுதே சிவபுரானே

பாசமாம் பற்றறுத்துப் பாரிக்கும் ஆரியனே

நேச அருள்புரிந்து நெஞ்சில் வஞ்சம் கெடப் 

பேராது நின்ற பெருங்கருணைப் பேராறே

ஆரா அமுதே அளவிலாப் பெம்மானே

ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே

நீராய் உருக்கி என் ஆருயிராய் நின்றானே

இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே 

அன்பருக்கு அன்பனே யாவையுமாய் இல்லையுமாய்

சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே

ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே

ஈர்த்து என்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே

கூர்த்த மெய் ஞானத்தால் கொண்டு உணர்வார் தம்கருத்தின் 

நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண்ணுணர்வே

போக்கும் வரவும் புணர்வும் இலாப் புண்ணியனே

காக்கும் என் காவலனே காண்பரிய பேரொளியே

ஆற்றின்ப வெள்ளமே அத்தா மிக்காய் நின்ற

தோற்றச் சுடர் ஒளியாய்ச் சொல்லாத நுண்ணுணர்வாய் 

மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்து அறிவாம்

தேற்றனே தேற்றத் தெளிவே என் சிந்தனை உள்

ஊற்றான உண்ணார் அமுதே உடையானே

வேற்று விகார விடக்கு உடம்பின் உள்கிடப்ப

ஆற்றேன் எம் ஐயா அரனே ஓ என்றென்று 

போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய் ஆனார்

மீட்டு இங்கு வந்து வினைப்பிறவி சாராமே

கள்ளப் புலக்குரம்பைக் கட்டழிக்க வல்லானே

நள் இருளில் நட்டம் பயின்று ஆடும் நாதனே

தில்லை உள் கூத்தனே தென்பாண்டி நாட்டானே 

அல்லல் பிறவி அறுப்பானே ஓ என்று

சொல்லற்கு அரியானைச் சொல்லித் திருவடிக்கீழ்

சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார்

செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவன் அடிக்கீழ்ப்

பல்லோரும் ஏத்தப் பணிந்து. 

திருச்சிற்றம்பலம்

என் பாடி இறைவனை வணங்கினார்.உடன் கிருத்திகா குட்டியும் மழலை மொழியில் கொள்ளு தாத்தாவோடு பாடினாள்.

சாரதா அவரோட மனைவிங்க எழுபத்து நான்கு வயசு ஆகுது 

ஆனாலும் பாக்குறதுக்கு ஐம்பது வயசு மாதிரி தாங்க இருக்காங்க 

அந்த காலத்து மனுசிங்க…

இவங்களுக்கு மொத்தம் நாலு பசங்க கதையோட போக்குல ஒவ்வொருத்தவங்களா பத்தி பாத்துப்போம் இப்போ அரிசி ஆலைக்கு கிளம்பிட்டு இருக்காரு ராஜதுரை சாமிநாதரோட நாலாவது பையன்.

ராஜா துரை கிளம்பி வந்தத பாத்துட்டு சாரதா ,அவங்களோட நாலாவது மருமகள் ஆன செல்வியை கூப்பிடுறாங்க மோர் கொண்டு வந்து கொடுக்க சொல்லி ,

அவங்களும் மோர் கொண்டு வந்து கொடுத்துட்டு,அவங்க குடிக்கிற வரையும் பக்கத்துலயே நிக்கிறாங்க 

அவங்க குடிச்சு முடிச்சு டம்ளரை கொடுத்தோன அந்த டம்ளர வாங்கிட்டு உள்ளார சமையல் கட்டுக்கு வர

அங்க சாப்பாடு கட்டிட்டு இருக்க ஜெயந்தியை பார்த்துட்டு அக்கா இன்னைக்கு பெரிய மாமாக்கு கரும்பு ஆலைக்கு சாப்பாடு கொடுக்கிறப்ப இவங்களுக்கு சாப்பாட்டை 

கொடுத்து விட சொன்னாங்க அக்கா அப்படின்னு சொல்றாங்க….

சரின்னு ஜெயந்தி சொல்லிட்டு ரெண்டு பேருக்கும் ரெண்டு கூடையில சாப்பாடு கட்ராங்க…

  

சரி வாங்க என்ன விசேஷம்னு அடுத்த பதிவில் தெரிஞ்சிப்போம்.

  

 -உறவு வரும்.

    No comments yet.