
தித்திக்கும் தேன்பாவை
பாகம் 14
” இப்ப நெனச்சா கூட என் வாய் எல்லாம் இனிக்குதடி அன்னைக்கு நம்ம கொடுத்து கிட்ட கிஸ்”
” போதும் போதும், அதுவே ஜஸ்ட் மிஸ். நல்லவேளை நம்மள நந்தினி பார்க்கவில்லை. பார்த்திருந்தா அவ்வளவுதான். என் கூட சண்டை போடுறது மட்டும் இல்லாம. எல்லார்கிட்டயும் சொல்லிட்டு இருப்பா”
” அதுக்கு தான் நீயே சொல்லிடுன்னு சொல்றேன் “
” சரிடா நான் ஃபோனை வைக்கிறேன். அதையெல்லாம் அப்புறம் பேசலாம்”
” இருடி பேசிக்கிட்டே இருக்கேன் அதுக்குள்ள ஏன் வைக்கிற என்னோட “தித்திக்கும் தேன்பாவையே”
” என்னது தித்திக்கும் தேன்பாவையா?
அப்படின்னா?”
” தமிழ்ல தானடி சொன்னேன். அதுக்கு ஏன் அர்த்தம் கேக்குற? “
” ரொம்ப ஓவரா பண்ணாத சொல்லு”
” இனிமையான தேன் போல சுவையுடைய இதழை பெற்ற என்னுடைய பாவை நீ, எப்படி? “
” போதும் போதும், நான் கிளம்புறேன் நந்தினி வீட்டுக்கு ” என்று சொல்லி ஃபோனை வைத்தாலும் மனதிற்குள் ரோஹித்தையே நினைத்துக் கொண்டு வெட்கத்துடன் சிரித்தபடி நந்தினியின் வீட்டிற்கு சென்றாள் ஷிவானி.
அவர்கள் இருவரும் பர்சனலாக பேசியதை தவிர மற்றது அனைத்தையும் ஷியாமிடம் சொல்லி முடித்தான் ரோஹித்.
” மறுபடியும் ஷிவானி உனக்கு ஃபோன் பண்ணலையா? ” என்றான் ஷியாம்.
” பண்ணினா, ஃபோனை வச்சிட்டு போன பத்து நிமிஷத்துக்கு எல்லாம் மறுபடியும் பண்ணினா. “
” என்ன சொன்னா? “
” ஹலோ ரோஹித்”
” என்னடி அதுக்குள்ள மறுபடியும் கால் பண்ற? “
” உனக்கு ஒரு ஷாக்கிங் நியூஸ் சொல்லவா?”
“என்ன?”
” ஷியாமும் நந்தினியும் லவ் பண்றாங்க”
” வாட், இது எப்ப நடந்தது? “
” எனக்குமே அதெல்லாம் ஒன்னும் தெரியல டா. இப்பதான் நான் போய் பார்த்தேன் ரெண்டு பேரும் லிப் டு லிப் கொடுத்து கிட்டு இருக்காங்க. “
” ஒரு வருஷமா லவ் பண்ற நம்ம ரெண்டு பேருமே போன மாசம் தான் முதல் முறையா கிஸ் பண்ணினோம். ஷியாம் எவ்ளோ ஃபாஸ்டா இருக்கான்னு பாரு, நீயும் இருக்கியே? “
” இரு இரு, நீ இப்ப என்ன சொல்ல வர? “
” நீ உங்க அண்ணா அளவுக்கு ஃபாஸ்ட் இல்லைன்னு சொல்றேன் “
” அடுத்த முறை நான் கொடுக்கும்போது என்னோட திறமையை நீ தெரிஞ்சுப்ப”
” அப்படின்னா நான் இப்பவே வரவா? “
” இல்ல இல்ல, வேலன்டைன்ஸ் டே அன்னைக்கு தான் “
” அச்சச்சோ அதுக்கு இன்னும் பத்து நாள் இருக்கே? “
” காத்திரு கண்ணாளா” என்று சொல்லி சிரித்தாள் ஷிவானி.
” ஏய் ஃபோன்லையாவது கொடு டி”
” அதெல்லாம் முடியாது . சரி சரி ஃபோன வை வந்துட்டாங்க போல. வெளிய சத்தம் கேட்குது. “
” ஓகே பை தேனு” என்று சொல்லி ஃபோனை வைத்தான் ரோஹித்.
