பாகம் 13,14

Vaishnavi Vijayaraghavan | 04 Jun 2026 | Share

பாகம் -13

“அப்படின்னா, இந்த ஒரு வருஷமா எப்படி நாம இருக்க போறோமோ அதேபோல இந்த வாழ்க்கை பூராவும் இருக்கலாம். இதனால உங்க குடும்பத்துக்கும் எங்க குடும்பத்துக்கும் வருத்தம் இருக்காது. குழந்தைக்கும் அப்பா அம்மா அப்படின்னு ரெண்டு பேரோட அன்பும் பாசமும் கிடைக்கும்” என்றாள் வசுந்தரா.

ஒரு நிமிடம் யோசித்து விட்டு. “எனக்கு கொஞ்சம் டைம் கொடுங்க இத பத்தி யோசிச்சு சொல்றேன்” என்றான் ஆதித்யா.

“ஓகே ஆதி, டேக் யுவர் டைம். இந்த இரண்டு உதவியில ஏதாவது ஒரு உதவி நீங்க எனக்கு செஞ்சே ஆகணும். அதுக்கு நீங்க ஒத்துக்கிட்டீங்கனா தான் நான் குழந்தை பெத்துக்க சம்மதிப்பேன். இல்லன்னா குழந்தை பெற்றுக்கொள்வதற்கு முன்னாடியே டைவர்ஸ் கொடுத்துடறேன்” என்று சொல்லிவிட்டு வீட்டை அடைந்ததால் மெதுவாக இறங்கி நடந்தாள்.

மகேஸ்வரி வேகமாக வந்து தன் மருமகளை கையைப் பிடித்து உள்ளே அழைத்துச் சென்றார்.

“இப்ப எப்படிம்மா இருக்க?”

“பரவாயில்லை அத்தை. என்னை மன்னிச்சிடுங்க”

“எதுக்குமா?”

“நேத்து உங்க கிட்ட சாப்பிட்டேன் என்று பொய் சொன்னதுக்கு”

“உன் மேல வருத்தம் தான். ஆனா உன் நிலைமையை புரிஞ்சுக்கணும் இல்ல நான்?”

கண்கள் கலங்க, “உண்மையிலேயே உங்கள மாதிரி ஒரு அம்மா கிடைக்க உங்க பசங்க கொடுத்து வச்சிருக்காங்க” என்றாள் தன் அம்மாவை நினைவில் வைத்துக் கொண்டு.

“நீயும் என் பொண்ணு தான் மா” என்று சொல்லி அவளை சோஃபாவில் அமர வைத்து விட்டு பின்னர் கிச்சனுக்கு சென்று ஒரு தட்டில் மூன்று இட்லி வைத்து சாம்பார் உடன் எடுத்து வந்து தன் மருமகளின் பக்கத்தில் அமர்ந்து அவரே ஊட்டிவிட்டார்.

‘நீ என்ன ஊட்டிவிடவா முடியும்’ என்று வாசுதேவன் சொன்னதை நினைத்துக் கொண்டே தன் மனைவியை பார்த்து ஸ்மைல் செய்தார். பின்னர் தன் மருமகளை பார்த்து 

“இப்போ பரவாயில்லையா மா?” என்றார்.

“நல்லா இருக்கேன் மாமா. சாரி, உங்க எல்லாருக்கும் தொல்லை கொடுத்திட்டேன்”

“வசுந்தரா, இப்படி எல்லாம் யோசிக்காத மா. நாங்க எல்லாரும் உன் ஃபேமிலி மா. உனக்கு எதாவது கஷ்டம்னா அதை முதல்ல எங்க எல்லார் கூடேவும் ஷேர் பண்ணு. அதிலேயே பாதி கவலை குறைந்துவிடும். அதுக்கப்புறம் ஏதோ எங்களுக்கு தெரிந்த வகையில் அதற்கு ஒரு தீர்வு சொல்லுவோம் அதனால முழுசா இல்லைன்னாலும் முக்கால்வாசி கவலை தீரும்”

“ஓகே மாமா” என்று சொன்னாலும் மனதிற்குள் இந்த அக்ரிமெண்ட் விஷயத்தினாலும் தன்னுடைய அம்மா அவளுக்கு செய்த துரோகத்தினாலும் தான் அவள் இவ்வாறு இருக்கிறாள் என்று சொல்ல முடியாமல் வருந்தினாள்.

