அடுத்த நாள் திலிப் மற்றும் இந்திராவின் எனகேஜ்மெண்ட்டிற்கு ரெட் கலரில் ஃபிஷ் கட் டைபில் லகேங்க அணிந்து துப்பட்டாவை அவளது ஷுல்டரில் இருந்து பின்புறம் U வடிவில் மடிப்புகளுடன் தொங்குவது போன்று ஸ்டைல் செய்து இருக்க,
பாதி முடியை வாரி ஸ்டோன் வைத்த கிளிப்புக்குள் அடக்கி மித்ததை கர்லிங் செய்து தன் டிரஸுக்கு ஏற்ற சிம்பிள் எல்கன்ட்டான அக்ஸ்சஸ்சொரிஸ் மட்டும் அணித்து அளவான சாயம் தீட்டி பன்னீர் ரோஸ் போல் இருந்த அவள் உதட்டில் பூத்த சிறு புன்னகையுடன் அழகாக வந்தாள் நிலாலினி.
புதிதாய் அவளை பார்த்த பலர் அவள் மாடல்கள் போல் ஸ்டைலாக டிரஸ் செய்திருந்தாலும் பார்ப்பவர்கள் முகம் சுளிக்கும் அளவிற்கு இல்லாமல் கொஞ்சம் தெரியும் அவள் மென் இடையையும் கூட நெட் டிசைன் கிளாத்தால் மறைக்கப்பட்டு இருக்க அவளை பார்த்து ஆட்ச்சரியப் பட்டனர்.
ஏனென்றால் அந்த எனகேஜ்மெண்ட்டிற்கு வந்திருந்த பல இளம் பெண்கள் டிசைனர் டிரஸ்களை கவர்ச்சியாக தான் அணிந்து இருந்தனர். கேட்டால் இது பெரிய இடத்து ஃபங்ஷன் அதனால் அப்படி தான் இருக்கும் என்று விடுவார்கள்.
அது போல் கவர்ச்சியான உடையில் வந்துருந்தவர்கள் கூட நிலாலினியின் அழகின் பொறாமை தான் கொண்டனர்.
ஃபங்ஷன் நல்ல படியாக நடந்துக் கொண்டிருக்க நிலாலினி அவர்களுக்காக கொண்டு வந்திருந்த கிஃப்ட்டைக் கொடுக்க ஸ்டேஜிக்கு சென்றாள்.
வெளியில் வரவேற்புக்கு பக்கத்தில் நின்று யாரையோ எதிர்பார்த்து காத்திருந்தார் திலிப்பின் அப்பா சுந்தரம்.
அவர் எதிர்பார்த்த அந்த ரோல்ஸ் ராய்ஸ் பண்டோம் கார் வந்து நிற்க அவசரஅவசரமாக அங்கு ஓடினார் சுந்தரம்.
அந்த காரில் இருந்து பிளாக் கலர் கோட் சூட்டில் ஒரு பக்கம் ஷுல்டரில் மட்டும் டிசைன் செய்யப்பட்டு மற்றொரு பக்கம் பாக்கெட்டில் சிறு சிவப்பு துணி எட்டி பார்க்க காலில் அவனுக்கு எனவே ராஜா காலத்து நுப்பங்கள் பொறித்து இந்த காலத்திற்கு ஏற்ப ஸ்பெஷலான டிசைன் செய்த விலை உயர்ந்த சூ மின்ன கண்ணில் கூலர் கிளாஸ் உடன் மாஸாக வந்து இறங்கினான் ஒருவன்.
அவனை பார்த்ததும் சுந்தரம், ” சார்… ஐ கான்ட் பிலிவ் இட். தேங்க்ஸ் ஃபார் கமிங் சார். வீ சோ பிலஸ்ட் டூ ஹவ் யூ ஹியர் டுடே ” என்று அவனை வரவேற்க,
அதற்கு அவன் எதுவும் பெரியதாக ர்ஸ்பொன்ஸ் செய்யாமல் சிறு தலை அசைவை மட்டும் பதிலாய் கொடுத்தவன் அவனின் பெர்சனல் அசிஸ்டென்ட் கையில் ஒரு கிஃப்ட் பாக்ஸ்யை எடுத்துக் கொண்டு வர, முன்னே சென்றான்.
அவன் உள்ளே நிழையவும் அந்த இடத்தில் இருந்த லைட்களின் பிளர் என்ற வெளிச்சத்தையும் மிஞ்சியது அவனது வருகை. அவனது சர்ப்பான முக வடிவமும் செதுக்கிய உடல் அமைப்பும் அனைவரின் கவனத்தையும் அவன் புறம் திருப்பியது.
