பாகம் 8

Vaishnavi Vijayaraghavan | 05 Sep 2026 | Share

பாகம்-8

ராமகிருஷ்ணனின் ஃபோன் அடித்தது. 

எடுத்து ஹலோ…. என்றார்.

மறுமுனையில்…

சார், நீங்க சொன்னவரோட டீடெயில்ஸ் உங்க இமெயிலுக்கு அனுப்பியிருக்கேன். வேணும்னா இப்போ உங்களுக்கு சொல்லவா?

இல்லை வேண்டாம்… நான் அதுல பாத்துக்கிறேன்…

ஓகே சார்…. நீங்க சொன்ன மாதிரியே அவரோட ஃபேமிலி டீடெயில்ஸ் அப்புறம் அவங்க எல்லாரோட ஃபோட்டோஸூம் அட்டாச்சு பண்ணியிருக்கேன்.

ஓகே… தேங்க் யூ சோ மச் ராபர்ட்…. ரிமெயினிங் பேமென்ட் நான் டிரான்ஸ்ஃபர் பண்ண சொல்றேன்.

ஓகே சார். தேங்க் யூ. பை…

என்றார் மறுமுனையில் இருந்த டிடெக்டிவ் ராபர்ட். ( ரக்ஷன்)



லேப்டாப் ஓபன் செய்து பார்த்த ராமகிருஷ்ணன் சற்றே அதிர்ச்சி ஆனார்.

அதில் அவர் கம்பெனியில் வேலை செய்யும் ராஜசேகரின் குடும்ப படம் இருந்தது. ராகவ் பற்றிய தகவல்கள் எல்லாம் அதில் இருந்தது. இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை அவர். ஒரு முடிவுக்கு வந்தவர் போல தலையை ஆட்டிக் கொண்டே லேப்டாப்பை மூடினார்.

மறுநாள் காலை….

ஆஃபீஸூக்கு சென்ற ராமகிருஷ்ணன் ராஜசேகரிடம்…. இன்னைக்கு லஞ்சுக்கு வெளியே போலாமா? என்றார்.

சார்… நான் லஞ்ச் எடுத்துக்கிட்டு வந்திட்டேன்…. என்றார் ராஜசேகர்.

இல்லை ராஜசேகர்…. எனக்கு உங்க கிட்ட தனியா பேசணும்…. 

சொல்லுங்க சார்…. இங்க தனியா தான இருக்கோம்.

இல்ல…. இங்க வேணாம்…. வெளியே எங்கேன்னா போலாம்.

சரி சார்…என்ன பேசப் போகிறார் என்ற சிந்தனையிலேயே அவருடன் சென்றார் ராஜசேகர். ஒருவேளை அவருடைய பையன் விஷ்வாவை போலீஸ் ஸ்டேஷனில் இருந்து கூட்டி வந்தது தெரிஞ்சிடிச்சா? ஏன் முன்னாடியே சொல்லலைன்னு கேட்க போறாரா? அப்படி சொன்னா என்ன சொல்வது என்று அவர் சிந்தித்து கொண்டிருக்கையிலேயே ஒரு பெரிய ஹோட்டலின் வாசலில் கார் நின்றது.

வாங்க ராஜசேகர்….என்று ராமகிருஷ்ணன் அழைத்த பிறகே சுய நினைவுக்கு வந்தார் ராஜசேகர்.

உள்ளே சென்று சூப் ஆர்டர் செய்துவிட்டு பத்து நிமிடம் சைலன்டாக இருந்தார் ராமகிருஷ்ணன்.

சார்…. என்னாச்சு? ஏன் கலக்கமா இருக்கீங்க?

அது வந்து…. என்னோட….

கவலைப்படாதீங்க சார்…. சின்ன பையன் தெரியாம பண்ணிட்டான்…. மன்னிச்சிடுங்க….

இவ்வாறு ராஜசேகர் சொல்ல…. ராகவ் பற்றி பேசுகிறார்…. இவருக்கு ஏற்கனவே இதை பற்றி தெரிந்திருக்கிறது….என்று நினைத்து கொண்டார் ராமகிருஷ்ணன்.

