பாகம் 6

Vaishnavi Vijayaraghavan | 18 May 2026 | Share

தித்திக்கும் தேன்பாவை 

பாகம் 6

அரை மணி நேரத்திற்குப் பிறகு நர்ஸ் வந்து

” பேஷன்ட் கூட வந்தது யாரு ? ” என்றார்.

ஷியாம் மற்றும் நந்தினி இருவரும் எழுந்து நின்றனர்.

” டாக்டர் உங்களை உள்ளே கூப்பிடுறாங்க “

ஷியாமுக்கு பயமாகவும் பதட்டமாகவும் இருந்தது. டாக்டர் என்ன சொல்லப் போகிறாரோ என்று பயந்தபடி உள்ளே சென்றான். அவன் பின்னாலேயே சென்றாள் நந்தினி.

” வாங்க உட்காருங்கள், நீங்க பேஷண்ட்க்கு என்ன வேணும் ” என்றார் டாக்டர்.

“அவளுடைய டிவின் பிரதர்” என்று கண்கள் கலங்கியபடி சொன்னான் ஷியாம்.

“நீங்க ?” என்று நந்தினியை பார்த்து கேட்டார்.

” நான் நந்தினி, அவளோட க்ளோஸ்

ஃப்ரெண்ட்,  “

” ஓகே நீங்க கொஞ்சம் வெளிய வெயிட் பண்றீங்களா? “

” இல்ல டாக்டர் என் முன்னாடியே சொல்லுங்க என்ன ஆச்சு ஷிவானிக்கு?” என்றாள் நந்தினி.

“சாரி மிஸ் நந்தினி, பேஷண்டோட க்ளோஸ் ரிலேட்டிவ்ஸ் கிட்ட தான் பேஷன்ட் பத்தின டீடெயில்ஸ் சொல்ல முடியும். இது ஹாஸ்பிடல் ரூல்ஸ் “

“ஆனா டாக்டர், அவ” என்று நந்தினி பேசும்போது.

“நந்து, வெளியே போய் வெயிட் பண்ணு” என்றான் ஷியாம்.

அதற்கு மேல் எதுவும் பேச முடியாமல் அமைதியாக வெளியே சென்றாள் நந்தினி.

நந்தினி வெளியே சென்ற பிறகு,

“மிஸ்டர் ஷியாம், சாரி டூ ஸே திஸ்” என்றார் டாக்டர்.

“யுவர் சிஸ்டர் இஸ் புரூட்டலி ரேப்பிடு, தலையிலும் ஆழமா அடிபட்டு இருக்கு. மத்தபடி வேற எங்கேயும் காயங்கள் இல்ல. சீமென் டிரேஸஸ் எதுவுமே இல்ல, ரேப்பிஸ்ட் பிரொட்டக்ஷன் யூஸ் பண்ணி இருக்கான்” என்றார் டாக்டர்.

“இப், இப்.. என்று திக்கி தொண்டையை சரி செய்து கொண்டு  இப்போ எப்படி இருக்கா டாக்டர்? ” என்றான் ஷியாம்.

” கிரிட்டிக்கல் ஸ்டேஜ் தாண்டிட்டாங்க. இப்போதைக்கு ஸ்டேபிளா வச்சிருக்கோம். ஆனால் 24 ஹவர்ஸ் கழிச்சு தான், அவங்க எப்படி இருக்காங்கன்னு சொல்ல முடியும்”

“ஓகே டாக்டர் ” என்று சொல்லி சேரில் இருந்து எழுந்தவனை.

“ஒன் மினிட் மிஸ்டர் ஷியாம். ஐ எம் சாரி, ஆஸ் பெர் ரூல்ஸ் இந்த மாதிரி கேஸ் வந்தா நாங்க இம்மீடியட்டா போலீஸ் ஸ்டேஷன்ல கம்ப்ளைன்ட் கொடுக்கணும். நாங்க எக்ஸாமினேஷன் பண்ண உடனே ரேப் என்று தெரிஞ்சதும் உமென் போலீஸ் ஸ்டேஷன்ல கம்ப்ளைன்ட் கொடுத்து இருக்கோம். அவங்க வந்து கேட்டா உங்களுக்கு தெரிஞ்சது சொல்லுங்க. உங்க சிஸ்டர் சரியானதுக்கப்புறமா அவங்க என்கொயரி பண்ணிப்பாங்க “

“ஓகே டாக்டர் ” என்று சொல்லி விட்டு வெளியே வந்தான்.

விரக்தியாக சேரில் அமர்ந்தான். சத்தம் போடாமல் வேகமாக தன் தலையில் அடித்துக் கொண்டான். வேகமாக ஓடிச் சென்று நந்தினி அவனை தடுத்தாள்.

