பாகம் 5,6

Vaishnavi Vijayaraghavan | 03 Jun 2026 | Share

பாகம் 5 

“அண்ணி அப்புறமா என் ரூமை பார்க்கலாம், வாங்க முதல்ல உங்க ரூம்ல உட்கார வைத்துவிடுகிறேன்” என்று சொல்லி அவள் பதிலுக்கு கூட காத்திராமல் அவள் கையை பிடித்து இழுத்துக் கொண்டு வேகமாக சென்று ஆதித்யாவின் ரூமில் இருந்த பெட்டில் அமர வைத்தாள் அஸ்வினி.

‘யாருக்கு இப்படி பயப்படுகிறாள்? ஆதித்யாவிற்கா அல்லது அவளுடைய அம்மாவிற்கா?’ என்று நினைத்துக் கொண்டாள் வசுந்திரா.

அப்போது ஆதித்யாவின் பின்னாலேயே மகேஸ்வரி ஒரு வெள்ளி கிண்ணத்தில் பால் பழம் எடுத்து வந்தார்.

மகேஸ்வரியே இருவருக்கும் பால் மற்றும் பழத்தினை ஸ்பூனில்  ஊட்டி விட்டார்.

இருவருக்கும் ஃபர்ஸ்ட் நைட் ஒரு ஃபைவ் ஸ்டார் ஹோட்டலில் அரேஞ்ச் செய்திருந்தார்கள்.

அனைவரும் ஒன்றாக அமர்ந்து டின்னர் சாப்பிட்டனர்.

பிறகு தன் ரூமிற்கு செல்ல படிக்கட்டில் ஏறிய தன் மகன் ஆதித்யாவின் அருகில் நடந்து சென்று.

“ஆதி” என்றார் வாசுதேவன் மிக மெதுவாக.

பதில் பேசாமல் திரும்பி அவரைப் பார்த்தான்.

“இன்னைக்கு நைட்டு ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்ல அரேஞ்ச் பண்ணி இருக்கோம். நீயும் வசந்தராவும் அங்க போய் ஸ்டே பண்ணிக்கோங்க”

தன் அம்மாவை பார்த்து 

“ஏன் மா?” என்றான் ஆதித்யா.

“ஆதி அது வந்து, எப்படி சொல்றதுன்னு தெரியல. உன் ஃபிரண்ட் விக்னேஷ் உன் கிட்ட சொல்லுவான்” என்றார் மகேஸ்வரி மிகவும் மெதுவாக.

தன் போனை எடுத்து உடனே தன் ஃபிரண்டு விக்னேஷுக்கு கால் செய்தான் ஆதித்யா.

சற்று தள்ளி நின்று அவனிடம் பேசினான் ஆதித்யா.

“எதுக்குடா இப்போ வெளியே அரேஞ்ச் பண்ணி இருக்காங்க?”

“என்ன அரேஞ்ச் பண்ணி இருக்காங்க, டின்னரா?”

“ஏய், இப்ப மட்டும் நீ நேர்ல இருந்த உன் மூஞ்சி மொகரையெல்லாம் பேத்துருவேன்”

“சரி சரி கோபப்படாதே. உனக்கு தம்பி தங்கச்சி எல்லாம் இருக்காங்க இல்ல?”

“அதுக்கு”

“அவங்கள ஒரே வீட்ல வெச்சிக்கிட்டு, எப்படிடா உனக்கு ஒரு ரூம்ல சாந்தி முகூர்த்தம் நடத்துறது?”

“ஏய், நான் தான் அவளை தொடவே மாட்டேன்னு சொல்றேன்ல?”

“அது மத்தவங்களுக்கு தெரியாது இல்ல? அவ்வளவு ஏன் உன்னை கல்யாணம் பண்ணிட்டு வந்து இருக்கவங்களுக்கே தெரியாது இல்ல?”

“மிச்”

“சரி சரி, உனக்கு இது நல்ல விஷயம் தான்”

“எதை சொல்ற?”

“ஆமா, நீ அந்த பொண்ணு கிட்ட இதெல்லாம் சொல்ல போற. அவ எப்படி ரியாக்ட் பண்ணுவான்னு தெரியாது. திட்டலாம் அழலாம் கத்தலாம். சோ நீ வீட்ல இருந்தா எல்லாருக்கும் தெரிஞ்சிரும். அதுவே நீ ஹோட்டலுக்கு போயிட்டானா. மோஸ்ட்லி எல்லா  ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்ல சவுண்ட் ப்ரூஃப் ரூம் தருவாங்களாம். அதனால சொன்னேன்”

“ஓகே. பை, நாளைக்கு பாக்கலாம்” 

“பை மச்சி. ஹாப்பி ஃபர்ஸ்ட் நைட் டா” என்று சொல்லி சிரித்தான் விக்னேஷ்.