என் பொண்ணு….என்று ஆரம்பித்தார் ராமகிருஷ்ணன்.

ஆமாம் சார்…. தம்பி உங்கள விட உங்க பொண்ணுக்கு தான் அதிகமாக பயப்படறாரு….

என்ன சொல்றீங்க ராஜசேகர்?

ஆமாம் சார்…. அன்னைக்கு போலீஸ் ஸ்டேஷனிலிருந்து தம்பி ஃபோன் பண்ணும் போது எனக்கும் ஒன்னும் புரியல….

இப்போது தான் அவர் தம்பி என்று கூறியது விஷ்வாவை என்று தெரிந்து கொண்டார் ராமகிருஷ்ணன்.

இப்போது தெரியாத விஷயம் போல் கேட்டால் ராஜசேகர் முழுவதுமாக சொல்லமாட்டார் என்று நினைத்து கொண்டார் ராமகிருஷ்ணன். ஆகையால்….

ஆமாம் ராஜசேகர் அவனை நினைச்சு எனக்கு ஒரே கவலையா இருக்கு….

இல்ல சார்… அப்படி சொல்லாதீங்க…. தம்பி அன்னைக்கே எனக்கு வாக்கு கொடுத்துச்சு…. இதுக்கு மேல கண்டிப்பா தண்ணி அடிச்சு போலீஸ் ல மாட்டிக்க மாட்டேன்னு….

மனதுக்குள் கோபம் வந்தாலும் அதை வெளிக்காட்டாமல்….ஹூம் அப்படி தான் நாங்களும் அவன நம்புறோம்…. மறுபடியும் அதையே தான் பண்ணுவான். 

இல்லை சார்…. இது தான் முதல் முறை தம்பி என் கிட்ட உதவி ன்னு கேட்டது…. அதுவும் இல்லாம தம்பி பெரியவங்க கிட்ட ரொம்ப மரியாதையா பேசுவான்….நல்ல பையன் சார்…. ஏதோ ஃபிரண்ட்ஸ் கம்பல் பண்ணி குடிக்க வச்சிருப்பாங்க…. உங்க கிட்டயும் வைஷாலி பாப்பா கிட்டயும் ரொம்ப பயம் இருக்கு தம்பிக்கு…. ரொம்ப கெஞ்சி கேட்டதுனால தான் சார் நான் அன்னைக்கே உங்க கிட்ட சொல்லல…. ஆனா உங்களுக்கு கண்டிப்பா ஒரு நாள் விஷயம் தெரிஞ்சிடும்…. என்னைய கூப்பிட்டு கேட்பீங்கன்னு நினைச்சேன்….

ஓகே ராஜசேகர்…. இதை பத்தி தான் உங்க கிட்ட பேச நினைச்சேன்… சரி போலாமா?

சரி சார்…. போலாம்…. நீங்க ஆஃபீஸ்ல பேச வேண்டாம் வெளியே போலான்னு சொல்லும் போதே நினைச்சேன் நீங்க தம்பியை பத்தி தான் பேசப் போறீங்கன்னு…. என்றார் ராஜசேகர்.

ஸ்மைல் செய்து விட்டு… கிளம்பலாம்…. என்றார் ராமகிருஷ்ணன்.

சார் ஒரு சின்ன ரிக்குவஸ்ட்….

சொல்லுங்க ராஜசேகர்…

என் பொண்ணு ரேஷ்மியோட பர்த்டே கம்மிங் மன்டே….இது அவளோட 20th பர்த்டே அதனால என் பையன் ராகவ் ஒரு சின்ன சர்ப்ரைஸ் பார்ட்டி ரெடி பண்ணிருக்கான் ஈவினிங் 6 அட் சங்கீதா பார்டி ஹால் …. நீங்களும் உங்க ஃபேமிலியோட வரமுடியுமா?

