
பாகம் 5
“யார்கிட்ட ஃபோன்ல பேசிகிட்டு இருந்த? “
என்றான் அஜய்.
” பேசல. மெசேஜ் தான் அனுப்பிக்கிட்டு
இருந்தேன். முகுந்துக்கு தான். ஃபிளைட் ஏறிட்டானா? அப்புறம் ரீச் ஆகிட்டு மெசேஜ் பண்ணு என்று அனுப்பினேன் ” என்றாள் தர்ஷினி.
” ஓ, ஓகே ஓகே.”
” அவனுக்கு இன்னும் என்னை ஞாபகம் வரலைன்னு நினைக்கிறேன். அதனாலதான் இப்பவும் வாங்க போங்கன்னு பேசினான். நல்லா திட்டி விட்டேன். இதுக்கு மேல மரியாதையா வா போ ன்னு சொல்லுன்னு சொல்லிட்டேன் “
” வா போன்னு சொன்னா மரியாதையா? “
என்று சொல்லி சிரித்தான் அஜய்.
” டேய் சொன்னா நம்ப மாட்ட டா, இதையே தாண்டா அவனும் சொன்னான்” என்று சொல்லி தன் ஃபோனில் முகுந்தன் அனுப்பிய மெசேஜை காண்பித்தாள் தர்ஷினி.
” பாவம் முகுந்தன் “
“ஏன்?”
” எனக்கு டெய்லி மெசேஜ் கால் பண்ணி தொல்லை பண்ற மாதிரி வெளிநாட்டில் இருக்கிற முகுந்தனையும் தொல்லை பண்ண போறியோன்னு நினைச்சு சொன்னேன்”
“என்னடா சொன்ன?” என்று அவனை செல்லமாக அடித்தாள்.
“சரி, சரி, சும்மாதான் சொன்னேன் ” என்று சொல்லி அவள் கோபத்தை தணிக்க அவள் கன்னத்தில் முத்தம் கொடுத்தான்.
சிரித்தபடி,
” உண்மையா சொல்லு அஜூ. நான் உனக்கு ஃபோன் பண்றதும் மெசேஜ் பண்றதும் தொல்லையா இருக்கா? “
” ஏய் சும்மாதான் சொன்னேன்னு சொன்னேன் இல்ல? “
” மனசுல இருக்குறது தானே வெளியே வரும்? “
” அம்மா தாயே, சத்தியமா நான் விளையாட்டுக்கு, கிண்டலுக்கு தான் சொன்னேன்” என்று தன் தொண்டை குழியை பிடித்து சொன்னான் அஜய்.
” ஓகே ஓகே நம்புரேன், அதுக்கு எதுக்குடா ப்ராமிஸ் எல்லாம் பண்ற? “
” உன்ன நம்ப வைக்க வேற வழி தெரியலையே எனக்கு? ”
“ஐ லவ் யூ டா” என்று சொல்லி அவனை இறுக்கமாக அணைத்துக் கொண்டாள் தர்ஷினி.
“ஐ லவ் யூ டூ டி செல்லம் ” என்று சொல்லி அவள் நெற்றியில் முத்தமிட்டான் அஜய்.
“அஜூ, என் டிரெஸ் எங்கே டா?”
“இப்போ எதுக்கு அது, வா அப்படியே தூங்கலாம்” என்று சொல்லி அவளை இழுத்து அணைத்துக் கொண்டான்.
இருவரும் சந்தோஷமாக தூங்கினார்கள்.
வெளிநாட்டில் முகுந்தன் தங்கும் அவன் இடத்திற்கு சென்றதும் தன் அப்பா, அம்மா மற்றும் விக்னேஷிற்கு
“ரீச்சிடு சேஃப்லி” என்று மெஸேஜ் செய்தான்.
ஃபோனை கீழே வைக்க சென்றபோது தர்ஷினி அவனிடம் சொன்னது ஞாபகம் வந்தது.
“ஹாய் தர்ஷி, ரீச்சிடு சேஃப்லி” என்று அவளுக்கு மெசேஜ் செய்துவிட்டு ஃபோனை சார்ஜில் போட்டுவிட்டு படுத்து உறங்கினான். அவனுக்கு ஜெட் லாக் தெளிய ஆறு ஏழு மணி நேரம் ஆனது.
திங்கட்கிழமை காலை யூனிவர்சிட்டி சென்று அனைத்து சர்டிஃபிகேட்டுகளையும் கொடுத்து அந்த பிஸினஸ் ஸ்டடி கோர்ஸில் ஜாயின் செய்தான் முகுந்தன்.
அப்போது தான் தர்ஷினி அவனுக்கு ரிப்ளை செய்ததை பார்த்தான்.
” பரவாயில்லையே முகுந்த், ஒரு பேச்சுக்கு தான் நீ மெஸேஜ் பண்றதுக்கு ஓகே சொன்னன்னு நினைச்சேன். உண்மையிலேயே மெஸேஜ் பண்ற. ரியலி ஹேப்பி டா. டேக் கேர். நல்லா படிச்சு நிறைய மார்க் வாங்கி யுனிவர்சிட்டி டாப்பரா வரணும். இந்தியாவுக்கு நல்ல பெயர் வாங்கித் தா டா” என்று சில கிண்டல் செய்யும் எமோஜிகளை போட்டு அனுப்பி இருந்தாள் தர்ஷினி.
