வசம் 30,31

Vaishnavi Vijayaraghavan | 12 May 2026 | Share

என் வசம் நானில்லை என் உயிரே…….

வசம் -30

சங்கர் டீ குடித்து விட்டு மறுபடியும் வந்தார்.

சார்….. என்றான் அக்தர்.

யெஸ்….. என்றார் சங்கர்.

பாஸ்…. ஆஸ்க் டூ கால் தமிழ் டாக்கிங் செக்யூரிட்டி….யூ டாக்….. என்று திக்கி திக்கி இங்கிலீஷில் பேசினார்.

ஓகே அக்தர்….. ஐ வில் டாக்….. என்றார் சங்கர்.

கால் செய்தார் சங்கர்.

ஆப்பிரேஷன் முடிந்து அப்போது தான் தன்ஷிகாவை வெளியே அழைத்து வந்திருந்தார்கள். ஆகையால் ஃபோனை சைலென்டில் போட்டுவிட்டு அவளை பார்க்க சென்றான் தினேஷ்.

டாக்டர் அவர்களிடம் தன்ஷிகா நன்றாக இருக்கிறாள். இரண்டு மணி நேரத்தில் கண் விழித்து விடுவாள் என்று கூறினார்.

டாக்டருக்கு நன்றி கூறிவிட்டு அவர்கள் 405 ரூமில் வெயிட் செய்து கொண்டு இருந்தார்கள்.

அம்மா….. ஸ்கூலுக்கு லீவு சொல்லிட்டீங்களா?

ஹாங்….. சொல்லிட்டேன் பா….. இந்த ஒன் வீக்…… என்றார் திலகவதி.

ஓகே மா…..

தன்ஷியோட காலேஜூக்கு மெடிக்கல் சர்டிஃபிகேட்டோட மெயில் அனுப்ப சொல்லி யோகேஷ் சொன்னான்.

ஓகே பா….. 

நீங்க அப்பா….. என்றான் தினேஷ்.

போலீஸ்காரருக்கு எப்போ பா லீவு….. நேத்து ஞாயிற்றுக்கிழமை லீவு கேட்டு வந்தேன்…. நேத்தே டியூட்டிக்கு போக சொல்லி ஃபோன் வந்துச்சு இல்ல?…. இன்னைக்கு லீவு….. நாளைக்கு கதை நாளைக்கு தான் தெரியும்…..

அது என்னவோ கரெக்ட் தான் அப்பா….. என்றான் தினேஷ்.

அந்த பொண்ணு ஸேஃபா இருக்காளாங்க….. என்றார் திலகவதி.

ஆமாம் திலகா….. அவங்க அப்பா அம்மா கூட இருக்கா….

எவ்வளவு கொடுமைக்காரனா இருந்திருக்கான் பாரு அந்த ஆளு…… பாவம் அந்த பொண்ணு……

அந்த பொண்ணு மட்டும் பாவம் இல்ல திலகா….. நிறைய பொண்ணுங்க வாழ்க்கையை பாழாக்கி இருக்கான் அந்த பிரமோத்…. என்றார் சுவாமிநாதன்.

நல்லவேளை நிஷா தப்பித்து விட்டாள்….. என்று நினைத்து கொண்டான் தினேஷ். அன்று அவள் தலையில் அடிப்பட்ட போது தான் அது நடந்திருக்கும்…. அதனால் தான் அவன் மேல் இருந்த கோபத்தை ஆத்திரத்தை என் மேல் காட்டி இருக்கிறாள்…. என்று நினைத்து கொண்டான் தினேஷ்.

நீ லீவு எத்தனை நாள் பா சொல்லி இருக்க?….. என்றார் சுவாமிநாதன்.

இன்னைக்கும் நாளைக்கும் வரமாட்டேன் ன்னு இன்ஃபார்ம் பண்ணிட்டேன்….. 

ஓ…. ஓகே பா.

அப்பா….. ஸ்விக்கில இருந்து கால் வருது…. நான் போய் நம்ம மூணு பேருக்கும் லஞ்ச் வாங்கிட்டு வந்திடறேன்.