சிரித்தபடி ஃபோனை வைத்தாள் ஷிவானி.
“இதுதான் நேத்து நடந்தது. இப்போதாவது சொல்லு என்ன ஆச்சு? ஷிவானி எங்கே?” என்றான் ரோஹித். இப்போதும் அவர்கள் பர்சனலாக பேசியதை ஷியாமிடம் சொல்லவில்லை ரோஹித்.
“ஷிவானிக்கு அடிபட்டு இருக்கு “
” எப்படி? என்ன ஆச்சு?”
” அதெல்லாம் என்னை எதுவும் இப்ப கேட்காத “
எதிரில் அமர்ந்திருந்தவன் எழுந்து வந்து அவன் பக்கத்தில் இருந்த சேரில் அமர்ந்து அவன் சட்டையை பிடித்து உலுக்கி கேட்டான்.
” ஷியாம் சொல்லு, என்ன நடந்துச்சு என்னோட ஷிவானிக்கு”
அவன் கையைப் பிடித்து உதறித் தள்ளி,
” யாரோ வீட்டுக்குள்ள பூந்து இருக்காங்க, திருட வந்தவங்களான்னு தெரியல. வீட்ல எந்த பணம் நகையும் இல்லாததால கோவத்துல என் தங்கச்சி தலையில அடிச்சிருக்காங்க. இப்ப அவ மயக்கத்துல இருக்கா. மயக்கம் தெளிஞ்சாதான் யாருன்னு தெரியும் “
” மறுபடியும் பொய் சொல்ற ஷியாம். என்ன நடந்துச்சுன்னு உண்மைய சொல்லு “
” இதுதான் நடந்துச்சு” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பி சென்றான் ஷியாம்.
“ஒரு நிமிஷம் ஷியாம்” என்று கத்தினான் ரோஹித்.
திரும்பிப் பார்த்தான் ஷியாம்.
” என்னை ஒரே ஒரு முறை ஷிவானியை பார்க்க அலோ பண்ணு ப்ளீஸ் ” என்று கண்கள் கலங்க கேட்டான்.
அவன் கலங்கிய கண்களை பார்த்த உடனே ஷியாமிற்கு நன்றாகவே தெரிந்தது அவன் எந்த அளவிற்கு ஷிவானியை லவ் செய்கிறான் என்று. அவ ஐ சி யூ வில் இருக்கா. இப்போ பார்க்க அலோ பண்ண மாட்டாங்க. இப்போ விசிட்டிங் ஹவர் முடிஞ்சிடுச்சு. நாளை காலையில 11 மணிக்கு விசிட்டிங் ஹவ்வர்ஸ்ல சொல்றேன் அப்போ வந்து பார்த்துட்டு போ” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து வேகமாக வெயிட்டிங் ஹாலிற்கு சென்றான் ஷியாம்.
கலங்கிய கண்களுடன் கிளம்பினான் ரோஹித்.
ஷியாம் தன்னிடம் இருந்து எதையோ மறைக்கிறான் என்பதை மட்டும் நன்றாக புரிந்து கொண்டான். அவனுடைய வீட்டிற்கு போகாமல் நேராக நந்தினியை பார்க்க சென்றான்.
ஈவினிங் தன் ஃபோனில் பங்க்ஷனில் எடுத்த சில ஃபோட்டோக்களை பார்த்துக் கொண்டிருந்தாள் நந்தினி.
அப்போது ரோஹித் காலிங் என்று வந்தது.
“ரோஹித்தா? இவர் எதுக்கு கால் பண்றாரு” என்று நினைத்தபடி
“ஹலோ சொல்லுங்க ரோஹித் “
” நந்தினி வீட்ல இருக்கீங்களா? “
” நீங்கதான் என்னோட சீனியர் நான் உங்கள மரியாதையோட சொல்லலாம், நான் உங்கள விட ஒன் இயர் ஜூனியர் தானே வா போன்னு சொல்லுங்க ரோஹித் “
” நான் உங்க வீட்டுக்கு வெளியே தான் இருக்கேன். இன்ஃபாக்ட் ஷியாம் ஓட வீட்டு பக்கத்துல இருக்கேன்”
” என்னாச்சு, என்ன விஷயம்? “
” கொஞ்சம் இங்க வரிங்களா? உங்க கிட்ட பேசணும் “
” ஆனா”
” ப்ளீஸ் நந்தினி”
நந்தினிக்கு என்ன செய்வது என்று புரியவில்லை. உடனே ஷியாமிற்கு கால் செய்தாள். நாட் ரீச்சபிள் என்று வந்தது. அவன் இதற்கு மேல் தான் வரப்போகிறேன் என்று கால் செய்திருந்தால் எதையாவது யோசித்து வைத்திருப்பாள். ஏற்கனவே வந்து காத்துக் கொண்டு இருக்கிறேன் என்று சொன்னதால் என்ன செய்வது என்று புரியாமல்
” இதோ வருகிறேன்” என்று சொல்லி கிளம்பினாள்.
