கிட்சனில் இருந்து வெளியே வந்த பூவிதழினியை பார்த்த முகுந்தனின் முகம் பிரகாசம் அடைந்து சிறு புன்னகை தோன்றியது. முகுந்தன், “குட் மார்னிங் அம்மு” என்று பாசமாக கூறினார். முகுந்தன் கூறியதை கேட்ட பூவிதழினியே சிரித்த படி அவரது அருகில் சென்றவள், “குட் மார்னிங் சார்” என்று கூற வந்தவள் அவர்
முறைத்த முறைப்பில் “குட் மார்னிங் பா” என்றாள். பூவிதழினி கூறியதை கேட்டு சந்தோசமடைந்தவர் தனது மகளின் தலையில் கை வைத்து பாசமாக வருடி கொடுத்தார். அப்போதே தனது செல்ல மகளின் கன்னம் சிவந்து கை விரல் அச்சு தடமாக பதிந்திருப்பதை பார்த்தவர் துடித்து போனார். கண்கள் கலங்கி போனது. வைதேகி கருவுற்ற சமயத்தில் இருந்தே அவளை கையில் வைத்து தாங்கினார்.. கருவில் இருந்த தனது உதிரத்தின் மீது அளவு கடந்த பாசத்தை வைத்திருந்தார். தனது குழந்தையின் வரவை எதிர் நோக்கி ஆர்வமாக காத்திருந்தார்.. பிறக்க போகும் குழந்தை மீது அளவு கடந்த பாசம் வைத்திருந்தார். பூவிதழினி கருவறையில் இருக்கும் போதே மகள் வேண்டும் என நினைத்து மகளிற்க்காகவே தவமாக காத்திருந்தார். மகளை எப்படி எல்லாம் வளர்க்க வேண்டும் என்று பூவிதழினி கருவில் இருக்கும் போதே பல ஆசைகளை சேர்த்து மனதில் பல திட்டங்களை வகுத்து கனவு கோட்டை கட்டினார். ஆனால் அனைத்து ஆசைகளும் நிறைவேறாமலே போனது… மகளை ஆசை தீர அள்ளி அணைத்து கொஞ்சும் பாக்கியம் போலும் கிடைக்கவில்லை அப்பாசமிகு தந்தைக்கு…. அதிலும் கொடுமை மகள் தன் கண் முன்னால் இருந்தும் அவளை தூக்கி கொஞ்ச முடியாத நிலையை நினைத்து தினமும் அழுது துடிப்பார். தனது செல்ல மகள் இருக்க வேண்டிய இடத்தில் இன்னொருவரின் மகளை வளர்க்கும் போது அவர் அனுபவித்த வலிகள் ஏராளம். தனது செல்ல மகள் தன் முன்னால் வைத்து அனுபவித்த கொடுமைகள், அவளை வார்த்தைகளால் வதைத்தது, ஈவு, இரக்கமற்ற கொடுமைக்காரிகளால் பூவிதழினிக்கு ஏற்பட்ட காயங்கள், ரணங்கள், அதனால் பூவிதழினி அழுத அழுகைகள், மகளை இவர்களிடம் இருந்து காக்க இயலாத தனது கையறு நிலை அனைத்தையும் நினைத்து துடிக்காத நாட்களே இல்லை எனலாம். ராஜீ என்று முகுந்தன், வைதேகி இருவரின் அரண்மனைக்கு வேலைக்கு வந்தாளோ அதிலிருந்து சில தினங்களிலே முகுந்தனின் நிம்மதி பறிப்போனது. வைதேகிக்கு தெய்வ நம்பிக்கை அதிகம்… அவரது நம்பிக்கையை பற்றி தெரிந்து கொண்டே அரண்மனைக்கு ஒரு திட்டத்தோடு சென்று அப்பாவி போல் வேலைக்கு சேர்ந்தாள் நயவஞ்சகி ராஜீ. வைதேகியின் தெய்வ நம்பிக்கையை தனக்கு சாதகமாக பயன்படுத்தி வைதேகியை ஏமாற்றி ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறாள். அதுமட்டுமின்றி தனது மகளை வைதேகி, முகுந்தன் இருவரின் மகளாக வளர்க்க