அவன் நிலாலினி அருகில் வந்ததும் அவர்களுக்கு தனிமை கொடுத்து விலகிய மாலினி பக்கத்தில் இருந்த பூக்கடையில் இருந்து தனக்கு பூவை வாங்கி வைத்து விட்டு, நிலாலினி தலையிலும் பூ இல்லாமல் இருக்க அவளுக்கும் வாங்க வந்தவள் பின், என்ன நினைத்தாளோ அவனிடம் திரும்பி, ” மாறன் சார்… ” என்று அழைக்க நிலாலினியுடன் பேசிக் கொண்டிருந்தவன் திரும்ப,
” நிலாவுக்கு பூ வாங்கி வெச்சு விடுங்க… ” என்றாள் மாலினி.
அந்த பூ கடைக்கார அம்மாவும், ” ஆமா தம்பி… பொம்பள பிள்ளைங்க கோவிலுக்கு போறப்ப தலை நிறைய பூ வெச்சுட்டு போனாதா நல்லா இருக்கும்… ” என்றதும்,
” சரி… கொடுங்க… ” என்று அவன் நகர்ந்து நிலாலினியுடன் பூக் கடைக்கு செல்ல,
” எவ்வளோ கொடுக்கட்டும் தம்பி ? ” என்று அந்த அம்மா கேட்கவும்,
நிலாவை திரும்பி பார்த்தவன், ” அவங்களுக்கு எவ்வளோ வெச்சா நல்லா இருக்குமோ அவ்வளோ கொடுங்க… ” என்று அவன் சொன்னதும்,
அவர் மணக்கமணக்க இருந்த மல்லிகை எடுத்து ஒரு மூலத்திற்கும் கொஞ்சம் தாராளமாகவே கொடுத்தார். அதை வாங்கி அவன் நிலாவிடம் கொடுக்க,
அவன் தள்ளி இருந்த பொழுது மற்றவர்கள் முன் மரியாதைக்காக சார் என்று அழைத்த மாலினி இப்பொழுது அருகில் இருக்கும் பொழுது ஃப்ரெண்ட்டின் லவ்வர் என்னும் முறையில் ப்ரோ என்று அழைத்தாள்.
” ப்ரோ… நிலவுக்கு நீங்களே வெச்சு விடுங்க… ” என்று அவள் சொல்லவும்,
” ஹே… மாலினி… அது எல்லாம் வேண்டாம்… நீ சும்மா இரு… நானே வெச்சுப்ப… ” என்று நிலாலினி வேகமாக சொல்லி பூவை அவனிடம் இருந்து வாங்கிக் கொள்ள,
” அட என்ன தம்பி நீ… நீ கட்டிக்க போற பிள்ளைக்கு நீயே வெச்சு விடுப்பா… ” என்று அந்த பூக்கார அம்மாவும் சொல்ல,
அவர்கள் அப்படி சொல்லியதும், அவன் மனம் ஆனந்தத்தில் துள்ள, சரி… என்று அவள் கையில் இருந்து மீண்டும் பூவை வாங்கிக் கொண்டு நிலாவை திருப்பி நிருத்தியவன் முதலில் அந்த மல்லி சரத்தை நீளமாக வைத்து பார்த்தான் பின்பு இரட்டையாகவும் வைத்து பார்த்தான். அது அவள் மெனக்கெட்டு பின்னிய ஆயிரங்கால் பின்னலை மறைக்க, மல்லி சரத்தை இரட்டையாக மடித்து அவள் பின்னலுக்கு அடியில் விட்டு எடுத்து வட்டமாக வைத்து பார்த்தான்.
இப்பொழுது அவள் அலங்காரத்திற்கும் பின்னலுக்கும் ஏற்றது போல் அழகாக இருந்தது.
நல்ல வேலை பூக்கடைக்கார அம்மா, தன் கடையில் பூவிடன் சேர்த்து பூ குத்தும் பின்னும் வைத்து இருக்க, அவர் அதை கொடுக்கவும் வாங்கியவன்,
மாலினியிடம், ” இது எப்படி பின் பண்ணனும் ? ” எங்க, அவள் பின்னை வாங்கி சொல்லிக் காட்டா அதை பார்த்து விட்டு அதே போல் நிலாலினிக்கு பூவை அவனே வைத்து விட்டான்.
