பாகம் 12

Vaishnavi Vijayaraghavan | 18 May 2026 | Share

தித்திக்கும் தேன்பாவை 

பாகம் 12 

“சரி, டென்ஷன் ஆகாமல் நேத்து ஈவினிங் என்ன நடந்துச்சுனு சொல்லு”

ஷிவானி சொன்ன அனைத்தையும் ரெக்கார்டு செய்து கொண்டும் பேப்பரில் எழுதி அவளிடம் கையெழுத்து வாங்கிக் கொண்டும் அங்கிருந்து கிளம்பினார்கள் கான்ஸ்டபிள் வாணி மற்றும் எஸ்ஐ மதிவதனி.

வெளியே வந்த பிறகு,

“இதுக்கு மேல அந்த பொண்ணோட ரிலேட்டிவ்ஸை அனுப்பலாம்” என்று சொல்லி விட்டு மதிவதனியும் வாணியும் சென்றனர்.

ஜீப்பில் செல்லும்போது வாணி மதிவதனியிடம்,

“என்ன மேடம், இப்படி ஆயிடிச்சு”

“என்ன சொல்ற வாணி?”

” ஆமாம், அந்த பொண்ணுக்கு அவளை ரேப் பண்ணவன் யாருன்னு தெரியலைன்னு சொல்லிட்டாளே? “

“நான் எதிர் பார்த்தது தான்”

“என்ன சொல்றீங்க மேடம்?”

” ஆமாம் வாணி, இந்த மாதிரி நான் நிறைய கேஸ் பார்த்திருக்கேன். கோர்ட் கேஸ் என்று போனால் மானம் மரியாதை போயிடும், அப்புறம் பொண்ணுக்கு கல்யாணம் ஆகாது, இப்படி பல காரணங்களுக்காக யாரு கிரிமினல் என்று தெரிஞ்சாலுமே சொல்ல மாட்றாங்க”

“அப்போ, இந்த பொண்ணு ஷிவானிக்கு ஆள் யாருன்னு தெரியும்னு சொல்றீங்களா?”

“இந்த பொண்ணை பொறுத்தவரை என்னால கரெக்டா சொல்ல முடியல. ஏன்னா பொதுவா ஃபேஸ் அப்புறம் கண்கள் ரியாக்ஷன் வச்சு தான் ஒருத்தவங்க பொய் சொல்றாங்களா இல்ல உண்மை சொல்றாங்களான்னு கண்டு பிடிக்க முடியும். இந்த பொண்ணுக்கு முகத்திலும் கண்ணிலும் அடிப்பட்டு வீங்கி இருக்கிறதால என்னால கண்டுபிடிக்க முடியல”

“ஓ, ஓகே மேடம்”

” ஒண்ணு கேட்டா திட்ட மாட்டீங்களே? “

“திட்டுற அளவுக்கு நீ என்ன கேட்கப் போற?”

“அது ஒன்னும் இல்ல மேடம், அந்த பொண்ணு குடும்பத்தில இருக்கிறவங்க பத்தி தான் நம்ம அவளோட அண்ணன் ஷியாம் கிட்ட கேட்டுட்டோமே அப்புறம் எதுக்கு அவ கிட்டேயும் அதே கேள்வியை கேட்டீங்க”

“வாணி, ஒரு ரேப் விக்டிம் கிட்ட ஸ்ரெயிட்டா உன்னை ரேப் பண்ணியது யாருன்னு கேட்கக் கூடாது. முதல்ல அவங்க சுயநினைவில தான் இருக்காங்களான்னு தெரிஞ்சுக்க அவங்களோட பர்சனல் டீடெயில்ஸ் கேட்கனும். அது மட்டும் இல்லாம அவங்க நம்ம கிட்ட பேசும் போது பதட்டமாகத் தான் இருப்பாங்க அதனால அவங்க ஃபேமிலி பத்தி பேசினா அவங்களோட டென்ஷன் கொஞ்சம் குறையும். அதுக்கு அப்புறமா நமக்கு தேவையான கேள்விகளை கேட்கனும்”

“ஓ, ஓகே மேடம். சாரி மேடம்”

“எதுக்கு சாரி?”

“ஏற்கனவே விடை தெரிந்த, தேவையில்லாத கேள்விகளை கேட்டு டைம் வேஸ்ட் பண்றீங்கன்னு நினைச்சேன் மேடம்”

“இப்போ தானே வேலைல சேர்ந்திருக்க, சீக்கிரமா எல்லாம் தெரிஞ்சுக்குவ வாணி”

“இப்போ ஷிவானி கேஸை என்ன பண்றது மேடம்” என்றாள் வாணி.

“நம்ம ஸ்டேஷன்ல இருக்குற பெண்டிங் கேஸஸ் ஓட இதையும் சேர்த்து வைக்கணும்” என்றார் மதிவதனி.

பிறகு இருவரும் தங்களுடைய ஸ்டேஷனிற்கு சென்றனர்.

போலீஸ் வந்து போனதும் தன் தங்கையைப் பார்த்து பேசிவிட்டு வந்தான் ஷியாம்.