அந்த தம்பி யோகேஷ் க்கு….. என்றார் திலகவதி.

இல்லம்மா அவன் கிளம்பிட்டான். ஈவினிங் வந்து பார்க்கிறேன் ன்னு சொன்னான்.

தினேஷ் நிஷாவுக்கு மெஸேஜ் செய்தான்.

ஆப்பிரேஷன் முடிந்து விட்டது. தன்ஷி ஈஸ் ஓகே. 

குட் டூ ஹியர்…. ஹேஸ் ஷீ ரீகெயின்டு கான்ஷியஸ்…. . ( சந்தோஷம்….. அவளுக்கு நினைவு திரும்பிடுச்சா?) என்று ரிப்ளை செய்தாள் நிஷா

நோ…. டாக்டர் ஸெட் மோஸ்ட் பிராப்ளலி இன் டூ ஹவர்ஸ்……( இன்னும் இரண்டு மணி நேரத்தில் கண் விழித்து விடுவாள் என்று டாக்டர் சொன்னார்)

ஓகே….. 

வில் யூ கம் பை ஈவினிங்?( சாயங்காலம் வரீயா)

சாரி தினேஷ். வில் டிரை…… ஆஸ் யூ நோ பர்த் டே ஃபங்ஷன் இருக்கு….. ( முடிஞ்ச வரைக்கும் வரப் பார்க்கிறேன்….. உங்களுக்கே தெரியும் இல்ல என்னோட அக்கா பொண்ணு பர்த்டேவுக்கு போகனும் ன்னு)

உடனே கால் செய்தான் தினேஷ்.

ஹலோ நிஷா…..

சொல்லுங்க தினேஷ்……

இன்னைக்கு வரலீயா நீங்க?

இப்போ தன்ஷிக்கு கான்ஷியஸ் வந்திருந்தா பார்த்திட்டு அப்படியே போகலாம் ன்னு நினைச்சேன்…..

ஓ ஓகே…..

இப்போ எங்க இருக்கீங்க?

பஜார்ல…..

எப்படி வீட்டுக்கு போவீங்க?

ஆட்டோவிலா? கேப் புக் பண்ணியா?

ஆட்டோவிலோ கேபிலோ போக மாட்டேன்….. ஷேர் ஆட்டோவில் போனா தான் எங்களுக்கு கட்டுப்படி ஆகும்…..

ஓ…. சாரி…..

எதுக்கு சாரி சொல்றீங்க தினேஷ்……

உங்களை ஹர்ட் பண்ற மாதிரி பேசிட்டேனோ ன்னு….

அதெல்லாம் ஒண்ணும் இல்லை….. உங்களுக்கு தெரியாம தான கேட்டீங்க?

அப்போ வீட்டுக்கு எப்படி போவீங்க…. அதான் சொன்னேனே ஷேர் ஆட்டோவில் ன்னு…. ஆனா இன்னைக்கு எங்க அப்பா வந்து பிக்கப் பண்ணிக்கிறேன் ன்னு சொன்னாரு…… 

ஓ…. உங்க அப்பா பேரு என்ன?

ஏன்? எதுக்கு திடீரென எங்க அப்பா பத்தி கேட்கறீங்க?

சொல்லுங்க நிஷா…

சங்கர்……

எங்க ஒர்க் பண்றாரு?

இன்டெல் டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட் கம்பெனில செக்கியூரிட்டி……

ஏய்….. அது என் கம்பனி…..

ஓ…. ஓகே ஓகே…..

என்ன வெறும் ஓகே ஓகே சொல்ற……

பின்ன….. என்ன சொல்லனும்?….. உங்க கம்பனி பத்தி எனக்கு ஒண்ணும் தெரியாது….. தெரியாததை பத்தி என்ன சொல்ல முடியும்…..

தெரிஞ்சிக்க ஆசை படறீயா?

என்ன சொல்றீங்க ன்னு புரியல தினேஷ்……

உங்களுக்கு எங்க கம்பனில வேலை கொடுக்க நினைக்கிறேன்….. உங்க கமியூனிக்கேஷன் நல்லா இருக்கு….. கம்பியூட்டர் கோர்ஸ் படிச்சிருக்கீங்க…..