அந்த காட்சியை ஒளிந்திருந்த பல கேமராகள் பல ஆங்களில் ஃபோட்டோ எடுத்தது.
பின் பூக்கடைக்கார அம்மாவுக்கு பணத்தை செட்டில் செய்ய தன் பெர்சனல் அசிஸ்டென்ட்டுக்கு கண் காட்டி விட்டு அவன் அந்த வேலையை செய்ய, இவர்கள் கோவிலுக்கு சென்றனர்.
நேற்று டான்ஸ் பண்ணும் பொழுது அவள் பின் இடையில் கை வைத்திருந்தவாரே இப்பொழுது நடக்கும் பொழுதும் அவன் நிலாலினியின் பின் இடையில் பிடித்திருப்பதே தெரியாத அளவிற்கு மட்டும் கை வைத்திருந்தான். இருவருமாக சேர்ந்து வலது கால் எடுத்து வைத்து கோவிலுக்குள் சென்றனர்.
அப்பொழுது தான் அங்கு ஓம குண்டத்திற்கு முன் அமர்ந்திருந்த இந்திரா திலிப் இருவரும் ஐயர் சொல்ல சொல்ல மந்திரங்களை ஓதிக் கொண்டிருக்க,
மாலினி, ” இன்னும் டைம் ஆகும் போல நம்ம போய் முதல்ல சாமி கும்பிட்டு வந்திடலாமா ? ” என்று கேட்டாள்.
நிலாலினிக்கு சாமி நம்பிக்கை எல்லாம் இல்லை ஆனாலும் இது போல் எப்பவாவது வரும் பொழுது கோவிலை சுற்றிப் பார்க்க ஆசைப்படுவாள்.
மாலினி அப்படி கேட்கவும் நிலாலினியும் கண்கள் மின்ன சரி என்று தலை ஆட்டிவிட்டாள். பின்பு தான் அவனை கவனித்த நிலாலினி, ” நீங்க வேணா அங்க இருக்கீங்களா நாங்க போய்ட்டு வந்துடுறோம் ! ” எங்க,
” ஏய்… என்ன நிலா ! நீயே அவர வரவேண்டான்னு சொல்லிருவ போல ! “, என்ற மாலினி,
” நீங்க வாங்க ப்ரோ… அவ எப்பவும் இப்படி தான். உரிமையா எதையும் கேட்காம எல்லாத்துக்கும் தயங்கிட்டு அவளே நம்மள தள்ளி வைப்பா… நம்மளா தான் அவ ஜோன்குள்ள போகனும் வாங்க… ” என்று விட்டு, இருவரையும் வழி நடத்தி சென்றாள்.
அவனும் இது வரை கோவிலுக்கு எல்லாம் வந்தது இல்லை தான். சாமியா… யாரு அது ! சாமி கும்பிடனுமா… அது எப்படி ! என்று கேட்டும் என் போல் லிஸ்ட்டில் அவனும் ஒருத்தன்.
மாலினி முன்னே செல்ல அவள் பின்னாலே நிலாலினியுடன் சென்று சாமி தரிசனம் முடித்து ஐயர் மீனாட்சி அம்மனின் குங்குமத்தை கொடுக்க, ” ப்ரோ… நிலாவுக்கு நீங்களே வெச்சு விடுங்க… ” என்று மாலினி எடுத்து கொடுக்கவும்,
நிலாலினி அதை தடுக்கும் முன்னே, அவன் நிலா நெற்றில் அவளின் ஒயிட் ஸ்டோன் பொட்டுக்கும் அவள் நெற்றி வகுற்றிக்கும் நடுவில் சிறு கீறல் இட்டது போல் அழகாக வைத்தான்.
