episode 1

Rani Govindh | 03 Nov 2025

இரண்டு வருடங்களுக்கு பிறகு….

ஏய் அந்த பக்கமா போய் அங்க நிக்கற யாருகிட்டயாவது விசாரிக்கலாம்ல…அதட்டி கொண்டே இருந்த அம்மாவிடம் சரிம்மா

நான் போய் என்னனு விசாரிச்சிட்டு வரேன் நீ பை எல்லாத்தையும் வச்சிக்கிட்டு இங்கயே நில்லு என்று கூறிவிட்டு தெரியாத ஊரில் இப்படி யாரையும் தெரியாமல் நிற்கிறோமே என்ற கலக்கத்தோடு நகர்ந்து சென்றால் பிரியா…

குடும்பத்தோடு திருப்பதி சென்ற இடத்தில் தான் கோவிலுக்குள்ளே சாமி தரிசனம் முடித்த கையோடு தன் ஒட்டு மொத்த குடும்பத்தையும் ஒரு திசையில் தொலைத்து விட்டு அம்மாவும் பெண்ணுமாக பைகளோடு மல்லுகட்டி கொண்டு அங்கேயும் இங்கேயுமாக அல்லாடி கொண்டிருக்கின்றனர்…

மேடம் இங்க வெளிய போற வழி எங்க இருக்கு?

(அவங்க பேசிய மொழி தெலுங்கா, கன்னடமா என்றே பிரியாவுக்கு புரியவில்லை, இதுக்கு மேலே இவங்ககிட்ட கேட்கறது வேலைக்கு ஆகாது என்று நினைத்துகொண்டு வேறு யாரிடம் கேட்பது என்ற யோசனையில் கண்களை உலவவிட்டால்…)

அப்பொழுதுதான் அங்கு அவர் தன் கம்பீரமான உடலின் பின்புறத்தை காட்டியபடி காவல்துறையின் கண்ணியமான ஆடையில் நம்பிக்கைக்குரிய நபராய் நின்று கொண்டிருந்தார்…

அவரை பார்த்த மகிழ்ச்சியில் பிரியாவுக்கு கொஞ்சம் தெம்பாய் இருந்தது…

சார் சார் என்று அவள் அழைத்ததை கவனிக்காமலே வாக்கிடாக்கியில் அவரது வேலையை கவனித்து கொண்டிருந்தார்…

சார் சார் இந்த முறை பிரியாவின் அழைப்பு வேகமாகவே இருந்தது…ஆனால் அவளுக்கு என்ன தெரியும் அவர் திரும்பினால் தன் ஒட்டுமொத்த வாழ்க்கையே திருப்பம் கண்டுவிடும் என்று…

எப்படியாவது தன் ஒட்டு மொத்த குடும்பத்தையும் கண்டடைய வேண்டும் என்று சிரத்தையாக நின்று கொண்டிருந்தவளை அலட்சியமாக திரும்பி பார்த்தார் அந்த நபர்…

அந்த ஒரு பார்வை அந்த ஒரே பார்வை அவளது கடந்த காலத்தை கண்முன்னே நிறுத்தியது மட்டும் அல்ல எதிர்காலத்தையே கேள்விகுறி ஆக்கிவிட்டது…

வார்த்தைகள் எங்கே போய் ஒளிந்து கொண்டதோ… பிரம்மிப்பு, ஆச்சரியம், அழுகை என்று அத்தனை பரிணாமங்களும் கண்கள் மட்டுமே பிரதிபளித்துகொண்டிருந்தது…

வார்த்தைகளை ஒருங்கிணைத்து அவள் ரவி என்று அழைக்கும் போதே ஏய் பிரியா…. ரேணு, கீது லாம் இங்க இருக்காங்க வாடி என்று அம்மா அழைக்கும் சத்தம் கேட்டது…

உணர்வுகளுக்கு நடுவே திணறி கொண்டிருந்த பிரியாவால் ஒன்றுமே செய்ய முடியவில்லை, அவள் அம்மாவே இழுத்து செல்லும் வரை அசையாமல் அவரையே பார்த்து கொண்டிருந்ததை தவிர வேறு எதுவும் செய்ய முடியவில்லை அவளால்…

அவன் மட்டும் என்ன பெரிய காவல் அதிகாரி என்ற பேர் தான் சில வார்த்தைகளால் வரையறுக்க முடியாத உணர்வுகளுக்கும் உறவுகளுக்கும் மத்தியில் யாராய் இருந்தால் என்ன பிரியாவை போலே அசையாது தானே நிற்க வேண்டும்…அவன் கண்களிலும் கூட எட்டி பார்க்க அனுமதி கேட்டு கொண்டிருந்தது சில கண்ணீர் துளிகள்….

பிரியாவிற்கும் ரவிக்குமான உறவு பற்றி அடுத்த பாகத்தில் விவரிக்கிறேன்…

    No comments yet.