பாகம் 3

Vaishnavi Vijayaraghavan | 23 Jul 2026 | Share

பாகம் 3 

அடுத்த மூன்று நாட்களுமே முகுந்தன் அவன் வெளிநாட்டுக்கு செல்வதற்காக தேவையான துணிமணிகள் மற்றும் சில பொருட்களை விக்னேஷ் உடன் சென்று கடையில் வாங்கினான். அந்த வேலையில் தர்ஷினியை பற்றி நினைக்க கூட அவனுக்கு நேரம் இல்லை. அதுவும் இல்லாமல் ‘இன்னும் சில நிமிடங்களில் அவள் இன்னொருத்தனின் மனைவி. ஆகையால் அவளை இதற்கு மேல் நினைக்கக் கூடாது’ என்று அவளுடைய கல்யாண பத்திரிக்கையை கிழித்து குப்பைத் தொட்டியில் போட்ட போதே நினைத்துக் கொண்டான்.

 வெளிநாட்டிற்கு சென்று ஒரு பிசினஸ் ஸ்டடி கோர்ஸ் படிக்க செல்கிறான். இரண்டு வருட டிகிரி கோர்ஸ் அது. அதை படித்தால் தான் தன் கம்பெனியை அவனுடைய பெயரில் மாற்றி எழுதி தந்துவிட்டு தான் ஓய்வெடுக்கப் போவதாக கூறியிருந்தார் கோபாலகிருஷ்ணன். அதுவும் இல்லாமல் அந்த கோர்ஸ் படிக்க வேண்டும் என்பது அவனுடைய ஆசையும் கூட. அதனால ஒப்புக்கொண்டு வெளிநாடு செல்ல எல்லா ஏற்பாடுகளும் செய்து முடிக்கப்பட்டு இருந்தது.

 வெள்ளிக்கிழமை காலை. அன்று இரவு 11 மணியளவில் முகுந்தன் ஏர்போர்ட்டில் இருக்க வேண்டும். இரண்டரை மணி அளவில் அவனுக்கு பிளைட். இன்டர்நேஷனல் விமானம் என்பதால் 3 மணி நேரம் முன்னதாகவே ஏர்போர்ட்டில் இருக்க வேண்டும். 

அதனால் அவனுடைய சர்டிபிகேட் பாஸ்போர்ட் விசா மற்றும் இதர தேவையான அனைத்துயும் எடுத்து வைத்துக் கொண்டும். மூன்று நாட்களாக ஷாப்பிங் செய்த அனைத்து பொருட்களையும் பேக் செய்து எடுத்து வைத்துக் கொண்டும் இருந்தான் முகுந்தன். அப்போது அவனுடைய நண்பன் விக்னேஷ் வந்தான்.

“என்னடா முகுந், ரெடி ஆயிட்டியா?” என்றான்.

” விக்கி, என்னடா மச்சி நீ இன்னைக்கு ஆபீஸ்க்கு போகல? “

” இல்லடா இன்னைக்கு ஒன் ஃபுல் டே உன்கூட டைம் ஸ்பென்ட் பண்ணலாம்னு நினைச்சேன். 2 இயர்ஸ் உன்னை பார்க்க முடியாதே” என்று சொல்லும்போது லேசாக விக்னேஷுக்கு கண்கள் கலங்கியது.

” விக்கி அழுது மட்டும் வைத்து விடாத மச்சி.

 அப்புறம் சரியா கலாய்த்து விட்டு 

விடுவேன் ” என்று சொன்னாலும் அவனுக்கும் உள்ளுக்குள் விக்னேஷை பிரிந்து இருப்பது கஷ்டம் என்று புரிந்தது.

” நான் ஏன்டா அழப்போறன். நான் ரெண்டு வருஷத்துக்கு ஜாலியா இருப்பேன். நீ எங்க பிளைட்ல இருந்து இறங்கி திரும்பி வீட்டுக்கு வந்துருவியோன்றதுக்காக தான் உன்னை ஃபிலைட் ஏத்தி விட்டு அது கிளம்பி பறக்கிற வரைக்கும் பார்த்துட்டு திரும்ப வீட்டுக்கு வரலாம்னு நினைச்சுக்கிட்டு இருக்கேன்” என்று சொல்லி சிரித்தான் விக்னேஷ்.

