மிதுன் சொல்ல சொல்ல கேட்காமல் காருக்குள் ஏறியவளை கொன்று போடும் ஆத்திரத்துடன்,
” ஏய்… வெளிய வா டி… ” என்று கத்திக் கொண்டே கார் கதவை திருந்து அவன் உள்ளே பாய,
அங்கு சீட்டில் விழுந்து இருந்தவள் இவனின் குரலுக்கு பயந்து திரும்ப, அவளின் தோள் வரையிலான கேசம் அவள் முகத்தில் பட்டு இதழோடு நான்கு முடிகள் மட்டும் சிக்கிக் கொள்ள, மிரண்டு விழிக்கும் அவளின் முட்டை கண்கள் அதில் சற்றே பெரியதாய் விரிந்து இருந்த அவளின் கருவிழியில் அந்த மாலை மங்கும் பொன் நேரத்தில் அவனின் பின்பத்தை கண்டான் மிதுன்.
அங்கேயே மிதுன் பிளாட். அவனின் காதிலும் முதல் முறை அவன் மனம் இசைக்கும் காதல் கவி கேட்டது.
உன் கண்களில்
நான் என்னை உணர்கிறேன் …
நான் யார் என்பதை
அல்ல
நான் உனக்கானவன் என்பதை …
( இது தமிழ் நிலாவின் சொந்த கவி. எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது… )
பேதை அவளின் அழகில் மிதுன் போதை கொண்டவனாக மயங்கி இருக்க, அவள் கழுத்தை நெருக்க சென்ற அவன் கை கூட அசைய மறந்து அந்திரத்தில் நின்றது.
அவனை சுயத்திற்கு மீட்டு எடுக்கவே நிகழ்ந்தது போல் ஒலித்தது அவனின் ஃபோன் ரிங்டோன். மிதுன் அதை எடுத்துப் பார்க்க அது பாட்டியிடம் இருந்து வந்த அழைப்பு.
அவன் எடுப்பதற்குள் கால் கட்டாகி விட்டது. மணியை பார்க்க அதுவோ 6.30 என்று காட்டியது. அடித்து பிடித்து எழுந்தவன், ” ஏய்… வெளிய வா டி… நான் வீட்டுக்கு போனும்… ” என்று காலில் சுடு நீரை ஊற்றியது போல் அவசரப்படுத்தினான்.
அதைப் பார்த்ததும் அவள் ” இவன் எங்கையோ அவசரமா போறான்… இவன விட்டா நம்ம கேமராவ தூக்கிட்டு ஓடினாலும் ஓடிருவான். இவன விட கூடாது ” என்று ஒரு முடிவோடு,
” அது எல்லாம் முடியாது. நீ கேமராவ கொடுக்குற வரைக்கும் நான் உன்கூட தான் இருப்ப ” என்று எழுந்து சீட்டில் நன்றாக சாய்ந்து மார்புக்கு குறுக்கே கைகளை கட்டிக் கொண்டு கால் மேல் கால் போட்டு வாகாக அமர்ந்துக் கொண்டாள்.
மிதுன், ” ஏய்… நேரம் காலம் புரியாம பேசாத டி. நீ இப்போ மட்டும் கார விட்டு இறங்கல… அப்பறம் நான் உன்னையும் சேர்த்து கூட்டிட்டு போக வேண்டியதா போயிடும். அப்பறம் நம்ம நாளைக்கு காலையில தான் அந்த வீட்ட விட்டே வெளிய வர முடியும். பாத்துக்க… ” என்று எச்சரித்தான்.
அவள் அதற்கு எல்லாம் மசியும் ஆள் போல் தெரியவில்லை. ” அதான் நான் சொல்லிட்டன்ல. நீ கேமராவ கொடுக்குற வரைக்கும் நான் உன்ன விடமாட்டேன்னு… ” என்று அவள் பிடிவாதமாக இருக்க,
இப்பொழுது பாட்டியின் அழைப்பிற்கு வீட்டுக்கு போயே ஆக வேண்டும் என்ற நிலைமையில் இருந்த மிதுனும் வேறு வழி இல்லாமல் அவளுடனே வீட்டுக்கு காரை விரட்டினான்.
இங்கு மாறனும் நிலாவும் அவனின் சொகுசு காரில் அவளின் வீட்டை நோக்கி பயணித்துக் கொண்டிருந்தனர். ஜன்னல் அருகே வேடிக்கை பார்த்து படி அமர்ந்திருந்த நிலாலினியின் மனது அவர்கள் இருவரும் பேசிக் கொண்ட நிபந்தனைகளை மீண்டும் ஒரு முறை நினைவு படுத்தி பார்த்தது.
இருவரும் ஊருக்கு மட்டும் தான் லவ்வர், உள்ளுக்குள் நண்பர்கள் மட்டுமே ஆனால் அதை வெளியே யாரிடமும் சொல்லிவிட கூடாது. அது அவர்களின் வீட்டின் ஆட்கள் என்றாலும் சரி… நெருங்கிய நண்பர்கள் என்றாலும் சரி… இது இருவரும் சேர்ந்து எடுத்த முடிவு.