“உங்க அப்பாக்கு நெக்ஸ்ட் வீக் ஆபரேஷன்னு தெரியும் மா. அதனால நீ கவலையா இருக்கின்றதும் புரியுது. ஆனா இந்த காலத்தில் ஆபரேஷன் பத்தி பயப்படனும்னு அவசியம் இல்லமா. உங்க அப்பா சீக்கிரமா நல்லா ஆயிடுவாரு” என்றார் மகேஸ்வரி.

“சரிங்க அத்தை”

அவள் சாப்பிட்டு முடித்தவுடன், 

“ஆதி ரூம்க்கு கூட்டிக்கிட்டு போய் ரெஸ்ட் எடுக்க வைடா” என்றார் மகேஸ்வரி.

அம்மா அப்படி சொன்னதால், வேறு வழி இன்றி அவள் கையைப் பிடித்து அழைத்துச் சென்றான் ஆதித்யா. தன் மாமனார் மாமியார் பார்க்கிறார்களே என்பதால் அவளும் அவன் கையைப் பிடித்துக் கொண்டு படியேறி ரூமிற்கு சென்றாள்.

ரூமுக்குள் சென்றதும் கதவை சாற்றினான் ஆதித்யா.

உடனே அவன் கையை விடுத்து மெதுவாக தாங்கி தாங்கி நடந்தாள் வசுந்தரா. 

வீக்காக இருப்பதால் விழப்போனவளை தாங்கிப் பிடித்தான் ஆதித்யா.

அவனுடைய ஒரு கை அவள் இடுப்பிலிருந்து. அவளுக்கு உடம்பெல்லாம் கூசியது. 

கட்டிலை பிடித்துக் கொண்டவள், “இட்ஸ் ஓகே ஐ கேன் மேனேஜ் ப்ளீஸ் லீவ் இட் ஆதி” என்றாள். (நான் பார்த்து கொள்கிறேன் நீங்க விடுங்க.) 

“உடனே கையை எடுத்தவன். நீங்க ரெஸ்ட் எடுங்க வசு. நான் கம்பெனிக்கு கிளம்புறேன்”

“ஓகே” என்றாள்.

வெளியே செல்ல நடந்தவன். திரும்ப வந்து

“இன்னைக்கு நீங்க உங்க அப்பாவ பார்க்க போக வேண்டாம். உங்களுக்கு உடம்பு சரியானதும் நாளைக்கு போய் பாருங்க. இன்னைக்கு ஃபோன் பண்ணி பேசிக்கோங்க.

நாளைக்கு கூட கால் டாக்ஸி ஆட்டோவில் எல்லாம் போக வேண்டாம். வீட்டுல இன்னும் ரெண்டு கார் இருக்கு. டிரைவர் இருக்காங்க. சோ நீங்க கார்லே போகலாம்”

அமைதியாக இருந்தாள் வசுந்தரா.  

“இல்ல உங்களுக்கு இன்னைக்கே உங்க அப்பாவ பார்க்கணும்னு இருந்தா, ஈவினிங் மேல கார் எடுத்துட்டு போயிட்டு வாங்க” என்றான்.

எதற்கும் பதில் இல்லை அமைதியாக இருந்தாள்.

“ஓகே நான் கிளம்புறேன். அப்புறம் இன்னொரு விஷயம். என் மேல இருக்கிற கோபத்துல தயவு செஞ்சு சாப்பாடு சாப்பிடாம இருக்காதீங்க”

“நான்தான் சொன்னேனே உங்க மேல எனக்கு கோபம் இல்லைன்னு”

“சரி, உங்க அம்மா மேல இருக்கிற கோபத்தினாலேயும் சாப்பிடாம உங்க உடம்பை கெடுத்துக்காதீங்க”

“சரி” என்று தலை அசைத்தாள்.

“ஒன் மினிட். டாக்டர் கொடுத்த மாத்திரையும் மருந்தும் காரிலேயே வைத்துவிட்டேன், இருங்க எடுத்துகிட்டு வரேன்”

“இல்ல பரவாயில்ல, நீங்க செக்கியூரிட்டி கிட்ட கொடுத்திட்டு கிளம்புங்க நான் வாங்கிக்கிறேன்”

அதற்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் அமைதியாக கீழே இறங்கினான் ஆதித்யா.

ஆதித்யாவின் காதில் கேட்கும் படி வாசுதேவன் பேசினார்.