மாலினி, ” நிலா… நீ அவருக்கு வெச்சு விடு ” எங்க, நிலாலினி வேறு வழயில்லாமல் திருநீற்றை எடுத்து அவனுக்கு கீற்றல் இட்டாள்.
நிலாவின் அந்த நெருக்கம் அவனுக்குள் குளிர்கால பனி சாரலை கொடுத்து இருந்தது. இது போல் சந்தர்ப்பங்களை எல்லாம் உருவாக்கி தரும் மாலினியை நிலாவுக்கும் அவனுக்கும் பக்கத்திலேயே வைத்துக் கொள்ள வேண்டும் என்று தான் தோன்றியது அவனுக்கு.
அவர்கள் மூவரும் பிரகாரத்தை சுற்றி வர, அவர்களை தள்ளி பின் தொடர்ந்து வந்து கொண்டிருந்த அவனின் பெர்சனல் அசிஸ்டென்ட் அவன் அருகில் வந்து, ” சார்… ” என்று ஃபோனை கொடுக்க, அதை வாங்கி பார்த்து விட்டு, பெண்களிடம் ” ஆங்… இம்பார்டன்ட்டான கால் நான் போய் பேசிட்டு வர. நீங்க இரண்டு பேரும் அங்க போய் வெயிட் பண்ணுங்க… ” என்று சொல்லிவிட்டு, ” மாலினி பாத்துக்கங்க… ” என்று நிலாவை அவள் பொறுப்பில் ஒப்படைத்து விட்டு தன் பாடிகாட்ஸ் உடன் சென்றான்.
நிலாலினியும் மாலினியும் இந்திரா திலிப்புக்கு முகூர்த்தம் நடக்கும் இடத்திற்கு அருகில் வர, இருவரும் பிரிந்து சென்று அங்கு இருந்த சில கிளாஸ்மேட்களுடன் பேசி வைத்துக் கொண்டிருக்க,
முதல் நாள் இந்திராவுடன் ஹோட்டல் ரிசப்ஷனில் நின்று இருந்த அந்த மிக் செட் வாய் நிலாலினியை கவனித்து விட்டு மாலினியிடம், ” ஹே… என்ன மாலினி… நிலா எப்பவும் நான்லா பூவே வைக்க மாட்டேன்னு ஓவரா பிகு பண்ணுவா ! அன்னைக்கு எல்லாரும் காலேஜ் டிரடிஷனல் டேக்கு குரூப் ஃபோட்டோ எடுக்க பூ வெச்சு இருக்கோம்ன்னு சொல்லி அவளுக்கும் இந்திரா வெச்சு விட போனப்ப கூட எல்லார் முன்னாடியும் எனக்கு பூ வைத்தே, எனக்கு இது எல்லாம் பழக்கம் இல்லைன்னு சொன்னா ! இன்னைக்கு என்ன அதிசயமா அவளே பூ வெச்சு இருக்கா ! அதுவும் மல்லி… பூ ! ” என்று கேட்க,
மாலினி, ” அது மன்னவன் சூடி விட்ட மல்லிகை ” என்று சிரித்தவள், அந்த மிக் செட் வாய் புரியாமல் முழிக்கவும், ” அது அவளோட ஆளு வாங்கி வெச்சு விட்டாரு பா… ” எங்க,
அவள், ” ஆளா ! ” என்று சந்தேகமாக கேட்க,
” ஆமா… நேத்து நீ எங்கேஜ்மென்ட்க்கு போனதானே ! அங்கு நிலா கூட டான்ஸ் பண்ணுனாருன்னு சொல்லி நம்ம வாட்ஸ் அப் குரூப்ல ஃபோட்டோ எல்லாம் வந்துதே ! அது தான் அவ ஆளு ! ” என்றாள் மாலினி.