அது வந்து….. அது…..

என்ன யோசிக்கிறீங்க?

நான் வீட்டில் அம்மா அப்பா கிட்ட பேசிட்டு சொல்லவா…..

நாளைக்கு நான் ஆஃபீஸ் வரமாட்டேன்…. நாளை மறுநாள் உங்க அப்பா கூடவே வாங்க….. உங்களை இன்டர்வியூ பண்ணிட்டு சொல்றேன்……

எனக்கு ஒன் வீக் டைம் தரீங்களா?

எதுக்கு இன்டர்வியூ அட்டெண்ட் பண்றதுக்கு?

எதுக்கு ஒன் வீக்….. 

நான் படிச்சதை கொஞ்சம் ரெஃப்ரெஷ் பண்ணிக்கிட்டு வந்து இன்டர்வியூ அட்டெண்ட் பண்றதுக்கு…..

ஓகே…. டேக் யுவர் டைம்…. ஐ ஆம் ரியலி இம்ப்ரெஸ்டு ஈவன் பிஃபோர் இன்டர்வியூவிங் யூ….. 

ஹௌ தினேஷ்?

இல்ல….. எதையுமே பர்ஃபெக்டா பெஸ்டா பண்ணனும் ன்னு நினைக்கறீங்க இல்ல….. அதுக்கு…..

ஓ….. ஓகே…. தேங்க்ஸ்….. பை….

பை…. கன்வே மை விஷ்ஷஸ் டூ யுவர் நீஸ்……

ஷியூர்…. தேங்க்ஸ் தினேஷ்….. என்றாள் நிஷா.

வெல்கம் நிஷா…..

சரி…. அது இருக்கட்டும்…. எப்படி எங்க அப்பா பத்தி உங்களுக்கு தெரியும்…..

இன்னைக்கு மதியம் கால் பண்ணி பர்மிஷன் கேட்டாரு….. உன்னை மாதிரியே ஷாலினி பாப்பா ன்னு சொன்னாரு….. அதனால தான் கேட்டேன்……

ஓ….. ஓகே…… இப்போ புரிஞ்சிடிச்சு…..

என்ன?

எங்க புது சிஈஓ ரொம்ப ரொம்ப நல்லவர் ன்னு சொன்னார் என்னோட அப்பா….. உங்களை பத்திதான் சொன்னாரா?

சிரித்தான் தினேஷ்……

ஓகே தினேஷ்….. நாளைக்கு மார்னிங் சூப்பர் மார்க்கெட் போகிறதுக்கு முன்னாடி வந்து பார்க்கிறேன்…..

யாரை ? என்னையா இல்லை என் தங்கச்சியையா?…. என்றான் தினேஷ் சிரித்துக் கொண்டே.

ரெண்டு பேரையும் தான்….. என்று சொல்லி சிரித்தாள் நிஷா.

பை நிஷா….

பை தினேஷ்……

பேசிவிட்டு உள்ளே வந்தான் தினேஷ்.

என்னடா ஸ்விக்கி டெலிவரி கிட்டேயா இவ்வளவு நேரமா பேசின?

அச்சச்சோ இல்லப்பா….. சாரி….. நான் ஏதோ அன்நோன் நம்பர் ன்னு எடுக்கல….. இருங்க மறுபடியும் சாப்பாடு ஆர்டர் போடறேன்……

டென்ஷன் ஆகாத தினேஷ்….. ஆல்டர்நேட் நம்பர் என்னோடது கொடுத்து இருந்த இல்ல….. அவன் எனக்கு கால் பண்ணினான்….. நான் போய் வாங்கிட்டு வரும் போது பார்த்தா…. நீ சுவாரஸ்யமான யார் கூடவோ பேசிக்கிட்டு இருந்த….. அதான் உன்னை டிஸ்டர்ப் பண்ணாம நான் வாங்கிட்டு வந்தேன்….. நாங்க ரெண்டு பேரும் சாப்பிட்டு கூட முடிச்சிட்டோம்…..

சாரி அப்பா….. சாரி அம்மா…..