“அம்மா நான் பக்கத்துல கடைக்கு போயிட்டு வந்துடறேன்” என்றாள் நந்தினி.
” என்னடி வாங்க போற எந்த கடைக்கு இந்த நேரத்தில் போய் போற? ” என்றார் கௌசல்யா.
” அம்மா நோட்டு புக்கு, அப்புறம் கொஞ்சம் ஸ்டேஷனரி ஐடெம்ஸ் எல்லாம் வாங்கணும் மா, செமஸ்டர் எக்ஸாம் வருது இல்ல? “
” வண்டியை எடுத்துக் கொண்டு போறியா? “
அவளுடைய அம்மா அப்படி கேட்ட உடன் தான் வண்டி எடுத்து செல்ல வேண்டும் என்ற எண்ணமே தோன்றியது. இல்லையென்றால் சந்தேகம் வரும் என்று நினைத்துக் கொண்டு.
” ஆமாம் பின்ன என்ன நடந்தா போக முடியும் ஒரு கிலோமீட்டர்? ” , என்ற சொல்லி பைக் சாவியை எடுத்துக்கொண்டு ஹெல்மெட்டையும் எடுத்துக்கொண்டு வண்டியை ஒட்டி பின்பக்க தெரு வழியாக ஷியாம் வீட்டிற்கு வந்தாள்.
யாரும் பார்க்காமல் வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு நடந்து வந்து
” என்ன ரோஹித் சீக்கிரம்
சொல்லுங்க? ” என்றாள் நந்தினி.
” என்னோட ஷிவானிக்கு என்ன ஆச்சு? “
” என்ன சொல்றீங்க ரோஹித், எனக்கு ஒண்ணுமே புரியல? உங்க ஷிவானியா? “
” ஆமாம் நானும் ஷிவானியும் ஒரு வருஷமா காதலிக்கிறோம்”
” அப்படியா? எனக்கு தெரியாதே. ஷிவானி என்கிட்ட இதை பத்தி ஒன்னுமே சொன்னது இல்லையே? “
” அதெல்லாம் விடுங்க நந்தினி, ஷிவானிக்கு என்ன ஆச்சு? “
” அது மாடியில் இருந்து துணி எடுத்துட்டு வந்தா போல அப்ப தெரியாமல் தடுக்க கீழே விழுந்துட்டான்னு நினைக்கிறேன். தலையில் அடிபட்டு இருக்கு ஹாஸ்பிடல் இருக்கா. மத்தபடி பயப்படுவதற்கெல்லாம் ஒன்னும் இல்ல. சீக்கிரமா ரெக்கவர் ஆயிடுவான்னு டாக்டர் சொன்னாரு “
பதில் பேசாமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான் ரோஹித்.
” என்ன ரோஹித் நான் தான் சொல்றேன் இல்ல, அவ்வளவுதான். இதுக்கு மேல உங்களுக்கு ஏதாவது தெரிஞ்சுக்கணும்னா நீங்க ஷியாமையே கேட்டுக்கோங்க. ஷியாம் உங்க ஃபிரண்டு தானே ”
“அவனைப் பார்த்துவிட்டு தான் வரேன். அவளை யாரோ திருட வந்தவன் தலைல அடிச்சிட்டான்னு ஷியாம் சொன்னான். ஆனால் எனக்கு அவன் சொன்னதில் நம்பிக்கை இல்லை. எதையோ மறைக்கிறான் என்று மட்டும் புரிகிறது. நீங்களாவது உண்மையை சொல்லுங்க நந்தினி”
“ஷியாமையே கேளுங்க ரோஹித் ” என்று திரும்பி செல்ல நினைத்தவளை.
” ஒரு நிமிஷம் நந்தினி ” என்றான் ரோஹித்.
தொடரும்….
அ. வைஷ்ணவி விஜயராகவன்.
No comments yet.