பொது இடங்களில் லவ்வர் ஆக நடிக்க வேண்டிய நேரங்களில் முடியாது என்று மறுக்காமல் மற்றவர்களுக்கு சந்தேகம் வராதபடி நடந்துக் கொள்ள வேண்டும். முக்கியமாக மாறனின் பாட்டியின் முன்பு. இது மாறனின் முக்கிய நிபந்தனை.
தான் விருப்பப்பட்ட வேலைக்கு செல்ல வேண்டும். என்றும் அதற்கு தடை வந்திடக் கூடாது. இது நிலாலினி விதித்த ஒற்றை நிபந்தனை.
இவ்வளவு தான். இருவரும் இதை ஒப்பந்தமாக கூட பத்திரத்தமிட வில்லை.
அப்படி செய்து அதை மற்றவர்கள் பார்த்து அதுவே பின் நாளில் பெரிய பிரச்சனைகளை கொண்டு வரக் கூடாது அல்லவா ! அதற்காக தான் என்று தான் நிலாலினி நினைத்துக் கொண்டாள்.
நிலாவின் நிழல் அவனுக்கு அப்படி இல்லை. அவனுக்கு அவனின் நிலா சுகந்திரமாக அவனுடன் இருக்க வேண்டும். மனதிற்குள் அவளுக்கென்று இதயக் கோட்டை கட்டி வைத்திருப்பவனுக்கு ஒப்பந்தமிட்டு வெறும் காகிதங்களில் அவளை சிறை வைக்க விரும்பமில்லை.
அதே சமயம் அவளை விலக விடக் கூடாது என்பதிலும் உறுதியாக இருந்தான் மாறன்.
வீடு வரும் வரைக்கும் நிலாலினி மாறன் அனுப்பிய அவனின் பயோ டேட்டாகளை படித்து கரைத்து குடித்துக் கொண்டு இருந்தாள். படிக்க படிக்க அவனைப் பற்றி பல விஷயங்களை தெரிந்துக் கொண்டவள் ” பலே… “, ” சூப்பர்… “, ” சபாஷ்… ” என்று சொல்லி மெச்சும் அளவிற்கு தான் இருந்தது மாறனின் திறமைகளும் அவனின் வெற்றிப்படிகளும்.
என்றும் தூரம் தள்ளி இருந்தே அவளை பின் தொடரும் நிழல் அவன் இன்று நிலாவின் அருகிலே அமர்ந்து அவளின் முக பாவனைகளை பார்த்து ரசித்துக் கொண்டு இருந்தான்.
இனிமையான அந்தி நேரம் தான். ஆனால் எல்லாம் நிலாலினியின் வீடு வரும் வரைக்கும் மட்டுமே. இருவரும் நிலாலினியின் வீட்டுக்கு வந்ததும் அங்கு வெடித்தது ஓர் பெரிய பூகம்பம்…
இதுவரை மாறன் நிலாலினியின் பெற்றோர் பற்றி விசாரித்து இருக்கிறான் தான். ஆனால் இன்று தான் அவர்களின் சுய ரூபத்தை நேரில் காண்கிறான்.
நிலாலினி முதலில் மாறனை உள்ளே வர வேண்டாம் நீங்கள் கிளம்பிக் கொள்ளுங்கள். இங்கு நான் பார்த்துக் கொள்கிறேன் என்று தான் சொன்னாள்.
ஆனால் மாறனுக்கு தான் அவளை விட்டு செல்ல மனமில்லாமல் வெளியவே நின்று விட்டான்.
நிலாலினி பொறுத்தவரை இது வெளி உலவிற்காக வேஷக் காதலாக இருக்கலாம். ஆனால் நிலாவின் நிழலான மாறனுக்கு இது உயிர் காதல் ஆகிற்றே !
இருவரும் சேர்ந்து போராட வேண்டிய நிலையில் அவளை மட்டும் எப்படி தனித்து விட முடியும் அவனால் !
ஆனால் நிலாலினி இப்படி சொல்லிய பின்பும் கேட்காமல் அவளுடன் உள்ளே சென்றால் அவளை அவமதிப்பதாகவும் அவள் மேல் நம்பிக்கை இல்லாத தனத்தினாலும் தான் இப்படி செய்கிறான் என்று நினைத்துக் கொள்வாள் என்று அவளைப் பற்றி நன்கு அறிந்து வைத்திருந்தவன் வேறு வழி இல்லாமல் வெளியிலே காம்பவுண்ட் சுவர் அருகே நின்றுக் கொண்டான்.
நிலாலினி வீட்டுக்குள் சென்றவள் முதல் வேலையாக அவளின் பெற்றோரை அமர்த்தி அவள் ஒருவனை காதலிப்பதாக நேரடியாக விஷயத்தை போட்டு உடைத்து விட்டாள்.
