பாகம் 1

Vaishnavi Vijayaraghavan | 21 Jul 2026 | Share

வாசமில்லா மலரின் வசந்தம் 

பாகம் 1 

‘அக்கடான்னு நாங்க உடை போட்டா,

துக்கடான்னு நீங்க எடை போட்டா,

தடா உனக்கு தடா….’ என்று ஸ்பாட்ஃபையில் 90’s பாடலை போட்டு அதைக் கேட்டு உடன் பாடிக் கொண்டே தன் ஷர்ட்டை அயர்ன் செய்து கொண்டு இருந்தான் முகுந் என்று அழைக்கப்படும் முகுந்தன்.

” முகுந், சீக்கிரமா வாடா. டைம் ஆகுது.

 இப்ப கிளம்பினாலே நம்ம போய் சேருவதற்கு ஒரு மணி நேரம் ஆகிடும். “

 என்று பரபரப்பாக பேசினான் முகுந்தனின் நண்பன் விக்னேஷ்.

” விக்கி, இருடா வரேன், எதுக்கு இப்போ பறக்குற?” என்று சொல்லிவிட்டு அயர்ன் செய்த சட்டையை போட்டுக் கொண்டு ஒருமுறை கண்ணாடி முன் நின்று தன்னுடைய தலை முடியை கைகளால் சரி செய்துவிட்டு, அந்தப் பர்ஃபியூம்மை கழுத்தில் ஆரம்பித்து இடுப்பு வரை இரண்டு பக்கமும் அழுத்தினான். 

“மச்சி, டியோடரண்ட்ல குளிச்சது பத்தாதா? பர்ஃபியூமை வேறு இவ்வளவு போடுற?கல்யாணம் உனக்கு இல்ல, ஞாபகம் இருக்கா? ” என்று சிரித்துக் கொண்டே சொன்னான் விக்னேஷ்.

” ஏய், மாப்பிளை விட நான் தான் சூப்பரா இருக்கனும். நான் கிராஸ் பண்ணிப் போனா இந்த பர்ஃபியூம் வாசனை பொண்ணுங்களை என் கிட்ட இழுத்துக்கிட்டு வரணும் “

” ஏன் எதாவது பர்ஃபியூம் அட்வர்டைஸ்மென்ட் பார்த்தியா? “

” நான் ஹேண்ட்ஸம்மா தெரியனும் டா” என்று சொல்லி கண் அடித்தான் முகுந்தன்.

“பர்ஃபியூம் டியோடரண்ட் போட்டா ஹேண்ட்ஸம்மா ஆயிடுவாங்களா? அட இவ்வளவு நாளா இது தெரியாம போச்சே எனக்கு” என்று சொல்லி சிரித்தான் விக்னேஷ்.

” ஏய், என்ன ஜோக்கா? சிரிப்பே வரல”

” உன்னை கலாய்ச்சா உனக்கு எப்படி டா சிரிப்பு வரும்? “

“ஏய், காலேஜ் கல்சுரல்ஸ்ல மிஸ்டர் காலேஜ் டைட்டிலை வின் பண்ணினது நான் தான். ஞாபகம் இருக்கு இல்ல? “

“சரி டா, நீ ஆண் அழகன் தான் ஒத்துக்கிறேன்”

” அப்படி வா வழிக்கு “

” பார்த்து பார்த்து மாப்பிள்ளைக்கு பதிலா உன்னை தாலி கட்ட சொல்லிடப் போறாங்க “

” அவங்க சொன்னா நான் கட்டிடுவேனா. பொண்ணை எனக்கு புடிச்சிருந்தா தானே நான் கட்டுவேன்”

” ரொம்ப கற்பனை பண்ணிக்காத. ஒரு பேச்சுக்கு தான் சொன்னேன். இது வாழ்க்கை, சினிமாவா என்ன? “

” வாழ்க்கை தாண்டா சினிமா. சினிமா தாண்டா வாழ்க்கை”

” சரி சரி போதும் அறுக்காத வா போலாம்”

 என்ற சொல்லி தன் நண்பனை வலுக்கட்டாயமாக இழுத்துக் கொண்டு தார் ஜிப்பில் ஏறினான் விக்னேஷ்.

“மச்சி, உங்க அப்பா அம்மா கூட ஏதோ கல்யாண ரிசெப்ஷனுக்கு தான போய் இருக்காங்க?” என்றான் விக்னேஷ்.

