சிறை2
“ஏன்ப்பா தம்பி, இந்தாப்பா உன் வீட்டம்மா உனக்கு குடுத்துட்டு போச்சு மீன் குழம்பு பிடிக்கும்னு இந்த வெயில்ல மெனக்கெட்டு கொண்டு வந்துருக்கு வயித்து புள்ளைக்காரி அவ ஆசைக்காச்சி ஒரு எட்டு பார்க்கலாம்ல தம்பி. பாவம் முகமே வாடிப் போச்சி. வயித்துப் புள்ளைக்காரியை இப்படி எதுக்கும் ஏங்க விடக்கூடாது தம்பி. அது பிள்ளைக்கு நல்லது இல்லை. நான் அவ்வளவு தான் சொல்ல முடியும் அப்புறம் உன் இஷ்டம்” என்று சொன்னப்படி கையிலிருந்த கூடையை அந்த காவலர் ரணதீரனிடம் கொடுக்க.
அவன் ஏன் அவர் பேச்சைக் கேட்கப் போகிறான். அவர் கொண்டுவந்த சாப்பாட்டை சாப்பிட ஆரம்பித்து விட்டான் அப்படி ஒரு ஜீவன் அங்கிருப்பதையே கருத்தில் கொள்ளாது. அவன் முகத்தில் இருந்து எதையும் அவரால் கண்டு கொள்ளவே முடியவில்லை.
‘இருந்தாலும் இம்புட்டு அழுத்தம் ஆகாது இந்த பயலுக்கு. பாவம் அந்த புள்ளை இவனை புடிச்சிட்டு தொங்குது’ என்று அலுத்துக் கொண்டே அங்கிருந்து அகன்றார் அந்த முதிய காவலர்.
செல்லும் அவரை ஒரு பார்வை பார்த்தவன், ஒரு பெருமூச்சுடன் சாப்பிட ஆரம்பித்து விட்டான்.
அவன் இங்கு வந்து கிட்டதட்ட ஆறு மாதங்கள் ஆகிறது. இதுவரை யாரிடமும் அதிகம் பேசியது இல்லை. அவன் மனைவி வாராவாரம் இப்படி எதையாவது கொண்டு வருவாள் அதை நல்லா மூக்கு முட்ட தின்று ஏப்பம் விட்டு விட்டு போய்விடுவான். அவளிடமும் இன்று வரை முகத்தைக் கூட காட்டவில்லை.
ஏன் இதுவரை ஒரு முறைக் கூட அவளைப் பார்க்க நினைக்க வில்லை. அவளையும் அனுமதிக்கவில்லை. அவள் முகமே அவனுக்கு மறந்து போயிருக்கும். ஆனால் அவளுக்கு அப்படியில்லை. நித்தமும் மனதில் அவளையும் வயிற்றில் அவன் மகவையும் சுமந்து கொண்டிருக்கிறாள்.
அவன் சிறைக்கு வந்த பின் இரண்டு முறை பார்த்திருப்பான் அதுவும் கோர்ட்டில் கேஸ் நடக்கும் போது கோர்ட் வாசலில் பார்த்ததோடு சரி.
அவனுக்கு தண்டனை வழங்கப்பட்ட அடுத்த நொடி டைவர்ஸ் அப்ளை செய்தவன் தனது சொத்துகளில் சிலதை அவள் பெயரிலும் மாற்றி எழுதி வைத்து விட்டான்.
அதன் பின் அவளை பார்ப்பதையும் பேசுவதையும் முற்றிலும் தவிர்த்து விட்டான்.
டைவர்ஸ் கேஸ் இன்னும் நடந்து கொண்டு தான் இருக்கிறது. அவள் தான் இன்னும் டைவர்ஸ் கொடுக்க மனமின்றி எதிர்ப்பு தெரிவித்துக் கொண்டிருக்கிறாள்.