அவள், ” என்ன டி சொல்லுற… நிஜமாவா ! ” என்று வாயை பிளக்க,
மாலினி, ” ஆமான் டி… இவ்வளோ நேரம் அவங்க இரண்டு பேரும் ஒன்னா தான் இருந்தாங்க. நானும் அவரு வந்தது இருந்து அவங்க இரண்டு பேரு கூட தான் இருந்த. அந்த மல்லி மட்டும் இல்லை நிலா நெத்தில இருக்குற குங்குமம் கூட அவரு தான் வெச்சு விட்டாரு… எப்படி ! நிலா அதுனாலையே இன்னைக்கு ரொம்ப அழகா தெரியுறாள ! ” என்று அங்கு தள்ளி நின்று கொண்டிருக்கும் நிலாலினியை பார்த்து மெச்சுதலாக பேசினாள் மாலினி.
ஆனால் அவள் பக்கத்தில் இருந்த அந்த மிக் செட் வாயோ, ” ஓ… அப்படியா ” என்றாள். அவள் அப்படி ஓ… அப்படியா என்றாலே
அவளின் ரேடியோவின் ஸ்பீக்கர் ஆன் ஆகி விட்டது என்று அருத்தம். கொஞ்ச நேரத்தில் அந்த விஷயம் மலமல என்று பரவ ஆரம்பித்தது.
மாலினிக்கு ஃப்ரெண்ட்ஸ் கொஞ்சம் ஜாஷ்த்தி அவள் பேச்சு இப்போதைக்கு முடியாது என்று நகர்ந்த நிலாலினி, இந்திராவுக்கு எதிரில் கண் பட்டும் தூரத்தில் இருந்தே ஹாய்… என்று கை காட்டி விட்டு அவர்களுக்கு எதிரில் போட்டு இருந்த சேர்களில் முன் வரிசையில் இருந்த காலி சேரில் அமர, அதை பார்த்து அங்கு வந்த திலிப்பின் அப்பா சுந்தரம், ” எம்மா… நீ இரண்டாவது ரோ இல்லைன்னா நாலாவது ரோல போய் உக்காரு மா… இது எல்லாம் பெரிய பெரிய பிசினஸ் மேன்களுக்கு போட்டது… ” என்று விரட்டி விட,
நிலாலினி அவர் கூறியதை பெரியதாக எல்லாம் எடுத்துக் கொள்ள வில்லை. இது எல்லாம் பெரிய இடத்து ஆட்கள் வந்து போகும் இடத்தில் சகஜம் தான் என்று அமைதியாய் எழுந்து சென்று பின்னால் நாலாவது ரோவின் ஓரத்திற்கு அருகில் அமர்ந்துக் கொண்டாள்.
பாவம் சுந்தரம் நேற்று அவர் முதலாளி உடன் டான்ஸ் செய்த பெண் யார் என்று கவனிக்க வில்லை. அப்படி கவனித்து இருந்தால் அது இவள் தான் என்று அவருக்கு தெரிந்து இருக்கும்.
சில நிமிடங்களில் நிலாலினியிடம் மாலினி வந்து விட்டாள், ” என்ன நிலா அவரு இன்னும் வரலையா ? ” எங்க, நிலா இல்லை என்று தலை ஆட்டினாள்.
மாலினி, ” சரி விடு… அவரு மெதுவா வரட்டும்… அது வரைக்கும் நான் உனக்கு கம்பனி கொடுக்குற. என் ஹஸ்பண்ட்டும் நீ முன்னாடி போ நான் கரெக்ட்டா தாலி கட்டுற டைமுக்கு வந்துடுறனு சொன்னாரு… இன்னும் வரல… ” என்று இருவரும் அமர்ந்து இருக்க,
ஐயர் மாப்பிள்ளைக்கு தாலி எடுத்து கொடுக்க, ” ஐயரே… இருங்க… முக்கியமா வந்து முன்னாடி நிற்க வேண்டியவங்க இன்னும் வரல. வெயிட் பண்ணுங்க… ” என்று கல்யாணத்தை நிறுத்தி வைத்தார்.
நிலாவின் நிழல் தொடரும்…
____________________________
கதையை படித்து விட்டு பிடித்து இருந்தால் உங்கள் கருத்துக்களை என்னுடன் கமெண்டில் பகிர்ந்து கொள்ளுங்கள் மக்காஸ்…
– தமிழ் நிலா
No comments yet.