அப்படியா? வெரி குட்…. நான் டிரை பண்றேன் ராஜசேகர். உங்களுக்கே தெரியும் மன்டே நம்ம எவ்ளோ பிஸியா இருப்போம் ன்னு…. என் ஓயிஃப் அப்புறம் என் பொண்ணையும் வேணும்னா அனுப்பி வைக்கிறேன். அவளும் ஃபிரியா ன்னு கேட்கனும்….

ஓகே சார்…. மன்டே ஹாஃப் டே பர்மிஷன் கொடுத்தீக்கன்னா?…

கண்டிப்பா ராஜசேகர்…. நீங்க வேணும்னா லீவு கூட எடுத்துக்கோங்க….

இல்ல சார்…. லீவு வேண்டாம்…. அரேஞ்சுமென்ட்ஸ் எல்லாம் என் பையன் ராகவ் பண்ணிட்டான்…. ஸோ… என் ஃபேமிலியோட ஈவினிங் 4 மணிக்கு குலதெய்வ கோவில்ல ஒரு பூஜை இருக்கு அதை முடிச்சிட்டு அப்புறமா நாங்க பார்ட்டி ஹாலுக்கு போகனும்…. அதான்….

ஓ… ஓகே… நோ இஷ்யூஸ்…. உங்களுக்கு எப்போ ஆஃபீஸ்ல இருந்து கிளம்பனுமோ…. அப்போ கிளம்புங்க…. ஜஸ்ட் மெஸேஜ் மீ பிஃபோர் யூ லீவ்…. என்றார் ராமகிருஷ்ணன்.

கண்டிப்பா சார்…. என்றார் ராஜசேகர்.

அதற்கு மேல்…. அவர் பேச நினைத்த விஷயங்களை பேசாமலே கிளம்பி விட்டார் ராமகிருஷ்ணனின்.

                      *********

ராகவ் ஃபோனை எடுத்து…

ஹாய் குட் மார்னிங்… அம் ஐ ஸ்பீகிங் டூ மிஸ்டர் ராபர்ட்….

எஸ் யூ ஆர்…. என்றான் டிடெக்டிவ் ராபர்ட்.

சார்…. எனக்கு ஒருத்தர் பத்தி டீடெயில்ஸ் வேணும். உங்க ஆஃபீஸூக்கு வரலாமா? 

எஸ்…. கம் பிஃபோர் 9.30 என்றான் ராபர்ட்.

ராகவை பார்த்த ராபர்ட் ஒரு நிமிடம் அதிர்ச்சி அடைந்தான். அவன் நேற்று தான் ராகவுடைய முழு டீடெயில்ஸூம் ராமகிருஷ்ணனுக்கு அனுப்பி வைத்தான். ஆகையால் அவனுடைய முகம் நன்றாகவே நினைவில் இருந்தது ராபர்டுக்கு. பின்னர் சுதாரித்துக் கொண்டு…. அவனை உள்ளே வர சொன்னான்.

உட்காருங்க மிஸ்டர்…

ஐ ஆம் ராகவ்….

ஐ ஆம் ராபர்ட்…

எனக்கு ஒருத்தரோட பாஸ்ட் டீடெயில்ஸ் வேணும்…

கண்டிப்பா…. ஆனா ரீசன் வேணும்…. எதுக்காக? 

கோபாலகிருஷ்ணன் என் கம்பெனியில் வேலை செய்தவன் என்று அவனை பற்றி ஃபுல் டீடெயில்ஸ் கொடுத்து விட்டு… இதற்கு முன் அவன் வேலை செய்த கம்பெனி மற்றும் அவனை பற்றி போலீஸ் கம்ப்லெயின்ட் எதாவது இருக்கா…. அவனால் பாதிக்கப்பட்ட பெண்கள் யாராவது இருக்கிறார்களா? ….. இது எல்லா டீடெயில்ஸ் வேணும். ஆனா இது எல்லாம் ஒன் வீக் குள்ள வேணும்…. முடியுமா?