அவளது உடல் மற்றும் மனநலனை கருத்தில் கொண்டு குழந்தைப் பிறக்கும் வரை விவாகரத்து வழக்கை கோர்ட் தள்ளி வைத்திருக்கிறது.
இனி நீ என் வாழ்வில் வேண்டாம் என்னும் நிலையில் அவன்…. உன்னைத் தவிர வேறு வாழ்வே தனக்கில்லை என்னும் நிலையில் அவள்…
…………………
நீண்ட நொடிய பயணம்…
அவளும் அவனும் மட்டும்…. ஏதோ யோசனையுடன் அமைதியாக வெளியே வெறித்தபடி வந்தாள் வானதி…
அவளை ஓர் நொடி அழுத்தமாக பார்த்த வாசுதேவன், “என்ன யோசிக்குற வானு?” என்றான் வாசுதேவன் அவளை கேள்வியாகப் பார்த்த படி.
“ஒன்னும் இல்லை” என்றாள் அவள்.
“ஒன்னும் இல்லைனு உன் வாய் மட்டும் தான் சொல்லுது… பட் உன் குட்டி மூளை எதையோ தீவிரமா யோசிக்குதுனு உன் முகமே காட்டிக் கொடுக்குது” என்றவன் சொல்ல அவனை முறைத்துப் பார்த்தாள் வானதி.
“ப்ச் முறைச்சா பயந்துடுவேனா? என்னனு சொல்லு வானு” என்றான் அவன்.
“சொன்னா கோவப்படுவ” என்றாள் எங்கோ பார்த்தபடி.
அவளது நாடிப் பிடித்து தன்னை காண வைத்தவன் “ரணதீரன் பத்தி யோசிக்குறீயா?” என்று கேட்கும் போது அவன் முகத்தில் என்ன உணர்வென்றே தெரியவில்லை.
அவனை அழுத்தமாகப் பார்த்தவள், ஆமென்றாள்.
“என்ன விஷயம்?” என்ன விஷயம் என்றவன் கேட்க.
“தீரன் மாமா கேஸை மேல்முறையீடு பண்ணலாமானு யோசிக்குறேன்” என்றாள் அவள்.
“ப்ச் அவனே நான் தான் கொலைப் பண்ணேன்னு போய் சரண்டர் ஆகிருக்கான். அண்ட் எல்லா சாட்சியும் அவனுக்கு எதிராத் தான் இருக்கு இதுக்கு மேல மேல்முறையீடுனு போறது முட்டாள்தனம் தான்” என்றான் வாசு சலிப்பாக.
“ப்ச் என்னோட முறைப்பையனா இல்லாம ஒரு போலீஸா கொஞ்சம் யோசிங்க சார். அண்ணன் எப்போ சாவான் திண்ணை எப்போ காலியாகும்னு பார்க்காதீங்க” என்றாள் அவனை முறைத்துக் கொண்டே.
அவனும் அதேப் போல் அவளை முறைத்தவன் “என்னைப் பார்த்தா உனக்கு எப்படி தெரியுது பொம்பளைப் பொறுக்கி மாதிரியா?” என்றவன் எகிறிக் கொண்டு வர.
அவளோ அவனை அழுத்தமாகப் பார்த்தபடி இருக்க.
“அப்போ இருந்து இப்போ வரை அப்படியே தாண்டி இருக்க…. இம்சை” என்று முனுமுனுத்துக் கொண்டவன், “கேரிங்கா இருக்கனு பார்க்குறேன் இல்லை செவுடு திரும்பிடும்” என்றவன் சாலையில் கவனமாக.
“இப்போ ஒரு போலீஸா எனக்கு ஒரு உதவி செய்ய முடியுமா வாசு சார்” என்றாள் அவனை யோசனையாகப் பார்த்தபடி.