அதெல்லாம் வேணாம் பா….. ஏதோ முக்கியமான கால் தான பேசிக்கிட்டு இருந்த…

 நீ போய் சாப்பிடு…. ஆறிட போகுது…..

அது ஆல்ரெடி ஆறிதான் இருந்துச்சு….. என்றார் திலகவதி.

உங்க அம்மா சரியான நெருப்பு கோழிடா….. எவ்வளவு சூடு இருந்தாலும் பத்தல பத்தல ன்னு சொல்லுவா…..

அதெல்லாம் ஒண்ணும் இல்லை…. என்னை கிண்டல் 

பண்ணல ன்னா உங்களுக்கு தூக்கம் வராதே…..

என் பொண்ணு முழிச்சிக்கிட்டு இருந்திருந்தா எனக்கு சப்போர்ட் பண்ணி இருப்பா….. நான் சொல்றது சரிதான் ன்னு….. என்றார் சுவாமிநாதன்.

இல்ல இல்ல எனக்கு தான் சப்போர்ட் பண்ணுவா…. என்றார் திலகவதி…..

இருவரும் ஆர்கியூ பண்ணிக் கொண்டு இருந்தனர்.

நாம் ஏன் மறந்தோம்….. நிஷா ஃபிரெண்டு தான….. அவ கிட்ட பேசும் போது நான் ஏன் சாப்பாடு வாங்கி வர மறந்தேன்….. என்று நினைத்து கொண்டான் தினேஷ்.

சாப்பிடு டா கண்ணா…. என்றார் திலகவதி.

இதோ மா…. என்று சொல்லி சாப்பிட்டு முடித்தான் தினேஷ்.

நிஷா அவள் அப்பா சங்கருடன் வீட்டிற்கு சென்றாள்.

பைக்கில் செல்லும் போது தினேஷ் கூறியதை சொல்ல நினைத்தாள் நிஷா.

###########

தொடரும்……

என் வசம் நானில்லை என் உயிரே……

வசம் -31

 

பைக்கில் செல்லும் போது…..

அப்பா…..

சொல்லுமா…..

உங்க பாஸ் தினேஷ் சுவாமிநாதன் ரொம்ப ரொம்ப நல்லவர் தானே?

அவர் பெயர் எப்படி உனக்கு தெரியும்.?

அவரை மட்டும் இல்ல….. அவரோட ஃபேமிலி மொத்தமும் தெரியும்…..

என்னம்மா சொல்ற?

ஆமாம் அப்பா….. அவங்க சூப்பர் மார்க்கெட்ல ரெகுலர் கஸ்டமர்….. அவங்க எல்லாருமே…..

ஓ…. ஓகே……

அவங்க தங்கச்சிக்கு ஆக்ஸிடென்ட் ஆயிடிச்சு……

ஓ…. அதனால தான் அவர் கம்பனிக்கு வரலையா?

ஒருநாள் கூட லீவு போட மாட்டாரே….. எப்படி லீவு போட்டாரு ன்னு நினைச்சேன்…..

அந்த பொண்ணை பார்த்திட்டு அப்படியே ஷாலினிக்கு கிஃப்ட் எல்லாம் வாங்கி வந்தேன்….. 

ஓ…. எப்படி இருக்கா அந்த பொண்ணு…..

தெரியல பா…. ஆப்பிரேஷனுக்கு கூட்டிக்கிட்டு போனாங்க…. ஆப்பிரேஷன் நல்லபடியா முடிஞ்சிடிச்சு இன்னும் மயக்கம் தெளியல ன்னு சொன்னாங்க…. அதான் நாளைக்கு காலைல சீக்கிரமா கிளம்பி போய் பார்த்து விட்டு அப்படியே சூப்பர் மார்க்கெட் போகலாம் ன்னு நினைக்கிறேன்.

சரிம்மா…. போயிட்டு வா….. எதாவது பழங்கள் வாங்கி கொண்டு போம்மா…..

சரிப்பா…..

அப்பா….. இன்னொரு விஷயம்…..

சொல்லுமா…..

நான் நல்லா இங்கிலீஷ் பேசறேன் ன்னு சொல்லி நீங்க வேலை செய்யுற கம்பனிக்கு இன்டர்வியூ வரச் சொன்னார் உங்க எம்.டி.