அவனை தெரியாதவர்கள் அவனை வாய் பிளந்து பாருக்க, அவனை தெரிந்தவர்கள் எல்லாம் அவன் வரவும் எழுந்து நின்று மரியாதை செய்தனர்.
அதற்கு எல்லாம் காற்றுக்கே வலிக்காத அளவிற்கு சிறு தலை அசைவு மட்டும் தான் செய்தவன், அவனது நீண்ட கால்கள் அழுத்தமாக பதிந்து நேராக ஸ்டேஜை நோக்கி செல்ல,
அவனின் பெர்சனல் அசிஸ்டென்ட் அவன் பின்னால் ஓட்டமும் நடையுமாக வர, சுந்தரமோ அனைவரும் விலகுமாறு சைகை காட்டி கொண்டே அவனுக்கு சைடில் ஓடி வந்தார்.
சரியாக அப்பொழுது நிலாலினி ஸ்டேஜில் அடுத்த ஆளாக திலிப் இந்திராவுக்கு கிஃப்ட் கொடுக்க போக, மற்றவர்களை விளக்கி அவன் செல்ல வழி செய்த சுந்தரம், நிலாலினியை போக சொல்லும் மாரு திலிப்பிடம் ஜாடை செய்து கொண்டே செல்ல போக, திலிப்பின் பார்வையோ மொத்தமும் தங்களின் அருகில் வந்த நிலாலினி மேல் தான் இருந்தது.
நிலாலினி கிஃப்ட்டை கொடுத்து விட்டு இந்திராவுக்கு மட்டும் கை கொடுத்து திலிப்புக்கு வேறு வாய் வார்த்தையாக மட்டும் வாழ்த்த ” அப்போ எனக்கு ஒரு ஹேன்ட் ஷேக் கூட இல்லையா ! ” என்று தான் திலிப் அவளையே பார்க்க,
சுந்தரத்துக்கோ தன்னை கவனிக்காத தன் மகன் கண்ணை அங்கேயே நோண்டி எடுத்து தரையில் போட்டு மிதித்து விட வேண்டும் என்று தான் இருந்தது.
ஏன்னென்றால் அவருடன் இருந்த ஆள் அத்தனை பெரிய ஆள். ஐ மீன் சைசில் அல்ல பதவியில். அதாவது சுந்தரத்தின் முதலாளியே அவன் தான்.
இந்திராவுக்கு நிலாலினி மேல் பொறாமை பொங்கி வழிந்தாலும் நேற்று அவள் பரப்பிய புரலியால் இன்று நிலா அழ போகிறாள் என்று மனத்தில் துள்ளியவள் சிரிப்புடனே அவளின் வாழ்த்துகளை பெற்று நிலாலினியை கட்டி வேற பிடித்தாள்.
அதை பார்த்ததும் திலிப்புக்கு இன்னும் வயிறு புகைந்தது. அவன் மனதில், ” கம்முன்னு நம்மலும் பொண்ணாவே பொறந்து இருக்கலாம் போல ” என்றும் கூட தோன்றியது. அப்பொழுது ஆவது நிலாவின் அணைப்பு அவனுக்கு கிடைத்து இருக்கும் என்று தான்.
சுந்தரம், ” சார் நீங்க வாங்க நான் அந்த பொன்ன போக சொல்லிடுற ” என்று நிலாலினியை ஃபோட்டோ எடுக்காமலே கூட அனுப்பி வைக்க போக, ” மிஸ்டர். சுந்தரம்… ” என்ற அவனது அழைத்தில் திரும்பியவர், ” வெயிட் ” என்ற அவன் சொல்லுக்கு கட்டு பட்டு நின்ற விட்டார்.
நிலாலினி ஃபோட்டோ எடுப்பதற்காக வலது புறம் இருந்த இந்திரா அருகில் சென்று நிற்க, அந்த ஃபோட்டோகிராபரோ, ஸ்டேஜுக்கு அருகில் சுந்தரம் பக்கத்தில் நின்று இருந்த அவனை பார்த்து, ” சார்… நீங்களும் வந்துடுறீங்களா… ஒன்னாவே எடுத்துரலாம் ” எங்க,
சுந்தரம் மறுப்பு பேச வர அதற்குள் அவன் சென்று திலிப் இந்திராவை வாழ்த்தி தன் அசிஸ்டென்ட் இடமிருந்து கிஃப்ட்டை வாங்கி அவர்களுக்கு கொடுத்து விட்டு ஃபோட்டோவுக்கு இடது புறம் நின்றிருந்த திலிப் அருகே தன் அசிஸ்டென்ட் உடன் நின்றுக் கொண்டான்.
