பாகம் 1

Vaishnavi Vijayaraghavan | 01 Sep 2026 | Share

இதயத்தில் இடம் கொடுப்பாயா

அ. வைஷ்ணவி விஜயராகவன்.

கதாநாயகன் – ராகவ் ( மாதவன்)

கதாநாயகி – வைஷாலி ( ஜோதிகா)

ராகவ் அப்பா ராஜசேகர் (பிரபு)

ராகவ் அம்மா கனகவள்ளி ( ராதிகா)

ராகவ் தங்கை ரேஷ்மி ( நிவேதா தாமஸ்)

வைஷாலி அப்பா ராமகிருஷ்ணன் ( சத்யராஜ்)

வைஷாலி அம்மா ராஜேஸ்வரி (சரண்யா பொன்வண்ணன்)

வைஷாலி தம்பி விஷ்வா ( அதர்வா)

மற்ற கதாபாத்திரங்களை கதையின் நடுவில் பார்த்துக் கொள்ளலாம்.

முன்னுரை:

நம் ஹீரோ ராகவ் சி ஏ படித்து விட்டு ஒரு கம்பெனியில் ஆடிட்டராக வேலைப் பார்க்கிறான்.

அம்மா கனகவள்ளி கவர்மென்ட் ஆஸ்பிட்டலில் நர்ஸ்ஸாக வேலை செய்கிறாள்.

அப்பா ராஜசேகர் ராமகிருஷ்ணன் கம்பெனியில் மேனேஜராக இருக்கிறார்.

தங்கை ரேஷ்மி மெடிசின் இரண்டாம் ஆண்டு படிக்கிறாள்.

ஹீரோயின் வைஷாலி பி எல் முடித்து விட்டு ஒரு பிரபல லாயரிடம் ஜூனியராக இருக்கிறாள்.

அப்பா ராமகிருஷ்ணன் பெரிய தொழிலதிபர். விரல் விட்டு எண்ணக் கூடிய பணக்காரர்களில் இவரும் ஒருவர்.

அம்மா ராஜேஸ்வரி ஹவுஸ் ஓயிஃப். தங்கமான குணம் படைத்தவள். அவளை போலவே தன் மகளையும் வளர்த்திருக்கிறார்.

தம்பி விஷ்வா பணக்கார திமிர் உள்ளவன். காசை தண்ணியாக செலவழிப்பான். படிப்பிலும் சுமார். பிஸ்னஸ் ஸ்டடீஸ் இறுதி ஆண்டு படிக்கிறான். 

இனி கதைக்குள் செல்லலாமா?

உங்களுக்கு எனது கதையை கற்பனை செய்து பார்க்க வசதியாக எனக்கு பிடித்த சினிமா கதாபாத்திரங்களை குறிப்பிட்டுள்ளேன். உங்களுக்கு பிடித்திருந்தால் அப்படியே வைத்துக் கொள்ளுங்கள். இல்லையெனில் உங்களுக்கு பிடித்த சினிமா கதாபாத்திரங்களை கற்பனை செய்து கொள்ளுங்கள்.

உங்களுடைய கருத்துக்களை தெரிவியுங்கள். கதையில் ஏதேனும் எழுத்து பிழைகள் அல்லது தவறுகள் இருப்பின் மன்னிக்கவும். கண்டிப்பாக தெரியப்படுத்தவும். 

தொடரும்….

அ. வைஷ்ணவி விஜயராகவன்.

பாகம் 1 

அம்மா…. நான் ரேஷ்மி ய காலேஜ்ல விட்டுட்டு ஆஃபீஸ் போறேன் என்றான் ராகவ்.

கண்ணு… என்னைய ஆஸ்பிட்டல்ல விட்டுருப்பா…. இன்னைக்கு மார்னிங் ஷிஃப்ட் பா… என் கண்ணுல்ல?

அம்மா… நான் என்ன கார்லயா போறேன். பைக்ல எப்படி மூணு பேர் போறது?

