episode 10

Rani Govindh | 04 Nov 2025

Epi 10

குடோனுக்கு ஸ்டாக் எடுக்க சென்ற இளமதி ஜெகனை அண்ணன்
என்று அழைத்ததற்கு வாய்க்கு வந்தபடி அசிங்கமாக பேசி விட்டான்
, அவள் அந்த
அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்கு  முன்பே
சட்டென்று அவளின் இடுப்பில் அவன் கை வைக்க போக இளமதி பதறி போய் பின்னால் நகர்ந்து
நின்றாள்.

“எ.. என்ன பண்றீங்க, நான் அப்புறமா வந்து ஸ்டாக் பார்த்துக்கறேன்” என அதற்கு
மேல் அங்கிருந்தால் தனக்கு ஏதாவது விபரீதம் நடந்து விடலாம் என்று அறிந்தவள்
அங்கிருந்து கிளம்ப போனாள்.

“ஏய், நில்லு, நீ புதுசா
தான சேர்ந்திருக்க
, சொன்ன
வேலைய ஒழுங்கா செய்யாம போனா வேலைய விட்டே தூக்கிடுவாங்க பரவால்லையா
?

இந்த மாதம் அவளுக்கு வர போகும் சம்பளத்தை கணக்கு போட்டு
எக்கச்சக்க செலவுகள் லைன் கட்டி நின்று கொண்டிருக்க
, இந்த வார்த்தையை கேட்டதும் அங்கிருந்து ஓட போனவள் ஆணி
அடித்தது போல் அப்படியே நின்று விட்டாள். அவளின் இயலாமையும் தேவையும் ஜெகனுக்கு
நன்றாகவே புரிந்து விட
, அதற்கு
மேல் அவன் ஆட்டம் அதிகமானது.

“சரி வா, எப்படி ஸ்டாக் எடுக்கனும்னு நானே உனக்கு சொல்லி தரேன்” என அவன் அவளோடு
கூடவே நிற்க அவளுக்கு பயத்தில் வியர்க்க ஆரம்பித்தது
, மனசெல்லாம் படபடவென அடித்து கொண்டது.

“ஆமா, பார்த்தா இளசு மாதிரி இருக்க, புடவைலாம் கட்டாத, பெரிய
பொம்பள மாதிரி தெரியற” என அவளின் இடையை பார்த்தவாறே அவன் கூற அவள் கைகள்
அனிச்சையாக இடையை மறைத்தது.

“கீழ இருக்கற ஸ்டாக்லாம் பார்த்தது போதும், அங்க மேல நாலஞ்சு
பெட்டி இருக்கு பாரு
, அந்த ஏணி
மேல ஏறி அதையும் பார்த்துட்டு வா” என தூரத்தில் இருக்கும் பெட்டியை அவன் கை காட்ட
அவனிடம் இருந்து கொஞ்சம் இடைவெளி கிடைத்தால் போதும் என்று நினைத்தவள் வேகமாக அங்கே
சென்று விட்டாள், அவனுக்கு அந்த நேரம் கால் வர அவன் போன் பேசி கொண்டிருந்தான்.
அதனால் அவள் நிம்மதியாக ஏணியில் நின்று கொண்டு அந்த பெட்டியில் இருந்த ஸ்டாக்கை
பார்த்து எழுதி கொண்டிருக்க
, சடனாக அவள் காலில் எதோ ஒரு உணர்வு தோன்றவும் குனிந்து பார்த்தாள், ஜெகன் தான் அவள் காலில்
இருந்து மெல்ல புடவையை மேலே நகர்த்தி கொண்டிருக்க
, அதை பார்த்தவள் வேகமாக ஒரு ஸ்டெப் மேலே ஏறி நின்று கொண்டாள்.
அவளுக்கு அழுகையே வந்து விட்டது.

“என்னடா பண்ற பொறுக்கி ராஸ்கல்” என பதட்டத்தில் கத்த
ஆரம்பித்து விட்டாள்.

“ஏய், என்ன ஓவரா சவுண்டு விடற, இப்போ என்ன உன்ன ரேப்பா பண்ணேன், ஏணில நிக்கறயே, புடவை
தட்டுபட்டு கீழே விழுந்துருவன்னு அக்கறைபட்டா என்னையே பொறுக்கின்னு பேசறயா
, கீழ இறங்கி வாடி, இன்னைக்கு இந்த
பொறுக்கி என்னெல்லாம் பண்ண முடியும்னு உனக்கு புரிய வைக்கறேன்” என அவன் ஏணிக்கு
கீழே நின்று கொண்டிருக்க
, இளமதிக்கு
பயத்தில் என்ன செய்வது என்றே புரியவில்லை.