“என்னாச்சுடா, ஏன் இப்படி எல்லாம் பண்ற? நீ பண்றது எல்லாம் பார்த்தா எனக்கு ரொம்ப பயமா இருக்கு” 

பக்கத்தில் அமர்ந்து இருந்த நந்தினியின் தோளில் சாய்ந்து தேம்பி தேம்பி அழுதான் ஷியாம்.

“நம்ம ஷிவானியை யாரோ ரேப் பண்ணிட்டாங்க நந்து ” என்று மிகவும் மெதுவாக அவள் காதில் மட்டும் கேட்கும்படி சொல்லி அழுதான்.

அதிர்ச்சியில் நந்தினியும் தன் வாயை மூடிக்கொண்டு அழுகையை கட்டுப்படுத்தினாள்.

சிறிது நேரத்திற்கு பிறகு இருவரும் தங்களை ஆசுவாசப் படுத்திக் கொண்டார்கள்.

பிறகு தன் அம்மாவிற்கு கால் செய்தான் ஷியாம் . நாட் ரீச்சபிள் என்று வந்தது. தன் அப்பாவிற்கு கால் செய்தான். அவருக்கும் நாட் ரீச்சபிள் என்று வந்தது. பாட்டி இறந்து விடவே அவர்கள் இருவரும் ஊருக்கு சென்றதால் அங்கே சிக்னல் இல்லை என்று புரிந்து கொண்டான். அப்போதுதான் அவனுடைய அப்பா  ஒரு பெரிய ஈமெயில் அனுப்பி இருந்ததை பார்த்தான்.

“ஷியாம், உங்க பாட்டி இறந்துட்டாங்க பா. அதனால நானும் உங்க அம்மாவும் ஊருக்கு போறோம். உங்க ரெண்டு பேருக்கும் கால் பண்ணி சொல்ல முடியல. அதான் ஈமெயில் பண்றேன். 

நாங்க வர டூ த்ரீ டேஸ் ஆகும் பா.

ரங்கநாதன் அங்கிள் கிட்ட சொல்லி இருக்கேன். நீங்க ரெண்டு பேரும் அவங்க வீட்டிலேயே தங்கிக்கோங்க. நம்ம வீட்ல தனியா தங்க வேண்டாம் பா. உனக்கே தெரியும். இரண்டு பக்கத்துலேயும் வீடு இல்லாததால தனியா இருக்கிற மாதிரி இருக்கும் நம்ம வீடு. ஷிவானி ரொம்ப துணிச்சலான பொண்ணு. அதனால நம்ம இங்கேயே தங்கலாம்னு சொல்ல போறா. நீதான் அவகிட்ட சொல்லணும். 

தனியா மட்டும் நம்ம வீட்ல இருக்க வேண்டாம். அதுவும் இரண்டு மாசத்துக்கு முன்னாடி நம்ம எல்லாரும் கோவிலுக்கு போயிருக்கும் போது நம்ம வீட்ல திருடு போச்சு இல்ல. அதிலிருந்து எனக்கு ரொம்ப பயம். உங்க அம்மாவை மட்டும் கூட நான் தனியா வீட்ல விடுறது இல்ல. நீங்க எல்லாரும் காலையில இருக்கும்போது நான் வாக்கிங் போயிட்டு வந்துடுவேன். மறுபடியும் நீங்க காலேஜ்ல இருந்து வந்த அப்புறமா வெளியே எங்கனா, இல்ல கடைக்கு போகணும்னா போயிட்டு வருவேன்.

இதுவரைக்கும் இதனை யார்கிட்டயும் சொல்லல. இப்ப உங்க ரெண்டு பேரையும் தனியா வீட்ல விட்டுட்டு போறதுனால இதை சொல்றேன். இதுவே உங்களுக்கு செமஸ்டர் எக்ஸாம்ஸ் இல்லன்னா உங்களையும் கூப்பிட்டு போயிருப்பேன். கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்கப்பா. பை பா, டேக் கேர்” என்று அனுப்பி இருந்தார்.

அதை படித்ததும் ஷியாமின் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்து ஓடியது.

பக்கத்தில் இருந்த நந்தினி அவள் தோளை தடவி சமாதானம் செய்தாள். அவனுடன் சேர்ந்து அந்த மெயிலை அவளும் படித்தாள். அவளுக்கும் கண்கள் கலங்கியது.

“ஷியாம், நான் எங்க அப்பா அம்மாவுக்கு கால் பண்ணி 

சொல்லவா? “

” வேண்டாம், அவங்களே நிச்சயதார்த்த வேலையில பிஸியா இருப்பாங்க. எதுவும் சொல்லாத.  அதுவும் இல்லாம இந்த விஷயம் யாருக்கும் தெரிய வேண்டாம் நந்து ப்ளீஸ். ” என்று கெஞ்சினான் ஷியாம். 