” அப்படி நான் என்னடா உன்னை பெரிய தொல்லை பண்ணிட்டேன் “

” என்ன பண்ணியா? நீயே கொஞ்சம் எல்லாத்தையும் நினைச்சு பாரு “

 ஒரு வேலையும் முகுந்தன் தனியாக செய்ய மாட்டான். அவனுக்கு தேவையானவற்றை வாங்குவதற்கு கூட விக்னேஷை அழைப்பான். வாங்கிய பொருட்கள் அனைத்தையும் தூக்கி வருவது கார் ஓட்டி செல்வது கடைக்குச் சென்று ஏதாவது வாங்கி வருவது என்ற எல்லா வேலைகளையும் விக்னேஷ் செய்ய வைப்பான். அதனாலேயே விக்னேஷ் அவ்வாறு கூறினான்.

” அடப்பாவி இவ்வளவு நாளா அதெல்லாம் தொல்லையா நினைச்சுக்கிட்டு 

இருந்தியா? “

” இல்லையா பின்ன? தொல்லை தான் “

” அப்படி நீ ஃபீல் பண்ணி இருந்தா சாரி மச்சி” என்றான் முகுந்தன்.

” ஏய் லூசாடா நீ நான் காமெடிக்கு சொல்றேன். தொல்லை தான் ஆனா அன்பு தொல்லை அப்படின்னு சொல்ல வந்தேன். அதுக்குள்ள நீ அதை சீரியஸா எடுத்துக்கிட்டு சாரி சொல்லுவியா? “

” நல்லா ஏமாந்தியா? நானாவது உன்கிட்ட சாரி சொல்றதாவது” என்று ஒழுங்கு காட்டினான்.

“டேய், உன்னை” என்று அவன் தோளில் அடித்தான் விக்னேஷ்.

 அவனைத் தடுத்து அவனும் திரும்ப அடித்து இருவரும் சிறிது நேரம் விளையாடினார்கள்.

 பின்னர் இருவரும் கட்டிப்பிடித்துக் கொண்டனர்.

” மச்சி என்னோட அப்பா அம்மாவ பார்த்துக்கோ டா ” என்றான் முகுந்தன்.

” அதெல்லாம் நீ சொல்லனுமாடா? அவங்க எனக்கும் அப்பா அம்மா தாண்டா. நீ கவலைப்படாதே. டெய்லி எனக்கு ஸ்கைப் கால் பண்ணிடு”

” நீ என்ன என் லவ்வரா ஒய்ஃபா? டெய்லி ஸ்கைப் கால்ல பேசறதுக்கு? வாரத்துல ஒரு நாள் அவ்ளோதான். அதுவே அதிகம் ” என்றான் முகுந்தன்.

” அடப்பாவி. ரெண்டு வருஷம் கழிச்சு திரும்ப வரும்போது நான் ஏர்போர்ட்டுக்கு வந்தா கூட யாரு நீன்னு கேட்ப போல இருக்கே? “

” வாய்ப்புகள் இருக்கு மச்சி”

“உன்னை” என்று மறுபடியும் அடிக்க ஆரம்பித்து கொண்டனர் இருவரும் .

 அப்போது கீழே ஹாலில் இருந்து முகுந்தனின் அம்மா கூப்பிட்டது கேட்டது.

” முகுந்த், விக்கி ரெண்டு பேரும் வாங்கப்பா “

 என்றார் பிரேமலதா.

” இதோ வரேன் அம்மா ” என்று சத்தமாக தன் அம்மாவிற்கு பதில் சொல்லிவிட்டு 

” மச்சி நான் இதை எடுத்து வச்சுட்டு வரேன் நீ கீழே போ. இல்லனா அம்மா கூப்பிட்டுக்கிட்டே இருப்பாங்க ” என்றான் முகுந்தன்.

” சரி மச்சி” என்று சொல்லி கீழே இறங்கினான் விக்னேஷ்.

 பத்து நிமிடத்திற்கு பிறகு கீழே இறங்கி வந்தான் முகுந்தன்.

 அப்போது ஹால் சோஃபாவில் அஜய் மற்றும் தர்ஷினி இருவரும் அமர்ந்திருந்தனர்.

 அவர்களைப் பார்த்ததால் பாதி படியில் நின்றவனை,

” முகுந்த் வாடா ” என்றார் கோபாலகிருஷ்ணன்.

” இதோ வரேன் பா” என்று சொல்லிக் கொண்டே மெதுவாக இறங்கினான் முகுந்தன்.

” ஹாய் முகுந்த், என்ன பேக்கிங் எல்லாம் ஓவரா?” என்றாள் தர்ஷினி.

” ஓரளவுக்கு முடிச்சிட்டேன் “

” நீ மாறவே இல்ல முகுந்த், எல்லாம் லாஸ்ட் மினிட்ல தான் பேக் பண்ணுவியா? ” என்று சொல்லி சிரித்தாள்.