“இல்லைனு சொன்னா மட்டும் விடவாப் போற? உன் ஆசைக்காக பண்றேன்” என்று முனுமுனுத்தவன்…
“சொல்லுங்க மேடம்” என்றான் பனிவாக…
“இந்த கேஸை மேல்முறையீடு பண்ணனும் எதாவது நல்லா ஸ்ட்ராங் வக்கீலா இருந்தா சொல்றீங்களா ப்ளீஸ்? பீஸ் எவ்ளோனாலும் பரவாயில்லை” என்று சொல்ல.
ஒரு பெருமூச்சுடன் அவளைப் பார்த்தவன் “இன்னும் அவனை நம்புறீயா வானும்மா?” என்று கேட்க.
“நம்பிக்கை அதானே எல்லாம்” என்றாள் ஒற்றைப் புருவம் ஏற்றி இறக்கி.
அவளது செய்கையில் மெல்ல சிரித்தவன், “என்னவோ சொல்ற வானும்மா… ஆனா ஒன்னு இப்போவும் சொல்றேன் நியாபகம் வச்சிக்கோ… அவன் குற்றவாளி இல்லைனு நிரூபனமாகி அவனுக்கு உன்னோட டைவர்ஸ் கேஸ்ஸூம் க்லோஸ் ஆகிருச்சுனா நான் என் பாட்டுக்கு என் வேலையைப் பார்த்துட்டு போயிருவேன். இதுல ஒன்னு நடக்கலைனாலும் அடுத்த நிமிஷம் நீ என்னோட மனைவியா இருப்ப நியாபகம் இருக்கட்டும். நீ எனக்கு கொடுத்த வாக்கு நினைவிருக்கும்னு நினைக்கிறேன்” என்றவன் அவளை அழுத்தமாகப் பார்க்க..
“அதேப் போல தீரன் மாமா மேல தப்பில்லைனு நிரூபிச்சி அவரை வெளியே கொண்டு வர எனக்கு நீங்க உதவி செய்வேன்னு வாக்கு குடுத்துருக்கீங்க… உங்களோட சுயநலத்துக்காக அந்த வாக்கை மீற மாட்டீங்கனு நம்புறேன்” என்றாள் அவள்…
“அந்த ஒரு நம்பிக்கையாவது என் மேல இருக்குதே” என்றவன் ஒரு பெருமூச்சுடன் சாலையில் கவனமாக…
“நீங்க நம்புறீங்களா தீரன் மாமா தான் அந்த கொலையைப் பண்ணிருப்பாருனு?” என்றவள் அவனை கேள்வியாகப் பார்க்க…
“நோ ஐடியா வானும்மா” என்றான் சாதாரணமாக….
அவளோ அவனை முறைக்க… “அடியே முறைப் பொண்ணுனா அடிக்கடி முறைக்கனும்னு அர்த்தம் இல்லை” என்றவன் மேலும் “எனக்கு ரணதீரன் பத்தி பர்செனல்லா தெரியாது. ப்ரொப்பஷன்னா பார்த்தா எல்லா சாட்சியும் அவனுக்கு எதிரா இருக்கு அதுவும் அவனே வந்து சரண்டர் ஆகிருக்கான் நான் தான் தப்பு பண்னேன்னு இதுக்கு மேல அவனைப் பத்தி விசாரிச்ச வரை முரடன் கோவக்கார முன்கோபினு தான் சொல்றாங்க. அண்ட் செத்தவனுக்கும் ரணதீரனுக்கும் ஏற்கனவே முன்பகை இருந்துருக்கு இதுக்கு மேல என்ன வேணும் அவன் தான் தப்பானவன்னு சொல்ல. ஆனா எனக்கு ஒன்னு தான் புரியலை… ஊருக்கே ராட்ஷசனா இருக்கவன் உனக்கு மட்டும் எப்படி ரட்ஷகனா இருப்பான்?”என்றவன் அவளைப் புரியாது பார்க்க….
அவளோ அவனை அழுத்தமாகப் பார்த்தாள்.
அவளைக் காக்கும் ரட்ஷகன் யாரோ?
No comments yet.