Category: தொடர்கதை
நாவல்மேளா!!!
தொடர்கதை எழுதுங்க, பரிசை வெல்லுங்க!!!
நம் தளத்தில் நவம்பர் 15 தொடர்கதை எழுத ஆரம்பித்து மார்ச் 31 தேதிக்குள் 60 எபிசோட்கள் தாண்டி எழுதும் அனைத்து கதைகளுக்கும் பரிசும் இணைய சான்றிதழும் உண்டு.
ஒருவர் ஒரு கதை மட்டுமே எழுதலாம். காதல், குடும்பம், ஆன்டி ஹீரோ கேட்டகரியில் எழுதலாம்.
கதை உங்கள் சொந்த படைப்பாக இருக்க வேண்டும். கதையின் காப்புரிமை உங்களுடையதாக இருக்க வேண்டும். நீங்கள் ஏற்கனவே வேறு தளத்தில் எழுதிய கதையை போட்டியில் பதிவிடலாம்..
மோசமான எழுத்து நடை, அதிக எழுத்து பிழை போன்றவற்றை தவிர்க்க வேண்டுகிறோம்.
ஒவ்வொரு எபிசோடும் குறைந்தபட்சம் 700 வார்த்தைகள் இருக்க வேண்டும்.
உங்கள் கதையை குறைந்தபட்சம் 500 வாசகர்களாவது தொடர்ந்து வாசிக்க வேண்டும்.
(அதாவது முதல் எபிசோடில் ஆரம்பித்து 60 episodes வரை ஒவ்வொரு எபிசோடையும் குறைந்தபட்சம் 500 வாசகர்களாவது படிக்க வேண்டும்)
ஒரு நாளில் இரண்டு எபிசோட் வரை மட்டுமே பதிப்பிக்க வேண்டும். அதற்கு மேல் கூடாது. இதை பாலோ செய்தால் போட்டியில் கலந்து கொள்ளும் 50 எழுத்தாளர்களுக்கும் பரிசு நிச்சயம்.
அவ்வளவு தான் ! பிறகு என்ன எழுத்தாளர் பெருமக்களே!!
பரிசு உங்களுக்கு தான்.. எழுத ஆரம்பியுங்கள்...
*இந்த போட்டியில் முதலில் பங்கேற்கும் 50 எழுத்தாளர்கள் மட்டுமே கலந்து கொள்ள முடியும். அதனால் விரைவில் போட்டியில் கலந்து கொண்டு அந்த 50 எழுத்தாளர்களுள் ஒருவராக மாறுங்கள்..
போட்டி ஆரம்பிக்கும் தேதி - 15 நவம்பர் 2025
போட்டி முடிவடையும் தேதி - 31 மார்ச் 2026
(முன்னெச்சரிக்கை - போட்டியில் நீங்கள் கதை பதிவிட்ட பிறகு edit அல்லது டெலிட் செய்ய முடியாது, அதனால் பதிவிடும் போதே சரியாக தலைப்பு, கதையை பதிவிடுங்கள். ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால் editor@valanchuli.com மெயிலுக்கு contact செய்யுங்கள். எங்கள் குழுவினர் உங்களுக்கு உதவி செய்வார்கள். போட்டி முடிவுகள் அறிவித்த பிறகு நீங்கள் விரும்பினால் உங்கள் கதையை தளத்தில் இருந்து நீக்கி விடுவோம்)
போட்டியில் எப்படி கலந்து கொள்வது?
போட்டி ஆரம்பிக்கும் தேதியில் தான் உங்களால் போட்டியில் கலந்து கொள்ள முடியும். போட்டி தேதி ஆரம்பம் ஆனதும் மெனுவில் போட்டிகள் கிளிக் செய்யுங்கள். அங்கே போட்டியில் கலந்து கொள்ள ' கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்' என்பதற்கு கீழே உள்ள ' படைப்பை சேர்க்க' என்பதை கிளிக் செய்யுங்கள்.
அடுத்து அங்கு கொடுக்கப்பட்ட விவரங்களை கீழே கொடுக்கப்பட்டுள்ளது பார்த்து நிரப்புங்கள்.
போட்டிகள்
இதில் நாவல்மேளா 2025 என்பதை தேர்ந்தெடுக்கவும்.
தலைப்பு
உங்கள் தொடர்கதையின் தலைப்பை டைப் செய்யவும்.
பிரிவுகள்
உங்கள் கதை எந்த வகையை சார்ந்தது என்பதை தேர்ந்தெடுக்கவும்.
உதாரணம் - காதல், ஆன்டி ஹீரோ கதை
Description
உங்கள் கதை பற்றிய முன்னோட்டம், உங்கள் கதையில் இதெல்லாம் இருக்கும், இப்படி தான் கதையின் போக்கு இருக்கும் என்பது பற்றிய சிறு அறிமுகம் கொடுக்கவும்.
படம்
உங்கள் கதைக்கு பொருத்தமான கவர் இமேஜ் அப்லோட் செய்யவும்.
இதெல்லாம் நிறைவு செய்த பிறகு சமர்ப்பிக்கவும் கிளிக் செய்யுங்கள். இப்பொழுது உங்கள் கதையின் தலைப்பு register ஆகி விடும்.
உங்கள் கதையில் முதல் எபிசோட் எழுத வேண்டுமானால் மெனுவில் 'எழுத' கிளிக் செய்யுங்கள்.
அடுத்து அங்கு கொடுக்கப்பட்ட விவரங்களை கீழே கொடுக்கப்பட்டுள்ளது பார்த்து நிரப்புங்கள்.
தொடர்கதை
இங்கு கிளிக் செய்து உங்கள் தொடர்கதையின் தலைப்பை செலக்ட் செய்யுங்கள்.
தலைப்பு
Episode 1 என டைப் செய்யுங்கள்.
அடுத்தது கொடுத்து writing page-ல் உங்கள் எபிசோட் கண்டன்டை நேரடியாக அல்லது copy paste செய்யலாம்.
கடைசியாக சமர்ப்பிக்கவும் கிளிக் செய்யுங்கள்.
உங்கள் கதையின் முதல் எபிசோட் பதிப்பிக்கப்பட்டு இருக்கும். உங்கள் கதையை பார்க்க மெனுவில் ' எனது பக்கம்' கிளிக் செய்து அங்கு நீங்கள் எழுதிய கதைகள் அனைத்தையும் பார்க்கலாம்.
(இதில் ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால் editor@valanchuli.com மெயிலுக்கு contact செய்யுங்கள். எங்கள் குழுவினர் உங்களுக்கு உதவி செய்வார்கள்.)
***போட்டியில் கலந்து கொண்டு தளத்தில் எப்படி எழுதுவது என்பது பற்றிய விளக்கம் தெரிந்து கொள்ள இந்த போஸ்ட்க்கு கீழே - இந்த போட்டியில் சமர்ப்பிக்கப்பட்ட படைப்புகள் என்று இருக்கும். அதில் முதலாவதாக - போட்டியில் பங்கேற்பது எப்படி என்கிற விளக்கப்படம்- எனும் பதிவை கிளிக் செய்து பார்க்கவும். அதில் valanchuli தளத்தில் register செய்வது எப்படி, போட்டியில் கலந்து கொண்டு எப்படி கதை பதிவிடுவது என அனைத்து விளக்கமும் கொடுக்கப்பட்டுள்ளது.***
No comments yet.