“உன்னை சத்தியமா கொன்னுடுவேன்” என்று கோபமாக திட்டி விட்டு ஃபோனை வைத்தான் ஆதித்யா.

“சரி மா, நாங்க கிளம்புறோம்”

அவர்கள் மெதுவாக பேசியதால் எங்கே கிளம்பறோம் என்று ஆதித்யா சொல்கிறான் என்று புரியாமல் திகைத்தாள் வசுந்திரா.

“சாப்பிட்டீங்களா அர்ஜுன், அஸ்வினி? போய் படுங்க” என்றார் மகேஸ்வரி.

“ஓகே அம்மா” என்று சொல்லிவிட்டு அவர்கள் இருவரும் தங்கள் ரூமிற்கு சென்றனர்.

மகேஸ்வரி தன் மருமகளை கட்டி அணைத்தபடி.

“நீயும் என் பொண்ணு தான் மா. நாளை காலையில பார்க்கலாம். சந்தோஷமா இருங்க ரெண்டு பேரும்” என்று வாழ்த்துக்கள் சொல்லி அனுப்பி வைத்தார்.

காரில் அந்த ஃபைவ் ஸ்டார் ஹோட்டலுக்கு சென்றனர்.

அங்கே வரவேற்பு பலமாக இருந்தது. சினிமா ஷூட்டிங்கிற்கு அரேஞ்ச் செய்தது போல ஃபர்ஸ்ட் நைட் ரூம் மிகச் சிறப்பாக அரேஞ்ச் செய்யப்பட்டு இருந்தது. அவ்வளவு அழகாக அடுக்கி வைக்கப்பட்டு இருந்த பூக்கள் நிறைந்த பெட்டில் அமர்ந்து கூட அதை கலைக்க மனம் வரவில்லை வசுந்தராவிற்கு.

சற்று தள்ளி இருந்த சோஃபாவில் அமர்ந்த படி அந்த பெட்டையும் அலங்காரத்தையும் பார்த்துக் கொண்டிருந்தாள். 

பெருமூச்சு விட்டபடி ‘இதுக்கெல்லாம் எவ்வளவு ஆச்சோ தெரியல?’ என்று நினைத்துக் கொண்டாள்.

அப்போது குளித்துவிட்டு வெளியே வந்தான் ஆதித்யா.

‘அச்சச்சோ இவன் ஃபர்ஸ்ட் நைட்டுக்கு ரெடியாயிட்டான் போல?’ என்ற நினைத்துக் கொண்டாள்.

“நீங்க வேணும்னா குளிச்சிட்டு வாங்க” என்றால் வசுந்தராவை பார்த்து.

“இல்ல நான் டிரஸ் எதுவும் கொண்டு வரல”

“ஒன் மினிட்” என்று சொல்லி அங்கிருந்த ஃபோனில் ஹோட்டல் மேனேஜருக்கு கால் செய்தான்.

“நைட் டிரஸ், ஓகே வா?”

சரி என்பது போல தலையசைத்தாள்.

“ஹலோ மேனேஜர். ஐ நீட் தி வுமன் நைட்ரஸ் இமீடியட்லி”

…..

“என்ன சைஸ்?” என்றான் வசுந்தராவை பார்த்து.

‘எதற்கு கேட்கிறான் என்று புரியாமல் நம்பர் சொல்வதா அல்லது மீடியம் லார்ஜ் என்று சொல்வதா?’ என்று ஒரு நிமிஷம் யோசித்தாள்.

பிறகு “மீடியம்” என்றாள்.

“சைஸ் மீடியம்” என்று சொல்லி ஃபோனை வைத்தான்.

பிறகு 15 நிமிடத்தில் நைட் டிரெஸ் கொண்டு வந்து கொடுத்தார் ஒரு வெயிட்டர்.

அதை வாங்கிக் கொண்டு குளிக்கச் சென்றாள்.

குளிக்க சென்றவளுக்கு கடுப்பாக இருந்தது.