அதை பார்த்ததும் அவனுக்கு சிரிப்பு தான் வந்தது.
” நம்ம நாட்டோட பெயரை நான் காப்பாத்துவேன் தர்ஷி” என்று சிரிக்கும் எமோஜிகளை போட்டு அனுப்பினான் முகுந்தன்.
ரெகுலராக கால் செய்யவில்லை என்றாலும் வாரத்திற்கு ஒரு முறை முகுந்தனுக்கு மெஸேஜ் செய்வாள் தர்ஷினி. இருவரும் சேட்டில் குறைந்தது பதினைந்து நிமிஷம் முதல் அரைமணி நேரம் வரை பேசிக் கொள்வார்கள்.
ஒன்றரை ஆண்டுகள் முடிந்தது.
ஒரு நாள் சனிக்கிழமை அன்று இந்தியாவில் இரவு நேரம் அப்போது வெளிநாட்டில் இருக்கும் முகுந்தனுக்கு சனிக்கிழமை காலை நேரம். தர்ஷினி முகுந்தனுக்கு மெஸேஜ் செய்தாள்.
“ஹாய் முகுந்த், எப்படி டா இருக்க?”
” நல்லா இருக்கேன் தர்ஷி, என்ன இந்த டைம்ல மெஸேஜ் பண்ற? மிட் நைட் ஆயிடிச்சே இன்னும் தூங்கலீயா நீ? “
“உன் கூட பேசறதுக்காக தான் முழிச்சிக்கிட்டு இருக்கேன். வாட்ஸ் அப் கால் பண்ணவா?”
“ஓகே ஓகே,” என்று முகுந்தனிடம் இருந்து வந்த மெசேஜை பார்த்த அடுத்த நொடி அவனுக்கு கால் செய்தாள் தர்ஷினி.
“சொல்லு தர்ஷி, அஜய் எப்படி இருக்காரு?”
“நல்லா இருக்காரு டா. உன் கிட்ட ஒரு விஷயம் சொல்லனும் சொல்றேன் இல்ல?”
“சரி, சரி, சொல்லு”
“அது வந்து, அது”
“என்னாச்சு? நீ பிரெக்னென்டா இருக்கீயா?”
“ஆமாம் டா, உனக்கெப்படி தெரியும். இன்னும் நான் அஜய் தவிர யாருக்குமே சொல்லலீயே?”
“நீ இப்படி திக்கி திணறும் போதே அதுவா தான் இருக்கும்னு தெரிஞ்சிடிச்சு.”
“பரவாயில்ல, மூளைக்காரன் தான் நீ”
“அதெல்லாம் அப்படித்தான், சரி சரி உனக்கும் அஜய்க்கும் கங்கிராட்சுலேஷன்ஸ்”
“தேங்க்ஸ் டா. அஜய் உனக்கு கால் பண்ணா பண்ணுவாரு”
“இட்ஸ் ஓகே, அதான் நீ சொல்லிட்ட இல்ல? அப்புறம் என்ன?”
“இல்ல, அவர் எல்லாருக்கும் கால் பண்ணுவாரு. அப்படியே உனக்கும் கால் பண்ணுவாரு பண்ணினா நீ சர்ப்ரைஸ் ஆகுற மாதிரி விஷ் பண்ணு”
“எதுக்கு இந்த தேவை இல்லாத வேலை எல்லாம்?”
“பிளீஸ் டா, அவர் தான் எல்லாருக்குமே இந்த சந்தோஷமான விஷயத்தை சொல்ல போறேன்னு சொல்லிக்கிட்டு இருக்காரு. அவ்வளவு ஏன் என்னோட அப்பா அம்மா கிட்ட கூட நான் சொல்ல கூடாது, அவரே தான் சொல்லுவேன் சொல்லிட்டாரு. அப்படி இருக்கும்போது உன்கிட்ட மட்டும் சொல்லிட்டேன்னா அவர் வருத்தப்படுவாரு இல்ல அதனால தான் “
“சரி சரி, ஓகே. சரி இந்த பாப்பாவுக்கு நான் என்ன முறை வேணும்?”
“மாமான்னு சொல்ல முடியாது “
“ஏன்?”
“நீ என் அண்ணனாவோ தம்பியாகவோ இருந்தா தான் மாமா என்று சொல்லனும். நான் உன்னை என் ஃபிரெண்டா தான் நினைக்கிறேன்.”
“ஓகே, அப்போ எப்படி கூப்பிடுவா பாப்பா?”
“என்னது கூப்பிடுவாளா?” என்று சொல்லி சிரித்தாள் தர்ஷினி.