கீழே இறங்கினால் அவன் என்ன வேண்டுமானாலும் செய்வான்
என்பது அவளுக்கு நன்றாகவே புரிந்தது
, இப்பொழுது என்ன செய்வது என்பது அறியாமல் கண்ணீரோடு அவள் ஏணியிலேயே நின்று
கொண்டிருந்தாள்.

அவளை முறைத்து பார்த்தவன் “என்னடி, ஏணிலையே நின்னா ஒன்னும்
பண்ண முடியாதுன்னு நினைக்கறையா
, இருடி, குடோவுன்
கதவ சாத்திட்டு வந்து உன்ன பேசிக்கறேன்” என கோபமாக கதவுக்கு அருகில் சென்று
கொண்டிருக்க
, அவன் கதவை
சாத்தி விட்டால் தப்பிக்க வழியே இல்லை என உணர்ந்தவள் பதறி போய் எப்படியாவது
அங்கிருந்து ஓடி விடலாம் என்கிற எண்ணத்தில் வேக வேகமாக ஏணியில் இருந்து
இறங்கினாள்.

ஆனால் அதற்குள்ளாக அவன் கதவை சாத்தி விட, அவளுக்கு பயத்தில் என்ன
செய்வது என்று புரியவில்லை.

“ப்ளீஸ் என்ன விட்டுடுங்க, நான் உங்கள திட்டினது தப்பு தான், அதுக்கு வேணும்னா உங்க
கால்ல விழுந்து கூட மன்னிப்பு கேட்டுக்கறேன்
, என்ன ஒன்னும் பண்ணிடாதிங்க” என கதறி அழுதாள்.

“பொண்ணுங்க சாரி கேட்டா எனக்கு பிடிக்காது, அதே மாதிரி நீ
போட்டுருக்க சாரி கூட எனக்கு பிடிக்கல
, நீயா கழட்டிடு செல்லம்” என கூறி கொண்டே அவன் அவளை நோக்கி நடந்து வர, அவள் பயத்தில் திரும்ப
ஏணிக்கு ஓடி
, ஏணி மீது
ஏறி நின்று கொண்டாள். அதை பார்த்ததும் அவன் அடக்க முடியாமல் சிரித்தான்.

“ஓஹோன்னானாம், அப்படி யோசிக்கிறியா, நீ அந்த ஏணில ஏறிட்டா
உன்ன ஒன்னும் பண்ண முடியாதுன்னு நினைப்பா
, இன்னைக்கு நாள் புல்லா அங்க நின்னாலும் உன்ன காப்பாத்த
இந்த குடோவுனுக்கு யாரும் வர மாட்டாங்க
, ஆனா எனக்கு அவ்ளோ பொறுமைலாம் இல்ல, அதனால உன்ன எப்படி ஏணில இருந்து இறக்கறதுன்னு எனக்கு
தெரியும்” என கூறி கொண்டே ஏணி அருகில் வந்தவன் ஏணியை தள்ளி விட ஆரம்பித்தான். இதை
அவள் எதிர்பார்க்கவில்லை
, அவன் தள்ளி
விடும் போர்சில் கீழே விழுந்தால் நிச்சயம் அடிபடும்
, அது தன்னை இன்னும் பலவீனமாக்கும் என உணர்ந்தவள் கீழே
இறங்கி வர அதற்கும் அவன் கேலியாக சிரித்தான்.

“அப்போ மானத்த விட உயிர் பெருசுன்னு நினைக்கற, புத்திசாலி தான்”

“ப்ளீஸ் என்ன விட்ருங்க, நீங்க நினைக்கற மாதிரி பொண்ணு நான் இல்ல”

“உனக்கு ஒரு உண்மை தெரியுமா? நான் நினைக்கற மாதிரி பொண்ணு இந்த கம்பெனில யாருமே இல்ல
தான்
, ஆனா பலரை
நான் நினைக்கற மாதிரி மாத்தி வச்சிருக்கேன்
, அந்த லிஸ்ட்ல இப்போ நீயும் சேர்ந்துக்கோன்னு தான்
சொல்றேன்
, ஒழுங்கா
நான் சொல்றத கேட்டா இந்த கம்பெனில ராணி மாதிரி வேலை செய்யாம சம்பளம் வாங்கலாம்
, இல்ல நரகம்னா என்னனு
பார்ப்ப” என பேசியபடியே அவளின் புடவை முந்தானையை அவன் பிடித்தான். அவள்
துடிதுடித்து போனாள். நூற்று கணக்கில் வேலை
செய்யும் ஒரு கம்பனியில் வைத்து தனக்கு இப்படி எல்லாம் அநியாயம் நடக்கும் என்று
அவள் நினைத்து கூட பார்த்திருக்கவில்லை.  எல்லாம்
முடிந்து விட்டது என அவள் தைரியத்தை இழக்கும் தருணம் குடோன் கதவு வேகமாக
தட்டப்பட்டது.

