Episode 3

Valanchuli Tamil | 23 May 2026 | Share

மீரா சுதாரித்து இறங்கி நின்றவள் அவனை ஏற இறங்க பார்க்க எதிரே கடும் கோவமாக அவளை முறைத்து கொண்டு இருந்த காளிதாஸ்.. நம் கதையின் நாயகன்.

“ஹலோ யார் நீங்க‌? எதுக்கு எப்படி குறுக்க வந்து நின்னுட்டு இருக்கீங்க?”, அவன் பார்வையில் எரிச்சலடைந்தாள்.

“நரம்புத் தளர்ச்சி வந்து நரி மாதிரி வண்டி ஓட்டிட்டு குறுக்க நான் வந்தேன்னு சொல்றியா?” 

அவனின் கணீர் குரலில் சற்று பயந்தாலும் அவனை பார்க்க பார்க்க கோவமாக தானா வந்தது அவளுக்கு.. 

வினோத் நினைவிலேயே வந்தவளுக்கு சுற்றி நடந்தது எதுவும் மூளையில் பதியவே இல்லை.. காளிதாஸ் பொய் சொல்வது போலவும் தெரியவில்லை. 

‘நம்மதான் வினோ நினைப்பிலேயே நடு ரோட்டில் வந்திருப்போம் போல’ என்று அவள் மனதினுள் யோசித்து கொண்டு நின்ற நேரத்தில்…

“ஏன் பா காளிதாஸ் என்ன நீ பாட்டுக்கு வந்துட்ட.. மரியாதையா உடைச்ச ஹெட் லைட்டுக்கு பணத்தை கொடு” அவன் அவளுடன்‌ சண்டைக்கு நிற்கும் சமயம் குறுக்கே புகுந்தார் அந்த நான்கு சக்கர ஆட்டோ ஓட்டுனர்.

ஏற்கனவே அவள் கேள்வியில் கடுப்பாகி நின்று இருந்தவன் டிரைவர் காதுக்குள் காச்மூச் என்று கத்திக் கொண்டு இருந்த எரிச்சலில் விருட்டென திரும்பியவனின் சிவந்த வழிகளில் மனிதன் அரண்டு போய் இரண்டடி பின்னால் நகர்ந்து நின்றவர் 

“காளி தப்பு உன் மேல தான் பா இருக்கு.. வண்டியை கொண்டு வந்த சொருகினது நீ..‌ அதுக்கான நஷ்டத்தை நானா ஏத்துக்க முடியும்.. நான் இப்ப என்ன சொல்லிட்டேன்னு இப்படி அடிக்கிற மாதிரி பார்க்குற” பயந்தபடியே தான் பேசினார்..

“யோவ் வாயை மூடு இப்ப என்ன உனக்கு காசு தானே வேணும்.. இந்த கண்ணு தெரியாதவளால் தான் உன் மேலே வண்டி கொண்டு வந்து விட்டுட்டேன்.. கொஞ்சம் பொறு”, அப்பப்பா கண்களில் மட்டும் அல்ல பேச்சிலும் அத்தனை சீற்றம் அவனிடம்..

“ஏய் யாரை பார்த்து கண்ணு தெரியாதவன்னு சொன்ன. நீ பாட்டுக்கு அவள் இவள்னு பேசுற.”,‌மீராவுக்கு அதெப்படி எடுத்த எடுப்பில் மரியாதை இல்லாமல் பேசலாம் என்று அவன் பேச்சில் சுரென்று கோவம் ஏறியது..

“பேசினா என்னடி பண்ணுவ?” விரல் நீட்டி பேசியவளின் விரலை மடக்கி பிடித்து இருந்தான் அவன்..

“ஸ்ஸ் ஆஆ விடு டா” என பதிலுக்கு அவளும் அவனை டா போட்டு அழைத்தாள்..

அதில் அவனுக்கு இன்னுமே கோபம் ஏறியது..

