
பாகம் -10
சங்கீதா தன் கணவனிடம் அவனுடைய மேனேஜர் நம்பர் வாங்கி பேசினாள்.
“ஹலோ சார், நான் மிஸஸ் ஹரிஹரன். என் ஹஸ்பண்ட்டுக்கு உடம்பு சரியில்லை சார்” என்று சற்று பதட்டமாக பேசினாள்.
“என்னம்மா ஆச்சு?”
“காலைல இருந்தே லூஸ் மோஷன். இப்போ மயங்கிட்டாரு. ஹாஸ்பிட்டலுக்கு கூட்டிக்கிட்டு போகப் போறேன்”
“அச்சச்சோ, எதாவது ஹெல்ப் வேணும்னா சொல்லுங்க மா”
“சார், அவருக்கு இப்போ நான் பே பண்ணினா அதை கிளெயிம் பண்ண முடியுமா சார்?”
“என்னம்மா? இந்த நேரத்தில் இதை எல்லாம் கேட்டுக்கிட்டு இருக்கீங்க?”
“சார், கிளெயிம் பண்ண முடியும்னா ஒரு 5000 இவரோட அக்கவுண்ட்ல போட சொல்லி யார் கிட்டேயாவது கடன் கேட்பேன்”
“அது தெரியல மா. லீவு தான் என்னால சேங்ஷன் பண்ண முடியும். மெடிக்கல் கிளெயிம் எல்லாம் எனக்கு தெரியாது”
“அப்படியா சார்? அப்போ லீவு மட்டும் திரீடேஸூக்கு சேங்ஷன் பண்ணிடுங்க சார். அப்புறம் சேட்டர்டே சன்டே வந்திடும். மன்டேல இருந்து ஆஃபீஸூக்கு வந்திடுவாரு” என்றாள் சங்கீதா விம்மி விம்மி அழுதவாரு.
“மூணு நாளா?”
“அண்ணே, அதோ அங்க தான் அண்ணே மயங்கி இருக்காரு. தூக்கி உங்க ஆட்டோவில உட்கார வையுங்க. என்றாள் பக்கத்தில் யாரிடமோ பேசுவது போல”
“சரிங்க மா, நீங்க ஹரியை பார்த்துக்கோங்க. நான் லீவு சேங்ஷன் பண்ணிடறேன்” என்றார் மேனேஜர்.
“ஓகே சார், அப்படியே என் வீட்டுக்காரர் நம்பருக்கு அந்த மெடி கிளெயிம் இன்சார்ஜ் பர்சனோட நம்பர் அனுப்பிடுங்க”
“சரிங்க மா”
“ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் சார்” என்று சொல்லி ஃபோனை வைத்து விட்டாள் சங்கீதா.
‘நல்லவேளை, இந்தம்மா என் கிட்ட காசு கேட்கல’ என்று நினைத்து கொண்டார் மேனேஜர்.
ஃபோனை வைத்தவுடன்,
“இப்போதைக்கு சன்டே வரைக்கும் பிரச்சனை இல்லை. என்ன ஓகே வா?” என்றாள் சங்கீதா சிரித்துக் கொண்டே.
“அடிப்பாவி, இந்த விஷயம் மட்டும் அந்த ஆளுக்கு தெரிஞ்சதுன்னா உண்மையிலேயே உடம்பு சரியில்லைன்னா கூட லீவு தரமாட்டான்”
“அதை அப்போ பார்த்துக்கலாம். நீ இப்போ சீக்கிரமா ரெடி ஆகி போ. இரு ரெண்டு பேருக்கும் டிபன் செஞ்சி தந்திடறேன். அருண் வீட்டுக்கு போய் சாப்பிட்டு விட்டு அப்புறம் வினோதாவை தேட போங்க”
“ஏய், அவன் எப்படி டி சாப்பிடுவான்?”
“நீ ஃபிரெண்டு தான? எதாவது சொல்லி சாப்பிட வை. இல்லன்னா அவனால தேட முடியாது. அதைச் சொல்லு”
“அதான் நேத்து நீ சொன்னீயே?”
“அதையே நீயும் சொல்லு. வேற வழி இல்ல”
“ஓகே டி” என்று சொல்லி விட்டு குளிக்க சென்றான் ஹரி.
அவன் வருவதற்குள் இட்லி சாம்பார் செய்து இரண்டு டிபன் பாக்ஸில் போட்டு பேகில் பேக் செய்து வைத்தாள் சங்கீதா.