கதவு தட்டப்படும் சத்தம் கேட்டு கடுப்பான ஜெகன் “எவன்டா
இது இந்நேரத்துல”  என முணுமுணுத்து
கொண்டான்
, திரும்ப
திரும்ப கதவு தட்டி கொண்டே இருக்கவும்
, “இங்க பாரு, இங்க
நடந்தத யாருகிட்டயாவது சொன்ன
, உன் வீட்டுக்கே வந்து உன் கதைய முடிச்சிருவேன் ஜாக்கிரதை” என மிரட்டி
விட்டு கதவை திறக்க சென்றான்.

அவள் கண்ணீரோடு நின்று கொண்டிருக்க, ஜெகன் கதவை திறந்ததும் ஹெல்ப்பர் கணேசன், யாரோ அழைத்ததாக சொல்லி
ஜெகனை பரபரப்பாக அங்கிருந்து கூட்டி கொண்டு சென்று விட்டான். அவன் சென்றதும்
குடோவுனுக்கு ஓடி வந்த சாந்தி அவள் கண்ணீரோடு
நிற்கும் கோலத்தை பார்த்து பதட்டமானார்.

“ஒன்னும் ஆகிடலையே” என அவர் கேட்டதை வைத்தே இங்கு
என்னல்லாம் நடந்திருக்கும் என்பதை அவரும் யூகித்து விட்டார் என்பது அவளுக்கு
புரிந்தது
, அவள் அழுது
கொண்டே அவரை கட்டி பிடித்து கொள்ள
, “ஒன்னும் இல்லம்மா, அழாத, அதான் நான்
வந்துட்டேன்ல
, அந்த மகேந்திரன் உன்ன ஸ்டாக் எடுக்க அனுப்பினப்பவே எனக்கு
கருக்குன்னு இருந்துச்சி
, எல்லாம்
கூட்டு களவாணிங்க
, அதான்
சந்தேகப்பட்டு ஜன்னல் வழியா எட்டி பார்த்தேன்
, அந்த பய உன்ன பாடா படுத்திட்டு இருந்தான், அவன இங்கிருந்து
கூட்டிட்டு போக வைக்க ஆள ரெடி பண்ணிட்டு வரதுக்குள்ள கதவ வேற சாத்திட்டான்
, என்ன பண்றது, நம்ப பொழப்பு இந்த
பொம்பள பொறுக்கிங்கங்களுக்கு நடுவுல தான்னு விதியாகி போச்சி
, சரிம்மா அழாத, நான் எப்படியாவது சுந்தர்கிட்ட பேசி உன்ன ஆபிஸ் ரூம்ல வேலைக்கு போட
வைக்கறேன்
, அங்க
உனக்கு இவன் பிரச்சனை இருக்காது
, இதுக்கு மேல இங்கிருந்தா இந்த ஜெகன்கிட்ட இருந்து தப்பிக்க முடியாது” என
அவளை சமாதானபடுத்தியவர் அவர் கூறியது போல் யாரிடமோ எல்லாம் பேசி அவளை அக்கவுண்ட்ஸ்
டிப்பார்ட்மென்ட்க்கு மாற்றி இருந்தாள். ஆனால் தனக்கு உதவி செய்ததற்காகவே அந்த
ஜெகன் அவரை டார்ச்சர் செய்ய ஆரம்பிக்க
, வேலையும் வேண்டாம் ஒன்னும் வேண்டாம் என்று அடுத்த ஆறு மாதத்திலேயே வேலையை
விட்டு நின்று விட்டார்.

இந்த காட்சிகள் எல்லாம் இளமதிக்கு நினைவுக்கு வர அவள்
மனதில் அப்படி ஒரு ஆதங்கம் ஏற்பட்டது
, அந்த ஜெகனை இங்கிருந்து அடித்து துரத்த வேண்டும் என்பது  எத்தனை பெண்களின் வேண்டுதல், அது நிறைவேறிய நாளை
கொண்டாட வேண்டும் அல்லவா
, இப்படி ஒரு
நல்ல காரியத்திற்கு காரணமான சுபாஷை பார்த்து நன்றி சொல்ல வேண்டும் என்றும்
அவளுக்கு தோன்றவே செய்தது.