“ஏய் வாங்க போங்கன்னு கூப்பிடு. வாடா போடான்னு கூப்பிட்ட பல்லை தட்டிடுவேன்” என்றவன் அவளை நெருங்கி நின்றான் 

“ஏய் தள்ளி போ ஒரு பொண்ணு கிட்ட எப்படி பேசணும்னு கூட தெரியாமல் வாடி போடின்னு பேசுற உனக்கு என்னடா மரியாதை??.. கையை விடுடா தடியா” பல்லை கடித்த படி பேசினாள் அவள்..

“அம்மணி நீங்க கண்ணை பொடனியில் வச்சுட்டு சைக்கிள் ஓட்டிட்டு வந்து சொருகுவீங்க.. உங்களுக்கு நாங்க ஆரத்தி எடுத்து தங்க தட்டுல தாங்கனுமோ.. மகளே உன்னால் தான் கண்ட காட்டெருமைக்கு எல்லாம் நான் பதில் சொல்ல வேண்டியதா இருக்கு மரியாதை பணத்தை கொடு” என்றான் காளிதாஸ்..

அவனிடம் இருந்த வேகமாக விரலை உருவி கொண்டவள் “ஆஹா நீ ஒழுங்கா பைக் ஓட்ட தெரியாமல் அந்த எருமை வண்டியில் இடிச்சுட்டு பழியை என் மேல போடுறியா?”

மாறி மாறி இரு வரையும் பார்த்துக் கொண்டிருந்த டிரைவர் மௌனமாக கதறிக் கொண்டிருந்தார்.. மீறி அவர் கத்தினாலும் இருவரும் காதில் போட்டுக் கொள்வதாக தெரியவில்லை..

வாக்குவாதம் முற்றிய போனதில் காளிதாசுக்கு கோபம் அதிகரித்தது.. அவ்வளவு தூரம் அவளிடம் சண்டை போட அவனுக்கு விருப்பம் இல்லை..‌ “உன் கிட்ட என்னடி பேச்சு”, அவளில் வலது கரத்தை முதுக்கு பின்னால் வளைத்து பிடித்தவன் அவள் மோதிர விரலில் இருந்த மோதிரத்தை கழட்டி இருந்தான் 

“டேய் விடு‌டா‌ தடியா.. ஐயோ என் மோதிரம்” என அவள் திமிறி அவள் கையை விட்டவன் 

“பணத்தை கொடுத்துட்டு மோதிரத்தை அந்த காட்டெருமை கிட்ட வாங்கிக்கோ” என்றான் காளிதாஸ்..

“ஐயோ அது என் லக்கி மோதிரம் டேய் காட்டெருமை மோதிரத்தை வாங்கின கையை வெட்டிருவேன். உனக்கு பணம் தானே வேணும் வீட்டில் வந்து வாங்கிக்கோ ஆனால் என் மோதிரத்தை மட்டும் கொடுத்துடு” என மீரா அந்த ட்ரைவரிடம் கூறினாள்..

ஆனால் அவரோ காளிதாஸ் கையில் இருந்த மோதிரத்தை கண்கள் பளபளக்க பார்த்து இருந்தார்..‌ பின் தங்கம் விற்கும் விலைக்கு இலவசமாக மோதிரம் கிடைத்தால் லாபம் தானே.. பேராசை அவரின் கண்களை மறைத்து கொண்டு இருந்ததில் மீரா சொன்னது எல்லாம் அவர் கண்டு கொள்ளவே இல்லை..

“கொடு பா கொடு..” அவர் ஆவலாக கைவிட்ட மீரா பாய்ந்து சென்று காளிதாஸ் கையில் இருந்து மோதிரத்தை பிடுங்க முயல அவனோ கையை மேலே தூக்கிப் பிடித்துக் கொண்டான் 

“இப்ப மட்டும் நீ என்னோட மோதிரத்தை கொடுக்கல நிச்சயமா போலீஸ்ல கம்ப்ளைன்ட் பண்ணிடுவேன்” என்றதில் அவன் ஒன்றும் பெரிதாக அதிர்ந்தது போல் தெரியவில்லை.. 

