பாகம் 16

Vaishnavi Vijayaraghavan | 18 May 2026 | Share

தித்திக்கும் தேன்பாவை

பாகம் 16

“நீ என்னை பற்றி புரிஞ்சு வச்சிருக்கிறது அவ்வளவு தானா? நான் உன் மனசை தான் காதலிக்கிறேன். உடம்பை இல்ல” என்றான் ரோஹித்.

“சாரி டா, பாதிக்கப்பட்டதால அப்படி பேசிட்டேன்” என்றாள் ஷிவானி.

“ஏதோ ஒரு தெரு நாய் உன்னை கடிச்சிடிச்சு. அதுக்காக நீ மனசை போட்டு குழப்பிக்காத மா”

“ஏதோ ஒரு தெரு நாய் இல்லடா. வெறி புடிச்ச தெரு நாய்”

” என்ன சொல்ற ஷிவானி? “

“என்னை ரேப் பண்ணியது யாருன்னு எனக்கு தெரியும் “

“யாரு?”

“கிஷோர்”

” கிஷோரா? “

“ஆமாம் டா”

“இதை ஏன் நீ போலீஸ் கிட்டேயும் ஷியாம் கிட்டேயும் சொல்லல?”

“ஷியாம் இருக்கிற மனநிலையில் இதை சொல்லி இருந்தா, அவனை கொலை செஞ்சிட்டு ஜெயிலுக்கு போயிடுவான் டா. உன் கிட்ட சொல்லாம என்னால இருக்க முடியல. அதனால தான் சொல்லிட்டேன். ரோஹித் நீயும் ஆத்திரப்பட்டு அந்த பொறுக்கியை எதுவும் பண்ணிடாத டா. நீயும் ஷியாமும் எனக்கு முக்கியம்” என்று கண்கள் கலங்க கூறினாள் ஷிவானி.

“சரி, நீ கவலைப்படாத மா”

“அவன் தான் என்று உனக்கு எப்படி தெரிஞ்சது?”

“அது வந்து…”

அவளே சொல்லட்டும் என்று அவளை இடை மறிக்காமல் அமைதியாக இருந்தான் ரோஹித்.

” அவனோட கையில் இருந்த பிரேஸ்லெட்டை பார்த்தேன். அந்த கிட்டார் பிரேஸ்லெட் பார்த்ததும் அவன் தான்னு தெரிஞ்சிக்கிட்டேன். அதுவும் இல்லாம அவன் முகத்தையும் பார்த்தேன். நான் மயக்கமா இருக்கிறதா நினைச்சி மாஸ்க் கழட்டிட்டு யார் கிட்டேயோ ஃபோன்ல பேசினான். அப்போ நல்லாவே தெரிஞ்சுகிட்டேன். அவன் தான்னு” என்று சொல்லி அழுதாள். 

அப்போது அவள் கண்களில் இருந்து லேசாக ரத்தம் வழிந்ததைப் பார்த்த நர்ஸ், வேகமாக வந்து,

“போதுமா, ஃபோனை கொடு. கண்ணில் இருந்து ரத்தம் வருது பாரு” என்று சொல்லி ஃபோனை வாங்கி கொண்டு 

“சார், அவங்க அழக் கூடாது. அதனால ஃபோனை நான் வாங்கி கிட்டேன்” என்றார்.

“ஓகே சிஸ்டர், அவளை பத்திரமா பார்த்துக்கோங்க. நான் நாளைக்கு வந்து அவளைப் பார்க்கிறேன்னு மட்டும் அவ கிட்ட சொல்லிடுங்க” என்றான் ரோஹித்.

ரோஹித் சொன்னதை ஷிவானியிடம் சொன்னார் நர்ஸ். அந்த வலியிலும் தன் காதலனை பார்க்கப் போகிறோம் என்ற சந்தோஷம் அவளுடைய முகத்தில் சிறு புன்னகையை வரவழைத்தது.

ஷியாமிடம் அனைத்தையும் சொல்லி முடித்தான் ரோஹித்.

“எங்கே உண்மையை உன் கிட்ட சொன்னா, நீ கோவத்தில கொலைக்காரனா ஆயிடுவியோன்னு பயந்து சொல்லாம விட்டிருக்கா டா ஷிவானி”

தன் தங்கையை நினைத்து கண்கள் கலங்கியது ஷியாமிற்கு.

” எங்க இருக்கான் அவன்?  அவனை நான் கொன்னுடறேன்” என்று ஆத்திரப்பட்டான் ஷியாம். 

” நான் அவனை பழிவாங்க சரியான ஐடியா வச்சிருக்கேன். இதனால நமக்கு பிரச்சனை வராமல் இருக்கும்.”

” என்ன ஐடியா? “

ரோஹித் சொல்ல சொல்ல ஷியாமின் கண்கள் விரிந்தது.