“இன்னைக்கு உன் பெரிய பையனுக்கு எதுவும் வேலை இல்லை கம்பெனியில, அதனால நம்ம மருமகள கூட இருந்து கவனிச்சு பாத்துக்க சொல்லு” என்றார்.

அப்போது நடந்து வெளியே சென்று காரை திறந்தான்.

“இவ்வளவு சொல்லியும் காதுல வாங்காம கார்ல ஏறுகிறான் பார் உன் பையன்” என்றார் வாசுதேவன் கோபமாக.

“இருங்க, ஏங்க கோபப்படுறீங்க. அவன் கம்பெனிக்கு போகல”

“அது எப்படி அவ்வளவு உறுதியா சொல்ற?”

“நான் அவனோட அம்மாங்க. எனக்கு தெரியும்”

“சும்மா பில்டப் பண்ணாம விஷயத்தை சொல்லு”

“கம்பெனிக்கு போகும் போது இந்த டிரஸ் போட மாட்டான். அதுவும் இல்லாம ஷூ போடாம கம்பெனிக்கு போக மாட்டான். அதனாலதான் சொல்றேன்”

மகேஸ்வரி சொல்லிக் கொண்டிருக்கும் போதே காரில் இருந்து மாத்திரை மருந்துகளை எடுத்துக்கொண்டு வீட்டிற்குள் வந்தான் ஆதித்யா.

“சொன்னேன் இல்ல?” என்றார் மகேஸ்வரி.

“சரிம்மா, நான் ஒத்துக்குறேன்  நீ ஜீனியஸ் தான்” என்றார் வாசுதேவன்.

“ஜீனியஸ் எல்லாம் நான் சொல்ல வரல. நம்ம பையனை நீங்க புரிஞ்சுகிட்டத விட நான் அதிகமா புரிஞ்சு வச்சிருக்கேன்னு சொல்ல வந்தேன்” என்றார் மகேஸ்வரி.

பாகம் 14 

“சரி சரி நான் கிளம்புறேன், டைம் ஆச்சு. மத்தியானம் அந்த பொண்ணு வேணாம்னு சொன்னாலும் விடாதே. காலையில மாதிரியே சாப்பாட்ட ஊட்டி விட்டுடு”

“சரிங்க” என்ற சொல்லி சிரித்தார் மகேஸ்வரி.

மருந்தை எடுத்துக்கொண்டு ஆதித்யா படியேறியவுடன்.

“அந்த பொண்ணு வசுந்தராவுக்கு நம்மள எல்லாம் அடையாளம் தெரியல, இல்லீங்க?”

“அந்த பொண்ணு மட்டும் அன்னைக்கு இல்லன்னா, நம்ம யாருமே இன்னைக்கு உயிரோடு இருந்திருக்க மாட்டோம்”

“முதல்ல ஆதி கிட்ட சொல்லனும்ங்க”

“இல்ல, சொல்லக்கூடாது. ஏற்கனவே அவன் காதல் தோல்வியில இருக்கான். இப்ப இந்த விஷயம் தெரிஞ்சதுன்னா அந்த பொண்ணு மேல மதிப்பு மரியாதையும் வருமே தவிர காதல் வராது. மனைவியான அப்புறமா ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் ஒரு நாள் அவனுக்கு அவ மேல காதல் வரும். அதுக்கு அப்புறமா அவன் உண்மையை தெரிஞ்சுகிட்டா போதும்”

“ஆமாங்க நீங்க சொல்றதும் சரிதான்”

தன் கணவர் சென்றவுடன் அன்றைய நாளை நினைக்க தொடங்கினார் மகேஸ்வரி.

மூன்று வருடத்திற்கு முன்னர் குலதெய்வம் கோவிலுக்காக ஊருக்கு காரில் சென்றனர் வாசுதேவனின் குடும்பத்தினர்.

பூஜை முடித்துவிட்டு திரும்ப வரும்போது எதிர்பாராத விதமாக ஒரு லாரி வர காரை ஓட்டிக் கொண்டிருந்த ஆதித்யா டிவைடரில் இடிக்க கார் இரு முறை பிரண்டு கார் கவிழ்ந்து நின்றது. அந்த பயங்கரமான ஆக்சிடென்ட்டிலும் நல்ல வேளையாக கடவுள் கருணையால் யாருடைய உயிருக்கும் ஆபத்து இல்லை.