இன்னைக்கு ஒரு நாளைக்கு ரேஷ்மி குட்டி பஸ்ல போகட்டும்.

என்னடி கண்ணு அம்மாவுக்காக இன்னைக்கு பஸ்ல போய்க்கிறியா?

அம்மா… என்னம்மா நீ… எப்போ பார்த்தாலும் உனக்கு இதே வேலையா போச்சு என்று சலித்து கொண்டாள் ரேஷ்மி.

இன்னைக்கு லேட்டா எழுந்திரிச்சிட்டேன் டி கண்ணு…. ஸாரி…. நெக்ஸ்ட் டைம் அம்மா கேக்க மாட்டேன்…. ஓகே வா?

ஆமா இந்த மாதிரி நிறைய முறை சொல்லிட்டீங்க….என்று சலித்து கொண்டாள் ரேஷ்மி.

என்ன? அம்மாவும் பொண்ணும் பேசி முடிவு எடுத்திட்டீங்களா? யார் வரீங்க என் கூட.?

உங்க அம்மாவையே கூட்டிக்கிட்டு போ… என்றாள் ரேஷ்மி.

ஏய், அவளின் தோளில் செல்லமாக தட்டி… எனக்கு அம்மா ன்னா உனக்கு மட்டும் யாராம்?

அம்மான்னா… பொண்ணு கஷ்டபடாம போகணும் ன்னு நினைப்பாங்க… ஆனா இவங்க அவங்க கஷ்டபடாம போகணும் நினைக்கிறாங்க.

அடியேய், உனக்காக தான் நான் உன் அப்பாவிடமும் அண்ணனிடமும் கேட்டு ஒரு பைக் வாங்கி தர சொல்லியிருக்கேன் உன்னோட பர்த்டேக்கு.

அப்படியா? என் செல்ல அம்மா என்று கனகவள்ளியின் கன்னத்தில் முத்தமிட்டாள் ரேஷ்மி.

இப்போ மட்டும் உனக்கும் அம்மா வா…சரி சரி சீக்கிரமா கிளம்பு அப்புறம் பஸ் கூட்டமா ஆயிடும்.

சரிம்மா பை… அண்ணா பை என்று கூறி வேகமாக தன்னுடைய பையை எடுத்து கொண்டு கிளம்பினாள் ரேஷ்மி.

பஸ் ஸ்டாண்டில்….

பிளாக் டிரெஸ்ஸில் வன தேவதை போல அழகாக இருந்தாள் ரேஷ்மி.

பத்து ஆண்கள் அவளை கடந்து சென்றால் எட்டு பேரின் பார்வை அவள் மீதிருந்தது. 

பஸ்ஸில் ஏறி அமர்ந்து கொண்டாள். 

அண்ணா, ராமச்சந்திரா ஒண்ணு என்றாள்.

இவ்வளவு அழகான பெண் அண்ணா என்றால்…. வருத்தமாக தானே இருக்கும் அந்த கன்டெக்டருக்கு. இருப்பினும் அதை வெளிக்காட்டாமல் டிக்கெட் கொடுத்து விட்டு சென்றார்.

டேய், டேய் என்று வெளியே இருந்து சத்தம் கேட்க…. 

 ஜன்னல் வழியாக பார்த்தாள் ரேஷ்மி.

அப்போது ஒருவன் வேகமாக ஓடி வந்து ஓடும் பேருந்தில் ஏறினான்.

அவனுடைய நண்பர்கள் எல்லாரும் கீழே இருந்து டேய் டேய் என்று கத்திகொண்டே இருந்தார்கள்.

அவர்கள் கத்தியதால் ஏதோ பிரச்சினை என்று நினைத்து விசில் அடித்து வண்டியை நிறுத்தி விட்டார் கன்டெக்டர்.

அவன் கீழே இருந்த நண்பர்களைப் பார்த்து…

கணேஷ் (சூரி),

விமல் (சந்தானம்),

ஜானி (கலையரசன்).

