Episode 11

Valanchuli Tamil | 23 May 2026 | Share

அத்தியாயம்-11 

“ஹேய் சித்து”

“ம்ம்ம் சொல்லுங்க”

“நம்ம ஃபர்ஸ்ட் டைம் மீட் பண்ண போறோம்.. என்ன ஒரு எக்சைட்மென்ட் இல்லாம பேசிட்டு இருக்க? எங்க வீட்ல இருந்த சம்மதம் சொல்ல லேட் பண்ணிட்டாங்கன்னு கோவமா? இல்லை என்னை பிடிக்கலையா?” அந்த பக்கம் கேட்ட ஆணின் குரலில் இதழ் நிறைய புன்னகைத்தபடி மெத்தையில் அமர்ந்திருந்தாள் விசித்ரா.. உநாளை விசித்ராவை பெண் பார்க்க வரும் மாப்பிள்ளையுடன்‌ தான் பேசி கொண்டு இருக்கிறாள்..

“அப்படி எல்லாம் இல்லைங்க.. கொஞ்சம் படபடப்பா இருக்கு” என்றாள் 

“எனக்கும் கூட அப்படி தான் இருக்கு.. ஆனாலும் இது கூட பிடிச்சு இருக்கு.. ஆமாம் நாளைக்கு உன் கிட்ட தனியா பேச விடுவாங்களா? இல்லை கல்யாணம் வரைக்கும் பொண்ணு கிட்ட நேரில் பேச கூடாதுன்னு சொல்லிடுவாங்களா உன் கிட்ட உன் முகம் பார்த்து பேசணும்னு ஒரே ஏக்கமா இருக்கு மா” அவன் குரலில் இவள் உருகி கொண்டிருந்தாள்.. 

விசித்ரா உதடு கடித்து தலை குனிந்து அமைதியாக அமர்ந்திருந்தாள்.. 

“ஓய் என்ன நானே தான் பேசுறேன்.. நீ பேசவே மாட்டேங்கறியே?? ஆர் யூ ஓகே உடம்பு ஏதும் சரியில்லையா” அக்கறையாக கேட்டான்..

“அப்படி எல்லாம் இல்லைங்க.. எனக்கு ஒரு மாதிரி கூச்சமா இருக்கு..” நெளிந்து கொண்டே சொன்னாள்.. அந்த பக்கம் மெலிதாக அவன் புன்னகைக்கும் சத்தத்தில் சொக்கி தான் போனாள் இவள்..

“நேரில் பார்க்கவே கூச்சமா? நான் உன் கூட சேர்ந்து நிறைய போட்டோஸ் எடுத்துக்கணும்னு எல்லா பிளான் பண்ணி வச்சிருக்கேன் பார்க்கவே கூச்சப்பட்டால் போட்டோ எல்லாம் எப்படி எடுக்கிறது? நான் தானே மா நீ‌ பதட்டபடாம ஃப்ரீயா இரு.. உன் பிரெண்ட்ஸ் யாராவது உன் வீட்டுக்கு வந்தா எந்த அளவுக்கு ஜாலியா இருப்பியோ அதே மாதிரி ஜாலியா இரு.. நம்ம ஃபர்ஸ்ட் நல்ல ஃப்ரெண்ட்ஸ் அப்புறம் தான் கப்பிள்ஸ்.. ஏற்கனவே சொல்லி இருக்கேன்ல” என்றான்‌ அவன்..

“இருந்தாலும் இதெல்லாம் எல்லா பொண்ணுங்களுக்கும் இருக்குறது தானே..”

“ம்ம் புரியுது.. அந்த தயக்கம் படபடப்பு எல்லாம் ஒன் டைம் ஃபீலிங் எனக்கும் இருக்குது தான்.. ஆனா உன்னை பாக்க போறேன்ங்கற எக்சைட்மென்ட் அதைவிட அதிகமா இருக்கு..‌”, அவன் குரலில் ஆசை கொப்பளித்தது..