வைத்திருக்கிறாள். பூவிதழினிக்காக கொடுத்த அனைத்தையும் அவளுக்கு கொடுக்காமல் ராஜீயும், சுமித்ராவும் அனுபவிக்கின்றனர். பெரிய பொய் கூறியே சுமித்ராவை வைதேகி, முகுந்தனின் மகளாக வளர்க்க வைக்கிறாள். நிறைய பிராடு வேலைகள் செய்து.. முகுந்தனுக்கு அனைத்து உண்மைகளும் தெரியும். ஆனால் அவரால் உண்மையை நிரூபிக்க முடியவில்லை. அவர் வைதேகியிடம் உண்மையை நிரூபிக்க முயற்சி செய்யும் பொழுதெல்லாம், ஏதாவது கூறி அழுது நாடகம் நடத்தி அவரது முயற்சியை தவிடு பொடி ஆக்குவாள். அரண்மனை மற்றும் முகுந்தன், வைதேகி இருவரின் சொத்தை அபகரிக்கவே பூவிதழினி பிறந்த போது வைதேகியின் தெய்வ நம்பிக்கையை வைத்து சில விபரீதமான செயல்களை செய்து அவற்றை வைதேகியை நம்ப வைத்து பூவிதழினியை வெறுக்க வைக்கும் செயல்களில் ஈடுபட்டு வெறுக்க வைத்தாள். பூவிதழினி மீது வைதேகி வைத்திருக்கும் பாசம் வெளிப்பட்டு அவளை தூக்கி அரவணைத்து கொஞ்சும் போது பூவிதழினி மீது அதிகளவு வெறுப்பு ஏற்பட வைப்பது போல் ஒவ்வொரு செயலையும் செய்வாள். ராஜீயின் நயவஞ்சக எண்ணத்தை பற்றி அறியாமல் அவளை கண் மூடித்தனமாக நம்புகிறாள் வைதேகி அவள் தன்னை ஏமாற்றி கொண்டிருக்கிறாள் என்பதனை அறியாமல்… தனக்கு சொந்தமான எல்லாவற்றையும் அபகரிக்க வேண்டி தன்னை ஒரு பகடைக்காயாக பயன்படுத்தி கொண்டிருக்கிறாள், அவள் நினைப்பது அனைத்தையும் செய்யும் கைப்பாவையாக மட்டுமே தன்னை வைத்திருக்கிறாள் என்பதை பற்றி வைதேகி அறியும் போது அவரது நிலை என்னவோ…??? வைதேகி பற்றி அறியாமல் ராஜீ இதுவரை தான் நினைத்த அனைத்தும் நடந்தது என்ற மமதையிலும், வைதேகி, முகுந்தன் இருவரும் தங்களது கடின உழைப்பாலும், கஷ்டப்பட்டு உருவாக்கிய சாம்ராஜ்ஜியம். அரண்மனை, அவர்களது தொழில், சொத்துக்கள் அனைத்தும் தனக்கும், தனது மகளுக்கும் கிடைக்கும் என்று திட்டமிட்டு வைத்திருக்கிறாள். இவளது திட்டங்கள் மற்றும் நயவஞ்சகம் கொண்டிருக்கும் ராட்சசியின் சுயரூபம் வெட்ட வெளிச்சம் ஆகும் நாள் வெகு தொலைவில் இல்லை என்பதனை பற்றி அறியாமல்.. அன்றே வைதேகியின் ஆட்டத்தை எப்படி சமாளிக்க போகிறாளோ…?? ஆனால் வைதேகி உண்மை அனைத்தையும் அறியும் நாளிலே தனது மகளை மொத்தமாக இழக்க போகிறாள்.. அன்றே பூவிதழினியின் கடைசி நாள் என்று விதி தீர்மானித்து விட்டது என்று யார் இவருக்கு சொல்லி புரிய வைப்பது…?? இவரின் முட்டாள்தனத்தினாலும், அடுத்தவரின் பேச்சை கண்மூடித்தனமாக நம்பியதாலும், பூவிதழினியை சரியாக கவனிக்காதததின் விளைவே பூவிதழினியை மொத்தமாக இழக்க காரணம்…. தன் கண் முன்னால் மகள் இருந்தும் அவளுக்கு கொடுக்க வேண்டிய அன்பு, பாசம், அரவணைப்பு, ஆறுதல், பாதுகாப்பு எதுவும் அவளுக்கு கொடுக்காமல், அவளை