“சரிடா, நான் யார்கிட்டயும் சொல்லல “

“நான் உன்னை வீட்டில விட்டுட்டு வந்துடறேன் வா ” 

” என்ன பேசுற ஷியாம், இந்த நிலைமையில் எப்படி நான் உன்னை தனியா விட்டுட்டு போவேன் ” என்று சொல்லி கண்கள் கலங்கினாள் நந்தினி.

” ப்ளீஸ் நந்து, என்னை கொஞ்சம் தனியா இருக்க விடு “

அவன் தனிமையில் இருக்க வேண்டும் என்று நினைக்கிறான் என்று தெரிந்து கொண்டவள், 

” சரி டா, நானே ஆட்டோ புக் பண்ணி

போகிறேன். நீ இங்கேயே இரு “

” வேண்டாம் நந்து, நானே உன்னை பத்திரமா வீட்ல விடுறேன். உன்னை தனியா அனுப்ப எனக்கு பயமா இருக்கு” சொல்லும்போதே தன் தங்கை அலங்கோலமாய் இருந்த நினைப்பு வந்து அவன் கண்களை குலமாக்கியது.

” என்னோட அப்பா அம்மா ரெண்டு பேரும் நீங்க எங்கன்னு கேட்டா நான் என்ன சொல்றது? “

” எனக்கு ஒண்ணுமே புரியல என் மைண்டே பிளாங்கா இருக்கு நந்து.”

” சரி நான் ஒரு ஐடியா சொல்லவா அது ஒத்து வருமான்னு சொல்லு?”

“என்ன ஐடியா?”

” எப்படி இருந்தாலும் இன்னும் இரண்டு நாளைக்கு ஹாஸ்பிடல்ல தான் நீங்க இருந்தாகனும். அதனால நீங்க ரெண்டு பேரும் ஊருக்கு கிளம்பி போயிட்டீங்கன்னு சொல்றேன். ஷிவானிக்கு பாட்டியை கடைசியா பார்க்கணும் போல இருந்ததுன்னு சொன்னா, அதனால ஊருக்கு கிளம்பி போயிட்டாங்கன்னு சொல்லறேன். ஓகே வா?”

” எப்படி டி, நம்புவாங்களா? “

” நம்ப மாட்டாங்க எனக்கு தெரியும். உனக்கு கால் பண்ணா அதே விஷயத்தை நீயும் சொல்லு. உங்க அப்பா அம்மாவுக்கு அவங்களால கால் பண்ண முடியாது இல்ல? அங்க தான் சிக்னல் இல்லைன்னு சொன்னியே? எங்க அண்ணனோட நிச்சயதார்த்தம் முடிஞ்ச அப்புறமா நான் எங்க அம்மா கிட்ட ஷிவானி படிக்கட்டில் இருந்து விழுந்து அடிபட்டுட்டான்னு, நீ உமா ஆண்ட்டி கிட்ட சொன்னா மாதிரி சொல்லிடுறேன்”

” நல்ல ஐடியா தான். ஓகே.

எங்க அப்பா எனக்கு கால் பண்ணாருன்னா நாங்க சேஃப்பா இருக்கோம்னு அவர் கிட்ட நானே சொல்லிடறேன்”

” இப்ப நான் வீட்ல போய் எப்படி தனியா இருப்பேன்? ” என்றாள் நந்தினி.

” உங்க அண்ணன் எங்க இருக்காருன்னு கேளு? “

” நாளைக்கு பங்க்ஷன் நடக்கப்போற ஹாலுக்கு  டெக்கரேஷன் பாக்குறதுக்காக அங்க போய் இருக்காரு”

” ஓகே குட், கிளம்பு”

“எங்கடா?”

” சொல்றேன் வா” என்று சொல்லி அவளை அழைத்துக்கொண்டு.

அங்கிருந்த நர்சிடம்,

” சிஸ்டர் நான் வீட்டுக்கு போய் கொஞ்சம் திங்ஸ் எல்லாம் எடுத்துட்டு வந்துடுறேன். ஹாஃப் அனர்ல வந்துடுவேன். அதுக்குள்ள ஏதாவது வேணும்னா எனக்கு கால் 

பண்ணுங்க “

தொடரும்…

அ. வைஷ்ணவி விஜயராகவன்.

இந்த episode பிடிச்சிருந்தா எழுத்தாளரை உற்சாகப்படுத்துங்க!!
இப்போதே உற்சாகப்படுத்துங்கள்

இந்த படைப்பை மதிப்பிட விரும்புகிறீர்களா?

Click on a star to rate it!

No votes so far! Be the first to rate this post.

    No comments yet.