சித்ரா வெட்கத்துடன் தலைகுனிந்து சிரித்துக் கொண்டாள் 

“ஆஹா என்ன ஒரே ரகசிய பேச்சா இருக்கே.. யாரு அக்கா மாமாவா??” என்று மீரா மெத்தையில் வந்து விழ திடுக்கிட்ட விசித்ரா திருதிருவென முழித்தாள்..

“உன் முழியே சரியில்ல அப்போ மாமா தான்.. தூக்கம் வருதுன்னு சொல்லிட்டு இங்க வந்து ரொமன்ஸா” என்று மீரா தோளில் இடித்தது..

“சும்மா இரு டி.. அவரு லைன்ல இருக்காரு” என்று பதறியவள் ‘நான் அப்புறம் கூப்பிடுறாங்க” என்ற பதட்டத்துடன் சொன்னாள்..

“ஓகே மா நீ நல்லா தூங்கு… நாளைக்கு பார்க்கலாம் குட் நைட் சித்து” அவன் போனை அணைத்து இருந்தான்.

அனைவருக்கும் விசித்ரா சித்ரா என்றால் அவனுக்கு மட்டும் சித்து.. அவனின் இந்த செல்ல அழைப்பில் ஒவ்வொரு முறையும் சிலிர்த்து போகிறாள்‌ பெண்ணவள்..

மீரா குறும்பு புன்னகையுடன் விசித்ராவை பார்த்தபடி விசித்ராவின் எதிரே அமர்ந்திருந்தாள்..

“எதுக்கு டி இப்படி பாக்குற? நீ நினைக்கிற மாதிரி எல்லாம் ஒன்னும் இல்ல” 

“நான் என்ன நினைக்கிறேன்னு உனக்கு எப்படி தெரியும்?’ மீரா தலை சாய்த்து கிண்டலாக கேட்க 

“ஐயோ மீரா என்னை விட்டுட்டு டி” என்று சிணுங்கினாள் விசித்ரா..

“சரி போன போகட்டும்.. நாளைக்கு மாப்பிள்ளை வீட்ல இருந்து வரும் போது இந்த புடவையை கட்டிக்கோ.. நான் ப்ளீட்ஸ் எல்லாம் எடுத்து அயன் பண்ணி வச்சிருக்கேன்” என்று அவள் கையில் கெடுத்தாள் மீரா..

“என் செல்லம்” என்று தங்கையை கொஞ்சியவள் அந்த புடவையை வாங்கி பத்திரமாக வைத்து விட்டு மீராவின் எதிரே வந்த அமர்ந்து “கொஞ்சம் பயமா இருக்கு டி” என்றவளின் கைகளை பிடித்தாள் விசித்ரா.

“இதெல்லாம் எல்லாருக்கும் இருக்கிறது தான் அக்கா. நீ பயப்படாதே, வாழ்க்கை முழுக்க கூட வரப் போறவர் அவரை பாக்குறதில்ல என்ன பயம்? சந்தோஷமா சிரிச்ச முகத்தோட போய் நில்லு.. உன்னோட பயம் பதட்டம் அத்தனையும் அவரே விரட்டி அடிச்சிருவாரு.. அதுபோக உன் கூட நான் இருக்கேன் சோ டோன்ட் வொர்ரி பாத்துக்கலாம்..”

இருவரும் பேசியபடியே உறங்கி போய் இருந்தனர்..

அதிகாலை நேரமே கண் விழித்த விசித்ரா “ஏய் மீரா விடிஞ்சுருச்சு டி” எழுந்திரு மீராவை உசுப்பினாள்..

தூக்க கலக்கத்துடன் எழுந்து அமர்ந்த மீரா சுவர் கடிகாரத்தை பார்த்து விட்டு விசித்ராவை கடுப்பாக பார்த்தவள் “அக்கா இப்ப தான் மூணு மணி ஆச்சு இப்போ எந்திருச்சு என்ன பண்ண போற பேசாம படு” அவள் இழுத்து போர்த்தி கொண்டு படுத்து விட்டாள் 

“ஏய் இப்ப இருந்து எழுந்து எல்லா வேலையும் பார்த்தா தான் டி மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வரும் போது தயாரா இருக்க முடியும்” மீராவை போட்டு உலுக்கினாள் விசித்ரா 

“படுத்தாதே அக்கா அவங்க 8 மணிக்கு தான் வருவாங்க‌.. நீ பேய் மாதிரி இப்ப இருந்து ரெடி ஆகி உட்கார்ந்து இருக்க போறியா? பேசாம படு அக்கா” என்று தூக்க கலக்கத்தில் உளறியவள் மீண்டும் இழுத்து போர்த்தி கொண்டு படுத்து விட்டாள்..