அவரே சொன்னாரா?

ஆமாம் பா…..

அவர் நம்பர் வச்சிருக்கியா?

ஆமாம் பா…. அன்னைக்கு என்னை காப்பாத்தினாரே அது அவர் தான் அப்பா…..

ஓ….. ஓகே….. மா……

என்னப்பா டல்லா பேசறீங்க?

நான் ஒண்ணு சொன்னா தப்பா நினைக்க மாட்டீயே மா?

என்னப்பா இப்படி எல்லாம் பேசறீங்க?

அது இல்ல…. இந்த காலத்தில் பசங்க கிட்ட ஜாக்கிரதையா தான் பேசனும்…..

அதெல்லாம் ஒண்ணும் இல்லை பா….. நீங்க சொல்லுங்க…..

அவங்க எல்லாம் பணக்காரங்க….. நீ எதாவது மனசுல ஆசையை வளர்த்துக்காத…. அப்பறம் உனக்கு தான் கஷ்டம்.

அப்பா….. அவர் தெளிவா இருக்காரு பா…..

நான் ஃபிரெண்டு தான் ன்னு…. எனக்கு புரிய வச்சிட்டாரு…. அதுக்கு அப்புறம் தான் நானும் அவர் கிட்ட சகஜமா பேசி பழகுறேன்….. அவரோட ஃபிரெண்டு கிட்ட அவர் இன்னும் யாரையும் லவ் பண்ணல….. அந்த மாதிரி யாரையும் இதுவரை பார்த்தது இல்லை ன்னு சொன்னாரு…..

ஓ….. ஓகே….. மா….. பையன் லட்சணமானவன்…. நல்ல குணம்…. அதனால தான் சொன்னேன்…. அவங்க சொந்தத்திலே இல்ல அந்தஸ்தில் அவங்களுக்கு சரிசமமான ஒரு பொண்ணை தான் பார்த்து கல்யாணம் பண்ணி வைப்பாங்க…..

சரிதான் அப்பா…… நீங்க அதை விடுங்க….. இன்டர்வியூவுக்கு போறதை பத்தி சொல்லுங்க…..

நம்ம குடும்ப கஷ்டத்துக்கு உன்னை 12 ஆயிரம் சம்பளத்துக்கு வேலைக்கு அனுப்பறேன்….. அதைவிட அதிகமாக சம்பளம் கொடுத்தா பார்க்கலாம்….. என்றார் சங்கர்.

சரிப்பா….. நான் அடுத்த வாரம் தான் இன்டர்வியூ அட்டெண்டு பண்ணப் போறோன். அதுவரைக்கும் நான் படிச்ச கம்ப்யூட்டர் கோர்ஸ்ஸை ரிஃபிரெஷ் பண்ணிட்டு வரேன் ன்னு சொன்னேன்…..

அப்போ நீ போறதுன்னு முடிவு பண்ணிவிட்டு தான் என்னை கேட்டியா?

அய்யோ அப்பா…. நீங்களும் அம்மாவும் ஓகே சொன்னா தான் வருவேன் ன்னு நான் தினேஷ் சார் கிட்ட சொல்லிட்டேன்.

ஓ…. சாரிம்மா…. சரி சரி…. என்றார் சங்கர்.

ஒருவேளை உங்க அம்மா உன்னை வேலைக்கு போக வேண்டாம் ன்னு சொல்லிட்டா ன்னா……

கண்டிப்பா போக மாட்டேன்…..

கன்வின்ஸ் பண்ணக்கூட டிரை பண்ண மாட்டியா…..

நிச்சயமா இல்ல……

ஏன்……

தெரியல….. அம்மா எது சொன்னாலும் அது சரியா மட்டும் தான் இருக்கும் ன்னு எனக்கு தோணும்.

அது உனக்கு பிடிக்காத விஷயமா இருந்தா கூடவா?

ஆமாம் அப்பா…… 

ஏன் மா அப்படி….. உனக்கு பிடிக்கும் ன்னு உங்க அம்மா கிட்ட சொல்லலாம் இல்ல?