அவன் ரெடியாகி செல்லும் முன்னர் சங்கீதா அவனிடம்,
“ஹரி, உன் காரை அருண் வீட்டில் விட்டுட்டு அவனோட கார்ல போ”
“ஏன்?”
“வெளியே போகும் போது உன் மேனேஜரோ இல்ல உன் கலீக்ஸ் யாராவது பார்த்து உன் மேனேஜர் கிட்ட சொல்லிட்டாங்கன்னா?”
“அந்த கார்ல போனா மட்டும் தெரியாதா?”
“உன்னோட கார் உங்க ஆஃபீஸ்ல எல்லாருக்கும் தெரியும். உன் கார் பின்னாடி நம்ம நேம் இருக்கு. அதைப் பார்த்தா உள்ளே நீ இருக்கீயான்னு தெரிஞ்சவங்க யாராக இருந்தாலும் பார்ப்பாங்க. ஆனா வேற கார்ல உன்னை யாரும் அவ்வளவு சீக்கிரத்தில் கவனிக்க மாட்டாங்க”
“செம டி நீ, பேசாம நீயும் வாயேன் வினோதாவை தேடிக் கண்டுப்பிடிக்க”
“குழந்தைங்க இருக்காங்களே டா.
இன்னைக்கு போய் நீங்க தேடுங்க. இன்னைக்கும் அவ கிடைக்கலைன்னா நாளைக்கு பசங்களை ஸ்கூலுக்கு அனுப்பி விட்டு நானும் வரேன். நான் இன்னைக்கு அவளோட சென்னை ஃபிரெண்ட்ஸூக்கு கால் பண்ணி பேசறேன்”
“ஓகே டி, பை”
“பை, டேக் கேர். ரெண்டு பேரும் சாப்பிடுங்க” என்று சொல்லி விட்டு அவன் சென்றதும் கதவை தாழ்ப்பாள் போட்டு விட்டு, லேப்டாப் ,ஹெட் ஃபோன்ஸ், டைரி மற்றும் பேனாவை எடுத்து கொண்டு டேபிளின் மேல் வைத்து லேப்டாப்பை ஆன் செய்தாள் சங்கீதா.
“அப்புறம், எல்லாரையும் சேர்த்துக் கொண்டு டியூஷன் சென்டராக ஆக்கிட்டீங்களா அண்ணே?” என்றான் வேலன்.
“இல்ல வேலு, நான் யாருக்கும் டியூஷன் எடுக்கக் மாட்டேன்னு சொல்லிட்டேன்”
“ஏன் அண்ணே? உங்களுக்கு காசு எக்கச்சக்கமா வந்திருக்குமே? எதுக்கு வேண்டாம் ன்னு சொன்னீங்க?”
“இல்ல வேலு, நான் காசுக்காக வினோதாவுக்கு சொல்லித்தரல. அதை ஒரு காரணமாக வச்சிக்கிட்டேன் அவ்வளவு தான். எனக்கு அவ கூட டைம் ஸ்பெண்டு பண்ணனும். அதுக்காகத் தான் அவளுக்கு சொல்லிக் கொடுத்தேன். அதுவும் இல்லாம மத்தவங்க எல்லாம் வந்தா என் வினோதாவுக்கு தனியா சொல்லிக் கொடுக்க முடியாது. அவ பத்தோட பதினொன்னா ஆயிடுவா. அவ மட்டும் தான் எனக்கு வேண்டும்”
“ நீங்க வேறு யாருக்கும் சொல்லிக் கொடுக்க மாட்டேன்னு சொன்னதும். அவங்க என்ன சொன்னாங்க?”
“யாரு வினோதாவா? இல்ல மத்தவங்களா?”
“வினோதா அண்ணி”
“ரொம்ப ரொம்ப சந்தோஷ பட்டா. அவளுக்கு மட்டும் நான் முக்கியத்துவம் கொடுக்கிறது அவளுக்கு ரொம்ப பிடிச்சிருந்துச்சு”
“ஓ, அப்போ அவங்க உங்களை லவ் பண்ண ஆரம்பிச்சிட்டாங்களா?”
“எப்படிடா கண்டுப்பிடிச்ச?”