மிட் நைட் என்பதால் அந்த வழியாக யாரும் செல்லவில்லை. அரை மணி நேரமாக ஃபோனை தேடியும் யாருக்கும் கிடைக்கவில்லை. அனைவருக்கும் அடிபட்டு ரத்தம் கசிந்தது. அப்போது மறுநாள் பரீட்சைக்காக இரவு நேர கடைசி பஸ்ஸை பிடிக்க வந்தாள் வசுந்தரா. தன் அப்பா பாலமுருகனுடன் பைக்கில் வந்தவள். அனைவருக்கும் அடிபட்டதை பார்த்து பைக்கில் இருந்து இறங்கி ஆம்புலன்ஸுக்கு ஃபோன் செய்து அனைவரையும் தன் அப்பாவின் உதவியுடன் ஹாஸ்பிட்டலில் சேர்த்தது மட்டும் இல்லாமல் ரத்தம் கொடுத்து காப்பாற்றினாள்.

வாசுதேவனுக்கும் ஆதித்யாவுக்குமே அதிகமாக அடிபட்டது. அவர்கள் இருவருக்கும் வசுந்தரா தான் ரத்தம் கொடுத்தாள். அர்ஜுனுக்கும் அஸ்வினிக்கும் லேசான சிராய்ப்பு தான். மகேஸ்வரிக்கு கையில் ஃபிராக்சர் ஆனது. ஆதித்யாவும் வாசுதேவனும் ஐசியூ வில் இருந்தனர். மற்றவர்களுக்கு கேஷ்வாலிட்டியில் டிரீட்மெண்ட் நடந்து கொண்டிருந்தது.

வசுந்தரா தன் அப்பாவிடம்.

“அப்பா இயர்லி மார்னிங் ஃபர்ஸ்ட் பஸ்ல என்னை ஏத்தி விட்டுருங்க அப்பா. அதை புடிச்சா தான் என்னால எக்ஸாம் எழுத முடியும்”

“எப்படிமா ரத்தம் வேற கொடுத்து இருக்க, தூங்காம இருக்க அப்படி இருக்கு எப்படிம்மா நீங்க போய் எக்ஸாம் எழுத முடியும்?”

“இல்லப்பா என்னால முடியும் நான் பார்த்துக்கிறேன். நான் நல்லா படிச்சிருக்கேன். என்னால மறுபடியும் ஒரு ஆறு மாசம் செமஸ்டர் எழுதுவதற்கு வெயிட் பண்ண முடியாது. கண்டிப்பா இந்த எக்ஸாம் மிஸ் பண்ண முடியாது பா ப்ளீஸ். ஆறு மாசம் என்னோட கரியர்ல பிரேக் வந்துரும் பா. என்னதான் வந்து எக்ஸாம்ல ஆப்சென்ட்டா இருந்தாலும் அடுத்த வாட்டி எழுதும்போது அது அரியர்ஸ் மாதிரி தான்”

“சரி மா” என்ற சொல்லி பாலமுருகன் வசுந்தராவை பஸ் ஏற்றி விட்டார். 

மறுநாள் வாசுதேவனின் குடும்பம் பாலமுருகனுக்கு நன்றி சொன்னது. அப்போது தான் வசுந்தராவை பற்றி தெரிந்தது. ஆதித்யா மயக்கமாக இருந்ததால் அவன் பாலமுருகனை கூட பார்க்கவில்லை. இரண்டு நாட்களுக்குப் பிறகு ஒரு பெண்ணும் அவளுடைய அப்பாவும் உதவி செய்வதாக மட்டுமே தெரியுமே தவிர அவர்கள் யார் என்று ஆதித்யாவுக்கு தெரியாது.

அதன்பின் தான் ஆதித்யா சைலஜாவை காதலித்தான். காதல் தோல்வியில் குடித்து தன்னையே வருத்திக் கொண்டான். சைலஜாவின் இறப்புக்கும் ஆதித்யாவிற்கும் சம்பந்தம் இருக்கிறது என்று சைலஜாவின் பெற்றோர்கள் கொடுத்த கம்பிளைன்ட்னால் ஜெயிலுக்கு சென்றான். பின்னர் அவன் மேல் எந்த தவறும் இல்லை என்று கோர்ட்டில் நிரூபிக்கப்பட்டதால் விடுதலை செய்யப்பட்டான்.

(ஆசிரியர் குறிப்பு:

ஆதித்யா சைலஜாவின் காதல் கதையை பிறகு விவரமாக கூறுகிறேன். இது மகேஸ்வரியின் கடந்த கால நினைவுகள் என்பதால் மேலோட்டமாக அவருக்குத் தெரிந்த விஷயத்தை மட்டும் கூறியிருக்கிறேன்.)