“நைட்ரஸ்னா நைட்ரஸ் மட்டும் வாங்கி கொடுத்திருக்கான். இன்னர்ஸ் க்கு எல்லாம் என்ன பண்றது?” என்று முணுமுணுத்துக் கொண்டே குளித்துவிட்டு அவள் ஏற்கனவே போட்டு இருந்ததை போட்டுக் கொண்டாள். அதற்கு மேலே நைட்ரஸ் போட்டுக் கொண்டு வெளியே வந்தாள்.

வெளியே வந்து பார்த்தவள் அதிர்ச்சியாக நின்றாள்.

பெட்டில் இருந்த பூக்களை எல்லாம் கீழே தள்ளிவிட்டு விட்டு பெட்டில் அமர்ந்து தன் லேப்டாப்பை மடியில் வைத்து கொண்டு ஏதோ வேலை செய்து கொண்டிருந்தான் ஆதித்யா.

குளித்துவிட்டு வந்து அவளை நிமிர்ந்து கூட அவன் பார்க்கவில்லை. வேலையில் மும்மறமாக இருந்தான்.

சோஃபாவில் அமர்ந்து கொண்டு தன் ஃபோனை பார்த்துக் கொண்டிருந்தாள் வசுந்தரா.

அப்போதுதான் அவளுடைய அப்பா கேட்டது ஞாபகம் வந்தது. தன் ஃபோனில் அவள் ஆதித்தியாவுடன்  எடுத்துக் கொண்ட செல்ஃபியை அவளுடைய அப்பாவிற்கு அனுப்பி வைத்தாள். 

பிறகு தன் தோழி ஷகிலாவிற்கு அனுப்பினாள்.

அவள் உடனே கால் செய்தாள்.

கால் வந்தவுடன் அவளை நிமிர்ந்து பார்த்தான் ஆதித்யா.

“என்னோட ஃபிரண்டு கால் பண்றா”

“ஓகே, தூங்கிடாதீங்க உங்க கிட்ட நான் கொஞ்சம் பேசணும். உங்க ஃபிரண்டு கிட்ட பேசிட்டு வாங்க. அதுக்குள்ள என்னோட வேலைய நான் முடிச்சிடுறேன்” என்றான் ஆதித்யா.

பாகம் -6

‘எங்க போய் பேச சொல்றான்? ரூமுக்கு வெளியே போக சொல்றானா?’ என்று நினைத்துக் கொண்டே எழுந்து நடந்தாள்.

பின்னர் விசாலமான அந்த ரூமின் கோடியில் ஒரு ஈசி சேர் போடப்பட்டு இருந்தது. அதில் அமர்ந்து கொண்டு சத்தமாக பேசினால் கூட ஆதித்யாவிற்கு கேட்க வாய்ப்பு இல்லை ஏனென்றால் அவ்வளவு பெரிய ரூம் அது. அதுவும் இல்லாமல் அவன் காதில் ஹெட் ஃபோன் போட்டு கொண்டு லேப்டாப்பில் ஏதோ வேலை செய்து கொண்டிருந்தான்.

“ஹலோ வசு”

“ஹலோ ஷகீலா”

“நீ போட்டோ அனுப்பி இருக்கியே அவனா உன் புருஷன்?”

“ஆமாண்டி தாலி கட்டும் போது தான் நானே பார்த்தேன். அதான் கன்ஃபார்மா உன்கிட்ட கேட்கலாம்னு ஃபோட்டோ அனுப்பினேன்” என்று.

“அவனே தாண்டி. நீ ஏண்டி இப்படி பண்ண?”

“என்னை என்ன பண்ண சொல்ற?”

“ஏய், அவன் ஒரு கொலைகாரன்டி”

“தெரியும்”

“என்னோட அக்கா ஷைலஜாவை கொன்ற மாதிரி உன்னையும் கொன்னுடுவான்”

“என் தலையில அப்படித்தான் எழுதி இருந்தது, என்றால் யாராலும் மாற்ற முடியும்?”

“லூசு மாதிரி பேசாதடி”

“ஷகிலா, அவன் தானா இதுன்னு தெரிஞ்சுக்க தான் உனக்கு ஃபோட்டோவ அனுப்பினேன்”

“அதான் தெரிஞ்சுகிட்ட இல்ல. அவன விட்டுட்டு வந்துடு”

“இல்ல ஷகிலா. நான் எங்க அப்பா நல்லா இருக்கணும்ன்றதுக்காக தான் இவன கல்யாணம் பண்ணிக்கிட்டேன். எங்க அப்பாவுக்கு ஆபரேஷன் நல்லபடியா முடியணும். அதுக்கப்புறம் நானே இவன் கிட்ட இருந்து டைவர்ஸ் வாங்கிடுவேன்”

“அதுக்குள்ள உன்ன கொன்னுட்டான்னா என்ன பண்ணுவ?”