எனக்கு எது பிடிக்கும் எது பிடிக்காதுன்னு அம்மாவுக்கு நல்லாவே தெரியும்….. அதனால அம்மா எதாவது ஒண்ணு எனக்காக செய்யறாங்கன்னா…. அது கட்டாயமா எனக்கு நல்லதா தான் இருக்கும்…..

என்னவோ போ….. நான் சொல்லி என்னைக்கு நீ கேட்டிருக்க….. 

அப்பா…. ஏன் உங்கள் பேச்சை நான் கேட்க மாட்டேனா?

கேட்ப…. ஆனா உங்க அம்மா பேச்சை நீ கேட்குற அளவுக்கு இல்லை…. சரியா?

சிரித்துக்கொண்டே ஆமாம் ஆமாம்…. என்றாள் நிஷா.

வீட்டிற்குள் நுழைந்தனர்.

வீட்டில் சில பலூன்களை கட்டி விட்டு கலர் பேப்பரில் ஹேப்பி பர்த்டே என்று ஸ்டிக்கர் ஒட்டி அலங்காரம் செய்து கொண்டு இருந்தனர் மேத்யூ மற்றும் உஷா.

சித்தி….. என்று சொல்லி நிஷாவை வந்து கட்டிக் கொண்டாள் ஷாலினி பாப்பா.

அம்முக்குட்டி…. என்று சொல்லி அவள் கன்னத்தில் முத்தமிட்டாள் நிஷா.

ஹேப்பி பர்த்டே செல்லக்குட்டி….. என்றாள் நிஷா.

காலிங் பெல் சப்தம் கேட்டது…..

இங்கே ஷாலினி பாப்பா யாரு….. என்றான் கொரியர் பையன்.

நிஷா தன் கையில் வைத்திருந்த ஷாலினியை காண்பித்தாள்.

அவங்களுக்கு கொரியர் வந்திருக்கு…. இரண்டு அடி அளவில் கிஃப்ட் பாக்ஸ்.

அக்கா…..

என்னடி…..

கிஃப்ட் ஆர்டர் பண்ணீங்களா?

இல்லையே…..

நீ ஆர்டர் பண்ணீயா மேத்யூ…. என்றாள் உஷா.

இல்லையே….. என்றான் மேத்யூ.

அப்போ யாரு அனுப்பினது…. என்று சொல்லி விட்டு அந்த கொரியர் பையனிடம் கேட்டாள் நிஷா.

தினேஷ் சுவாமிநாதன் என்ற பெயரில் அனுப்பி இருக்காங்க….. என்றான் கொரியர் பையன்.

வாங்கி கொண்டு உள்ளே வந்து ஷாலினியிடம் கொடுத்து…..

இந்தா அம்மு….. தாத்தாவோட பாஸ் உனக்கு கிஃப்ட் அனுப்பி இருக்காரு.

……. என்றாள் நிஷா.

சிரித்துக்கொண்டே அதை வாங்கி கொண்டு அவள் அம்மாவிடம் கொடுத்து ஓப்பன் செய்து தரச் சொன்னாள் ஷாலினி.

அம்மாவை டிஸ்டர்ப் பண்ண வேண்டாம்…. அவங்க தான் டெகரேஷன் பண்ணிக்கிட்டு இருக்காங்க இல்ல….. நாமே ஓப்பன் செய்யலாம்….. என்று சொல்லி நிஷாவும் ஷாலினியும் ஓப்பன் செய்தனர்.

பெரிய ரெட் டெடி பியர்….. இருந்தது.

ஒருநிமிடம் அப்படியே திகைத்து நின்றாள் நிஷா. ஏனெனில் அவள் ஷாலினிக்கு வாங்கியதும் அதே போன்ற அதே கலர் டெடி பியர் தான்…… ஆனால் ஒரு அடி உயரத்தில்.

சூப்பரா இருக்கு சித்தி….. தேங்க்ஸ் தாத்தா….. என்றாள் ஷாலினி.

ஃபங்ஷன் ஆரம்பித்தது.