ரூமிற்கு சென்ற ஆதித்யாவை பார்த்த வசுந்தரா.

“ஏன் நீங்க மறுபடியும் ஏறி வந்தீங்க ஆதி. நீங்க செக்யூரிட்டி கிட்ட குடுத்துட்டு போங்க நான் வாங்கிக்கிறேன்னு சொன்னேன் இல்ல?”

“இல்ல, என்னை எங்க அப்பா இன்னைக்கு கம்பெனிக்கு வர வேணாம்னு சொல்லிட்டாரு”

“எதுக்கு”

“உங்கள பாத்துக்கறதுக்காக”

“சாரி, என்னால உங்களால கம்பெனிக்கு போக முடியாம ஆயிடுச்சு”

“இட்ஸ் ஓகே, போனாலும் எனக்கு பெரிய வேலை கிடையாது”

“ஏன், என்ன ஆச்சு?”

“கல்யாணமான மூணு மாசம் கழிச்சு தான் எனக்கு என்னோட சிஇஓ பதவியை கொடுப்பேன், எங்க அப்பா சொல்லிட்டாரு”

“ஏன் எதனால”

“உங்களுக்கே உடம்பு சரியில்லை, நீங்க சரி ஆகுங்க அப்புறமா நான் உங்களுக்கு சொல்றேன்” என்று சொல்லும்போதே அவன் கண்கள் கலங்கியதால் அவனை என்னவென்று கேட்ட துன்புறுத்தக் கூடாது என்று அமைதியாக இருந்து விட்டாள் வசுந்தரா.

மாத்திரையும் பாட்டிலில் தண்ணீரும் எடுத்து வந்து அவளிடம் கொடுத்தான் ஆதித்யா.

“எனக்கு ரொம்ப கில்டி பீலிங்கா இருக்கு இது எல்லாம் எனக்கு பண்ணாதீங்க ப்ளீஸ்”

“எனக்கு உடம்பு முடியலன்னா நீங்க செய்ய மாட்டீங்களா?”

“அது வந்து”

“செய்வீங்க இல்ல? அதே மாதிரி தான் இதுவும்”

“ஓகே தேங்க் யூ”

“நமக்குள்ள தேங்க்ஸ் எல்லாம் எதுக்கு”

சட்டென்ற அவனை நிமிர்ந்து பார்த்தாள் வசுந்தரா.

“நான் உங்களை ஃபிரண்டா நினைக்கிறேன், அதனாலதான் அப்படி சொன்னேன்”

“ஓகே, நானும் அப்படியே நினைக்கிறேன். இதுக்கு மேல நீங்க வாங்க போங்க எல்லாம் வேண்டாம். நீ வா போன்னே சொல்லுங்க”

“அப்படின்னா நீங்களும் அப்படியே சொல்லுங்க”

“இல்ல, அத்தை மாமா யாராவது தப்பா நினைப்பாங்க”

“ஓகே நம்ம தனியா இருக்கும் போது அப்படி கூப்பிடுங்க. மத்தவங்க முன்னாடி உங்களுக்கு எப்படி கூப்பிடனும் தோணுதோ அப்படி கூப்பிடுங்க”

“ஓகே ஆதி”

ஸ்மைல் செய்தான் ஆதித்யா.

இதுதான் முதல் முறை அவன் ஸ்மைல் செய்ததை பார்த்தாள் வசுந்தரா.  

உண்மையிலேயே மிகவும் அழகாக இருந்தான். பொதுவாக பெண்களை தான் அழகாக இருக்கிறார்கள் என்று வர்ணிப்பார்கள். ஆண்களை கம்பீரமாக இருக்கிறான் என்று வர்ணிப்பார்கள். இன்று நம் கதாநாயகிக்கு நம்முடைய கதாநாயகன் மேல் ஒரு பாசம் மிகுந்த ஈர்ப்பு ஏற்பட்டது.

அவனையே பார்த்து கொண்டிருந்தாள் வசுந்தரா .

இந்த episode பிடிச்சிருந்தா எழுத்தாளரை உற்சாகப்படுத்துங்க!!
இப்போதே உற்சாகப்படுத்துங்கள்

இந்த படைப்பை மதிப்பிட விரும்புகிறீர்களா?

Click on a star to rate it!

No votes so far! Be the first to rate this post.

    No comments yet.