“செத்துடுவேன்”

“மறுபடி லூசு மாதிரி பேசாத”

“சரிடி. நீ டென்ஷன் ஆகாத நான் பார்த்துக்கிறேன். நீ போய் தூங்கு”

“வசு , ப்ளீஸ், நான் சொல்றத கொஞ்சம் கேளு”

பெருமூச்சு விட்டபடி “குட் நைட் ஷகிலா” என்றாள் வசுந்தரா.

அதற்கு மேல் எதுவும் பேச முடியாமல் “பை, டேக் கேர்” என்று சொல்லிவிட்டு ஃபோனை வைத்து விட்டாள் ஷகிலா.

பிறகு சோஃபாவில் வந்து அமர்ந்து ஃபோனை பார்த்துக் கொண்டிருந்தாள் வசுந்ரா.

வெகு நேரமாக வேலையே செய்து கொண்டிருந்தான் ஆதித்யா.

சோஃபாவிலேயே படுத்து தூங்கி விட்டாள் வசுந்தரா.

வேலையை முடித்துவிட்டு அவளைப் பார்த்தவன் நன்றாக தூங்கி விட்டாள் என்று தெரிந்தது.

“அடச்சே முக்கியமான விஷயம் பேசணும்னு நினைச்சேனே. இந்த வேலையை நான் அப்புறம் செஞ்சிருக்கணும்” என்று தன்னிடமே சொல்லிக் கொண்டான்.

சோஃபாவில் படுத்து இருந்ததால் அவள் எதுவும் போர்த்திக் கொள்ளவில்லை. குளிரில் லேசாக அவளுடைய உடம்பு நடுங்கியது.

கட்டிலின் மேல் இருந்த ஒரு போர்வையை எடுத்து அவளுக்கு போர்த்தி விட்டான் ஆதித்யா.

பின்னர் அவன் கட்டிலில் வந்து படுத்து உறங்கினான்.

காலை 6:00 மணிக்கு கண்விழித்தவள் தான் சோஃபாவிலேயே தூங்கி விட்டோம் என்று தெரிந்தது. 

‘அச்சச்சோ என்னமோ பேசணும்னு சொன்னானே. நம்ம தூங்கிட்டு இருக்கோமே?’ என்று நினைத்துக் கொண்டாள்.

குளித்துவிட்டு என்ன போடுவது என்று தெரியவில்லை. குளிக்காமல் வீட்டிற்கு செல்லவும் மனமில்லை. என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருந்தவளுக்கு காலிங் பெல் சத்தம் கேட்டது.

வெகு நேரமாக வேலை செய்துவிட்டு தூங்கியதால் அவன் காலிங் பெல் சத்தத்திற்கு எழுந்திருக்கவில்லை. வசுந்தராவே போய் கதவை திறந்தாள்.

“மேடம், திஸ் இஸ் ஃபார் யூ” என்று ஒரு பெண் வெயிட்ரஸ் ஒரு பேகை கொடுத்தார்.

“தேங்க்யூ சோ மச்” என்று சொல்லிவிட்டு வாங்கிக்கொண்டு உள்ளே வந்து அதைத் திறந்து பார்த்தாள்.

மீடியம் சைஸ் சுடிதார் மற்றும் அதற்கு தேவையான இன்னர்ஸ் டவல் சோப் ஷாம்பூ பேஸ்ட் பிரஷ் சீப்பு மற்றும் சில மேக்கப் பொருட்களும் இருந்தது.

இந்த ஹோட்டலில் காம்ப்ளிமெண்ட்டாக இதெல்லாம் தருவாங்களோ என்று நினைத்துக் கொண்டே அதை எடுத்துக் கொண்டு குளித்துவிட்டு ரெடி ஆகி ஆதித்யா எழுந்திருக்கும் வரை அமைதியாக அமர்ந்திருந்தாள். ஆனால் அவளுக்கு மிகவும் பசி எடுத்தது. எப்போதுமே காஃபி முதலில் குடித்து விடுவாள். ஆனால் இப்போது என்ன செய்வது என்று தெரியாமல் அமைதியாக அமர்ந்திருந்தாள்.