அப்புறம் என்ன? பின் கதவிலிருந்து ஒரு ஒரு ஜன்னலையும் பிடித்து கொண்டு பஸ்ஸின் முன் கதவுக்கு போகணும் அதான? அதுவும் பஸ் ஓடிக் கொண்டிருக்கும் போதே… கரெக்டா? யார் கிட்ட? நான் விஷ்வா டா….

ஏய்…. வேணாம் டா…. சும்மா தான் டா சொன்னேன் என்றான் ஜானி.

கன்டெக்டர் அவனை பார்த்து…. யப்பா தம்பி இந்த சாகச வேலை பண்றதுக்கான இடம் இது இல்ல…. வேற எங்கேயாவது போய் பண்ணிக்கோ என்றார்.

அண்ணே… உங்க வேலைய பாருங்க…. என்று கூறி தன் பாக்கெட்டில் இருந்து இரண்டு கட்டு ஐநூறு ரூபாய் நோட்டுகளை கன்டெக்டரின் மீது போட்டு. ஒண்ணு உங்களுக்கு இன்னொன்று டிரைவர் அண்ணாவுக்கு…. என்றான். இன்னைக்கு இந்த பஸ்ஸில் இருக்குற எல்லோருக்கும் தலா இரண்டாயிரம் ருபாய் தந்திடுவேன். என்றான் விஷ்வா.

காலையில் யார் முகத்தில் விழித்தோம்… நமக்கு இன்னைக்கு லாட்டரி அடிச்சு இருக்கு என்று மனதிற்குள் நினைத்து கொண்டே… 

சரி…. தம்பி எதோ ஆசை படறார்…. அதனால நம்ம எல்லாருமே ஒத்துக்கலாம் என்றார் கன்டெக்டர்.

அந்த பேருந்தில் மொத்தம் இருபது பயணிகள் இருந்தனர் .

அனைவருக்கும் இரண்டாயிரம் ருபாய் நோட்டை கொடுத்தான் விமல்.

ரேஷ்மி வாங்கவில்லை. 

அட தோ பார்ரா… புடி என்று அவள் கையில் திணித்து விட்டு அடுத்தவருக்கு கொடுக்கச் சென்றான் விமல்.

எனக்கு வேண்டாம் என்று சொல்லி கொண்டிருக்கும் போதே அவன் அனைவருக்கும் கொடுத்து விட்டு கீழே இறங்கி விட்டான்.

டிரைவரிடம் மெதுவா போ தாமஸ்… என்றார் கன்டெக்டர்.

தாமஸ் அண்ணா…. மெதுவா இல்லை…. வழக்கமா என்ன வேகத்துல போவீங்களோ அதே வேகத்தில் போங்க…. என்றான் விஷ்வா.

இதையெல்லாம் பார்த்து கொண்டிருந்த ரேஷ்மிக்கு கடுப்பாக இருந்தது. எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தாள். பணக்காரன் என்ற திமிர் உள்ளவன் என்று நினைத்து கொண்டாள்.

பஸ் கிளம்பியது… பின் கதவிலிருந்து ஒவ்வொரு ஜன்னல் கம்பியை பிடித்துக் கொண்டு தாண்டி தாண்டி வந்தான்.

அடுத்த ஜன்னலில் ரேஷ்மி அமர்ந்திருந்தாள். அந்த ஜன்னல் கம்பியை பிடித்தவன் உள்ளே இருந்த ரேஷ்மியை பார்த்தான்.

ஒரு நிமிடம் அவளின் அழகில் மெய் மறந்து நிலை தடுமாறி கீழே விழப் போனவனின் கையை பிடித்து கொண்டு ஸ்டாப்…. ஸ்டாப்…

என்று கத்தினாள்.

பஸ் நின்றது. தரையில் குதித்தான் விஷ்வா. 