“அதான் நீங்க சொன்னீங்களே அவங்களுக்கு சொல்லிக் கொடுக்கிறது மட்டும் தான் அவங்களுக்கு பிடிச்சுதுன்னு”
“ஹூம், பரவாயில்லை. புரிஞ்சிகிட்டியே? புத்திசாலி தான் நீ”
“அப்புறம் என்ன ஆச்சு அண்ணே? எப்போ ரெண்டு பேரும் லவ் சொல்லிக்கிட்டீங்க?”
“இருடா சொல்றேன்” என்று சொல்லி விட்டு தண்ணீர் குடித்தான் மனோகர். மடியில் படுத்திருந்த வினோதாவின் மேல் இரண்டு சொட்டுகள் தண்ணீர் பட்டது. நெளிந்தாள் வினோதா. உடனே தன் கர்ச்சீப்பை வைத்து அவள் மேல் சிந்திய தண்ணீர் துளிகளைத் துடைத்தான் மனோகர்.
“ஒருநாள் எனக்கு உடம்பு சரியில்லை ன்னு நான் காலேஜூக்கு போகல. அப்போது என்னை பார்க்க வந்தா. அப்போ தான், அந்த நாள் என் வாழ்க்கையில் மறக்க முடியாத நாள்” என்றான் மனோகர்.
ஆர்வமாக இடை மறிக்காமல் மனோகரையே பார்த்துக் கொண்டு இருந்தான் வேலன்.
‘வினோதா உள்ளே வந்தாள்’
குளிரில் போர்த்திக்கொண்டு படுத்திருந்தான் மனோகர்.
“மனோ, என்னடா ஆச்சு?” என்று பதறினாள் வினோதா.
“ஒண்ணும் இல்லை வினோ. லேசான குளிர்” என்றான் மனோகர்.
அவனை தொட்டுப் பார்த்தாள் வினோதா. ஜூரம் அடித்தது.
“ஏய் ஜூரம் இருக்குடா. வா ஹாஸ்பிடலுக்கு போகலாம்” என்றாள் வினோதா.
“வேண்டாம் டி, மாத்திரை போட்டுகொண்டு கொஞ்ச நேரம் தூங்கினா சரி ஆகிடும்” என்று சொல்லும் போதே அவனுக்கு பல்லெல்லாம் உதற ஆரம்பித்தது.
பாகம் -11
ஹரி அருணின் வீட்டிற்கு சென்ற போது அவன் குளித்து விட்டு ரெடியாகி தன் மனைவியின் ஃபோட்டோவை கையில் வைத்துக் கொண்டு கண்கள் கலங்க அழுதுகொண்டு இருந்தான்.
அதைப் பார்த்த ஹரிக்கு மிகவும் வருத்தமாக இருந்தது.
“மச்சி” என்று கூப்பிட்டுக் கொண்டே உள்ளே சென்றான் ஹரி.
உடனே கண்களை துடைத்துக் கொண்டு அந்த ஃபோட்டோவை டேபிளின் மேல் வைத்து விட்டு,
“வாடா” என்றான் அருண்.
“சரி வா, எங்க போகனும்ன்னு சொல்லு?”
“நீ ஆஃபீஸூக்கு போடா. நான் பார்த்துக்கொள்கிறேன்”
“செம அடி வாங்குவ. நீ இங்கே கஷ்டத்தில இருக்கும் போது. நான் எப்படி டா போவேன். சங்கீ என்ன சொன்னா தெரியுமா?” என்று ஆரம்பித்து அவள் மேனேஜரிடம் பேசியதை சொன்னான்.
ஸ்மைல் செய்தான் அருண்.
“நான் உண்மையிலேயே ரொம்ப நிறையவே புண்ணியம் பண்ணி இருக்கேன் டா. இந்த மாதிரியான நல்ல ஃபிரெண்ட்ஸ் எனக்கு கிடைச்சதுக்கு” என்றான் அருண்.
“ஃபிரெண்ட்ஸ்ல ஏது டா நல்ல ஃபிரெண்டு கெட்ட ஃபிரெண்டு எல்லாம். ஃபிரெண்டு ன்னாலே நல்லது மட்டும் தான் பண்ணுவாங்க நல்லது மட்டும் தான் நினைப்பாங்க”
“கரெக்ட் தான் டா” என்றான் அருண்.
“சரி, அதை விடு. இப்போ என்ன பண்ணலாம்ன்னு நினைக்கிற?”