வெறுத்து ஒதுக்கி சொந்த வீட்டிலேயே வேலைகாரியாக மாற்றி பல கொடுமைகள் செய்து, சிறு வயது முதலே அச்சிறு மொட்டை வார்த்தைகளால் வதைத்து காயப்படுத்தி, பாசத்திற்காக ஏங்க வைத்து வேதனையில் துடிக்க வைத்ததை, நினைத்து நினைத்து தினமும் துடிக்க போகிறார். முகுந்தனின் மொத்த வெறுப்பையும், வெறுப்பான வார்த்தைகளையும் கேட்டு அணு அணுவாக துடிக்க போகிறாள். பூவிதழினியின் கன்னத்தில் இருந்த காயத்தை பார்த்து துடித்து போன அவளது தந்தை முகுந்தனின் கண்கள் கலங்கி கண்ணீர் சிந்த தயாரானது. முகுந்தன், “அம்மு ஏன் டா நீ இங்க இருந்து இவ்வளவு கொடுமைகள், அடிகளை தாங்கீட்டு இருக்க..?? நீ இங்க இருக்க வேணாம் மா.. நீ படிக்கிற காலேஜ் ஹாஸ்டல்ல உன்னை சேர்த்து விடுறேன் மா… நீ ஹாஸ்டல்ல தங்கி நல்லா படி தங்கம்… நீ இனி இங்க இருந்து ஒரு கொடுமையும் அனுபவிக்க வேணாம்.. நானும் தினமும் ஹாஸ்டல்ல வந்து என்னோட வைரக்குட்டியை பார்க்கிறேன்” என்று குரல் தழுதழுக்க கூறினார். பூவிதழினி, “நான் ஹாஸ்டல்ல தங்கி படிக்க போன என்னால அம்மாவை பார்க்க முடியாது பா… வீட்டில இருந்து படிக்க காலேஜ் போன மட்டும் தான் என்னால அம்மாவை பார்க்க முடியும்” என்று ஏக்கமாக கூறினாள். பூவிதழினி கூறியதை கேட்ட முகுந்தனுக்கு வைதேகி மீது அதிகளவு கோபமும், வெறுப்பும் உண்டானது. அதை விட தனது மனைவியை நயவஞ்சகம் கொண்ட ஒருவள் பல வருடங்களாக ஏமாற்றி கொண்டிருப்பதை நினைத்து அதிகளவு கவலையும், வேதனையும் கொண்டார். முகுந்தன், “அம்மா தான் உன்னை ரொம்ப கொடுமைப்படுத்துறாளே தங்கம்.. நீ இங்க இருந்து எந்த கொடுமையும் அனுபவிக்க வேணாம் தங்கம்.. ஹாஸ்டல்ல போய் தங்கி படிச்சு நிம்மதி, சந்தோசமா இரு மா… வேணும்னா ஏதாச்சும் பொய் சொல்லி நீ தங்கி இருந்து படிக்கிற ஹாஸ்டலுக்கு அடிக்கடி கூட்டிட்டு வாரேன் மா… நீ உன்னோட அம்மாவை பார்த்துக்கோ மா.. “ என்றார் மகளை கொடுமைக்காரிகளிடம் இருந்து காப்பாற்றும் நோக்கத்தில்… பூவிதழினி, அம்மா என்னை கொடுமைப்படுத்தினாலும், எனக்கு அம்மாவை ரொம்ப பிடிக்கும் பா… அவங்களுக்கு என் மேல பாசம் இருக்கு… என்னைக்காவது ஒரு நாள் அவங்க என்மேல பாசம் காட்டுவாங்க… அந்த ஒரு நாளுக்காக தான் எல்லா கொடுமையையும் அனுபவிக்கிறேன் பா… அம்மாக்கு வெறுப்பை என்மேல சில நிமிஷம் கூட காட்ட முடியாது பா… என்று வைதேகியின் மீதிருந்த பாசத்திலும், நம்பிக்கையிலும் கூறினாள். பூவிதழினியின் பாசத்தை நினைத்து மெய் சிலிர்த்து போன முகுந்தனுக்கு ஒரு புறம் வேதனையாகவும் இருந்தது… “சரி மா… உன்னோட அம்மா உன்கிட்ட பாசமா நடந்துக்கிற நாளுக்காக தான் நானும் காத்திட்டு இருக்கேன் தங்கம்” என்று கூறி மகளின் நெற்றியில் பாசமாக