“சுபாஷ் சார பார்த்தீங்களாக்கா, அவருக்கு தேங்க்ஸ் சொன்னீங்களா?” என ஆர்வமாக விசாரித்தாள்.

“இல்ல, அவரு இந்த விசயத்த ஏன் அவர்கிட்ட தெரியபடுத்தலன்னு செம கோவத்துல இருக்காரு, மேனேஜர்க்கு
கூட செமையா டோஸ் கொடுத்துட்டாரு
, இந்த நேரத்துல நாம போனா தேவை இல்லாத பிரச்சனை தான், அதான் யாரும் போகல”

“அக்கா எனக்கென்னவோ அவர பார்த்து ஒரு தேங்க்ஸ்
சொல்லனும்னு தோணுதுக்கா”

“லூசாடீ நீ, நீயே போய் பாதிக்கப்பட்ட பொண்ணுங்க லிஸ்ட்ல  நீயும் இருக்கன்னு காட்டி கொடுக்க போறயா, அவன் சில்மிஷம் பண்றத
சொல்லாததுக்கே கடுப்புல இருக்காரு
, இதுல இத்தன வருஷமா அவன் இவ்ளோ பெரிய வேலைலாம் பார்த்திருக்கான்னு தெரிஞ்சா
கம்பெனி கம்பெனியா இருக்காது
, அடுத்து மேனேஜர் மாட்டுவான், அவன் மாட்டினா நமக்கு ஒன்னும் பிரச்சனை இல்ல தான், ஆனா பெரிய ஓனருக்கு மேனேஜர் ரொம்ப முக்கியமான ஆளு, அவன் மேல சுபாஷ் சார்
நடவடிக்கை எடுத்தாருன்னா அப்பா பையனுக்குள்ளயே பிரச்சனை வெடிக்கும்
, இனி கம்பெனிக்கு வர
கூடாதுன்னு சுபாஷ் சார அனுப்பி வச்சாலும் ஆச்சரியபடறதுக்கு இல்ல
, எதோ அவரும் பொறுப்புல
இருக்கறதால தான் இந்த மேனேஜர்லாம் கொஞ்சமாவது அடங்கி கிடக்கறான்
, அவர் வரவே மாட்டார்னு
தெரிஞ்சா அவ்ளோ தான்
, அடுத்த
ஆப்பு நமக்கு தான்
, இப்போ
புரியுதா இவ்ளோ நடந்தும் நாங்க ஏன் சுபாஷ் சார்கிட்ட விசயத்த கொண்டு போகலன்னு”

“எல்லாம் சரி தான்க்கா, ஆனா”

“இங்க பாரு மதி, உன்னோட தேங்க்ஸ உன்னோட வச்சிக்கோ, நீ தேங்க்ஸ் சொல்றேன்னு
போனா ஒவ்வொரு உண்மையா வெளிய வந்துடும்
, அப்புறம் நான் சொன்னது தான் நடக்கும், அந்த ஒத்த வார்த்தைய சொல்றேன்னு போயி கம்பெனில கலவரத்த
பண்ணி விட்டுடாத
, இந்த வேலைய
நம்பி தான் என் குடும்பம் இருக்கு
, உன் குடும்பமும் இருக்கு, புரிதா” என கிளிபிள்ளைக்கு சொல்வது போல் சொல்லி விட்டு அவளின் வேலையை பார்க்க
சென்று விட்டாள்.

ஆனால் இளமதிக்கு இருக்கும் பெரிய பிரச்சனை என்னவென்றால்
அவளுக்கு ஒரு விசயத்தில் அதீத ஆர்வம் வந்து விட்டால் அவளால் அதை செய்யாமல் இருக்க
முடியாது
, தன்னை
நாசம் செய்ய நினைத்தவனுக்கு பல மாதங்களுக்கு பிறகு தண்டனை கிடைத்திருக்கிறது
, அந்த சந்தோசம் அவள்
கண்ணை மறைக்க
, இப்படி ஒரு
நல்ல காரியத்தை செய்தவர் முகத்தை ஒளிந்திருந்தாவது பார்க்க வேண்டும் என்று
அவளுக்குள் ஆர்வம் பிறந்தது. சுமதி பிசியாக வேலை பார்த்து கொண்டிருந்த கேப்பில்
இளமதி ரெஸ்ட் ரூம் போய் விட்டு வருவதாக கூறி சுபாஷின் ஆபிஸ் ரூம் நோக்கி போய்
கொண்டிருந்தாள். இளமதியின் இந்த ஆர்வத்தால் என்னவெல்லாம் நடக்க போகிறதோ?
பொறுத்திருந்து பார்க்கலாம்.

 

    No comments yet.