வீட்டிற்கு சென்றதும் நந்தினி ஷியாமிற்கு கால் செய்தாள்.

“ஹலோ ஷியாம் “

“சொல்லு நந்து”

“நிறைய மெஸேஜ் அனுப்பினேனே எதையுமே பார்க்கலையா நீ?”

“சாரி நந்து, என்னால எதிலுமே கான்சன்டிரேட் பண்ண முடியல. மைண்டே ஒரே பிளாங்கா இருக்கு”

“நீயே இப்படி தைரியத்தை இழந்தா யாருடா நம்ம ஷிவானிக்கு ஆறுதல் சொல்லுவாங்க?”

“புரியுது நந்து, இருந்தாலும் என்னால பொறுமையா இருக்க முடியல “

“நான் கிளம்பி வரவா?”

“வேண்டாம், வேண்டாம் நீயே ஃபங்கஷன்ல அலைந்து டயர்டா இருப்ப”

“அதெல்லாம் பரவாயில்ல ஷியாம் “

” வேண்டாம் நந்து, சரி ஃபங்ஷன் நல்லா நடந்துச்சா? “

” நல்லா நடந்துச்சு டா. ஒரு நிமிஷம் இரு” என்று சொல்லிவிட்டு வீட்டின் பின் புறம் சென்று ஃபோனில் பேசினாள் நந்தினி.

“என்னாச்சு?”

“இல்ல, அங்க அம்மா என் ரூம்ல இருந்து என்னவோ எடுத்துக் கொண்டு இருந்தாங்க. அங்க பேச வேண்டாம்னு வீட்டுக்கு பின் பக்கம் வந்திட்டேன்.”

“ஏன், என் கிட்ட பேசினா ஆன்டி திட்டுவாங்களா என்ன?”

“அது இல்லடா, ஷிவானி பத்தி பேசலாம்னு தனியா வந்தேன்”

“என்ன?”

“என்னாச்சு ஷியாம், ஷிவானி எதாவது சொன்னாளா? அவளை பலாத்காரம் செஞ்ச அந்த பொறுக்கி யாருன்னு தெரிஞ்சுதா?”

என்று கோபமாகவும் ஆத்திரமாகவும் கேட்டாள்.

“இல்ல நந்து”

“இல்லன்னா? என்ன சொல்ற? அவன் யாருன்னு ஷிவானிக்கு தெரியலையா?”

“ஆமாம்,”

“அதெப்படி?”

“முதல்ல தலையில் அடிச்சானாம்” என்று சொல்லும் போதே அவனுக்கு தொண்டையில் வார்த்தை சிக்கியது.

“பிளீஸ் காம் டவுன் ஷியாம். “

அவனே சிறிது நேரம் கழித்து தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு.

” அப்புறம் அவளை……” சொல்ல முடியாமல் அழுதான்.

நந்தினி பேசாமல் அமைதியாக இருந்தாள்.

“அவன் ஃபேஸ் மாஸ்க் போட்டிருந்தானாம். அதனால அவன் யாருன்னு இவளுக்கு தெரியல”

என்று சொல்லி முடித்தான் ஷியாம்.

“என்னது ஃபேஸ் மாஸ்க் போட்டு இருந்தானா? என்ன கொடுமை டா இது, சே” என்று வெறுப்புடன் பேசினாள் நந்தினி.

” நந்து, பிளீஸ் தயவு செய்து இந்த விஷயம் யாருக்கும் தெரியாமல் பார்த்துக்கோ”

“கண்டிப்பா ஷியாம். நீ கவலைப்படாத டா”

அவள் பேசி முடித்து விட்டு வீட்டிற்கு உள்ளே சென்றாள் நந்தினி.

பக்கத்து வீட்டு உமா ஆன்ட்டி அனைத்தையும் கேட்டுவிட்டார். வீட்டுக்கு பின்னால் ரெஸ்ட் ரூம் யூஸ் செய்து கொண்டிருந்தார். நந்தினி பேசியது அவருக்கு நன்றாகவே கேட்டது. அதிர்ச்சியில் அவருடைய கண்கள் விரிந்தது. பிறகு வீட்டுக்கு உள்ளே சென்று தன் கணவரிடம் அனைத்தையும் கூறினார்.

” நான் அப்பவே நெனச்சேன் டி, அந்த பொண்ணுக்கு படிக்கட்டுல விழுந்து தலையில் அடிபட்ட மாதிரி இல்ல. யாரோ தலையில் அடிச்ச மாதிரி தான் இருந்தது.”