விசித்ரா உறக்கம் வராமல் போனில் இருக்கும் அவளின் வருங்கால கணவனின் புகைப்படத்தை பார்ப்பதும் எப்போது விடியும் என கடிகாரத்தை பார்ப்பதும் ஜன்னல் வழியே வானை பார்ப்பதுமாக அறையினுள் அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தாள்..

அவளின் அவசரம் புரியாத சூரிய பகவானோ ஆடி அசைந்து மெல்ல மேலெழும்பி வருவதற்குள் விசித்ராவிற்கு பல யுகங்கள் கடந்த உணர்வு..

“ஏய் ஏய் ஏய் சூரியன் வந்துட்டாரு டி”

“வந்தா போய்‌ டீ போட்டு கொடு அக்கா”

“ஏய் பொழுது விடிஞ்சிடுச்சு மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வந்துடுவாங்க”

“ஆஆ இம்சை பண்ணுற அக்கா நீ.. சும்மா பாத்துட்டு போக தானே வராங்க அதுக்கு ஏன் முகூர்த்தத்துக்கு நேரமான மாதிரி இப்படி பறக்குற..‌ போ நீ முதல்ல போய் குளி” என்று கடுப்பாக எழுந்த மீரா விசித்ராவின் குளியல் அறைக்குள் விரட்டியவள் மீண்டும் குட்டி தூக்கம் போடலாம் என குப்புற கவிழ்ந்து இருந்தாள்..

விசித்ரா குளிக்க சென்று இருந்த நேரம் “பாப்பா இந்தாங்க பூ.. அப்பா தோட்டத்தில் இருந்து எடுத்துட்டு வர சொன்னாரு” என்ற காளிதாஸ் குரலில் வெளியே வந்த கோமதி “அதை பாப்பா ரூம்ல வச்சிட்டு வா காளி நான் உனக்கு காப்பி போட்டு தரேன்” என்றார்..

“இல்லைங்க நான் கிளம்புறேன்” என்று காளிதாஸ் அவர்சரப்பட்டான்.

“அட இரு பா ஒரு காபி குடிச்சிட்டு போக எத்தனை நேரம் ஆகிட போகுது.. ஒரு அஞ்சு நிமிஷம் வந்து உட்காரு” என்று பூஜை அறையில் இருந்து வெளியே வந்த ஆனந்தி‌ சமையலறைக்குள் நுழைந்தார்..

“சரிங்க” என்ற காளிதாஸ் விசித்ரா அறைக்குள் சென்றவன் ட்ரெஸ்ஸிங் டேபிள் மீது பூவை வைத்து விட்டு திரும்ப தலையணையில் முகத்தை அழுத்தி கை ஒரு பக்கம் கால் ஒரு பக்கம் என பரப்பி வைத்துக் கொண்டு உறங்கிக் கொண்டிருந்தாள் மீரா..

அவளை உற்று பார்த்தவன் அவளை நெருங்கி மெத்தை கீழ் அமர்ந்தான்..

“பூனைக்கு கை கால் முளைச்ச மாதிரி ஒரு உருவம்.. இத்தனூண்டு இருந்துட்டு என்ன குதி குதிக்குற‌ நீ.. என்னை பார்த்தால் எல்லாரும் தெரிச்சு ஓடுவானுங்க.. தக்காளி நீ என்னையே வா டா போடான்னு கூப்பிட்டு அத்தனை பேர் முன்னாடி கை நீட்டக அறைஞ்சுட்டல்ல… உன்னை ஏதாவது பண்ணனுமே” என்று யோசித்தவனுக்கு விபரீதமான திட்டம் ஒன்றை போட்டு கொடுத்தது அவன் மூளை..