பேரு, ஃபோன் நம்பர் மட்டும் தந்தாலே போதும்…. பாஸ்ட் அன்ட் பிரெஸன்ட் டீடெயில்ஸ் கண்டுபிடிச்சு சொல்லிடுவேன்…. இல்லீகலா… எதுவும் இருக்கக் கூடாது ன்னு தான் ரீசன் கேட்டேன்.

ஓ… சூப்பர்…. தேங்க் யூ சோ மச்… என்று அவனுடைய ஃபோன் நம்பரை தன் மொபைலில் பார்த்து எடுத்து கொடுத்தான் ராகவ்.

நான் டீடெயில்ஸ் எடுத்து உங்க மெயிலுக்கு அனுப்பிடுவேன். ஹாஃப் பேமென்ட் இப்போ…. கூகிள் பே, பே டி எம், எது வேணும்னாலும் ஓகே…. என்று க்யூ ஆர் கோடை காண்பித்தான் ராபர்ட்.

ஓகே…. என்று பாதி அமௌன்ட் பே பண்ணிவிட்டு தன் ஈமெயிலை கொடுத்து விட்டு வெளியே வந்தான்.

வைஷாலி இடமிருந்த

ஃபோன் வந்தது…

சொல்லுங்க வைஷாலி….

ஹாங் ராகவ்…. என்னாச்சு எதாவது தெரிஞ்சுதா கோபாலகிருஷ்ணன் பத்தி….

அதுக்காக தான் வந்திருக்கேன் வைஷாலி.

ஓகே… நெக்ஸ்ட் வீக் ஹீயரிங்… அதுக்குள்ள ரெடி பண்ணுங்க….

யா… ஷூயர்…. 

ஓகே பை ராகவ்….

ஒன் மினிட் வைஷாலி….

சொல்லுங்க ராகவ்….

மன்டே என் சிஸ்டர் ரேஷ்மியோட பர்த்டே… ஒரு சின்ன பார்ட்டி அரேன்ஜ் பண்ணிருக்கேன்…. நீங்க ஃபிரியா இருந்தா வரமுடியுமா?

ஈவினிங் நா நோ இஷ்யூஸ்…. ஐ வில் கம்… 

ஓகே…. தேங்க் யூ… நான் லோகேஷன் டைமிங் எல்லாம் ஷேர் பண்றேன்….பை வைஷாலி….

பை ராகவ்….

                      *********

ரேஷ்மியின் ஃபிரண்ட் விஜி ராகவிற்கு கால் செய்தாள்.

அண்ணா…. நீங்க சொன்ன மாதிரியே அவளோட பெஸ்ட் பிரண்ட்ஸ் எல்லாருக்கும் சொல்லிட்டேன். மன்டே ஈவினிங் எல்லாரும் கரெக்டா வந்திடுவாங்க சர்ப்ரைஸ் பர்த்டே பார்ட்டிக்கு….

ஓகே… சூப்பர்….. தேங்க்ஸ் மா….

அண்ணா தேங்க்ஸ் எல்லாம் எதுக்கு? எனக்கும் ஒரு அண்ணன் இருக்கான் அவனுக்கு என் பர்த்டே எப்போன்னே தெரியாது…. நீங்க என்னம்மா சர்ப்ரைஸ் பண்றீங்க உங்க தங்கச்சிக்கு…. உண்மையை சொன்னா எனக்கு உங்கள மாதிரி அண்ணன் இல்லையேன்னு கஷ்டமா இருக்கு….

எனக்கு ரேஷ்மி எப்படியோ அப்படித்தான் தான் நீயும் நிவியும். சின்ன வயசுல இருந்து நீங்களும் அண்ணா அண்ணானே கூப்பிடறீங்க இல்ல…. அப்புறம்… இந்த வருஷம் உன் பர்த்டேக்கும் இதே மாதிரி பார்ட்டி பண்ணி ஜமாய்சிடலாம்…. ஓகே வா….

நீங்க சொன்னதே போதும் அண்ணா….

ஏய், உண்மையா தான் சொல்றேன் மா….

சரி அண்ணா… தேங்க்ஸ்…. என்றாள் விஜி.