சொன்னா சொல்லிக்க எனக்கு என்ன என்பது போல் தெனாவெட்டாக தான் நின்றான்..

‘என்ன இவன் அசராமல் நிக்கிறான்’ மீராவுக்கு தான் அதிர்ச்சியாக இருந்தது 

அவன் ஒன்றும் பார்க்க பணக்காரன் வீட்டு வாரிசு போல் எல்லாம் தெரியவில்லை.. நடுத்தர குடும்பத்தில் பிறந்த வளர்ந்து வாழ்ந்து கொண்டு இருப்பவன் போல் தான் இருக்கிறான்.. ஆனாலும் அந்த கண்களில் சிறிதளவு அச்சமும் இல்லை.. கண்கள் முழுக்க அலட்சியமும் திமிரும் கொட்டி கிடந்தது.. அவன் தோற்றமும் உடையும் அப்படி தான் நினைக்க சொல்லியது மீராவுக்கு.. 

“ஐ வில் கால் தி போலீஸ்” என்ற மீரா தன் சுடிதார் பாக்கெட்டில் இருந்த தனது போனை எடுக்க வெடுக்கென்று பிடுங்கியவன் அதை தூர வீச போக “அய்யய்யோ நோ நோ ப்ளீஸ்” என பதறி கத்தி இருந்தாள் மீரா

அவளின் பயந்து பதறி விரிந்த விழிகளில் என்ன கண்டானோ அவளை நோக்கி இரண்டு அடி அவளை நோக்கி நகர்ந்து வந்து நெருங்கி நின்றவன் இங்க பாரு ஊரில் நாலா நம்பர் வீடு தான் இந்த காட்டெருமையோடது.. பணத்தை கொடுத்துட்டு உன் மோதிரத்தை வாங்கிக்கோ இப்போ அனாவசியமா பேசி டைம் வேஸ்ட் பண்ணாமல் கிளம்பு”, சொன்னவன் அவளது போனை தூக்கி வீச தட்டு தடுமாறி பிடித்தவள் அவனை முறைத்து கொண்டே நின்றாள்.. அவனும் அசராமல் அவனை பார்த்து கொண்டே தான்‌ நின்றான் 

“யோ ஆட்டோகாரா வண்டியை எடுக்கிறியா இல்லையா?” நான்கு சக்கர ஆட்டோவில் நின்று இருந்த ஆட்கள் சத்தம் போட ஆரம்பித்தனர்..

“காளிதாஸ் அந்த மோதிரத்தை கொடுத்தீன்னா நான் போய்டுவேன்” வாய் எல்லாம் பல்லாக கேட்டார்‌ அந்த ஆட்டோ ட்ரைவரிடம் மோதிரத்தை தூக்கி வீசியவன் அவன் பாட்டுக்கு சென்று கவிழ்ந்து கிடந்த இருசக்கர வாகனத்தை தூக்கி கொண்டு இருக்க 

“டேய்‌ய் அது என் அப்பா எனக்கு வாங்கி கொடுத்த மோதிரம் அப்பாவோட அருமை தெரியுமா உனக்கு ரவுடி பொறுக்கி என நேரா கத்திக் கொண்டிருக்க அவன் எதையும் கண்டு கொள்ளாமல் அங்கு சற்று தூரத்தில் ஒரு ஆலமரத்தின் அடியே சென்று வாகனத்தை நிறுத்தியவன் ஆலமரத்தை சுற்றிலும் கட்டிவிடப்பட்டிருந்த தென்னை மீது அமர்ந்து கொண்டான்..

 

“ஏய் மீரா அங்க என்ன பண்ணிட்டு இருக்க” என்று அவசர அவசரமாக அவளை நோக்கி வந்தாள்..