சரி உன்னோட பிளான் படியே நாளைக்கு அந்த கிஷோர் கதையை முடிச்சிடலாம்.

“ஹாஸ்பிடல்ல யாரு ஷிவானியை பார்த்துப்பாங்க? “

” அது ஒன்னும் பெரிய விஷயம் இல்லை. நான் அரேஞ்ச் பண்ணிக்கிறேன் “

” சரி நான் கிளம்புறேன் ” என்றான் ரோஹித்.

” சரி டா மச்சான் ” என்றான் ஷியாம்.

” இதை நீ வாழ்நாள் முழுவதும் உரிமையோடு கூப்பிடனும்னு  நினைக்கிறேன்”

” ஆனா”

” நீ எதுவும் சொல்ல வேண்டாம். நான் ஷிவானியை இப்பவும் மனசார லவ் பண்றேன். இதுவே கல்யாணத்துக்கு அப்புறம் நடந்திருந்தா நான் அவளை விட்டுட்டு இருப்பேனா என்ன? “

” தேங்க்ஸ் மச்சி” என்ற கண்கள் கலங்க அவனை கட்டிக் கொண்டான் ஷியாம்.

” நாளைக்கு எங்க வரணும் எப்போ வரணும் என்ன பண்ணனும்னு நான் உனக்கு மெசேஜ் பண்றேன் “

” சரி மச்சி பை ” என்று சொல்லிவிட்டு இருவரும் அவர்கள் வழி சென்றனர்.

ஹாஸ்பிடலுக்கு திரும்ப வரும்போது,

கிஷோருடன் ஷிவானிக்கு ஏற்பட்ட பிரச்சனையை நினைத்துப் பார்த்தான் ஷியாம்.

கிஷோர் ஒரு கிட்டாரிஸ்ட். எல்லா வருடமும் காலேஜ்  கல்ச்சுரல்ஸ்  டேவிலும் அவனுடைய பெர்ஃபார்மன்ஸ் இருக்கும். நிறைய பேருக்கு தன் வீட்டிலும் கிட்டார் சொல்லி கொடுப்பான்.

கடந்த வருடம் கல்ச்சுரல்ஸ் டே அன்று அவனுடைய பெர்ஃபார்மன்ஸ் முடிந்த பிறகு தன்னுடைய நண்பர்களுடன் கடைசி ரோவில் அமர்ந்து தண்ணி அடித்தான்.

அப்போது அந்த வழியே சென்ற சில பெண்களை கிண்டல் செய்தான். நிறைய பேர் திட்டி விட்டு சென்றனர். அப்போது யாருக்கோ கால் செய்து தன் வீட்டில் இருக்கும் வேறு ஒரு கிட்டாரை எடுத்து வரச் சொன்னான். பின் வாசல் வழியாக காலேஜுக்கு வரச் சொல்லி சொல்லியிருந்தான்.

பிறகு தன் நண்பர்களிடம் ரெஸ்ட் ரூம் சென்று விட்டு வருகிறேன் என்று சொல்லிவிட்டு  சென்றான்.

அங்கே வந்து நின்று கொண்டு இருந்தாள் ஒரு சின்ன பெண்.

“சார், இந்தாங்க சார்” என்று கிஷோரிடம் ஒரு கிட்டாரை  கொடுத்தாள். அவனிடம் மியூசிக் டியூஷனில் படிக்கும் பன்னிரண்டாம் வகுப்பு சின்ன பெண்.

“உன் கிட்ட பேசணும் வா ” என்று சொல்லி அவள் தோளில் கையை போட்டு யாரும் இல்லாத பக்கமாக அழைத்துச் செல்லப் பார்த்தான்.

அவன் நிதானமாக இல்லை என்று தெரிந்து கொண்ட அந்த பெண்,

” இல்ல சார், அம்மா வீட்டில் தேடுவாங்க நான் கிளம்பறேன் “

” பத்து நிமிஷத்துல போயிடலாம் வா “

” இல்ல சார் வேண்டாம்” என்று சொல்லி அவன் கையை தன் தோளில் இருந்து எடுத்து தள்ளிவிட்டு அங்கிருந்து ஓட பார்த்தாள்.

ஆனால் கிஷோர் அவளை பிடித்து அவள் வாயை பொத்தி இருட்டு பக்கமாக இழுத்துச் சென்றான்.

காலேஜ் கல்ச்சுரல்ஸ் சத்தத்தில் அந்தச் சின்ன பெண் அலறியது யாருக்கும் கேட்கவில்லை.