” நல்லா சொல்லுமா தர்ஷி, மூணு நாளா ஷாப்பிங் போயிட்டு இருக்கான். பேக் பண்ணுடா பேக் பண்ணுடா ன்னு சொன்னா இன்னைக்கு தான் பேக் பண்ணிக்கிட்டு இருக்கான் ” என்று ஏற்றிவிட்டார் பிரேமலதா.

 சிரித்துக் கொண்டே,

” பேக்கிங் நான் ஏதாவது ஹெல்ப் பண்ணவா உனக்கு? ” என்றாள் தர்ஷினி.

” இல்ல வேண்டாம்” என்றான்.

” என்னடா இப்படி மொட்டையா பேசுற? 

 தர்ஷி தர்ஷுன்னு கூப்பிடுவியே? எல்லாம் மறந்து போயிட்டியா? “

 பதில் பேசாமல் அமைதியாக இருந்தான் முகுந்தன்.

” டேய் விருந்துக்கு நாளைக்கு வருவதா தான் இருந்தா தர்ஷி. இன்னைக்கு நீ ஊருக்கு கிளம்புறேன்னு சொன்னேன். அதனால இன்னைக்கு வந்தா உன்னையும் பார்க்கலாமேன்னு இப்ப வந்திருக்காங்க”

 என்றார் கோபாலகிருஷ்ணன்.

“ஓ, ஓகே. தேங்க்ஸ்” என்று அஜய் மற்றும் தர்ஷினி இருவரையும் பார்த்து சொன்னான்

முகுந்தன்.

” ஏய் என்னடா ரொம்ப ஃபார்மலா பேசுற? “

 என்றாள் தர்ஷினி.

” அவனுக்கு உன்னை சுத்தமா மறந்துடுச்சு மா ” என்றார் பிரேமலதா.

” ஓ அதனாலதான் சரியா பேச மாட்டேங்கிறீயா? ஒரு நிமிஷம்” என்று சொல்லி தன் ஹேண்ட் பேக்கில் இருந்து அவளுடைய கிளட்சை எடுத்து அதில் அவள் வைத்திருந்த ஃபோட்டோவை எடுத்துக் காண்பித்தாள்.

” இதோ பாரு முகுந்த். இது நீயும் நானும் தான்” என்று சொல்லி அந்த சிறிய ஃபோட்டோவை காண்பித்தாள்.

 அதை கையில் வாங்கிப் பார்த்தான் முகுந்தன். இருப்பினும் அவனுக்கு எதுவும் ஞாபகம் வரவில்லை. என்றாலும்,

“ஓ, நைஸ்” என்று சொல்லி அதை பார்த்துவிட்டு திரும்ப அவளிடம் கொடுத்தான்.

” என்கிட்ட இன்னொரு காப்பி இருக்கு இதை நீயே வச்சுக்கோ ” என்றாள் தர்ஷினி.

 பிறகு அனைவரும் அமர்ந்து லஞ்சு சாப்பிட்டார்கள். 

 வீட்டிலிருந்த ஒரு புதிய பட்டுப் புடவை மற்றும் பட்டு வேட்டியை வைத்து அஜய் மற்றும் தர்ஷினிக்கு கொடுத்தனர் கோபாலகிருஷ்ணன் மற்றும் பிரேமலதா.

” எதுக்கு அங்கிள் இதெல்லாம்? ” என்றான் அஜய்.

“அஜூ, இதெல்லாம் நம்மளுடைய பழக்க வழக்கம் கலாச்சாரம். பெரியவங்க பிளஸ் பண்ணி கொடுத்தா அதை நம்ம ஏத்துக்கணும். இப்படி எல்லாம் 

பேசக்கூடாது ” என்றாள் தர்ஷினி. 

“ஓகே தர்ஷி” என்று அஜய் அவளிடம் சொல்லிவிட்டு.

 இருவரும் அவர்கள் காலில் விழுந்த ஆசீர்வாதம் வாங்கிக்கொண்டு அந்த புடவை வேஷ்டியை வாங்கிக் கொண்டனர்.

 பிறகு சிறிது நேரம் அமர்ந்து பேசினார்கள். அதன் பின்னர் கிளம்புவதாக கூறினார்கள் அஜய் மற்றும் தர்ஷினி.

 அப்போது தர்ஷினி முகுந்தன் அருகில் வந்து, “உன்னோட நம்பர் கொடு டா” என்றாள்.

முகுந்தன் அவனுடைய நம்பரை சொன்னான். 

“இது இந்தியா நம்பர் அங்க போனா இதுக்கு இன்கமிங் இல்ல. வாட்ஸ் அப்ல கால் பண்ண முடியும் மெசேஜ் பண்ண முடியும்.”