ஃபோனை வைத்து விட்டு ஆஃபீஸூக்கு சென்றான் ராகவ்.

                    *************

விஷ்வாவிற்கு கால் செய்து ஆஃபீஸ் கெஸ்ட் ஹவுஸ் வரச்சொன்னார் ராமகிருஷ்ணன்.

எதுக்கு அப்பா வீட்டில பேசாம இங்க வரச் சொல்லி இருக்காரு…. என்று நினைத்து கொண்டே அங்கு சென்றான்.

உள்ளே சேரில் அமர்ந்து இருந்தார் ராமகிருஷ்ணன்.

அப்பா…. எதுக்கு இங்க வரச் சொன்னீ….

என்று அவன் பேசி முடிப்பதற்குள் அவனின் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விட்டார்.

இதை சற்றும் எதிர்பார்க்காத விஷ்வா…. ஒன்றும் புரியாமல் திகைத்தான்.

என்னடா பார்க்குற…. உன்னை ஒரே பையனாச்சே ன்னு செல்லங்கொடுத்து வளர்த்தது தப்பா போச்சு….

என்னப்பா சொல்றீங்க….

நடிக்காத…. எல்லாத்தையும் ராஜசேகர் சொல்லிட்டார்….

உடனே கண்கள் முழுக்க சிவக்கத் தொடங்கியது விஷ்வாவிற்கு…. அத்தனை முறை கெஞ்சி கேட்டும் அந்த ஆள் தன் அப்பாவிடம் போட்டுக் கொடுத்திட்டானே என்று….

அதற்கு மேல் ராமகிருஷ்ணன் திட்டிய அனைத்தும் ராஜசேகர் மீது கோபமாக மாறியது விஷ்வாவிற்கு.

கடைசியாக…. ராமகிருஷ்ணன் கூறியது.

இதுக்கு மேல இந்த மாதிரி விஷயங்களை கேள்வி பட்டேன் னா…. உன்னை பெர்மனென்டா வெளிநாட்டிற்கு அனுப்பிடுவேன். இங்க உன்னை வச்சிக்கிட்டு நான் அவமான பட முடியாது. இதுதான் லாஸ்ட் வார்னிங் உனக்கு…. என்று சொல்லி விட்டு வெளியே சென்றார்.

கண்களில் கண்ணீரும் கோபமுமாக நின்று கொண்டிருந்தான் விஷ்வா….

                      **********

சன்டே டின்னர் டேபிலில்…

அன்று முழுவதுமே விஷ்வா மூடு ஆஃபாக இருந்தான். அதை கவனிக்க தவறவில்லை அம்மா ராஜேஸ்வரி.

ராமகிருஷ்ணனும் வைஷாலியும் சாப்பிட வந்தமர்ந்தனர்.

ராஜேஸ்வரி விஷ்வாவின் ரூம் கதவை தட்டினார்…

அவன் திறக்கவில்லை…

மறுபடியும் தட்டினாள்.

என்னம்மா?… என்றான்

சாப்பிட வாப்பா….

எனக்கு வேண்டாம்… பசிக்கல….

விஷ்வா….என்று மறுபடியும் கதவை தட்டினாள் அம்மா.

ராஜேஸ்வரி….என்று ராமகிருஷ்ணன் அழைத்தார்.

இதோ வரேங்க….என்று டேபிளுக்கு வந்தாள்.

வா… நம்ம மூணு பேரும் சாப்பிடலாம்….

என்னங்க…. என்னாச்சு…. நீங்க தான சன்டே ஒரு வேளையாவது எல்லாரும் ஒண்ணா உட்கார்ந்து சாப்பிடனும் சொல்லுவீங்க….

அவன் தான் பசிக்கல ன்னு சொல்றான் இல்ல….

நீங்க…. என பேச ஆரம்பித்தவள் அவனுடைய பார்வையிலேயே அமைதியாக அமர்ந்தாள்.

வைஷாலி தன் தந்தை விஷ்வா மீது கோபமாக இருக்கிறார் என்று தெரிந்து கொண்டாள்.