“ஆமாம் டா, என்னையும் கூப்பிட்டாங்க. எங்க அப்பாவோட ஃபேமிலி ஃபிரெண்டோட பையனுக்கு கல்யாணமாம். அங்க போனா ஒரே போரிங்கா இருக்கும். அதான் நான் வரலைன்னு சொல்லிட்டேன். “

” இப்போ இதுக்கு மட்டும் வர? “

“ஆமாம், இது உன் ஃபிரெண்டோட அண்ணன் கல்யாணம் தானே. உன்னோட ப்ரெண்ட் ட்ரிங்க்ஸ் பார்ட்டி தருவாரு இல்ல?

 அதனால தான் வரேன் “

” டேய், நம்ம இப்ப போற கல்யாணம் என் ஃப்ரெண்டோட அண்ணனது கிடையாது. “

“பின்ன?”

” என் அண்ணனோட ஃப்ரெண்டு கல்யாணம்”

” என்னடா சொல்ற விக்ரம் அண்ணாவோட கல்யாணமா? “

” ஏ லூசு விக்ரம் என் அண்ணா. என் அண்ணனோட ஃப்ரெண்ட் கல்யாணம். அவனுக்கு தான் ஆல்ரெடி கல்யாணம் ஆகி usல செட்டில் ஆயிட்டானே? “

” அதாண்டா விக்ரம் அண்ணா ஓட ஃப்ரெண்டு கல்யாணமான்னு கேட்க வந்தேன். தப்பி தவறி வாயில அப்படி வந்துடுச்சு உடனே அதுக்கு ஒரு நொட்ட சொல்லு ” என்றான் முகுந்தன்.

” சரி சரி இப்ப என்ன போரிங்கா உனக்கு இந்த கல்யாணத்துக்கும் வரலையா? “

” போடா ட்ரிங்க்ஸ் பார்ட்டி நெனச்சு வந்தேன்.

 இப்போ இல்லன்னா போரிங்கா தான் இருக்கும்”

” ட்ரிங்க்ஸ் பார்ட்டி இல்லன்னு நான் சொன்னனா என்ன? “

” அப்படின்னா டிரிங்ஸ் பார்ட்டி இருக்குதா? ”   

” அதுக்குள்ள கண்ணுல ஒரு ஆர்வத்தை பாரு. நீ நெனச்சா பாட்டில் பாட்டிலா வீட்டிலேயே வாங்கி வைத்து குடிக்கலாம் உங்க அப்பா ஒன்னும் சொல்ல போறது இல்ல. அதுக்கே நீ இப்படி இவ்ளோ ஆர்வமா இருக்க “

” டேய் அப்பா வந்து ரொம்ப ரேரா ட்ரிங்ஸ் பண்றதுக்கு தான் அலோ பண்ணுவாரு. அது கூட லிமிட்டடா தான் குடிக்கணும்னு கண்டிஷன் போட்டு இருக்காரு. அம்மாவுக்கு தெரியாது அம்மாவுக்கு தெரிஞ்சா அவ்வளவுதான். இருந்தாலும் இந்த மாதிரி கல்யாணம் பார்ட்டி இல்ல ஃப்ரெண்ட்ஸோட சேர்ந்து குடிக்கிறது ஒரு சுகமான விஷயம் தான் டா “

” சரி சரி, அஜய் அண்ணாவும் பார்ட்டி தரேன்னு தான் சொல்லி இருக்காரு “

” அஜய் அண்ணாவா யார் அது? “

” அவர் தாண்டா கல்யாணம் மாப்பிள்ளை “

“ஓ, ஓகே”

” அட்லீஸ்ட் கல்யாணம் மாப்பிள்ளை பொண்ணு பேராவது தெரிஞ்சு வச்சுக்கோடா” என்று சொல்லி சிரித்தான் விக்னேஷ்.

” அதெல்லாம் எனக்கு அவசியமில்லை. 

 தெரிஞ்சுகிட்டு நான் என்ன பண்ண போறேன்” என்றான் முகுந்தன்.

ஆசிரியர் குறிப்பு:

 பாவம் முத்தம் தனக்கு தெரியவில்லை தன் வாழ்க்கையே மாற்றப் போவது இந்த மணமக்கள் தான் என்று.

 இருவரும் திருமண மண்டபத்தை அடைந்தனர். மிகவும் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டு இருந்தது. 

” ரொம்ப பணக்காரங்க தான் போல இருக்கு.

 உன்னோட அஜய் அண்ணன் புடிச்ச பொண்ணு ” என்றான் முகுந்தன்.