முத்தமிட்டார். பூவிதழினி, முகுந்தன் இருவரின் நம்பிக்கையை பொய்யாக்கும் விதமாக வைதேகி நடந்து கொள்ள போகிறார் என்று அறியாமல் போனது தான் பரிதாபம். வைதேகி மீது அதிகளவு பாசத்தை வைத்திருக்கும் பூவிதழினியின் மனதை தனது கொடுமையான வார்த்தை என்னும் கத்தியால் சுக்கு நூறாக உடைக்க போகிறார் என்று பூவிதழினி, முகுந்தன் இருவரும் அறியவில்லை… மகளின் கையில் இருந்த ட்ரேயினை வாங்கி அருகில் இருந்த கண்ணாடி டீபாயில் வைத்தவர் மகளை சோபாவில் அமர வைத்து ட்ரேயில் இருந்து ஒரு டீ இருந்த கப்பினை எடுத்து மகளிடம் கொடுத்து குடிக்க கூறினார். பூவிதழினி வாங்க மறுத்து அமர்ந்திருந்தாள்.. உடனே முகுந்தன், “அம்மு காலைல எழுந்ததில இருந்து ஒரு வாய் தண்ணி கூட குடிக்காம வேலை பார்த்திட்டு இருக்க டீ மட்டும் குடி மா.. கொஞ்சம் தெம்பா இருக்கும்… நீ இப்போ டீயை வாங்கி குடிக்கலைனா நானும் டீ குடிக்க மாட்டேன் நானும் உன்னை மாதிரி பட்டினி இருக்கேன்” என்று அதட்டி, மிரட்டி அவளை குடிக்க வைத்தார்… இது தினமும் நடக்கும் ஒரு நிகழ்வு தான்… முகுந்தன் அவருக்கான டீயினை மகளை குடிக்க வைத்து விட்டே நடைப்பயிற்சி செல்வார்.. அங்கிருந்தே டீயும் குடித்து விட்டு வருவார்.. அப்பா, மகள் இருவரின் பாசபிணைப்பினையும் மாடியில் இருந்து இருவர் கவனிப்பதை அறியாமல் போயினர்.. ஒருவர் பொறாமையிலிலும், கோபம், வஞ்சகம், வன்மம், குரோதத்துடனும் பார்த்து கொண்டிருந்தாள்.. யார் அவள்….??? இன்னொருவர் வைதேகி, எப்போதும் போல் பார்த்து விட்டு சென்றார். மும்பை நகரில், பணக்காரங்கள் வாழும் பகுதியில் இருக்கும் ஐந்து தளங்களை கொண்ட மிகப்பெரிய அரண்மனை போன்று பல ஏக்கர் பரப்பில் பரந்து, விரிந்திருந்த மாளிகையின் நான்காம் தளத்தில் உள்ள ஒரு பெரிய வீட்டையே உள்ளடக்கியது போன்ற அறையில் உள்ள ஆடம்பரமான கட்டில், மெத்தை கொண்ட மிகப்பெரிய கட்டிலில் நடுநாயகமாக படுத்து உறங்கி கொண்டிருந்தான் இருபத்தி ஐந்து வயதே ஆன ஒரு இளைஞன். அவனே நம் கதையின் நாயகன் எழிலரசன்… சில நிமிடங்களில் ஏதோ கனவு கண்டு “கண்ணம்மா” என்று அழைத்து கொண்டு அலறி எழுந்தான். “எங்க டி இருக்க…?? நீ யார்..?? எங்க இருக்க…?? எதுவுமே தெரியல… ஆனா தினமும் என்னோட கனவுல வர்ற.. அத்துன்னு கூப்பிடுற… நீ யார்ன்னு தெரியாம பைத்தியம் பிடிக்கிது… உனக்கு ஏதாவது ஆபத்து இருக்கான்னு தெரியல…?? எனக்கு ஏன் உனக்கு ஏதோ ஆபத்து இருக்க மாதிரி என்னோட மனசு துடிக்கிது” என்று புலம்பி கொண்டிருந்தான்.. இன்னும் சில நாட்களில் தனது கண்ணம்மாவை சந்திக்க போவதை பற்றி அறியாமல்… தொடரும்….
இந்த episode பிடிச்சிருந்தா எழுத்தாளரை உற்சாகப்படுத்துங்க!!
No comments yet.