எதேச்சையாக அங்கு பாத்ரூம் செல்ல வந்த ஷிவானிக்கு அந்த சின்ன பெண்ணின் குரல் கேட்டு ஓடிச் சென்று அவனை இரண்டு அடி அடித்து அந்தப் பெண்ணை காப்பாற்றியது மட்டும் இல்லாமல் கிஷோரை போலீசில் பிடித்துக் கொடுத்தாள். அவனுக்கு ஆறு மாதக்காலம் சிறை தண்டனை கிடைத்தது. மேலும் காலேஜில் இருந்தும் டிஸ்மிஸ் செய்தனர். 

அந்த வஞ்சத்தில் தான் அவன் ஷிவானியை அப்படி செய்திருக்கிறான்.

நினைக்க நினைக்க ஆத்திரமும் கோபமும் ஷியாமின் கண்களில் தாண்டவம் ஆடியது.

மறுநாள் ரோஹித்தின் காலிற்காக வெயிட் செய்து கொண்டிருந்தான் ஷியாம்.

நந்தினிக்கு கால் செய்து,

“நந்து, ஒரு ஹெல்ப் பண்ண முடியுமா?”

” நானே உனக்கு நேத்துல இருந்து கால் பண்ணனும்னு நினைச்சுக்கிட்டு இருந்தேன் டா. அது வந்து”

” அதெல்லாம் அப்புறம் பேசிக்கலாம். எனக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு. நான் போயிட்டு வர வரைக்கும் நீ ஹாஸ்பிடல் வந்து ஷிவானியை பார்த்துக்கிறியா? “

” இதையெல்லாம் நீ கேட்கணுமாடா. கண்டிப்பா பாத்துக்குறேன் “

” ஓகே தேங்க் யூ நந்து ” என்று சொல்லி ஃபோனை வைக்க வந்தவனிடம்.

“ஷியாம் “

” சொல்லு”

” நீ கொஞ்சம் ரிலாக்ஸா இரு, அப்பதான் அவளை அதிலிருந்து வெளியே கொண்டு வர முடியும் “

“ஹூம்,”

” சரி நான் இப்பவே வரேன் வெயிட் பண்ணு “

“இல்ல நந்து, நீ வா நான் அதுக்குள்ள கிளம்பிடுவேன். நீ வர வரைக்கும் நர்ஸ் பார்த்துக்க சொல்லிட்டு போறேன் “

” அப்படி என்ன முக்கியமான வேலை? “

” அதான் வந்து சொல்றேன்னு சொல்றேன்ல? “

” ஓகேடா டேக் கேர், பை.” என்று சொல்லி ஃபோனை வைத்துவிட்டு நந்தினி தன் அம்மாவிடம்.

” அம்மா, ஷிவானியும் ஷியாமும் ஊருக்கு போகல. அவளுக்கு தலையில அடிபட்டுடுச்சு. ஹாஸ்பிடல்ல இருக்கா. நிச்சயதார்த்த வேலையில நம்ம பிஸியா இருக்கும்போது அதை சொல்லி உங்கள டென்ஷன் பண்ண வேண்டாம்னா ஷியாம் என்கிட்ட சொன்னான்”

“என்னடி லூசா நீ, அவன் சொன்னான் என்று நீ என்கிட்ட சொல்லாம விட்டுடுவியா?. நாளைக்கு சிவகாமி அண்ணி வந்து என்கிட்ட கேட்டாங்கன்னா நான் என்ன சொல்றது? இந்த மாதிரி கொஞ்சம் கூட பொறுப்பே இல்லாம இருக்கே.”

” சரி மா உங்க பஞ்சாயத்து எல்லாம் அப்புறமா வச்சுக்கோங்க. இப்ப ஷியாமுக்கு எங்கேயோ வெளிய போகனுமாம் அதனால கொஞ்ச நேரம் ஹாஸ்பிடல் வந்து என்னை பார்த்துக்க சொல்லி இருக்கான். நான் போயிட்டு ஈவினிங் வந்துடறேன் “

” ஏய் நில்லுடி, நானும் வரேன் “

“வேண்டாமா, நீங்க வீட்டுக்கு வந்த அப்புறம் பாத்துக்கோங்க. உங்க கிட்ட சொல்லிட்டேன்னு தெரிஞ்சா அவன் கோபப்படுவான். தகவலை அப்பாகிட்ட மட்டும் சொல்லிடுங்க. “

என்ற சொல்லிவிட்டு தன் பைக்கை எடுத்துக் கொண்டு கிளம்பினாள் நந்தினி.

தொடரும்….

அ. வைஷ்ணவி விஜயராகவன்.

இந்த episode பிடிச்சிருந்தா எழுத்தாளரை உற்சாகப்படுத்துங்க!!
இப்போதே உற்சாகப்படுத்துங்கள்

இந்த படைப்பை மதிப்பிட விரும்புகிறீர்களா?

Click on a star to rate it!

No votes so far! Be the first to rate this post.

    No comments yet.