அவர்கள் ஃபோட்டோ எடுக்க போக சுந்தரமோ ஓடி சென்று அந்த அசிஸ்டென்ட்டை இடித்து அள்ளி விட்டு அவன் அருகில் நின்று விட்டார்.
அந்த ஃபோட்டோகிராபரோ கேமராவை பார்த்து விட்டு, ” சார்… யாராவது ஒருத்தர் அந்த சைடு மாத்தி நின்னுங்க ” என்றதும்,
சுந்தரம் உடனே அந்த அசிஸ்டென்ட்டிடம் திரும்பி, ” தம்பி… நீ… ” என்று அவனை போக சொல்ல வர அதற்குள் அவரின் மரியாதைக்குரிய அவன், அந்த புறம் சென்று நிலாலினிக்கு அருகில் நின்று விட்டான்.
தன் முதலாளியுடன் நெருக்கமாக நின்று ஃபோட்டோ எடுத்து அதை ஃபேஸ்புக் ட்விட்டர் என்று ஷேர் செய்து என்று எந்த எம்பிளாயி ஃபங்ஷனுக்கும் செல்லாத தன் முதலாளி தன் வீட்டு ஃபங்ஷனுக்கு தனக்காக வந்தார் என்று பெருமை பீத்த நினைத்த சுந்தரத்திற்கு முகம் சுருங்கி விட்டது.
ஃபோட்டோகிராபர், ” ஸ்மைல்… ” எங்க சுந்தரம் மட்டும் மிட்டாயை பறிகொடுத்தது போன்று நிற்க, மற்ற அனைவர் முகத்திலும் சிறு புன்னகை படர அது ஃபோட்டோ ஆக அழகாய் படம்பிடிக்கப்பட்டது.
நிலாலினி எடுத்துக் கொண்டது என்னவோ அந்த ஒரு ஃபோட்டோ தான். ஆனால் அவளின் நிழலுக்கு இன்று அவளை வளைத்து வளைத்து பல ஆங்களில் ஃபோட்டோகள் அவனது ஆட்கள் மூலம் எடுத்து அனுப்பப்பட்டது.
அதை அனைத்தையும் தன் ஃபோனில் பார்த்துக் கொண்டிருந்தவன் கண்ணிற்கு அவள் எப்படி பார்த்தாலும் ஹீரோயின் மாதிரியே தெரிய அதை ரசித்தது போதாது என்று, நேரிலும் அவள் ஆங்காங்கு நடமாடும் பொழுது எல்லாம் அவளுக்கே தெரியாமல் அவளை சைட் அடித்துக் கொண்டு தான் இருந்தான் நிலாவின் நிழல் அவன்.
ரிஷப்சன்னுக்காக ஃபோட்டோ எடுக்க நின்று இருந்த புது ஜோடி அதை முடித்து விட்டு எங்கேஜ்மெண்ட் பார்ட்டிக்கு ரெடி ஆகினர்.
அந்த ஹால்லும் டேன்ஸ் புளோர் டிம் லைட் எல்லாம் செட் செய்யப்பட்டது.
நிலாலினி சாப்பிட பப்பெட்டுக்கு செல்லவும் அங்கு இருந்த அவளுடன் படித்த சிலர் நின்று இருக்க அவர்கள் நிலாலினி வந்ததும் அவளை ஒரு மாதிரியாக பார்த்து விட்டு விலக சென்றனர்.
நிலாலினி அதை எல்லாம் கண்டுகாணாது போல் சாப்பிட்டு முடித்து வந்து கடைசியாக ஐஸ் கிரீம் வாங்கி சென்று ஒரு இடத்தில் அமர்ந்து சாப்பிட போக, நந்தி போல் வந்தனர் இந்திராவின் முப்பெரும் தேவியர்கள்.
நிஷா, ” என்ன நிலா… தனியா இருக்க ? உன் லவ்வர் எங்க ! “
ஷாலினி, ” ஏய்… என்னடி பேசுற ! இந்த மாறி பொது இடத்துக்கு எல்லாம் எப்படி இவ அவளோட லவ்வர தைரியமா கூட்டிட்டு வருவா ? என்ன தான் நம்ம கல்சர் முன்னேறி இருந்தாலும் இன்னும் இந்த மாதிரி விஷயம் எல்லாம் அக்ஸ்சட் பண்ணிக்குர அளவுக்கு நம்ம ஊரு இன்னும் முன்னேறல “
நிஷா, ” அதுவும் சரி தான்… ” எங்க, நிலாலினிக்கு அவர்கள் பேசுவது எதுவுமே புரியவில்லை.