“அவ கிளோஸ் ஃபிரெண்ட்ஸ் இரண்டு பேரோட நம்பர் இருக்கு. கால் பண்ணலாமா ன்னு நினைக்கிறேன்”
“ஓகே, கால் பண்ணிப் பாரு. சங்கீயும் வினோதா ஃபிரெண்ட்ஸ் கிட்ட பேசறேன்னு சொன்னா”
“ஓகே, சங்கீ பேசறேன்னு சொன்னாளா? அப்போ அவ பேசட்டும். நானும் பேசி அவளும் பேசினா, தேவையில்லாத கன்ஃபியூஷன்ஸ் வரும்”
“சரி, அப்போ நம்ம என்ன பண்ணலாம்ன்னு நினைக்கிற?”
“ஒண்ணுமே புரியல டா. மண்டை வெடிக்குது” என்று சொல்லி கொண்டு இருக்கும் போதே ஏதேச்சையாக கீழே இருந்த செல்லோ டேப்பை கவனித்தான்.
அது உருண்டு டேபிளின் அடியில் விழுந்திருந்தது.
அதை எடுத்துப் பார்த்தான்.
“என்னது டா இது?” என்றான் ஹரி.
அதில் பேக்கர்ஸ் அன்ட் மூவர்ஸ் என்று எழுதி இருந்தது.
“உடனே என்னோட போலீஸ் ஸ்டேஷனிற்கு வாடா” என்றான் அருண்.
“என்னடா சொல்லு?”
“வினோதாவை கிட்நாப் பண்ணிருக்காங்க டா”
“என்னடா சொல்ற?” என்றான் ஹரி அதிர்ச்சியாக.
“ஆமாம் டா, பக்கத்து வீட்டில் நேத்து வீடு காலி செஞ்சாங்க. அப்போ இந்த பேர் இருக்கிற வண்டியை பார்த்தேன். இரண்டு பேர் சாமான்களை ஏத்திக் கொண்டு இருந்தாங்க. அவனுங்க தான் என் வினோதாவை கடத்தி இருக்கனும்” என்றான் அருண்.
“ஆனா எப்படி யாரும் பார்க்காத மாதிரி, இங்கிருந்து எப்படி கடத்தி இருக்க முடியும்?” என்றான் ஹரி.
“ஒரு நிமிஷம்” என்று சொல்லி விட்டு பின் பக்க கதவை திறந்து பார்த்தான். திறக்க முடியவில்லை. வெளி பக்கமாக தாழ்ப்பாள் போடப் பட்டிருந்தது.
“இந்த பக்கமா போனா பக்கத்து வீட்டுக்கு போக முடியும். அவங்க வீட்டு பொருள் போல வினோதாவை பெட்டியில் வைத்து கடத்தி இருப்பான்னு நினைக்கிறேன்”
“ஆனா அவங்களை எப்படி வினோதா உள்ளே விட்டிருப்பா? அதுவும் இல்லாம எதுக்காக வினோதாவை கடத்தனும்?” என்றான் ஹரி.
“அதெல்லாம் ஒண்ணும் தெரியல டா. இதுவே என் கெஸ்ஸஸ் தான்”
“தண்ணீர் கேட்டு உள்ளே வந்திருக்கலாம். அவள் போட்டிருக்கும் நகைகளை பார்த்து இல்ல அவ அழகை பார்த்து…” என்று சொல்லும் போதே அருணுக்கு வார்த்தைகள் சிக்கியது.
“மச்சி, ரொம்ப கற்பனை எல்லாம் பண்ணாத. அதெல்லாம் ஒண்ணும் ஆகி இருக்காது. இப்போதைக்கு உன் டவுட்டடை போலீஸ் ஸ்டேஷனில் போய் சொல்லலாம் வா” என்றான் ஹரி.
“சரி டா” என்று சொல்லி அந்த செல்லோ டேப்பை ஒரு கவரில் போட்டுக் கொண்டு தன் காரை எடுத்துக் கொண்டு கிளம்பினான் அருண். ஹரி அவனுடன் சென்றான்.
“ஏய், நீ வா முதல்ல” என்று அவன் மேலே இருந்த போர்வையை எடுத்து கையை பிடித்து தூக்கினாள். அவன் குளிரில் மிகவும் நடுங்கினான். அதைப் பார்த்த வினோதா பயந்தாள். அவனை இறுக்கமாக கட்டி அணைத்து கைகளில் , கால்களில் மற்றும் முதுகில் தன் கையால் தேய்த்து விட்டாள்.