” சரிங்க அந்த பையன் இந்த நிலைமையிலும் எவ்வளவு பொறுமையா திங்க் பண்ணி. இந்த விஷயம் யாருக்கும் தெரிய கூடாதுன்னு நினைக்கிறான். அதனால நம்ம இந்த விஷயம் தெரிஞ்சும் தெரியாத மாதிரி இருந்துவிடலாம் “

” நீ சொல்றதும் சரிதான். அந்த பொண்ணும் நம்ம பொண்ணு மாதிரி தானே? “

“ஆமாங்க, நான் ஏதோ மனசு கேட்காம உங்க கிட்ட சொல்லிட்டேன். நீங்க யார்கிட்டயும் சொல்லிடாதீங்க. முக்கியமா அந்த டீக்கடை கிட்ட உட்கார்ந்து பேசுவீங்க இல்ல அப்ப  தெரியாமல் கூட யார்கிட்டயும் சொல்லிடாதீங்க “

” நான் ஏண்டி சொல்ல போறேன்? “

” இல்ல ஷிவானிக்கு அடிபட்டது அப்படி இப்படி ஏதாவது உளறிடாதீங்க”

” சரி உமா. நான் எதுவும் யார்கிட்டயும் சொல்லல போதுமா? “

” அந்த பையன் ஷியாம் பாவம் நந்தினியை நம்பி அவ கிட்ட சொல்லி இருக்கான். இந்த பொண்ணு சரியான லூசு போல, வீட்டுக்குள்ள இருக்குற அப்பா அம்மாவுக்கு தெரிய கூடாதுன்னு பின்பக்கம் வந்து பேசுது. நல்லவேளை அந்த பக்கம் வீட்ல யாருமே இல்ல. நான் மட்டும் தான் கேட்டேன். வேற யாராவது கேட்டிருந்தாங்கன்னா என்ன ஆயிருக்கும்? “

” ஆனா அந்த பொறுக்கி யாருன்னு கண்டுபிடிச்சு, சட்டத்துக்கு முன்னாடி அவனை நிக்க வச்சு, அவனுக்கு தண்டனை வாங்கி கொடுத்தா 

நல்லது. “

” அதெல்லாம் சரி தாங்க, அந்த பொண்ணு பேசினத வச்சு பார்த்தா. அந்த ஷிவானிக்கே அவன் யாருன்னு தெரியல. என்னது ஃபேஸ் மாஸ்க் போட்டு இருந்தானான்னு இவ பதில் சொன்னா. அதை வச்சு பார்க்கும்போது ஷிவானிக்கே அவளை பலாத்காரம் பண்ணியவன் யாருன்னு தெரியல போல”

” இதெல்லாம் கொடுமை டி. பாவம்  அந்தப் பொண்ணு. இதுக்கு மேல அவளுக்கு லைப் லாங் இந்த கசப்பான சம்பவம் மனசளவுல பாதிச்சிடும். அது அவ கல்யாணம் வாழ்க்கையை கூட பாதிக்கும் “

” அந்த பொண்ணு எல்லாத்திலேயும் இருந்து சீக்கிரமா ரெக்கவர் ஆகி வரணும்னு நம்ம வேண்டிக்கலாமுங்க”

” சரி உமா” என்றார் சங்கர்.

ஹாஸ்பிடலில்,

ஷியாமின் ஃபோன் அடித்தது. அவனுடைய நண்பன் ரோஹித் காலிங் என்று வந்தது. இவன் எதுக்கு இப்போ பண்றான். இவன் கிட்ட என்ன சொல்றது என்று யோசித்தான் ஷியாம்.

முதல் முறை அவன் யோசித்து ஃபோனை எடுப்பதற்குள்  ஃபுல்லா ரிங் அடித்து கட் ஆகியது.

சரி திரும்பவும் கால் செய்தால் எடுத்து பேசலாம் என்று நினைத்து அமைதியாக இருந்தான் ஷியாம்.

சிறிது நேரத்தில் கால் வரவும் அவன் தான் கால் செய்கிறான் என்று நினைத்து எடுத்தான் ஷியாம். ஆனால் சிவஞானம் கால் செய்தார்.

” சொல்லுங்கப்பா, “

“என்னப்பா, நேத்து பேச முடியல அங்க சிக்னல் இல்ல. இப்போ நானும் அம்மாவும் டவுனுக்கு கடைக்கு வந்திருக்கோம் . அதான் உங்க ரெண்டு பேர் கிட்டயும் பேசிட்டு அப்புறம் போலாம்னு. என்னப்பா பண்றீங்க? ஃபங்ஷன் நல்லா முடிஞ்சுதா?  “

” ஃபங்ஷனா என்ன பங்க்ஷன்? “

ஷியாம் டென்ஷனில் இருந்ததால் அர்ஜுன் நிச்சயதார்த்தை பற்றி மறந்தே விட்டான். சிவஞானம் பதில் சொல்வதற்குள்,

“ஓ, அர்ஜுன் அண்ணா நிச்சயதார்த்தத்தை பத்தி சொல்றீங்களா?” என்று சமாளித்தான்.

தொடரும்…

அ. வைஷ்ணவி விஜயராகவன். 

இந்த episode பிடிச்சிருந்தா எழுத்தாளரை உற்சாகப்படுத்துங்க!!
இப்போதே உற்சாகப்படுத்துங்கள்

இந்த படைப்பை மதிப்பிட விரும்புகிறீர்களா?

Click on a star to rate it!

No votes so far! Be the first to rate this post.

    No comments yet.