இதில் மகா வேறு, ” நிலா… நீ ஒன்னும் கவள படாத. சீக்கிரமா நம்ம நாடு முன்னேறிடும். அப்பறம் நீ ஓபன்னாவே உன் லவ்வர் கூட இந்த மாறி ஃபங்ஷனுக்கு எல்லாம் வரலாம் ” என்றதும்
நிஷா, ” ஏய்… என்னடி ! விட்டா அவளுக்கும் அவளோட லவ்வருக்கும் இந்த மாதிரி ஃபங்ஷன் எல்லாம் வைக்க சொல்லுவ போலையே நீ ! ” என்று மகாவுடன் கேலியாக வம்பிற்கு நிற்பது போல் பேச,
மகா, ” ஏன் ! அதுல என்ன தப்பு ! காதல் விருப்பு வெறுப்பு எல்லாம் ஒருத்தங்களோட தனி பட்ட சுதந்திரம். அத மித்தவன் இது சரி இது தப்பு இன்னு ஜட்ஜ் பண்ண முடியாது. பண்ணவும் கூடாது.
நிலா யாரு என்ன சொன்னாலும் சரி… உன் லவ்வுக்கு நான் சுப்போர்ட் பண்ணுற. சரியா ! “, என்று அவள் நிலாலினியின் கை பிடிக்க,
எதுவும் புரியாத நிலாலினி அவளிடம் எதோ கேட்க வருவதற்குள்,
நிலாலினி கையை பிடித்து இருந்த மாகவின் கையை வெடுக்கென்று பிரித்து இழுத்த ஷாலினி, ” ப்ச்… லூசா டி நீ ! அவ கைய போய் பிடிக்கிற ! அவளே ஒரு லெஸ்பியன். நீ அவ கைய பிடிச்சு அப்பறம் அவளுக்கு உன்ன பிடிச்சு இது எல்லாம் தேவையா உனக்கு ! ” எங்க,
நிலா அவள் சொல்லிய வார்த்தைகளில், ” வாட் ! நா… நான்… இல்லை நான்… அப்படி இல்ல… “
நிஷா, ” நடிக்காத டி. எல்லாம் திலிப் எங்க கிட்ட சொல்லிட்டான். நீ லெஸ்பியன் உனக்கு பொண்ணுங்க மேல தான் விருப்பம், பசங்கள உனக்கு சுத்தமா பிடிக்காதுன்னு. நீ திலிப்ப கைய பிடிக்க கூட விட்டது இல்லையாமே ! ” என்று முகத்தை சுழித்துக் கொண்டே எகத்தாலமாய் பேச,
ஷாலினி, ” அதனால தான திலிப் இவள புடிச்சு தொங்கிட்டு இருக்குறது வேஸ்ட்ன்னு விட்டுட்டு அவன் வாழ்க்கைய அவன் தேர்ந்தெடுத்து கிட்டான் ” என்று அவள் சொல்ல,
அவர்கள் சொல்லிய கூற்றில் நிலாலினிக்கு இதயமே வடித்தது போல் ஆகிவிட்டது.
” ஒரு பெண் கட்டுப்பாடுகளோடு தன்னை தொட அனுமதிக்காமல் இருந்தது தவற ! அதற்காக இப்படியா அவன் என்னை பற்றி சொல்லுவான் ! அப்படியே அவனுக்கு என் மேல் அப்படி ஒரு சந்தேகம் வந்திருந்ததால் கூட அதை என்னிடம் கேட்டு தெளியாவ பேசி இருக்க வேண்டி தானே ! அதை விட்டுவிட்டு இப்படியா என்னை விட்டு அடுத்தவளை தேடி செல்வான் ! அட அது கூட பரவாயில்லை. ஆனால் அவன் மற்றவர்களிடன் இப்படியா என்னை பற்றி அபாண்டமாக சொல்லுவான் ? ” என்று நிலாலினியின் மனம் வலியுடன் கேள்விகளை எழுப்பியது.
அவள் மனதின் வலிக்கு காரணம் ஆனவனோ அங்கு ஸ்டேஜுல் சந்தோஷமாக இந்திராவுடன் டான்ஸ் ஆட ரெடி ஆகி கொண்டிருந்தான்.
நிலாவின் நிழல் தொடரும்…
____________________________
கதையை படித்து விட்டு பிடித்து இருந்தால் உங்கள் கருத்துக்களை என்னுடன் கமெண்டில் பகிர்ந்து கொள்ளுங்கள் மக்காஸ்…
– தமிழ் நிலா
No comments yet.