” என்னது என்னோட அஜய் அண்ணனா? “

” நீதான வார்த்தைக்கு வார்த்தை அஜய் அண்ணன் அஜய் அண்ணன் என்று சொன்ன “

” ஏன் நீ அண்ணன்னு சொல்ல மாட்டியா? “

” எனக்கு அண்ணன் எல்லாம் கூப்பிட பிடிக்காது”

” பின்ன என்ன சொல்ல போற? “

” நான் என்ன சொல்லணும்? “

” விஷ் பண்ணுவ இல்ல கங்க்ராஜுலேஷன்சின்னு. அப்போ என்ன சொல்லுவ? “

” வெறும் கங்கிராஜுலேசன் சொன்னா போதாதா அண்ணன் தம்பி மாமன் மச்சான் ஏதாவது சொல்லனுமா என்ன? “

” போடாங்”

” ஆமா கிஃப்ட் எதுவும் வாங்காமலே வந்துட்டோமே? “

” என்னோட விக்ரம் அண்ணா அமௌன்ட் அனுப்பிட்டாரு அதுக்கு நான் நேத்தே கோல்டு பிரேஸ்லெட் வாங்கிட்டேன்”

“ஓ, ஓகே”

 அங்கிருந்த சேரில் போய் அமர்ந்தார்கள்.

 பாடல்கள் டிஜே வில் போட்டு சிலர் ஆடிக் கொண்டிருந்தார்கள். அவர்களைப் பார்த்தபடி அமர்ந்திருந்தனர் முகுந்தன் மற்றும் விக்னேஷ்.

 அப்போது அங்கிருந்த பெரிய டிவி மானிட்டரில் மணமக்கள் தெரிந்தார்கள்.

 முகுந்தன் பார்க்கும்பொழுது சரியாக ஒருவர் மணமகளது எதிரே நின்று விஷ் செய்து அவள் முகத்தை மறைத்தபடி நின்று இருந்தார்.

 அவர் சென்ற பிறகு இருவரையும் ஜூம் செய்து வீடியோ எடுத்தது மானிட்டரில் தெரிந்தது.

 மணமகளை பார்த்த முகுந்தன் ஒரு நொடி கண்ணிமைக்க மறந்தான்.

 இதுவரை அவ்வளவு அழகாக யாரையுமே அவன் பார்த்தது இல்லாதது போல உணர்ந்தான். 

 “இருவரும் பர்ஃபெக்ட் மேட்ச்” இல்லடா என்றான் விக்னேஷ் முகுந்தனிடம்.

“இல்ல” என்றான் முகுந்தன்.

” என்னடா சொல்ற? “

முகுந்தன் விக்னேஷின் காதில்,

” மச்சி பொண்ணு சூப்பரா இருக்காடா. இந்த மாப்பிள மட்டும் கல்யாணம் வேணாம்னு போயிட்டான்னா, நீ சொன்ன மாதிரி நான் தாலி கட்டிடுவேன் டா. சான்சே இல்ல. “

” மச்சி, இந்த பொண்ணு மேக்கப் இல்லாமல் பார்த்தால் எப்படி இருக்கும்னு யோசிச்சு பாரு. ஏன்னா இந்த காலத்துல கிழவியை கூட குமரி போல மேக்கப் பண்றாங்க. அதனால ஏமாந்துறாத. “

” இந்தப் பொண்ணு கிழவியா இருந்தா கூட பரவால்ல டா. எனக்கு ஓகே. அவ கண்ணைப் பாரு எவ்வளவு சூப்பரா 

இருக்கு “

” அப்படியா இப்ப கிஃப்ட் கொடுக்க மேடை மேல ஏறுவோம் இல்ல? அப்போ நீயே மாப்பிள்ளை கிட்ட சொல்லிடு”

” சொல்லிட்டேனா? “

” ஏய் சும்மா சொன்னேன் டா, என்ன சொல்ல போற? “

” இவங்க ரொம்ப அழகா இருக்காங்க இவங்கள நான் கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்றேன்”

” சரிடா அப்படி நீ மட்டும் சொல்லிட்டன்னு வச்சுக்கோயன் , நான் உனக்கு அஞ்சாயிரம் ரூபாய், இல்ல இல்ல பத்தாயிரம் ரூபாய் தரேண்டா ” என்றான் விக்னேஷ்.