மனோகர் உடனே உணர்ச்சி வசப்பட்டு அவளுக்கு இதழில் முத்தம் கொடுத்தான். இதை எதிர்பார்க்காத அவள் அவனை தள்ளிவிட்டாள். பின்னர் அங்கிருந்து சென்று விட்டாள்.
“வினோ, வினோ, சாரி டி” என்று உதறிக் கொண்டே கூறினான்.
வெளியே வந்தவள் செருப்பை போடும் போது ஒரு நிமிடம் நின்றாள்.
அவன் உதறிக்கொண்டே வினோதா “வினோ வினோ” என்று கூப்பிடுவது கேட்ட பின்பும் போக மனமில்லை. உள்ளே சென்றாள் கதவை சாத்தி விட்டு மனோகர் அருகில் சென்று.
“ஏன் டா அப்படி பண்ணின?”
“சாரி டி”
“ஏன் அப்படி பண்ணின?”
“அதான் சாரி சொல்லிட்டேன் இல்ல?”
“ஏன் அப்படி பண்ணின?”
“ஏன் அப்படி பண்ணின பண்ணினன்னா. நான் என்ன சொல்றது. நான் உன்னை சின்சியரா லவ் பண்றேன்”
உடனே அவனுடைய இதழில் தன் இதழ்களை பதித்தாள் வினோதா. ஒரு நிமிட இதழ் முத்தத்திற்கு பிறகு.
“ஐ லவ் யூ டூ டா” என்று சொல்லி கட்டிப் பிடித்து கொண்டாள் வினோதா.
கண்களில் இருந்து நீர் வழிந்தோடியது மனோகருக்கு.
‘அன்றிலிருந்து நாங்க ரெண்டு பேரும் தான் காலேஜ் டாக். நாங்க ரெண்டு பேரும் போட்டி போட்டு கொண்டு காதலிச்சோம். போட்டி போட்டு கொண்டு படிச்சோம்’
‘அந்த நாலு வருஷமும் என் வாழ்க்கையில் சொர்க்கம். அவளால என்னை பார்க்காம இருக்க முடியாது. என்னாலேயும் அவளை பார்க்காம இருக்க முடியாது’
“அண்ணா, ஒண்ணு கேட்வா?” என்றான் வேலன்.
“என்னடா?”
“நீங்களும் அண்ணியும், ஒண்ணா இருந்தீங்களா?”
“என்ன மீன் பண்ற?”
“இல்ல நீங்க ரெண்டு பேரும் செக்ஸ்…..”
“சீ சீ இல்ல டா. நாங்க ரெண்டு பேருமே அதுல ரொம்ப தீர்க்கமான முடிவில இருந்தோம். காலேஜ் முடிஞ்சதும் கல்யாணம் பண்ணிக்கிட்டு தான் முதலிரவு கொண்டாடனும்ன்னு” என்றான் மனோகர்.
“அப்போ தினமும் முத்தம் மட்டும் கொடுத்துப்பீங்களா?”
“இல்ல டா, அது கூட வருஷத்துக்கு மூணு முறை தான்”
“மூன்று முறையா? எப்போதெல்லாம்?”
“ஒண்ணு என் பர்த் டே, இன்னொன்று அவ பர்த்டே அப்புறம் வேலன்டைன்ஸ் டே”
“ஓ, ஓகே ஓகே” என்றான் வேலன்.
“இவ்வளவு சின்சியரா லவ் பண்ண நீங்க ஏன் அவங்களை பிரிஞ்சீங்க?”
“லாஸ்ட் செமஸ்டர், எக்ஸாம்ஸ் கூட எழுத முடியல”
“ஏன் அண்ணா?”
“ஜெயிலுக்கு போயிட்டேன்”
“என்னது ஜெயிலுக்கு போயிட்டீங்களா? ஏன்?” என்றான் அதிர்ச்சியாக வேலன்.
“அதுவும் என் வினோதாவுக்காக தான்”
“என்ன அண்ணா சொல்றீங்க?” என்றான் வேலன்.
“ஆமாம் வேலு, ஃபைனல் இயர் காலேஜ் லாஸ்ட் செமஸ்டருக்கு முன்னாடி, கல்சுரல்ஸ் வச்சாங்க. அப்போது…” என்றான் மனோகர்.
No comments yet.