அப்போது காலிங் பெல் சத்தம் மறுபடியும் கேட்டது.

இப்பொழுது ஆதித்யாவின் தூக்கம் லேசாக கலைந்தது. திரும்பிப் படுத்தான். 

மறுபடியும் கதவை திறந்தவள் அங்கே அவளுக்காக காஃபி டிபன் எடுத்து வந்திருந்தனர்.

தேங்க்யூ சோ மச் என்று சொல்லி அதை வாங்கிக் கொண்டு உள்ளே வந்தாள்.

ஆதித்யா தூங்கிக் கொண்டிருந்தான்.

சாப்பாட்டை கண் முன்னே வைத்துவிட்டு. அதுவும் காஃபியை கண்முன்னே வைத்து கொண்டு அதை குடிக்காமல் அவளால் இருக்க முடியவில்லை.

அதனால் முதலில் காஃபியை எடுத்து குடித்தாள்.

எழுந்து அமர்ந்தான் ஆதித்யா.

“ரொம்ப பசி எடுத்துச்சா?”

அவன் பேசியதை கேட்ட பிறகு தான் அவன் விழித்தது தெரிந்து திரும்பி அவனைப் பார்த்தாள் வசுந்ரா.

“இல்ல, அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல. காஃபி ஆரிட போதுன்னு” என்று இழுத்தாள்.

“இட்ஸ் ஓகே, யூ ஹவ் இட். நான் போய் குளிச்சிட்டு வரேன்” என்று சொல்லி விட்டு பாத்ரூமுக்கு சென்றான்.

அவன் வருவதற்குள் வேகமாக காஃபியை குடித்து முடித்தாள். ‘அப்பாடா, இது மத்தியானம் வரைக்கும் தாங்கும். டிபன் கூட சாப்பிடணும்னு அவசியம் இல்ல. ஃபைவ் ஸ்டார் ஹோட்டல் காஃபி கூட சூப்பரா தான் இருக்கு’ என்று தன்னிடமே சொல்லிக் கொண்டாள். 

குளித்துவிட்டு வந்தவன். ஏற்கனவே கம்போர்ட்டில் அங்கு இருந்த டிரஸ் எடுத்து போட்டுக் கொண்டான்.

‘ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்ல கூட கப்போர்ட்ல டிரஸ் வச்சிருக்கான்’ என்று நினைத்துக் கொண்டாள்.

அப்போது கப்போர்ட்டில் ஒரு தட்டில் என்னமோ இருந்தது. அவன் ட்ரெஸ்ஸிங் ஸ்டாண்ட் பின்னால் சென்று டிரஸ் மாத்திக் கொண்டிருந்தபோது. அந்த கப்போர்ட்டில் என்ன இருக்கிறது என்று பார்க்க சென்றாள்.

அந்தத் தட்டில் சில பழங்கள், காண்டம், ஆண் பெண் என இருவருக்கும் செக்ஸியான இன்னர்ஸ் டியோடரெண்ட் மற்றும் நிறைய பொருட்கள் இருந்தது.

ஆதித்யா டிரஸ் செய்து விட்டு வெளியே வருவதை பார்த்து கப்போர்டை மூடி விட்டு வந்து சோஃபாவில் அமர்ந்து கொண்டாள்.

“நான் நேத்து உங்க கிட்ட பேசணும்னு நெனச்சேன். ஆனா நான் வேலை முடிச்சுட்டு வரதுக்குள்ள, நீங்க தூங்கிட்டிங்க” என்றான் ஆதித்யா.

“சாரி, ஃபோன் பார்த்துட்டு இருந்தேன். அப்படி தெரியாமல் தூங்கிட்டேன்”

“இட்ஸ் ஓகே நோ இஸ்யூஸ். இப்போ பேசலாமா?”

“ஓகே சொல்லுங்க”

“ஒரு வருஷம் முடிந்ததும், எனக்கு டைவர்ஸ் கொடுத்திடுவீங்க இல்ல?” என்றான் அதித்யா.

அதிர்ச்சியாக அவனைப் பார்த்தாள் வசுந்ரா.

இந்த episode பிடிச்சிருந்தா எழுத்தாளரை உற்சாகப்படுத்துங்க!!
இப்போதே உற்சாகப்படுத்துங்கள்

இந்த படைப்பை மதிப்பிட விரும்புகிறீர்களா?

Click on a star to rate it!

No votes so far! Be the first to rate this post.

    No comments yet.