” என்னது ! காதலா ? “, என்று எகிறிய அவளின் தாயும் தந்தையும் காச்சு மூச்சென்று கத்த அந்த சத்தம் வெளியில் நின்றுக் கொண்டு இருந்த மாறனுக்கு தெளிவாகவே கேட்டது.
அதிலும் ” உனக்கு அதுக்குள்ள உடம்பு சுகம் கேக்குதோ… நீயா போய் எவனையோ தேடிக்கிட்ட ! ” என்ற அவர்களின் கடுஞ்சொல் எல்லாம் இத்தனை வருடம் கன்னி காத்து கண்ணியமாக இருந்த நிலாலினி கேட்கக் கூடியதா ?
” உன்ன இத்தன வருஷமா கஷ்டப் பட்டு பெத்து வளர்த்து ஆளாக்குனது எதுக்கு ? இப்படி எவனையோ நீ காதோல்… பண்ணுறக்கா ஆங் ! “
” உன்ன பெத்ததுக்கு ஒரு புரியோஜனமும் இல்லை. நாங்க சொன்னதையும் மீறி நீ எங்க பேச்ச கேட்காம வெளிய படிக்க போனப்பவே எங்களுக்கு தெரியும். நீ இப்படி தான் எவன் கூடையாவது போவேன்னு… “
” அதான் போயிட்டாளே… எவன் கூடையோ போய் நல்லா சித்தி பழகிட்டாளே… நம்ம இரண்டு பேரும் மாத்தி மாத்தி வேண்டாம் அந்த பையன விட்டுரு நீ வேலைக்கு போய் கிழிச்சது எல்லாம் போதும். நாளைக்கே மாப்பிளையே பாக்குறோம்னு சொன்னோமே… கேக்குறாளா பாருங்களே… ”
” இதோ பாரு… உனக்கு இந்த ஒரு இராத்திரி டையம் தாரேன். உனக்கு எவளோ வேணுமோ அழுதுக்கோ. அந்த பையனா இதோட மறந்துரு. நாங்க சொல்லுற மாப்பளைய கட்டிக்க ” என்று நிலாலினியின் தந்தை அவளுக்கு கெடு வைக்க,
நிலாலினி முடியாது என்று தீர்க்கமாக நின்றாள். அவள் இதை எல்லாம் அந்த திலிப்பின் காதலுக்கு சம்மதம் சொன்ன பொழுது இவர்களிடம் பேச வேண்டி மனதை ஆயத்தப் படுத்தியது. அது எல்லாம் இப்பொழுது மாறனுடனான பார்ட்னர் ஷிப்புக்கு உதவுகின்றது.
அவள் பிடிவாதமாக நிற்கவும் பல அடிகளும் விழுந்து காது கொய்… என்று சத்தம் வந்த பொழுதிலும் மரமென நின்ற நிலாலினி எத்தனை வேண்டுமானாலும் அடித்துக் கொள்ளுங்கள் என் முடிவில் மாற்றமில்லை என்றே அடி தாங்கியாக மாறி போனால்.
” என்னமோ அவன் தான் வேணும்ன்னு நிக்குரல… சரி போ… எவன் கூட வேணாலும் போ… ஆனா உன்ன வளத்து ஆளாக்குனதுக்கு இந்த நாள் வரைக்கும் எனக்கு 20 லட்சம் ஆச்சு… அவன ஃபோன போட்டு 20 லட்சத்த எடுத்துட்டு வந்து கொடுத்துட்டு உன்ன கூட்டிட்டு போக சொல்லு… ” என்ற அவர்களின் வார்த்தை நிலாலினியை உயிரோடு கொன்றது.
நான் என்ன விலை பொருளா ? உயிர் மகள் இல்லையா ?
ஆடா மாடா ! வளர்த்து விலை பேசி கை மாற்றி விட ?
நானும் மனுஷி தானே ! எனக்கென்று விருப்பு, பெறுப்பு, ஆசை, வலி என அனைத்து உணர்வுகளும் இருக்கிறது தானே ! அப்படி இருக்க எப்படி இவர்களால் எனக்கு விலை நிர்ணயிக்க முடியும் !
விலை வைக்க நான் என்ன விலை மகளா ?
அல்லது இவர்கள் தான் என்னை கூட்டிக் கொடுக்கும் மாமாக்களா ? என்று நிலாலினியின் மனது காரசாரமாக கேள்விகளை எழுப்பியது.
அதை எல்லாம் அப்படியே கேட்டிட சொல்லி அவள் வாய் துடிக்க, அவர்களை நோக்கி கண்ணீருடன் நின்று இருந்தவளை பாய்ந்து வந்து அறைந்தவர் அவளின் ஃபோனை நீட்டி ” இந்தா… கூப்பிடு… இப்போ அவனுக்கு கூப்பிட்டு பணத்தோட வர சொல்லு… “
நிலாவின் நிழல் தொடரும்…
____________________________
கதையை படித்து விட்டு பிடித்து இருந்தால் உங்கள் கருத்துக்களை என்னுடன் கமெண்டில் பகிர்ந்து கொள்ளுங்கள் மக்காஸ்…
– தமிழ் நிலா
No comments yet.