கம்பியூட்டர் சென்டரில் வேலை செய்யும் சிலர்…. மற்றும் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மற்றும் நெருங்கிய சொந்தங்களான இரண்டு மூன்று குடும்பத்தினர் வந்திருந்தனர். சுமதி நிஷாவிடமே ஒரு கிஃப்ட் வாங்கி கொடுத்து விட்டாள். சூப்பர் மார்க்கெட்டில் லீவு கிடைக்காது என்பதற்காக.

ஆறு மணி அளவில் கேட் வெட்டினாள் 

குழந்தை ஷாலினி.

அனைவருக்கும் கேக் சமோசா மற்றும் ஜூஸ் கொடுத்தார்கள் உஷா மற்றும் நிஷா.

சாந்தி சொந்தக்காரர்கள் அனைவரையும் நன்றாக உபசரித்தார்.

அவருடைய சொந்தக்காரியான சந்திரா மற்றும் அவரது கணவர் சேகர் வந்திருந்தனர்.

சாந்தி….. 

சொல்லு சந்திரா…..

நீ கேட்டியே….. இந்தா….. என்று ஒரு பேப்பரை கொடுத்தார்.

பையன் பேரு விக்னேஷ்….. ஸ்கூல்ல பி.டி டீச்சரா இருக்கான்…… மாசம் 20 ஆயிரம் சம்பளம்…. நல்ல பையன்….. ஒரே ஒரு அக்கா…. அதுக்கும் கல்யாணம் ஆயிடிச்சு….. பிக்கல் புடுங்கல் இல்ல…… மாமியார் மட்டும் தான்…. அதுவும் அவங்க அக்கா கூடத் தான் இருக்காங்க….. என்ன சொல்ற….

இரு சந்திரா என் புருஷன் கிட்ட கேட்கனும்…. 

முக்கியமா நிஷா கிட்ட கேட்கனும்…..

ஜாதக பொருத்தம் நல்லா இருக்கு….. அதை பார்த்து விட்டு தான் வாங்கி கொண்டு வந்தேன்…. அதிலேயே ஃபோட்டோவும் இருக்கு பாரு…..

சரி….. இரு….. விட்டா இந்த பர்த் டே ஃபங்கஷனோட சேர்த்து நிச்சய தாம்பூலமும் வச்சிக்கிலாம் ன்னு சொல்லுவ போலிருக்கே……

சிரித்தாள் சந்திரா…..

சரி சரி…. இன்னைக்கு ராத்திரியே நான் நிஷா கிட்டேயும் என் வீட்டுக்காரர் கிட்டேயும் கேட்டிட்டு சொல்றேன்…. 

கேட்டு சொல்லு…..வர நல்ல நாள்ல நேரா பார்க்க வரச்சொல்லலாம்…..

சரிடி…. சந்திரா….. அவசரப்படாத….. என் பொண்ணு விஷயத்தில நான் ஒரு தடவைக்கு நாலு தடவை யோசிச்சு தான் முடிவு பண்ணுவேன்….. அவ என்னை நம்பி கல்யாண முடிவை கொடுத்திருக்கா….. அதை நான் சரியா செய்யனும்…..

சரி சரி சாந்தி…. சீக்கிரமா பேசு….. 

ஃபங்கஷன் முடிந்தது…. அனைவரும் சாப்பிட்டு விட்டு கிளம்பினார்கள்.

அம்மா…..

நிஷா…..

என்று இருவரும் ஒருசேரப் பேசினார்கள்.

சிரித்துக்கொண்டே

என்னம்மா?

என்ன அம்மா…. சொல்லுங்க?

நீ சொல்லு…..

நீங்களே ஃபர்ஸ்ட் சொல்லுங்க அம்மா…. என்றாள் நிஷா.

############

தொடரும்…..

அ. வைஷ்ணவி விஜயராகவன் .

இந்த episode பிடிச்சிருந்தா எழுத்தாளரை உற்சாகப்படுத்துங்க!!
இப்போதே உற்சாகப்படுத்துங்கள்

இந்த படைப்பை மதிப்பிட விரும்புகிறீர்களா?

Click on a star to rate it!

No votes so far! Be the first to rate this post.

    No comments yet.