” ஓ, ஓகே ஓகே. நான் அப்புறமா உனக்கு மெசேஜ் பண்றேன். பை முகுந்த்” என்றாள் தர்ஷினி.

ஒருமுறை அவனை கட்டி அணைத்து.

” டேக் கேர் முகுந்த். பீ இன் டச்” என்றாள் தர்ஷினி.

“ஓகே” என்றான் முகுந்தன்.

 அஜையும் முகுந்தனின் கையைத் குலுக்கி,

“பை பிரோ. டேக் கேர். ஹேப்பி அண்ட் சேஃப் ஜர்னி ” என்றான்.

“தேங்க்ஸ் ” என்றான் முகுந்தன்.

” பை விக்கி” என்றான் அஜய்.

“பை அண்ணா ” என்றான் விக்னேஷ்.

 அவர்கள் கிளம்பி சென்றதும் தன்னுடைய ரூமிற்கு சென்றான் முகுந்தன். விக்னேஷ் அவனை தொடர்ந்து பின்னாலேயே சென்றான்.

“இவ ஏன்டா என்னை மறுபடியும் கட்டிப்பிடிக்கிறா?” என்று முகுந்தன் கோபமாக விக்னேஷிடம் புலம்பினான்.

” என்னடா ஃப்ரெண்ட்லியா தான கட்டிப்பிடிச்சாங்க அவங்க? “

” இப்பதான் மூணு நாளா அவ ஞாபகம் இல்லாமல் நான் உண்டு என் வேலை உண்டுன்னு இருந்தேன். இப்ப கிளம்பற நேரத்துல மறுபடியும் வந்து…” 

” முகுந்த் ஏண்டா டென்ஷன் ஆகுற? “

” டென்ஷன் ஆகாம என்னடா பண்ண சொல்ற? அவ இன்னொருத்தரோட மனைவியின் என்பதை மனசுல வச்சிக்கிட்டு இதோட அவ முகத்துல முழிக்க கூடாதுன்னு முடிவோட இருந்தேன். சரி நம்ம யுஎஸ் தானே போக போறோம் ரெண்டு வருஷத்துக்கு நம்ம அவளைப் பார்க்க போறது இல்ல. அதுக்குள்ள அவளை கொஞ்சம் கொஞ்சமா மறந்திடலாம். அதுக்கு அப்புறமும் நம்ம சென்னை வந்தா அவளைப் பார்க்காமல் அவாய்ட் பண்ணிக்கலாமுன்னு எல்லாம் யோசிச்சு வச்சு இருந்தேன்”

” மச்சி, இது தப்பு டா அவ்வளவு தான் நான் சொல்லுவேன் “

” எனக்கும் தெரியுது டா அதனால தான் நான் இதுல இருந்து ஒதுங்க பார்க்கிறேன். ஆனாலும் ஏன் அவ இன்னைக்கு வந்தான்னு தான் இருக்கு. அவளை பார்க்கும் போது கூட எனக்கு பெருசா தெரியல. அந்த அஜய் கட்டின தாலி அவ கழுத்தில் இருக்கிறத பார்த்ததும் என்னால அவளை காதலியா நினைச்சு கூட பார்க்க முடியல. அமைதியா இருந்துட்டேன். கிளம்பும்போது அவ கட்டி பிடிச்சதும் தாண்டா எனக்கு ஒரு மாதிரியா ஆயிடுச்சு. “

” மச்சி வரியாடா வெளியே போயிட்டு வரலாம்? “

” வேணாம் டா. இப்ப இருக்க டென்ஷனுக்கு எனக்கு அட்லீஸ்ட் ஒரு ரெண்டு பெக்கு போடணும்னு தோணும். இன்னைக்கு வேற கிளம்புறேன். அதனால அதெல்லாம் வேண்டாம். நானே கொஞ்ச நேரத்துல சரி ஆகிடுவேன். “

” ஒண்ணு கேட்டா தப்பா நினைக்க மாட்ட இல்ல மச்சி? ” என்றான் விக்னேஷ்.

” நினைச்சுப்பேன்னு தோணுச்சுன்னா கேட்காத டா ” என்றான் முகுந்தன் சற்றே கோபமாக.

இந்த episode பிடிச்சிருந்தா எழுத்தாளரை உற்சாகப்படுத்துங்க!!
இப்போதே உற்சாகப்படுத்துங்கள்

இந்த படைப்பை மதிப்பிட விரும்புகிறீர்களா?

Click on a star to rate it!

No votes so far! Be the first to rate this post.

    No comments yet.