மீரா தன் அக்காவின் குரல் வந்த திசையில் திரும்பி பார்த்த சமயத்தில் ஆட்டோ டிரைவர் அங்கிருந்து நகர்ந்து இருந்தான்..

“ஏய் இருட்டு கட்டிருச்சு இன்னும் இங்க என்ன பண்ணிட்டு இருக்க” அவளின் தோள்களை பற்றி கேட்டாள் விசித்திரா.. 

‘அக்கா கிட்ட உண்மைய சொன்னா நிச்சயம் வீட்டில் சொல்லிடுவாள்.. தேவை இல்லாம வீட்ல இருக்கவங்களோட நிம்மதியா தான் போகும்.. அப்பாவுக்கு தெரிஞ்சா நிச்சயமா சண்டைக்கு போவாரு.. எப்படியும் இந்த ஊர்ல தானே இருக்க போறோம்.. நம்மளே இவனை சரி கட்டிடுவோம்’ என்று மனதில் நினைத்தவள் “ஒன்னும் இல்லை அக்கா அப்படியே சைக்கிள் தள்ளிட்டு வந்தேன் அதான் கொஞ்சம் லேட் ஆயிடுச்சு”, என்றாள் 

“நீ சைக்கிள் தள்ளிட்டு வந்த மாதிரி இல்லையே.. அந்த காளிதாஸ் கிட்ட ஏதோ சண்டை போட்டுட்டு இருந்த மாதிரி இருந்துச்சு” விசித்ரா அவளை உற்றுப் பார்த்தாள்..

விழிகள் அங்கும் இங்கும் உருள‌ தடுமாறியவள் “இல்லை அக்கா‌ நான் என்ன சண்டை போட போறேன்.. அவர் எதோ அந்த ஆட்டோ மேல மோதிட்டாரு அவங்க பேசிட்டு இருந்தாங்க அதனால நான் நின்னுட்டு இருந்தேன்” நடந்ததை கூறாமல் சற்று மாற்றி கூறினாள்..

“ஓ சரி சரி நீ‌ அவர் கிட்ட எல்லாம் பேசாதே”

“ஏன் அக்கா பொறுக்கியா?” என்று மீரா கேட்க 

“ப்ச்ச் அதெல்லாம் நமக்கு எதுக்கு வா நாளிலிருந்து ஊர் திருவிழா ஆரம்பிக்க போது நம்ம ஜாலியா சுத்தி எத்தனை வருஷம் ஆச்சு.. இன்னைக்கு நல்லா தூங்கினால் தான் நாளைக்கு ஃபுல் டே சுத்த முடியும்.. வா வா சீக்கிரம் தூங்கலாம்.. நாளைக்கு நிறைய வேலை இருக்கு” விசித்ரா பேசி கொண்டே சைக்கிளை தள்ளிக் கொண்டு நடந்தாள் 

அவள் பின்னாலேயே நடந்து வந்த மீரா ஆலமரத்தின் அடியில் அமர்ந்திருக்கும் காளிதாசை திரும்பிப் பார்க்க போனை பார்த்துக் கொண்டிருந்த அவனும் அதே நேரத்தில் அவளை நிமிர்ந்து பார்த்தான்..

“உனக்கு நாளைக்கு இருக்குடா” என்று பல் இடுக்கில் சொன்னவள் தன் அக்காவின் பின்னால் சமத்து பிள்ளையாக கிளம்பினாள்..

“என்னடா தாஸ் விசித்ராவை விட்டுட்டு அவள் தங்கச்சியை பார்க்க ஆரம்பிச்சுட்ட போல” என்ற தாஸின் நண்பன் கிண்டலாக சொல்லி வாய் மூடுவதற்குள் அவன் கன்னம் பழுத்திருந்தது..

தாஸின் ஊர்க்கார நண்பனோ கன்னத்தில் கைவைத்தபடி காளிதாசை பாவமாக பார்க்க “இன்னொரு தடவை இப்படி ஏதாவது அசிங்கமா பேசிட்டு இருந்த பல்லை தட்டி கையில் கொடுத்துடுவேன் ஜாக்கிரதை” என்று விரல் நீட்டி எச்சரித்தவன் பைக்கை கிளப்பிக் கொண்டு அங்கிருந்து நகர்ந்திருந்தான்..