சுற்றிலும் பார்த்தவன் எழுந்து சென்று விசித்ராவின் நெயில் பாலிஷ், காஜல், லிப்ஸ்டிக் என அனைத்தையும் தூக்கி கொண்டு வந்து மெத்தை அருகில் கீழே முட்டி போட்டு அமர்ந்தவன் அனபெல்லா பொம்மையே அலறி ஓடும் அளவிற்கு மீராவின் முகத்தில் தன் ஓவியத் திறமையை காட்டி இருந்தான்..

“பர்பெக்ட் இப்போ தான் நீ ஜிங்கு ஜிங்குன்னு குதிக்குறதுக்கு ஏத்த மாதிரி இருக்க” என்று அவளை நக்கல் பார்வை பார்த்து கொண்டு இருக்க அவளோ முகத்தை தேய்த்து அவன் போட்டு கோலத்தை அலங்கோலமாக மாற்றி கொள்ள சிரிப்பையே காணாதவன் இதழ்கள் அவளின் இந்த முக அழகை கண்டு வாய்விட்டு சிரிக்க துடித்தது..

வாயை பொத்தி சிரிப்பை அடக்க பெரும்பாடு பட்டான் அவன்.. 

“காளிதாஸ் எங்கப்பா இருக்க?” என்ற கோமதியின் குரலில் சிரிப்பை அடக்கியபடி எடுத்த பொருட்களை எடுத்த இடத்தில் வைத்துவிட்டு வெளியே வந்திருந்தான்..

“கோமதி மாப்பிள்ளை வீட்டுக்காரங்க எல்லாரும் கிளம்பிட்டாங்கலாமா.. புள்ள ரெடியாகிட்டாளா?? என்ன பண்றாள்” என்று சத்தம் கொடுத்தபடி வீட்டிற்குள் தன் சகலை சந்திரனுடன் நுழைந்தார் ஈஸ்வரன்..

“புடவை கட்டிட்டாங்க.. தலை வாரினால் போதும்.. ஆனால் உங்க செல்ல பொண்ணு மீரா தான் இன்னும் எழுந்திருக்காம கவுந்து அடிச்சு படுத்துட்டு இருக்காள்” என்றார் கோமதி 

“என்னது அவள் இன்னும் எழுந்திருக்கலையா என்ன?? நான் விசித்ராவுக்கு ஹெல்ப் பண்ணிட்டு இருப்பான்னு நெனச்சேனே” என்ற ஆனந்தி குழி கரண்டியுடன் விசித்ரா அறைக்குள் சென்று அவள் “ஆஆஆ பூதம்” என அலறி இருந்தார் 

அவரின் சத்தம் கேட்டு பக்கத்து அறையில் புடவையை சரி செய்து கொண்டிருந்த விசித்ரா முதல் ஹாலில் ஆங்காங்கே இருந்த அனைவரும் அறைக்கு ஓடி வந்தனர்..

“அம்மா ஏன் மா பேயை பார்த்த மாதிரி கத்துற?” தலையை சொரிந்து கொண்டு நடு மெத்தையில் அமர்ந்திருந்த மீரா அழகை பார்த்து கூட்டத்துடன் நிற்று இருந்த காளிதாஸ் தாடிக்குள் சிரிப்பை ஒளித்துக் கொண்டு அங்கிருந்து நகர்ந்திருந்தான்.. 

மாப்பிள்ளை வீட்டார் வந்து செல்லும் வரை நீ எங்கேயும் அசைய கூடாது என்று அன்பு கட்டளை போட்டு இருந்தார் ஈஸ்வரன் அதனால் தான் காளிதாஸ் இன்னும் இங்கேயே சுற்றி கொண்டு இருக்கிறான்..

“என்ன டி இது மூஞ்சி எல்லாம் ஏதோ பெயிண்ட் அடிச்சு வச்சிருக்க பைத்தியம்” என்று ஆனந்தி அவள் தலையில் கொட்டினார்..