கீழே வேகமாக இறங்கி வந்த ரேஷ்மி…. மிஸ்டர் உங்களுக்கு எதாவது அடி பட்டுச்சா? என்றாள்.

அவளின் அழகில் மயங்கிய நிலையிலேயே… இல்லை என்று தலையை மட்டும் ஆட்டினான்.

தப்பா நினைச்சுக்காதீங்க…. நான் இப்படி சொல்றேன்னு. உங்களுக்கு கொஞ்சமாவது அறிவு இருக்கா? நல்ல வேளை அடி எதுவும் படல….  உங்க அம்மா அப்பாவுக்கு தெரிஞ்சா என்ன ஆகும்.

அனைத்திற்கும் தலையை மேலும் கீழும் ஆட்டிக் கொண்டே… சிரித்து கொண்டே இருந்தான் விஷ்வா.

அவனுடைய நண்பர்கள் வந்து…. ரொம்ப கிளாஸ் எடுக்காத எங்களுக்கு தெரியும் நீ மூடிக்கிட்டு போ… என்றான் விமல்.

அவனை திரும்பி முறைத்தான் விஷ்வா. அவன் பார்வையை புரிந்து கொண்டவன்…

ஸாரிங்க… என்றான்.

விஷ்வா முறைத்தால் பின் விளைவு என்ன என்று அறிந்தவன் முதலிலேயே மன்னிப்பு கேட்டு விட்டான்.

டேய், கையில எதோ கம்பி கிழிச்சிருக்கு… ரத்தம் வருது பாருடா என்றான் ஜானி.

காரில் உள்ள ஃபர்ஸ்ட் எய்டு கிட் எடுத்து கொண்டு வந்தான் கணேஷ். ( காரில் வந்து கொண்டு இருக்கும்போது ஜானி சொன்னதை கேட்டு உடனே பெட்டு கட்டி இறங்கிவிட்டான் விஷ்வா).

அதை வாங்கி… அதிலிருக்கும் டெட்டால் வைத்து துடைத்து கட்டுப் போட்டு விட்டாள். ஆஸ்பிட்டலுக்கு போய் ஒரு டிடி(tetanus injection- TT) போட்டுக்கோங்க… என்றாள் ரேஷ்மி.

அவனுடைய நண்பன் விமல் கொடுத்த இரண்டாயிரம் ருபாய் நோட்டை திருப்பி கொடுத்து விட்டு பஸ்ஸில் ஏறி அமர்ந்து கொண்டாள்.

இன்னைக்கு செம லேட் என்று நினைத்து கொண்டாள்.

பஸ் செல்லும் வரை வாயில் சிரிப்புடனே பார்த்து கொண்டிருந்தான் விஷ்வா.

டேய்… என்னடா ஆச்சு உனக்கு…. என்று உளுக்கினான் அவனுடைய நண்பன் கணேஷ் (சூரி),

டேய்… அவ ராமச்சந்திரா மெடிக்கல் காலேஜ்ல படிக்கிறா டா… கன்டெக்டரிடம் கேட்டேன் என்று சொன்னான் விமல் (சந்தானம்)..

சரி வா மச்சி அங்கே மே போய் டிடி(tetanus injection- TT) போட்டுக்கலாம் என்றான் ஜானி(கலையரசன்).

ஒரு முறை மூவரையும் திரும்பி பார்த்து… பிரெண்ட்ஸ் ன்னா நீங்க தான் டா பிரெண்ட்ஸ்.

அனைவரும் காரில் ராமச்சந்திரா மெடிக்கல் காலேஜூக்கு கிளம்பினார்கள்.

தொடரும்….

அ. வைஷ்ணவி விஜயராகவன்

இந்த episode பிடிச்சிருந்தா எழுத்தாளரை உற்சாகப்படுத்துங்க!!
இப்போதே உற்சாகப்படுத்துங்கள்

இந்த படைப்பை மதிப்பிட விரும்புகிறீர்களா?

Click on a star to rate it!

No votes so far! Be the first to rate this post.

    No comments yet.