” பத்தாயிரம் ரூபாய் வேண்டாம் பத்தாயிரம் டாலர் தரேன்னு சொல்லு. நான் சொல்றேன்”

” நீ சொன்னா சொல்லு, சொல்லாவிட்டால் போ. நான் எல்லாம் அவ்வளவு காசு தர மாட்டேன் “

” சரி சரி கோச்சிக்காத பத்தாயிரத்துக்கே வச்சுக்கலாம். “

” பத்தாயிரம் ரூபாய் “

” சரி சரி பத்தாயிரம் ரூபாய் தான் “

” நீ சொல்லாம இறங்கிட்டேன்னா, எனக்கு நீ பத்தாயிரம் தரணும் ” 

” சரிடா, சொல்லாம இறங்கினா தானே? ”  

‘என்ன இவ்வளவு கான்ஃபிடென்ட்டா சொல்றான், ஒருவேளை உண்மையாவே சொல்லிடுவானோ?’ என்று நினைத்துக் கொண்டான் விக்னேஷ்.

 கியூ நெருங்க நெருங்க விக்னேஷ் மற்றும் முகுந்தன் இருவருக்குமே மனது பதைபதைத்தது. ‘பெட்டில் முகுந்தன் ஜெயித்து விடுவானோ?’ என்று நினைத்து விக்னேஷுக்கு பயம். ‘எப்படி மாப்பிள்ளை இடம் அப்படி பேசுவது. அனைவர் முன்னிலையிலும் தன்னை அடித்து விடுவானா? அல்லது சிரித்து தன்னை கோமாளி போல அனைவர் முன்னிலையிலும் நிறுத்தி விடுவானா? அந்தக் கல்யாண பொண்ணு என்ன நினைப்பா?’ என்று பல கேள்விகளுடன் மேடையை நெருங்கிக் கொண்டிருந்தான் முகுந்தன்.

 முகுந்தன் விக்னேஷ் இருவரும் மேடைமேல் ஏற அந்த நேரம் சரியாக முகுந்தனின் அப்பாவும் ஏறினார்.

“என்னடா உங்க அப்பா இங்க வந்து இருக்காரு?” என்று முகுந்தனின் காதில் மெதுவாக சொன்னான் விக்னேஷ்.

“அதான் டா எனக்கும் புரியல, எங்க அப்பா சொன்ன இவரோட ஃபிரெண்டு பையன் உன்னோட அஜய் அண்ணா தானா?” என்றான் முகுந்தன்.

” வாடா, நானே உனக்கு இண்ட்ரடியூஸ் பண்ணனும்னு நெனச்சேன். ” என்று சொல்லி தன் மகனின் கையைப் பிடித்து அழைத்து மணமகள் அருகில் நிறுத்தி.

” தர்ஷா, இவன் யாருன்னு தெரியுதாம்மா? “

” இல்லையே அங்கிள் “

” என் பையன் முகுந்தன் மா ” என்று அவர் சொன்ன வார்த்தைதான் தாமதம்,

“முகுந்” என்று சொல்லி அவனை இறுக்கமாக கட்டி அணைத்தாள் மணப்பெண் தர்ஷினி .

 இதை சற்றும் எதிர்பார்க்காத முகுந்தன் உறைந்து போனான்.

 விக்னேஷும் கூட அதிர்ச்சி நிலையில் இருந்தான்.

 அருகில் இருக்கும் தன் வருங்கால கணவனிடம்,

“அஜூ, நான் சொல்லி இருக்கேன் இல்ல.

 முகுந்த் அதான் முகுந்தன். அது இவன் தான். நான் மட்டும் உன்னை பார்க்கவில்லை என்று வைத்துக்கொள் இவனைத் தான் கல்யாணம் பண்ணி இருப்பேன் ” என்று சொல்லி சிரித்தாள் தர்ஷினி.

” அப்படியா? எஸ்கேப் ஆகுறதுக்கு இப்ப கூட எனக்கு சான்ஸ் இருக்கா? ப்ரோ நான் கிளம்பிடறேன் நீங்க தாலி கட்டிடுங்க இவளுக்கு” என்ற சொல்லி சிரித்தான் அஜூ என்கின்ற அஜய்.

“அஜூ, ” என்று அவனைச் செல்லமாக அடித்தாள் தர்ஷா.

 கையில் வைத்திருந்த பொக்கேவையும் கிஃப்டையும் கொடுத்துவிட்டு அதிர்ச்சியில் உறைந்து போன நடைபிணங்களாய் கீழே இறங்கினார்கள் முகுந்தன் மற்றும் விக்னேஷ்.

இந்த episode பிடிச்சிருந்தா எழுத்தாளரை உற்சாகப்படுத்துங்க!!
இப்போதே உற்சாகப்படுத்துங்கள்

இந்த படைப்பை மதிப்பிட விரும்புகிறீர்களா?

Click on a star to rate it!

No votes so far! Be the first to rate this post.

    No comments yet.