“நாளைக்கு நம்ம ரெண்டு பேரும் இந்த டிரஸ் போட்டுக்க போறோம்” விசித்ரா ஆசை ஆசையாக நாளை திருவிழா வைக்க செல்வதற்காக உடைகளை தேர்வு செய்து கொண்டிருந்தாள்..

கட்டிலில் மல்லாக்க படுத்தபடி விட்டத்தை பார்த்துக் கொண்டிருந்த விசித்ராவின் ஆசையான பேச்சுக்களை எல்லாம் காதில் போட்டு கொள்ளாமல் தன் மோதிர விரலை வருடியபடி சோகத்தில் மூழ்கிக் கிடந்தாள் ..

அவளால் அந்த மோதிரம் தற்போது தன்னோடு இல்லை என்பதை ஜீரணித்துக் கொள்ளவே முடியவில்லை.. அவளின் குடும்பம் விசித்ரா குடும்பம் போல அல்லாமல் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த குடும்பம் தான்.‌ அவள் பன்னிரெண்டாம் வகுப்பில் நல்ல மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்றதால் தந்தை சந்திரன் அந்த தங்க மோதிரத்தை பரிசளித்தார்..

தந்தை ஒவ்வொரு நாளும் எவ்வளவு கடினப்பட்டு உழைத்து மகளுக்கு என ஒவ்வொரு ரூபாயையும் சேர்த்து வைப்பதை பார்த்துக் கொண்டு தான் இருக்கிறாள்.. தாய் தந்தை கஷ்டம் புரிந்து அனாவசியமாக ஒரு ரூபாய் கூட செலவு செய்யாதவள் தான் அவளும் 

இப்பொழுது தந்தை ஆசையாசையாக வாங்கி வந்த தங்க மோதிரத்தை எவனோ ஒருவன் வலுக்கட்டாயமாக பிடுங்கி இன்னொருவனுக்கு கொடுத்துச் சென்றதை அவளால் தாங்கி கொள்ளவே முடியவில்லை.. நிம்மதியாக சாப்பிட முடியவில்லை கண்களை மூடி உறங்க முடியவில்லை.. எப்பொழுது விடியும் எப்பொழுது பணத்தை அந்த ட்ரைவர் முகத்தில் விட்டெறிந்து தன் மோதிரத்தை மீட்டுக் கொண்டு வரலாம் என்று தான் அவள் சிந்தனை ஓடிக் கொண்டிருந்தது..

“நான் எல்லாமே எடுத்து வச்சிட்டேன் நாளைக்கு சீக்கிரம் எழுந்துக்கணும் சீக்கிரம் தூங்கு” என்று விளக்கை அணைத்த விசித்ரா மீரா அருகில் வந்த படுத்துக் கொண்டு தங்கையை பார்த்தாள்..

“ஓகே அக்கா குட் நைட்” சுரத்தே இல்லாமல் சொன்னவள் ஒருக்களித்து படுத்துக் கொண்டு கண்களை மூடிட ‘சரி டயர்டா இருப்ப போல’ விசித்ராவும் அவளை தொந்தரவு செய்ய படுத்து கொண்டாள்

மோதிர விரலை வருடியப்படியே கண்களை மூடி படுத்திருந்த மீரா விழிகளுக்குள் என்ன ஓடியதோ சட்டென்று எழுந்து அமர்ந்தாள்..

இந்த episode பிடிச்சிருந்தா எழுத்தாளரை உற்சாகப்படுத்துங்க!!
இப்போதே உற்சாகப்படுத்துங்கள்

இந்த படைப்பை மதிப்பிட விரும்புகிறீர்களா?

Click on a star to rate it!

No votes so far! Be the first to rate this post.

    No comments yet.