“ஹா‌ஹா மீரா என்னடி கோலம் இது? நீ இவ்ளோ அழகா இருந்து நான் பார்த்ததே இல்லையே” என்று கிண்டலுடன் அவளை இழுத்து வந்து கண்ணாடி முன்னாடி நிறுத்தினாள் விசித்ரா 

“ஆஆஆ… ஐயோ… என்ன இது…” என மீரா அலறி போய் திரும்பிட அவள் கோலத்தை கண்டு மொத்த குடும்பமும் சிரிப்புடன் நின்று இருந்தது 

தன் தாயின் கையில் இருந்த குழி கரண்டி பிடுங்கியவள் “மரியாதையாக சொல்லிடுங்க யார் பார்த்த வேலை இது?” என்று அனைவரையும் முறைத்த‌ மீரா “ஏய் அக்கா உனக்கு ஹெல்ப் பண்ண நான் எழுந்திருக்கலைன்னு தானே என் மூஞ்சியில் வாசல் தெளித்து கோலம் போட்டு இருக்க” என்று விசித்ராவின் மீது சந்தேகம் கொண்டாள் மீரா 

“ஏய் சத்தியமா நான் பண்ணலடி” 

“ஆமாம் அவள் பண்ணி இருந்தால் இந்நேரம் உன் முகத்தை பார்த்து நீயே மயங்கி விழுந்துருப்ப” என்ற கோமதி நடுவில் கிண்டல் அடித்தார்..

“அம்மாஆ” என்று கடுப்பாகி அன்னையை முறைத்தாள் விசித்ரா..

“ஆஆ எனக்கு இப்ப தெரிஞ்சே ஆகனும் யார் பார்த்த வேலை இது??” என்று மீரா கடுப்பாக கத்தி கொண்டு இருக்க அவள் தலையில் கொட்டிய ஆனந்தி “யாரோ பார்த்த வேலை.. நீயே தூக்கத்துல கூட மூஞ்சில எடுத்து அப்பிட்டு படுத்து இருப்பேன்.. சின்ன வயசுல இந்த வேலையை தானே பாத்துட்டு இருந்த.. அந்த பழக்கம் இன்னும் இருக்கு ஒழுங்கா போய் குளிச்சிட்டு அக்காவை ஹெல்ப் பண்ணு மாப்பிள்ளை வீட்ல இருந்து கிளம்பிட்டாங்களாம்” என்று ஆனந்தி அதட்டினார் 

“விட‌மாட்டேன் கண்டு பிடிக்காமல் விடமாட்டேன்” என்று அனைவரையும் விரல் நீட்டி எச்சரித்தவள் உடைய எடுத்துக் கொண்டு வெளியே இருக்கும் குளியலறைக்கு சென்றாள்..

திண்ணையில் அமர்ந்து போனை பார்த்துக் கொண்டிருந்த காளிதாஸ் எங்கு அவளை நிமிர்ந்து பார்த்தால் வாய்விட்டு சிரித்து விடுவோமா என போனுக்குள்ளே தலையை புகுத்திக் கொண்டான் 

அவனை உற்றுப் பார்த்த மீரா “ஏய் ரவுடி…”என அவன் அருகில் போக “மீரா குளிச்சிட்டியா” தாயின் சத்தத்தில் விறுவிறுவென குளியலறைக்குள் புகுந்திருந்தாள்..

“பேய் படத்துக்கு ஆடிஷன் இல்லாம செலக்ட் ஆயிடுவாள் போல” என்று காளி உதட்டை மடித்து சிரித்துக் கொண்டு அமர்ந்திருந்தான் காளிதாஸ்..

“இங்க என்ன உக்காந்துட்டு இருக்க வா மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வந்தால் வரவேற்க அங்க நிக்கணும்” என்ற ஈஸ்வரன் காளிதாஸை பிடித்து இழுத்துக் கொண்டு சென்றிருக்க‌ வீட்டினுள் ஒரு பிரளயமே நடந்து கொண்டிருந்தது…

இந்த episode பிடிச்சிருந்தா எழுத்தாளரை உற்சாகப்படுத்துங்க!!
இப்போதே உற்சாகப்படுத்துங்கள்

இந்த படைப்பை மதிப்பிட விரும்புகிறீர்களா?

Click on a star to rate it!

No votes so far! Be the first to rate this post.

    No comments yet.