“ஆமாம், முதல்ல உனக்கு பொண்ணுதான் பிறக்கும்னு தோணுது “
“ஓ, அப்படியா? சரி சரி பார்க்கலாம் “
“எப்படி கூப்பிடுவா? அதைச் சொல்லு”
” நீ அஜூவை பிரோன்னு தான கூப்பிடற? “
” நான் அப்படியெல்லாம் கூப்பிட மாட்டேன். வெறும் அஜய் அவர் இவர் வாங்க போங்க அப்படி தான் நான் சொல்லுவேன். அவர்தான் என்னை பிரோன்னு கூப்பிடுறாரு.”
” சரி சரி ஏதோ ஒன்னு, அப்போ நீ இவருக்கு தம்பி மாதிரி. அதனால பாப்பாவை உன்னை சித்தப்பா என்று கூப்பிட சொல்றேன் “
” தர்ஷி கோவத்துல அப்புறம் அசிங்கமா திட்டிடுவேன். சித்தப்பாவாம் சித்தப்பா. அதெல்லாம் எனக்கு பிடிக்கல”
” அப்புறம் வேற எப்படி கூப்பிடச் சொல்ல? “
“தெரியல, ஆனா சித்தப்பா வேண்டாம் “
“சரி, சரி, கோச்சுக்காத டா முகுந்த்”
“ஓகே, எனக்கு இப்போ வெளியே போக வேண்டிய வேலை இருக்கு. நான் உன்கிட்ட அப்புறமா சேட் பண்றேன் “
” என்னடா சாட்டர்டே அதுவும் காலையிலேயே எங்க போகணும்னு நினைக்கிற? ஏதாவது பொண்ணு புடிச்சிட்டியா என்ன? “
” நமக்கு வெளிநாட்டு பொண்ணுங்க எல்லாம் செட் ஆகாது “
” அப்படியா? “
” ஆமா ஆமா “
” சரி நம்ம நாட்டு பொண்ணுங்க யாரும் அங்க இல்லையா என்ன? “
” இருக்காங்க ரெண்டு நார்த் இந்தியன்ஸ், அப்புறம் ஒரே ஒரு மலையாளி பொண்ணு”
“சரி, அவங்க யார்கிட்டேயாவது பேசிப் பாரு”
“அவங்க எல்லாமே என்னோட ஃப்ரெண்ட்ஸ் தான் தர்ஷி. அப்படி இருக்கும் போது எப்படி அவங்க மேல எனக்கு எப்படி லவ் வரும்?”
“ஃபிரெண்ட்ஸா இருந்து லவ்வரா ஆனவங்க எவ்வளவு பேர் இருக்காங்க?”
” எனக்கு என்னமோ அந்த கான்செப்ட் சுத்தமா பிடிக்கல. ஃபிரெண்டுன்னு சொல்லிட்டு எப்படி அவங்க கூட சேர்ந்து எப்படி வாழ முடியும்? “
” எனக்கு எதுவும் தப்பா தெரியல. இன்ஃபாக்ட் பிரண்டா இருக்கிறவங்க ஹஸ்பண்டா வந்தா லைஃப் இன்னும் நல்லா இருக்கணும்னு நான் நினைக்கிறேன் “
” அப்போ அஜய் கூட நீ முதல்ல ஃபிரண்டா தான் இருந்தியா? “
” அஜயை பார்த்த ரெண்டு மாசத்திலேயே ப்ரொபோஸ் பண்ணிக்கிட்டோம். அப்புறம் தான் இன்னும் நல்லா பேசி பழகினோம்”
” அப்புறம் எந்த அத்தாட்சில சொல்ற, ஃபிரண்டா இருந்து லவ்வரா வந்தா லைஃப் நல்லா இருக்கும்னு? ”
“ஆமாம், முதல் ரெண்டு மாசம் ஃபிரெண்ட்ஸா தானே இருந்தோம். அப்போ எங்களுக்குள்ள எந்த லவ் ஃபீலிங்கும் இல்லல?”
” எனக்கு தெரிஞ்சு உங்க ரெண்டு பேருக்கும் முதல் தடவை பார்க்கும்போதே லவ் ஃபீலிங் வந்திருக்கும், ஆனா நீங்க எக்ஸ்பிரஸ் பண்ணிக்கிட்டது தான் இரண்டு மாசம் கழிச்சு நடந்திருக்கும்”
” சரி என்னமோ போ, எனக்கு பிரண்ட்ஸ் குள்ள லவ் பண்றது தப்பா தெரியல. உனக்கு அது தப்பா தெரிஞ்சா விட்டுடு. உனக்கு பிடிச்ச பொண்ணு எப்ப வராலோ அவள பார்த்து லவ் பண்ணு” என்று சொல்லி சிரித்தாள்.
” சரி சரி நான் கிளம்புறேன் வை “
” ஓகே டா ஹாப்பி வீக் எண்ட்” என்றாள் தர்ஷினி.
” லேட் ஆகுது நீயும் போய் தூங்கு, டேக் கேர், குட் நைட், பை ” என்று சொல்லி ஃபோனை வைத்தான் முகுந்தன்.
No comments yet.