மூவரும் சாப்பிட்டு விட்டு சென்று உறங்கினர்.

ராஜேஸ்வரிக்கு வெகு நேரமாக தூக்கம் வரவில்லை. தன் கணவனுக்கும் மகனுக்கும் ஏதோ பிரச்சினை என்று அவளும் யூகித்தாள்.

மறுநாள் காலை….

தம்பி…. விஷ்வா…. கதவை திற டா…. என்றார் ராஜேஸ்வரி.

ஐந்து நிமிடங்களுக்கு பிறகு திறந்தான்.

விஷ்வா…. என்னாச்சு டா? அப்பா எதாச்சும் உன்னை திட்டினாரா?

பதில் பேசவில்லை அவன்.

இதோ பாருடா தம்பி… நம்ம அப்பா தானா…. எதாவது சொன்னாரு ன்னா…. அது உன்னோட நல்லதுக்கு தான் இருக்கும்.

விஷ்வா வின் மனதில்…. என்னோட நல்லதுக்கா…. அவரோட ஸ்டேட்டஸ் டேமேஜ் ஆயிடும் தான் யோசிச்சாரு….என்னை பத்தி கவலைப் படல அவரு…. என் அப்பாவுக்கு என் மேல கெட்ட எண்ணம் வரக் காரணம் அந்த ராஜசேகர்…. என்று நினைத்து பல்லை கடித்து கொண்டான்.

சரி… இன்னைக்கு ஈவினிங் நீ ஃபிரியா….

பதில் இல்லை….

விஷ்வா…. உன்னை தான் கேட்குறேன்…. நீ ஃபிரியா?

மிச்… எதுக்கு மா….

ஒண்ணும் இல்லை ஒரு பர்த்டே பார்டிக்கு அப்பா போக சொன்னார்… அதான் நீ வரீயா ன்னு….

மிச்…. மா…. நான் வரமாட்டேன்…. நீ போயிக்கோ….

ஏய், வைஷூ கூட வேற எதோ ஃபங்ஷனுக்கு போறா டா….

அதை பத்தி எல்லாம் எனக்கு கவலையில்லை…. அப்பாவுக்கு வேணும் ன்னா அவர போக சொல்லு…. நம்மல ஏன் போக சொல்றார்?

ஏய்…அப்பா கிட்ட வேலை பார்க்கிறாரே ராஜசேகர் அவரோட பொண்ணு பர்த்டே…. அப்பாவுக்கு இம்பார்ட்டன்ட் மீட்டிங் இருக்காம்…. 

எனக்கு தனியா போக ஒரு மாதிரி இருக்கு டா…. அதான் உன்னை கூப்பிடுறேன்.

யாரு? யாரோட பர்த்டே?

ராஜசேகர் அங்கில் இல்ல …. அவரோட பொண்ணு பர்த்டே….

ஓ…. அவரா….. சரிம்மா…. நான் உனக்காக வரேன்….

சரிப்பா…. என் செல்லம் என்று அவன் கன்னத்தை கிள்ளி முத்தமிட்டுவிட்டு…. மறந்திடாத…. ஈவினிங் 6 மணிக்கு என்று சொல்லி வெளியே சென்று விட்டார்.

அம்மா…. நீ மறந்தாலும் கண்டிப்பா நான் மறக்கமாட்டேன்…. அந்த ராஜசேகருக்கு ஒரு பாடம் கத்துத் தரப் போறேன்…. என்று முணுமுணுத்து கொண்டான் விஷ்வா…

தொடரும்…..

அ. வைஷ்ணவி விஜயராகவன்.

இந்த episode பிடிச்சிருந்தா எழுத்தாளரை உற்சாகப்படுத்துங்க!!
இப்போதே உற்சாகப்படுத்துங்கள்

இந்த படைப்பை மதிப்பிட விரும்புகிறீர்களா?

Click on a star to rate it!

★ ★ ★ ★ ★

No votes so far! Be the first to rate this post.

    No comments yet.